உருப்படியானது – 15-06-2011

வாழ்கையில உருப்படியா எதுவும் செஞ்சதில்ல..இருந்தாலும் முதல் முறையா எனக்கு தெரிஞ்சி ஒரு காரியம் உருப்படியா செஞ்சிருக்கேன். யூடியூப்ல அப்போ நெறைய பாடல பதிவேற்றிக்கிட்டிருந்த நேரம்.  ஒரு நாள் யாருன்னே தெரியாத நண்பர் ஒருவர் இந்த மாதிரி  digital library னு ஒண்ணு இருக்கு அதிலிருந்து ஒரு புத்தக டைட்டிலைக் கொடுத்து அதை டவுண்லொடு பண்ணித்தர முடியுமானு கேட்டார். நான் சாப்ட்வேர் இஞ்ஜினியர்ங்ற எண்ணம் அவருக்கு எப்படி வந்ததுனு தெரியல… ஹிஹிஹி…

முன்பு பார்த்த போது மூணு நாலு சைட்டில் டிஜிடல் புத்தகங்கள் இருந்தன இப்பொழுது ஒண்ணெ ஒண்ணில் (http://www.dli.ernet.in/  Alias : http://www.new1.dli.ernet.in/) தான் இருக்கிறது. எக்கச்சக்க பழைய புத்தகங்கள் இருக்கின்றன. 1800 வருடத்லிருந்து… நாலு பக்கத்துக்கு ஃபுல் ஸ்டாப்பே இல்லாதது, மெட்ராஸை சென்ன பட்டிணம் என்பது முதல். இடது பக்கம் தேடிப் பார்க்கும் வசதி இருக்கிறது. எல்லாமே ஸ்கான் செய்யப்பட்ட புத்தகங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். அந்த digital libraryலெயிருந்து டைரக்டா PDFக்கு மாற்ற ஒரு ஸ்ரிப்ட் எழுதியிருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு தேடிப்பாத்ததுல அது கெடச்சது, வேலையும் செய்யுது.

யாருக்கவது வேணுமென்றால் அங்கிருந்து புத்தகப் பெயர் சொல்லுங்கள், டவுண்லோடு செய்து pdfஆக கொடுக்கிறேன்.

சாம்பிளுக்கு ரெண்டு:

  1. ரா.பி.சேதுப் பிள்ளை எழுதிய சிலப்பதிகாரக் கதை [1928]
  2. மைனாவதி கதை [1903]

தொளில் ரகசியம்,  ஒரு மண்ணும் கெடையாது, wget, tiffcp, tiff2pdf பயன்படுத்தி perl script மூலம் டவுண்லோடு செய்கிறேன்.

சொ.செ.சூ – 02/03/2011.

ஒலக சினிமா :

நடுநிசி நாய்களை எல்லோரும் கடிச்சு கொதறிக்கிட்டு இருக்காங்க. அது சொல்லும் கருத்து புரியும் அளவுக்கு அறிவில்லை என்பதால் பார்க்கவில்லை. பெரும்பாலும் படம் ரிலீசான உடனே அடுத்த நாளே ஸ்கிரீன் பிரிண்ட் டவுண்லோடிங்க்கு வந்துறும். ஆனா நடுநிசி கொஞ்சம் லேட்டா தான் வந்தது. Pirate பண்றவனுக்கே பிடிக்கலெ போல. நடுநிசி சொல்ல வந்த கருத்துக்கு நடுவுல incestங்ற பதத்தை தமிழுக்கு சினிமா மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள். டிக்‌ஷ்னரியில incestட்னா “Sexual intercourse between persons too closely related to marry (as between a parent and a child)”. இதப் படிச்சவுடனே வாந்தி வர்றவுங்க, நடுநிசி பாத்தவுங்க நிலைமைய யோசிச்சிப் பாருங்க. நிற்க.

2011ல ஒலக சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு போவோம்னு இங்கிலீபீஸ் தவிற வேறு மொழி படமா பாக்கலாம்னு ஆராய்ச்சி பண்ணினேன். ஸ்வாஹிலி தவிர மீதி எல்லா மொழிப் படங்களுக்கும் நம்ம மக்கள் தமிழில் ரிவியூ எழுதுகிறார்கள்.  சரின்னு சொல்லி கொரியன் பக்கம் திரும்புனேன். சோஜு, “சிக்”கென்ற பெண்கள், நாய்க்கறி தவிர வேறு ஒண்ணு உலுக்கி எடுத்துவிட்டது. அவுங்க மம்மியை “அம்மா” என்றும், டாடியை “அப்பா” என்றும் அழைக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் டமில் பற்றினால் சிலிர்த்தெழுந்து அனைத்து முடிகளும் அட்டென்ஷனுக்கு வந்துவிட்டன. ஆராய்ச்சியாளர்கள் விரைவாக கொரியாவில் தமிழ்க் கொடியேற்றிய அந்த அரசன் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.

Best Korean Moviesனு கூகிள்கிட்ட கேட்டு டவுண்லோட் பண்ணின முதல்ப் படம் Old Boy. Old Boyயா ? Old Manன்னுல்ல இருக்கணும்னு என் ஆங்கிலப் புலமைய மெச்சியபடி டவுண்லோட் பண்ணி பாத்தேன். பொதுவா ஏதாவது படம் பார்த்தவுடன் வரும் சோகம், சந்தோஷம், வெறுப்பு, கோபம் போன்ற சராசரியான உணர்வு வராமல் ஒருவிதமான dark feeling. தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸின் இறுதி பதினைந்து நிமிடத்தில் நடுநிசியின் மெயின் டாபிக்கான incest வருகிறது. அது தான் கிளைமாக்ஸின் காரணகர்த்தா.

பழிவாங்கும் கதை தான். Self narrative ஸ்டைலில் ஒடுகிறது படம். எனக்கு Max Payne கேம் தான் ஞாபகத்துக்கு வந்தது. இசையும் ஒருமாதிரி கேம் இசை மாதிரி தான் இருக்கிறது. சில இடங்களில் வித்தியாசமாக இருக்கிறது. அதைக்கூட சில நாட்கள் ரிங்டோனாக வைத்திருந்தேன். நடுநிசி சூடு அடங்குவதற்கு முன் எழுத வேண்டும் என்று எழுதியது. பின்னாடி எழுதினால் டர்ர்ர்ர்ர் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.

Old Boy (2003) கதை :
ஓதேசு தான் ஹீரோ. அன்று மகளின் பிறந்த நாள். குடித்துவிட்டு போலிஸ் ஸ்டேஷனில் அலம்பல் பண்ணுகிறார். நண்பர் பெயிலில் எடுத்து விடுவிக்கிறார். இருவரும் ஓதேசுவின் மகளிடமும், மனைவியிடமும் டெலிபோன் பூத்திலிருந்து பேசுகிறார்கள். நண்பர் பேசிவிட்டு ஓதேசுவைப் பார்த்தால் காணவில்லை. கட். ஓதேசு இருப்பது ஒரு private prisonனில். ரெண்டு மாசமாகிவிட்டது. “கத்துறான் கதறுறான், எதுக்குடா என்னை உள்ள வச்சிருக்கீங்கனு”, பதில் கிடையாது. எவனும் பேசவே மாட்டேங்குறாங்க. கதவின் கீழே ஒரே ஒரு குட்டிக் கதவு அதன் வழியாக சாப்பாடு வருகிறது. Fried wanton மட்டும். எவன் முகத்தையும் பார்க்க முடியவில்லை. எவனும் பேசவும் மாட்டேன்கிறான். ரூமில் இருக்கும் டீவியில் இருந்து தான் சவுண்ட் வரவேண்டும்.

மயக்க வாயு அனுப்பி பின்னர் அவருக்கு முகச்சவரம், முடிவெட்டு விடுகின்றனர். ஒரு வருஷம் போய்விட்டது. டீவியில் மனைவி கொலை, மகள் தத்துக் கொடுக்கப்பட்டாள், போலிஸ் ஓதேசுவைத் தான் குற்றவாளி என்று தேடுதிறது என்று நியூஸில் வருகிறது. ஓதேசு மணிகட்டை அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றார். மயக்க வாயு அனுப்பி அவர் காப்பாற்றப் படுகிறார். தன் எதிரி யாரோதான் பழிவாங்குகிறார் என்று ஓதேசு யாராக இருக்கும் என்று சந்தேகித்து நோட்டு நோட்டாக எழுத்தித் தள்ளுகிறார். Shadow boxing செய்கிறார்.

மூன்றாவது வருடம் ஒரு எக்ஸ்ட்ரா chop stick கிடைக்கிறது. அதை வைத்து சுவரைத் தோண்ட ஆரம்பிக்கிறார். பதினோராவது வருஷம் சுவரில் ஓட்டை விழுகிறது. ஆனால் அடுத்து ஒரு சுவர் இருக்கிறது. பதினைந்தாவது வருஷம் அடுத்த சுவரையும் ஒட்டை போட்டு முதன்முறையாக வெளிக் காற்றை கைகளால் தீண்டுகிறார். மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை நீரைக் குடிக்கின்றார். மயக்க வாயு வருகிறது. கட்.

ஓதேசுவுக்கு கோட், சூட், வாட்ச் எல்லாம் போடப்பட்டு மொட்டை மாடியில் விடுவிக்கப்படுகிறார். ஒரு பிச்சைக்காரன் பர்ஸ் நிறையப் பணமும், ஒரு செல்போனும் கொடுக்கிறான். ஓதேசு சூஷி ஹோட்டலுக்கு போகிறார். போன் வருகிறாது, “என்ன ஓதேசு கோட் சூட் எப்படி ? I miss you”னு ஒருத்தன் சொல்லுகிறான். ஹோட்டலில் ஓதேசு மயங்கி விழ சூஷி chef மிடோ அவள் இடத்துக்கு ஓதேசுவை அழைத்து பார்த்துக் கொள்கிறாள். ஓதேசுவின் நோட்ஸை படித்து ஓதேசுவின் மீது பரிதாபப்படுகிறாள். இருவரும் சேர்ந்து ஓதேசு பதினைந்து வருஷம் சாப்பிட்ட fried wanton செய்யும் ஹோட்டலைத் தேடுகின்றனர். இடையில் ஒரு நாள் உடலுறவு கொள்கின்றனர்.

ஓதேசு ஒரு நாள் private prisonனை கண்டுபிடிக்கின்றார். சண்டையில் காயம். ஓதேசுவை ஒரு டாக்ஸியில் ஒருவன் (வில்லன்) அனுப்புகிறான். செல்லும் போது “ஓதேசு, எப்படி இருக்க ?” என்று சொல்லி மறைகிறான். பிறகு வில்லனே வந்து இன்னும் ஐந்து நாளில் எதற்கு உன்னை பதினைந்து வருடம் காவலில் வைத்திருந்தேன் என்று கண்டுபிடி என்று கூறுகிறான். கண்டுபிடிக்காவிடில் மிடோ இறந்துவிடுவாள். கண்டுபிடித்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறுகிறான். மிடோவும் ஓதேசுவும் தப்பித்து ஓடுகிறார்கள்.

இதுவரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. Self narrativeஆக இருப்பதால் நன்றாக இருந்தது.

கிளைமாக்ஸ் :
ஓதேசு காரணத்தை கண்டுபிடித்து வில்லனிடம் கூறுகிறான். “முட்டாள் ஓதேசுவே, பதினைந்து வருஷம் உன்னை உள்ளே வைத்திருந்த நான் உன்னை ஏன் வெளியே விட்டேன், என்று ஏன் யோசிக்கவில்லை ?”. ஒரு போட்டோ ஆல்பத்தைக் காண்பிக்கிறான் அதில் ஓதேசுவின் மகள் படம் மூன்று வயதில் ஆரம்பித்து, வளர, வளர மிடோவாக மாறுகிறது. வில்லன் ஓதேசுவையும் மிடோவையும் சந்த்திக்க வைக்க இருவரையும் ஹிப்னோடைஸ் செய்துள்ளான் என்று தெரிகிறது.

ஓதேசு, வில்லனிடம் மிடோவிடம் ரகசியத்தை சொல்லாதே என்று கெஞ்சுகிறார். தன் நாக்கை அறுத்துக் கொள்கிறார். வில்லன் ஓதேசுவிடம் சொல்லியதற்கேற்ப தற்கொலை செய்துகொள்கிறான். ஓதேசு தன்னை ஹிப்னாடைஸ் சேய்த பெண்மணியிடமே மிடோவின் ரகசியத்தை மறக்க வைக்குமாறு கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஹிப்னாடைஸ் செய்கிறார்.

கொசுறு :

  • முடிவு தெரியாமல் படம் நிறைவடைகிறது. ஹிப்னாடைஸ் முடிந்தவுடன் மிடோவும் ஓதேசுவும் பிரிந்து விடுவதாக நான் நினைத்து முடித்துக் கொண்டேன்.
  • Torrent இங்கே கிடைக்கிறது.
  • Memorable quotes for Oldboyல பிடிச்சது.,  Your gravest mistake wasn’t failing to find the answer. You can’t find the right answer if you ask the wrong questions.
Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off

உளறல்கள் – 22/02/2011.

மலேசியா வாசுதேவன் :
எனக்கு மிகவும் பிடித்த பாடகர். சின்ன வயசில் சிலோன், திருச்சி வானொலியில் கேட்கும் போது பெரும்பாலும், “இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், *****” என்று ஏதாவது ஒரு பாடகியின் பேர் இருக்கும். மலேசியா வாசுதேவனைக் கேட்பது என்பது அரிது தான். அப்புறம் ஆபிசில் சேர்ந்து MP3 கலெக்‌ஷன் எல்லாம் ஆரம்பித்த போது தான், மலேசியாவைக் கேட்க ஆரம்பித்தேன். கேட்டவுடன் வசீகரித்தது குரல். கேட்க கேட்கத்தான் தெரிந்தது அவர் குரலை எப்படியெல்லாம் மாடுலேட் செய்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் என்று.

இசையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாதெனினும், எனக்கே அவரின் குரல் பாடல்களில் இசைக்குப் போட்டியாக தனித்து நிற்பது போல் தோன்றும். பின்னர் யூடியூபில் பாடல்களை வலையேற்றும் போது, அவர் பாடிய பாடல்களை மட்டும் பல தடவை முழுமையாக கேட்டு ரசித்த பின் தான் வலையேற்றுவேன். சினிமாவிலும் வில்லனாக, பெரும்பாலும் மைனராக வந்து தனி முத்திரை பதித்தவர். மென்மையான குரலும், அவர் பேசுவதுமே வில்லத்தனமாத்தான் இருக்கும். தமிழ் பேப்பரில் கானா பிரபாவின் அஞ்சலி, அவரைப் பற்றிய சிறு தொகுப்பைச் சொல்கிறது.

அவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், மிகவும் பிடித்தவை இவை.,

- அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா.
- சுகம் சுகமே.
- ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி.
- ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு.
- ஆனந்த தேன் காற்று தாலட்டுதே.
- எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை.

RIP. :’-(

சொ.செ.சூ – 22/02/2011

பயணம் – திரைவிமர்சனம்.

2011ல் காசு கொடுத்து பார்த்த முதல் படம். காசு வேஸ்ட் ஆகவில்லை. கச்சிதமாகப் பொருந்தும் casting. கதை இது தான், “இந்திய விமானம் கடத்தப்படுகிறது, ஆர்மி கமாண்டோஸ் கடத்திய தீவிரவாதிகளைச் சுட்டு பயணிகளை மீட்க்கின்றனர். இதற்கு நடுவில், பயணிகள் பேசிக் கொள்வதும், தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளின் மனநிலையும், ஆர்மி கமாண்டோ ஆபிஸரின் சாகசங்களும்” தான் கதை.

ஆர்மி ஆபிஸராக நாகார்ஜுன். ஆளு அம்பது வயசானாலும் கிண்ணுனு இருக்கார். உதயம் படத்துல பாத்தது. அப்பவே வாய்க்குள்ள தான் பேசுவார். இப்பவும் அப்படித்தான். வசனமும், அவரின் மிடுக்கும் தான் வலுசேர்க்கிறது. ஏறக்குறைய அவரது ரசிகனாகிவிட்டேன். அதை மாற்ற “ராகடா” பார்க்க வேண்டும். ;-p

நடிகராக பப்லு & அவரது ரசிகராக பாலாஜி, கலக்குகிறார்கள். வேலையில்லாத பட்டதாரியாக ஒருவர் (?) டென்சன் ஏத்துரமாதிரியே புர்ச்சியா பேசுகிறார். என்கிட்ட துப்பாக்கியிருந்தா நானே போட்டிருப்பேன். நல்ல வேளையாக, தீவிரவாதியே போட்டுத் தள்ளுகிறார். அந்த ஃப்ளைட் அட்டெண்ட் இத்துனூன்டு ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வருகிறார். இந்த மாதிரி எங்கும் பார்த்ததில்லை ;-) (ஒருவேளை கிங்ஃபிஷரின் காஸ்ட்யூமாக இருக்குமோ). அவரும் மெளனமாக வந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.

முஸ்லீம்களை தீவிரவாதிகளா கொஞ்சம் ஓவராத்தான் காட்டுகிறார்கள். ராதா மோகன், “ஹிந்து பேப்பரை முஸ்லீமும் படிக்கிறாங்க. மொஹல் பிரியாணிய ஹிந்துவும் தான் சாப்புடுறாங்க” என்ற தத்துவத்தைக் கூறியதால் மன்னிக்கலாம். ஆனால் விருதகிரியின், “எல்லா மனுஷங்களுக்கும் ஏ, பி குரூப் ரத்தம் இருக்கலாம் ஆனா மனுஷங்களா நாம எல்லாருமே ஒரே குரூப் தான்” என்ற வசனத்தை நக்கலடிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல (கேப்டன் தானே அடுத்த துணை முதல்வர்).

நியூஸ் கேதரிங் நிருபர்களின் வாயசைப்பும் வசனமும் ஏகப்பட்ட voice sync issue. ஒரு வேளை தெலுங்கில் பேசுகிறார்களோ என்னமோ. ஏர்போட்டுக்குள் போகும் நிருபரின் குரலும் அவருக்கு பொருந்தவில்லை. ஓக்கே. மொத்தத்தில் கொடுத்த காசு வேஸ்ட் ஆகாம வேல்யூ ஃபார் மணி உள்ள படம்.

உருப்படாதது – 28/1/2011.

2011னின் சபதங்கள்…

  • பாதியில் எழுதி முடிக்காமல் உள்ள நாவலை முடிக்கவேண்டும்.
  • தேர்தலில் ஒரு நல்ல ஓட்டு, ரெண்டு கள்ள ஓட்டு போட வேண்டும். துட்டு நெறையா குடுக்குறவுங்களுக்கு கள்ள வோட்டு, ஐபோன் கொடுக்குறவுங்களுக்கு நல்ல வோட்டு. இலவச டெக்னாலஜி எங்கையோ போய்க்கிட்டுருக்கு.
  • சென்னைப் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். மொத்தம் 6543 பக்கங்கள். நெனைச்சாலே கண்ணக்கட்டுது.
  • ட்விட்டரில் 10000 ஃபாலோயர்சைச் சேக்க வேண்டும்.
  • ரொம்ப நாளா குறும்படம் எடுக்கனும்னு சொல்லிக்கிட்டிருக்கிற நண்பருக்கு ஃபைனான்ஸ் பண்ணனும். ரொம்ப நல்ல கதை. இப்போ நெனைச்சாலே கண் கலங்குது. உருக்கமான கதை. கதை கீழே இருக்கு. மிஷ்கின் படிக்காம இருக்கனும்.
  • ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாங்கி வச்ச ஆர்மோனியம் சும்மா தூங்குது. துடைக்கவாவது கத்துக்கனும்.
  • மாரத்தான் ஓட்டம். இங்க எங்க நடக்குதுனு தெரியல. ஆனா எப்படியாவது ஓடி முடிக்கனும், இன்ஸ்டால்மண்ட்லேயாவது.
  • பத்து உலக சினிமா, ஐந்து லோக்கல் சினிமா, மூணு நாவல், ஏழு கவிதைத் தொகுப்பு, நாலு ரெஸ்டாரண்ட், எட்டு கையேந்திபவன்… இதெல்லாம் இந்த வருஷ விமர்சன லிஸ்ட்ல இருக்கு. எப்படியாவது முடிக்கனும். டமிள் இணையக் கடமைனு ஒண்ணு இருக்கில்ல.
  • வாங்கியிருக்கிற Canon EOS 7Dயை வச்சி PiT போட்டி ஒண்ணுலயாவது ஜெயிக்கனும்.

குறும்படக் கதை :
கரிசல் காட்டில் ஒரு ஏழைப் பாட்டி. விறகு எடுத்துத் தான் பசி போக்கிக் கொள்ள வேண்டும். அவளுக்கு ஒரு மகள். சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர். விவாகரத்தானவர், ஒரே ஒரு டீனேஜ் பையன். பையன் *சு விட்டாலும் Yo man, whaz up, என்று தான் கேட்கும். அந்த அளவுக்கு நாகரீக உலகில் இருப்பவன். நிறுவனம் ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் மீட்டிங்கிற்காக ஒரு மாசம் அவரை அமேரிக்காவிற்கு அனுப்புகிறது. மகனைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. மகனைத் தாயிடம் விட்டுச் செல்கிறார்.

நாகரீகப் பேரனும், கரிசல் பாட்டியும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது கதை. நிறைய சுவாரசியம் உண்டு. பேரன் KFC fried chicken கேட்க, பாட்டி நாட்டுக் கோழிக் குழம்பு வைக்கிறதும், FTV பாக்க வேண்டும் என்று சொல்ல, பாட்டி பஞ்சாயத்து டீவியில் “வயலும் வாழ்வும்” வைப்பதும் என்று செல்கிறது. பின்னர் பாட்டியின் மனது மெச்சும்படியாக, பாட்டியின் ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் “பசுமை விகடன்” படித்து, பேரன் கம்பு விளைவிப்பதும், நாட்டாமையின் மகளை சைட் அடித்து கல்யாணம் முடித்து ஊர் ப்ரசிடண்ட் ஆவதும் என்று முடிகிறது.

லேட்டா வந்தாலும்…
சென்னைப் புத்தக கண்காட்சியில வாங்குன புத்தக லிஸ்டை எல்லோரும் எழுதியாகனும்னு ஒரு (தலை)விதி இருக்கு. கஷ்டப்பட்டு நாலு முறை அங்கு சென்று வாங்கிய புத்தகங்களைப் பற்றி கட்டாயம் எழுதியாகனும். போன வருஷம் என்னென்ன புத்தகம் வாங்கனும்னு லிஸ்ட் எடுத்துப்போய் பேஜாராகிவிட்டது. கடை கடையா தேடி அலையனும், ஒண்ணு தேடுற புக் இருக்காது. இல்லைன்னா டிஸ்ப்ளே புக் மாதிரி அழுக்கா இருக்கும். போனது கடேசி ரெண்டு நாள்ளயில்ல. இந்த தடவை அப்படியாயிடக்கூடாதுன்னு லிஸ்ட் எதுவும் எடுக்கல. போனதும் முதல் வாரத்திலையே. ஜெனரல் டாபிக் மட்டும் தேர்ந்தெடுத்து, சூட்டோடு சூடா அங்கையே படித்து வாங்கின புத்தகங்கள்.,

இலக்கியம்
1. கம்பராமாயணத்தில் திராவிடம்  – சி.கோதண்டபாணி.
2. தொல்காப்பியம் மூலமும் உரையும் – தமிழக அரசுப் பதிப்பகம்.
3. இளைஞன் : திரைக்கதை, வசனம் – கலைஞர் மு.கருணாநிதி.

அரசியல்
4. வயலுக்கு பாயும் செங்குருதி  – காபூலிவாலா.
5. குடவோலை அரசியல்    -  செழியன் முத்துசாமி.
6. விஜயாலய சோழன் வரலாறு – துரை பிரசன்னா.

சமையல்
7. ஒரு மணி நேரத்தில் உலக சமையல் (சீனா) – ஜிங் லி (தமிழில் கா.சாமிநாதன்).
8. பத்திய சமையல் குறிப்புகள் – அருமை நாயகம்.

ஆன்மீகம்
9. எங்கு காணினும் சக்தி    – வி.பத்மநாபன்.
10. நீங்கள் கேட்க நினைத்த ஆன்மீக பதில்கள்    – பசி.செல்வம்.

கவிதை
11. செம்மாந்த மலர்கள் – வை.குமரவேல்.
12. எழுதாத கவிதைகள் – மு.ராஜாராமன்.

கதைகள்
13. கரிசல் பூமியின் ஊற்று – கீரனூர் செல்வி.
14. ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு – சி.செந்தில் கணேசன்.
15. சிறந்த சாகித்ய அக்காடமி தமிழ்க் கதைகள் 1975-1995 – சாகித்ய அக்காடமி.

கட்டுரைகள்
16. லெமூரியாவைத் தேடி    – வ.ராஜசேகர்.
17. கட்டுடைக்கும் வாழ்வியல்    -  ர.வெங்கடக்கிருஷ்ணன்.
18. உதவி டைரக்டரின் நாட்குறிப்பு  – குயிலன்.

Posted in உருப்படாதது. Comments Off

உளறல்கள் – 12/01/2011.

1/1/11
இந்த பேன்சி தேதியில ஸ்பெஷலா மீனா குழந்தை பெத்துக்கிட்டதாக படிச்சேன். நல்லது தானே. காருக்கே extra காசு கொடுத்து பேன்சி நம்பர் வாங்குறோம். மீனாவின் அடிச்சுவட்டில் போய் அதவுட பேன்சி தேதி ஒண்ணு இருக்கு ie., 11/11/11. அந்த சாதனைய செய்ய விருப்படுறவுங்க இப்பவே ஹோம் வொர்க்க ஆரம்பிக்கனும். அப்பதான் டெலிவரிக்கு டைம் சரியா இருக்கும்.

ட்விட்டர்
வேலை என்ற ஆப்பு இருந்ததுனால ரொம்ப நாளா வலை பக்கமே வர்றதில்ல. Social networking அது இதுன்னு சொல்றாங்க. என்னன்னே  புரியல. இப்போதான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கியிருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டிருக்கேன். ட்விட்டர்ல யார ஃபாலோ பண்றதுனு ஒரு பெரிய குழப்பம். Tamil celebrity twittersனு கூகிள்ல தேடி வசுந்தரா, த்ரிஷானு ரொம்ப முக்கியமானவங்களா ஃபாலோ பண்றேன்.

இந்த வசுந்தராங்ற பொண்ணு “தென்மேற்கு பருவக் காற்று”ங்க படத்துல நடிக்கிற பொண்ணு போல. ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை ட்வீட் பண்ணுது. ஏன் தெ.மே.ப.கா-ல நடிச்சதுனு தெரியல. பருத்தி வீரன் ப்ரியா மணி மாதிரி ஃபீல்ட் அவுட் ஆகாம இருந்தா சரிதான். முதல் subscriptionங்றதுனால கொஞ்சம் R&D பண்ணினேன். பொண்ணு தமிழ்நாடு தான் போல. கொஞ்சம் மூக்கு ஆப்பரேஷன் (சந்தியாவுக்கு செஞ்ச டாக்டர்க்கிட்ட போகாம இருக்கணும்),  Acne treatment, ஒரு சூப்பர் ஹிட், கொஞ்சம் அதிஷ்ட்டம் ஆகியவை உடனடித் தேவை.

சேட்டன்களின் சேட்டை
கொஞ்ச நாளா சேனல் மாத்தும் போது ஏசியாநெட், சூர்யா டிவியும் மாட்டுது. அதுல பாத்தோம்னா சேட்டன்கள் தமிழ்ப்பாட்டு பாடிக்கிட்டிருக்காங்க. எல்லாம் சூப்பர் சிங்கர் மாதிரியான நிகழ்ச்சிகள். நாம எப்பவாது மலையாளப் பாட்ட பாடுறோமா ? அதுவும் ரொம்ப நல்லா பாடுறாங்க. 80s, 90s மற்றும் புதுப்பாட்டுனு பின்றாங்க. சேட்டன்களின் இந்த கொலைவெறிக்கு என்ன காரணம்னு தெரியல.

2011
2011 கோரிக்கைகளை வைக்க வேண்டிய நேரம் வந்ததாச்சு.

  • தமன்னா, த்ரிஷா, ஜெனிலியா போன்ற சப்பை ஃபிகர்களாகவே பாத்து போரடிக்குது. சோனாக்‌ஷி சின்கா மாதிரி யாரையாவது கொண்டு வாங்கப்பா கோடம்பாக்கத்து சிங்கங்களே.
  • UTV Bindass, Zoom, Colorsனு ஹிந்தி சேனல்களில் உள்ள ரியாலிட்டி ப்ரோக்ராம்லாம் terrorஆ இருக்குது. பேரன்ட்ஸ் மாற்றம், பாய் ஃப்ரெண்ட் மாற்றம், Big bossனு பின்றாங்க. நாம இன்னும் மானாட எருமையாட, சூப்பர் சிங்கர்லேயிருந்து (அதுல வேற ஜூனியர், சீனியர், பூட்ட கேஸ்னு பல வெர்ஷன் வேற) இன்னும் மாறாமவே இருக்கோம்.
  • அமீர் பாவம் “பருத்தி வீரன்”ற படத்தை சிவகுமார் கேங் டார்ச்சரைத் தான்டி டைரெக்ட் பண்ணி வெளியிட்டார். அது வந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சி ஆனா நம்ப கோடம்பாக்கத்து சிங்கங்கள் அதை மறக்காம இன்னும் கிராமத்து படமா எடுத்து டார்ச்சர் பண்ணுராய்ங்க. நம்ம ஸ்லாங் கூட மாறிடிச்சு. இந்த வருஷமாவது கைலி, வேட்டியிலிருந்து பேண்ட், சூட்டுக்கு மாறுங்கப்பா. இல்லைன்னா சப்டைட்டிலோடு ஹிந்தி படங்களை டவுண்லோட் பண்ணி பாக்க வேண்டியதுதான்.
  • 2010 ஃபுல்லா Apple மயம் தான். Apple லோகோவோட ஜட்டி வந்திருந்தாக் கூட மக்கள் வாங்க க்யூவுல நின்னுருப்பாங்க. 2011ல மாற்றம் வரப்போகுது. Android, எங்கும் எதிலும் Android தான். Smart Phone, Tablet, Personal Media Player எல்லாத்துலையும் Android தான். NHM பத்ரி Android based eReader கொண்டு வந்தால் சூப்பரா இருக்கும். அப்புறம் அவுங்க டைட்டில்சையெல்லாம் eReaderலையும் வெளியிடலாம். Almost Amazon-Kindle business style. 2011ல கண்டிப்பா Rs.10,000க்கு eReader கொண்டு வரமுடியும் (Rockchip based).
  • AMDயின் Bulldozer, Bobcat., Intelன் Sandy Bridgeன் சேலஞ்சை சமன் செய்ய வேண்டும்.  Beat பண்ணுமான்னு சந்தேகமா இருக்கு.
Posted in உளறல். Comments Off

நிஜமாவே சொ.செ.சூ – 06/01/2011.

டிஸ்கி : சொந்த செலவில ஆப்பு.

இவ்ளோ நாள் எஸ்கேப் ஆனதுல என்னென்ன மாறியிருக்குதுனு எழுதி எழுதி போரடிக்குது. ஆனா ஏன் இவ்ளோ நாள் எஸ்கேப்ங்றத கண்டிப்பா எழுதியே ஆகனும். “வரலாறு முக்கியம்”னு மண்ணின் மைந்தர் வடிவேலுவே சொல்லியிருக்கார்ல.

வேலை செய்யாம உடம்பும் மூளையும் துருப்பிடிச்சதுனால இந்தியன் (Indian owned) கம்பேனிக்கு மாறினேன். கொஞ்சம் வேலை செய்யலாமேனு தான் போனேன். சிவாஜி படத்துல வாசு விக்ரம் ஆன மாதிரி ஆகிடுச்சு, “ஆப்பு வச்சாங்க ஆனா எடுக்க மறந்துட்டாங்க”. ஆனா இங்க சொந்த செலவுல நானே எனக்கு வச்ச ஆப்பு.

பொதுவாவே ஷெட்யூலெல்லாம் வெட்டி முறிக்கிர நேரம், காபி குடிக்கிற நேரம், நெட்ல உலாவுர நேரம், கண்ணத் தொரந்துக்கிட்டே தூங்குற நேரம் எல்லாத்துக்கும் சேத்து 3x டைம் போட்டு மேனேஜர் கிட்ட ஷெட்யூல் கொடுப்போம். ஆனா அங்க என்னன்னா கஸ்டமர்கிட்ட சொல்றதே 0.5x தான். இல்லேன்னா வேற எங்கையாவது கஸ்டமர் ஓடிட்டா என்ன பண்றது. அப்புறம் கஸ்டமர் இஷ்டத்துக்கு specக்க வேற மாத்துவான், ஆனா deadline மாறவே மாறாது. OMG. கிளிஞ்சது போங்க. பிறகு 0.25x நேரத்துல முடிக்கனும்.

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் 9am to 12am வேலை. ஷெட்யூல் கொடுமைய மீட் பண்ணுறதுக்கு சனிக்கிழமையும், ஞாயிறு அரை நேரமும் வரணும். டப்பா டான்ஸ் ஆடிடுச்சு. மக்கள் அதுக்கு மேல, bugக fix பண்ணுங்கப்பா, integrationனுக்கு வாங்கப்பானு ஒவ்வொருத்தன் காலிலும் விழாத குறையாக் கேக்கனும். கொஞ்சம் எகிறினால், என்னால் இதுதான் முடியும் இல்லேன்னா நீயாப் பாத்துக்கனு சோகமா நிப்பாங்க.

கஸ்டமர் அதுக்கு மேல. உலகம் பூரா ஒவ்வொரு மேனேஜரா வச்சி, 24hrsசும் ஸ்டேடஸ் கேப்பாங்க. கரெக்ட்டா நைட் பன்னென்டு மணிக்கு சாப்பிடும் போது கால் பண்ணுவாங்க. இந்த மாதிரி கேவலமா ரிலீஸ் பண்ணிட்டு சோறா திங்கிறனு அர்ச்சனை வேறு.

இதுக்கு மேல அங்க இருந்தோம்னா இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் கருகிடும்னு வேலை மாறிவிட்டேன். மாறி இப்போ ரெண்டு மாசமாகுது. மீண்டும் MNCக்கே வந்தாச்சு. வந்தோமா சீட்ட தேச்சோமா, லைட்டா வேலையும் செஞ்சோமானு பொழுது போகுது. அதானால மீண்டும் எழுதுத்துப்பணி (?) ஆரம்பம்.

இதனால Indian ஓனருங்களுக்கு சொல்றது என்னன்னா…

  • கொடுக்குற சம்பளத்துக்கு அதிகமா கறக்கனும்னு நினைக்காதீங்க.
  • Happy Employees results in Happy Customers. எங்களுக்கும் பெர்சனல் டைம் வேணும் மேனேஜர் சார்.
  • Appreciation & Recognition ரொம்ப முக்கியம் தலைவா. இல்லேன்னா மக்கள் எதுக்கு வேலை செய்றோம், ஏன் வேலை செய்றோம்னு தலைய சொறிஞ்சிக்கிட்டே இருப்பாங்க.
  • எதுக்கெடுத்தாலும் Engineersச குறை சொல்றத விட்டுட்டு Senior Managementக்கும் கொஞ்சம் ஆப்பு வையுங்க.
  • Get a big fat rich stupid customer. பிச்சக்காரன்கிட்ட போயி பிச்ச எடுக்கக்கூடாது.

 

Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off

உருப்படாதது – 31/12/2010

மீண்டும் :

உலகத்துக்கு ஒண்ணும் புதுசா சொல்லப் போறதில்ல. ரொம்ப நாள் கழிச்சி வந்து பாத்தா… வேர்ட்பிரஸையும் தமிழில் மாத்தி வச்சிருக்காங்க. ஒண்ணும் புரியல… இடுகை, பதிப்பி, ஊடகம்னு..

நான் வாசிக்கிறவுங்க அனைவரும் ஃபீல்ட் அவுட் ஆகிட்டாங்க. ரொம்ப நாள் கழிச்சு பதிவுகள் படிக்கிறேன். எல்லாமே அதே மாதிரி தான் இருக்கு. திரை விமர்சனம், உள்குத்து etc., etc.,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Will be back in swing from 2011.

Posted in உருப்படாதது. Comments Off

உருப்படாதது – 17/07/2008.

நடந்தது என்ன ?
	இந்த நாலு மாச கேப்ல பல விஷயங்கள் நடந்திருச்சி. ஆடு, மாடு, கோழி தவிற பல
நடந்துவிட்டன.,

MSFT & Yahoo :
	ஏறக்குறைய திரைக்கதையை ஊகித்தாலும் கிளைமாக்ஸை தவறவிட்டுவிட்டேன். Icahn, "நாட்டம தீர்ப்ப மாத்து"னு
கதறினாலும், நாட்டாமை மசியவில்லை. அப்புறம் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்விகளைக் கேட்டார்.
க்ளைமாக்ஸ்ல அந்தர் பல்டி. இப்போ நாலு நாளா ஏதோ காமெடி நடந்துக்கிட்டிருக்கு. Yahoo வை நினைச்சா பரிதாபமா
இருக்கு.

AMD :
	F* U AMD. நானும் காலம் காலமா dual core phenom வரும் வரும்னு காத்துக்கிட்டிருந்தேன். என்ன ஆச்சோ
அதை AMD கேன்சல் பண்ணிட்டாங்க. அந்த ஆண்டவன் தான் AMD ய காப்பாத்தனும்னு நினைச்சிட்டிருந்த போது..
வந்தாரு ATI4850. Cool... Nvidia தலை தெறிக்க ஓட வேண்டியதாச்சி. Phenom + 4850 டெட்லி காம்பினேஷன்னு
நினைக்கிறேன். மொதல்ல காசு வேணும்.

தஸ் அவதார் :
	பாத்தவுங்க, பாக்காதவுங்கனு எல்லோரும் கண்டிப்பா தஸ் அவதாரைப் பற்றி எழுதியே தீர வேண்டும்.
நான் தீவிர கமல் ரசிகன் கிடையாது, அதனால இன்னும் பார்க்கவில்லை. பலர், இந்தியன் பட மேக்கப் மாதிரி இருக்குனு
சொல்லும் போதே பார்க்க வேண்டும்ங்ற ஆர்வம் போய்விட்டது. மேக்கப் டெக்னாலஜியில கமல் எங்கெங்கையோ
போய் படித்தார்னு சொன்னாங்க, கோட் அடிச்சிட்டாரோ என்னமோ. இந்த மாதிரி உலக சாதனை படங்கள் செஞ்சிட்டு
(ஹேராம், ஆளவந்தான் etc.,) கொலைவெறியோடு சில காமெடிப் படங்கள் நடிப்பார் (பஞ்சதந்திரம், ப.கே.ச etc.,).
அவைகளை வாரத்துக்கு ஒரு முறையாவது டி.வியில் பார்க்கும் தண்டனை மக்களுக்கு. தஸ் அவதாருக்கு பிறகு மீண்டும்
ஒரு உலக சாதனைப் படத்தில் நடித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

யூடியூப் :
	காத்திருந்து காத்திருந்து..... finally.. சஸ்பெண்ட் ஆகிவிட்டேன். kuumuttai ஐடி டமாலானைதை ஏறக்குறைய லைவ்வா
 பாத்தேன். அரை மணி நேரத்துக்கு முன்னாடி கமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ணிவிட்டு பிறகு வந்தால்.. This account
has been permanently disabled னு தரிசனம் கிடைத்தது. naankuumuttai ஐடிய தூங்கும் போது நாக் அவுட்
பண்ணிட்டாங்க.
	சஸ்பென்ஷனுக்காக காத்துக்கிட்டிருந்தேன்னு தான் சொல்லனும். எனது ஓய்வு நேரத்தை (aka ஆபீஸ் நேரம்)
யூடியூபே விழுங்கிக் கொண்டிருந்தது. அதுவுமில்லாம இப்போ வேலை மாறலாமானு யோசிச்சிட்டிருகேன். ஓப்பி
கம்பேனி, வேலை செய்யும் கம்பேனினு மாத்தி மாத்தி மாறுவேன். இப்போ வேலை செய்யும் கம்பேனிக்கு மாற
வேண்டிய வேளை வந்தாச்சு. Hello Worldஐயே தப்பும் தவறுமா எழுதிக்கிட்டிருக்கேன். என்ன நடக்கப் போகுதோ
தெரியல.

பெடோரா :
       விடியோ கேப்சர் செய்ய ஆரம்பித்ததிலிருந்து இது வரைக்கும் நாலு முறை விண்டோஸ் க்ராஷ் ஆகியிருக்கு
(நன்றி : டுபாக்கூர் தய்வான் கேப்சர் கார்ட்). ஒவ்வொரு முறையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இப்போ
கொஞ்ச நாளைக்கு முன்னாடி டமாலயிடுச்சி. இந்த முறை விண்டோஸ் + பெடோரா இன்ஸ்டால் பண்ணிவிட்டேன். கொஞ்சம்
தாவு தீந்துடுச்சி. இருந்தாலும் ஓக்கே. GRUB ல பெடோராவே டீபால்ட்டா லோட் ஆகுற மாதிரி பண்ணியிருக்கேன்.
இதுவரைக்கும் எந்தக் குறையுமில்லை. அங்கேயும் பயர்பாக்ஸ் & ஓப்பன் ஆபிஸ், இங்கையும் பயர்பாக்ஸ் & ஓப்பன்
ஆபிஸ். பூபார்க்கு பதில் இங்கே ரிதம்பாக்ஸ். Not bad.

ஜென் :
	க்ரியேடிவ் ஜென் அடுத்த மாடலுக்குப் போவதால் தற்போதைய ஜென் சல்லிசா கிடைக்கிது. நான் ஆர்டர்
பண்ணும் போது $75க்கு இருந்தது. புதரகத்திலிருந்து வரும் நண்பர் அடுத்த மாதம் கொண்டு வருவார்.
எனக்கே எனக்குனு பிடிச்ச விடியோக்களை மீண்டும் கேப்சர் பண்ணி (இப்போ தான் அடிக்கடி டி.வியில
போடுராங்களே), ஜென்னுக்கு மாற்றலாம்னு இருக்கேன்.
Posted in உருப்படாதது. Comments Off

உளறல்கள் – 02/07/2008.

வந்துட்டோம்ல

இந்த பதிவுக்கு கோடானு கோடி வாசகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதுல பல கோடி பேர் எனக்கு மெயில் மேல மெயில் எழுதி ஏன் பதிவு போடலைனு செல்லமா வருத்தப்பட்டாங்க. அவுங்கள்ளாம் மனம் குளிரும்படி “I am back….” (நன்றி: அஜித்).

என்னா காரணம்னு எல்லாம் தலைய பிச்சிக்கிட்டிருப்பீங்க. ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு (கோடிக்கணக்குல தான்). அவுங்கவுங்களுக்கு பிடிச்சதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். எல்லாத்தையும் எழுத முடியாது. சாம்பிளுக்கு கொஞ்சம்.

  • தமிழர்களின் வாழ்வு முன்னேற்றத்துக்காக யூடியூப், ப்ளாக்னு ஆபீஸ் நேரத்துல கடுமையா உழைக்கிறதை பெருசு (அதாங்க ப்ராஜெக்ட் மேனேஜர்) தப்பா புரிஞ்சிக்கிட்டு, வேவு பாக்குறதுக்காக பக்கத்துல வந்து உக்காந்திருக்கார்.
  • ஆபீஸ் நேரம் போக மீதி நேரம் நிறையா இருக்கறதால MITயில (அமேரிக்கவுல இருக்கறது) “Using chaotic theory to determine cosmic age and implementing bug free code” ங்ற டாபிக்ல Ph.d செஞ்சிகிட்டிருக்கேன்.
  • தமிழ் பதிவர்களை தவறாமல் பீடிக்கும் வேலை ப்ளூ நோய் வந்து விட்டது.
  • பதிவின் வருகை சிங்கிள் டிஜிட்டை தாண்டாததால் மனசு நொந்து அப்பீட் ஆகிவிட்டேன்.
  • உலக சமாதானத்தை நிலைநாட்ட அமேரிக்கா, ஆப்ரிக்கா சென்றுவிட்டேன்.
  • யூடியூப் சாதனைக்காக என்னைப் பாராட்ட copyright owners ஆட்டோ அனுப்பும் வாய்ப்பு இருப்பதால் மலையேறிவிட்டேன்.

Ok, சொறிஞ்சிங்ஸ் ஸ்டாப்.

Posted in உளறல். Comments Off

உளறல்கள் – 04/03/2008.

போன வாரம் ரெண்டு பெரிய சோக நிகழ்ச்சிகள் நடந்து விட்டன.

ஃபீலிங்ஸ் – 1.
தல சுஜாதா இறைவனடி சேர்ந்துவிட்டார். பெரும்பாலானவர்களைப் போல் நானும் தமிழில் கதைகள் படிப்பது சுஜாதா மூலமாகத் தான் ஆரம்பிச்சேன். வாசிப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது…. “வாசிப்பு”னு நான் சொல்வதே காமெடியா இருக்கு. “உச்சக்கட்டம்”னா, ஸ்கூல்ல கடேசி பெஞ்சில உக்காந்துக்கிட்டு பாடப்புத்தகத்துக்கு நடுவுல சுஜாதா புத்தகம் படிப்பது. அப்போ பெரும்பாலும் சயின்ஸ் ஃபிக்ஷன் தான். ரொம்ப ஆர்வமா இருக்கும். அப்படியே அரத்தூக்கத்துல கனவுல மிதக்குறதுக்கும் வசதியா இருக்கும். பிற்காலத்தில் சாஃப்ட்வேர் இஞ்சினியராகுவதற்கு பயிற்சியாக்கும்.

ஏழு கழுதை வயசானதுக்குப் பிறகு படிப்பது அவரது சிறுகதைகளைத் தான். “மத்யமர் கதைகள்” தொகுப்பு ரொம்ப பிடிச்சது. சுஜாதா மூலமாகத் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச மற்றொரு எழுத்தாளரைத் தெரிந்து கொண்டேன் (சுப்ரமண்ய ராஜு). சுஜாதாவின் பழைய எழுத்துக்களை இன்றும் படித்தாலும் அவரது “அனிதாவின் காதல்கள்”க்கு பின்னர் எழுதியதை படிக்க விருப்பம் இருந்ததில்லை. ஏனோ தெரியவில்லை. “அனிதாவின் காதல்கள்” சுஜாதா ஸ்டைல் கிடையாது. அதுக்கு பிறகு “இரண்டாவது காதல் கதை”யும் படிக்க ட்ரை பண்ணினேன். முடியல.

ஸ்கூல்ல இருந்த போது லைப்ரேரியில் புத்தகம் எடுத்து படிப்பது வழக்கம். அப்போ ஒரு விளையாட்டு விளையாடுவேன். அட்டைப்படத்தைப் பார்க்காமலே, வெறும் ஒரு பத்தி மட்டும் படித்து சுஜாதா எழுதியதா என்று கண்டுபிடிப்பது. 100% சக்ஸஸ் ரேட் தான். RIP தலைவா.

விசா பதிப்பகத்தின் க்வாலிட்டி கொடுமையா இருக்கு. யாராவது சுஜாதாவின் சிறுகதைகளை ரெண்டு மூணு வால்யூமா நல்ல தரத்தில் வெளியிட்டால் நல்லாயிருக்கும்.

ஃபீலிங்ஸ் – 2.
எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு யூடியூப் அப்லோடர் senthil5000 ஐ சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. யாரு காப்பிரைட் ரிப்போர்ட் கொடுத்தாங்கனு தெரியல. போன வாரத்துலேயிருந்து நானும் எதுவும் அப்லோட் பண்ணவில்லை. என்ன நடக்குதுனு பாக்கனும்.

Posted in உளறல். Comments Off
Follow

Get every new post delivered to your Inbox.