தமிழ்மணத்துல பிரபலமாவது எப்படி ?

தமிழ்மணத்துல இன்னும் நம்மள சேக்கல. குமரனே (கற்பூர நாயகியே கனகவல்லி) இன்னும் வெயிட் பண்ணாராரு நாமெல்லாம் எம்மாத்திரம். சரி, தமிழ்மணத்துல பிரபலமாவது எப்படி ? ரொம்ப சுலபம் தான்.

1. பந்திக்கு முந்து. முகப்புல எந்த பதிவு வந்தாலும் அடிச்சி புடிச்சி போய் முதல் பின்னூட்டம் போடுறது. நல்லாயிருக்கு, சூப்பர்னு எழுதனும் அதுதான் முக்கியம், அப்பதான் எழுதுனவரு நம்ம பதிவுக்கும் வந்து சூப்பர்னு சொல்லுவாரு.

2. விவாதத்துல முங்கு. கண்ணு முழி பிதுங்குறமாதிரி சாதி, மதம் பற்றிய விவாதங்கள்ல கலந்துக்கனும். ஆனா யாருக்கும் நாம எந்த சைட்ல இருக்கோம்னு தெரியக்கூடாது. கடேசியா நாம நடுநிலைவாதினு ரெண்டு பார்ட்டிகளும் முடிவு பண்ணிடும். நடுநிலைவாதின்னாலே தமிழ்மணத்துல நாம பிரபலமாயிட்டோமுனு அர்த்தம்.

3. தனக்குத்தானே பின்னூட்டு. ஆனா அதுக்கு ஒரு புது ஐடி உருவாக்கனும். அதுவும் பொண்ணு பேருல. ப்ரோபைல்ல அழகான பொண்ணு போட்டோவ போடனும். அப்புறம் அந்த ஐடி மூலமா நமக்கே சூப்பர்னு பின்னூட்டம் போட்டுக்கனும். என்னடா ஒரு பிகர் பின்னூட்டம் போடுதேன்னு பல பேர் நம்ம பதிவுக்கு வருவாங்க. படத்த மெயின்டேய்ன் பண்ணுரதுக்காக மத்தவுங்க பதிவிலும் போய் ஓக்கே, பரவால்ல, ரொம்ப நல்லா எழுதுறீங்க சுஜாதா மாதிரி, அப்படி இப்படினு பிட்ட போட வேண்டியதுதான்.

4. இது கொஞ்சம் டேஞ்சர். மன தைரியம் வேணும். நாமே நமக்கு ஒரு போலி ப்ளாக் திறக்கனும். ரொம்ப கேவலமா இல்லாம கொஞ்சம் படிக்கற மாதிரி, “கொரங்கு மூஞ்சி, மூதேவி, அப்படி, இப்படி”னு  நம்மள நாமே திட்டி பதிவு போடனும். அப்புறம் தமிழ்மணம் நிர்வாகிக்கு இந்த போலியை தடை பண்ணுங்கனு மெயில் போடனும், மறக்காம அந்த மெயில நம்ம ஒரிஜினல் பதிவுல போடனும். போலி உருவாகுற அளவிற்கு இவன் பெரிய ஆளுடானு மக்கள் நம்ம பதிவ படிக்க படை திரண்டு வருவாங்க. கொஞ்ச நாள் கழிச்சு போலி பதிவ ஊத்தி மூடிட வேண்டியது தான்.

5. வெக்கம் மானம் பாக்காம “மக்களே, எனக்கு பின்னூட்டம் போடுங்க”னு பதிவு போட்டுட்டு சரணாகதி அடஞ்சிரவேண்டியது.

Ok, மொக்கையா சொறியறத நிப்பாட்டிக்கிறேன்.  உண்மையாச் சொல்லனும்னா., வன்முறை எழுத்தில்லாத, படிக்க சுலபமா இருக்கற எந்த எழுத்துமே வரவேற்ப பெறும். அப்படியெல்லாம் நமக்கு எழுத வராது.

Posted in குப்பை. Comments Off on தமிழ்மணத்துல பிரபலமாவது எப்படி ?
%d bloggers like this: