திருமகன் ஒரு திறனாய்வு.

    “மொழி” படம் நல்ல பிரிண்ட் இல்லாததுனால “திருமகனை” தரவிறக்கம் செஞ்சி பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது கிராமத்துப் படங்களுக்கே உண்டான கோடம்பாக்கத்து விதிகள் மாறாம எடுத்திருக்காங்க. விகடன்ல நாலே நாலு வரி விமர்சனம் செஞ்சி குப்பைனு தூக்கி போட்டுட்டாங்க. அந்த அளவிற்கு மோசமில்லைன்னு நெனைக்கிறேன். “A” படத்துல ஆபாசம் இல்லாம ஆன்மீக விளக்கமா இருக்கும் ?

   Ok. கோடம்பாக்கத்து கிராமத்து விதிகள் என்னென்ன, அதை திருமகன் எப்படி பூர்த்தி செய்யுதுனு பாக்கலாம்.

கிராமம்னா ஊரே மதிக்கற ஒரு பெரியவர். அவரை எதிர்த்து நிக்கும் சில வில்லன்கள்.
    பெரியவர் விஜயகுமார். வில்லன்கள் ரஞ்ஜித் அப்புறம் ராதா ரவி.

பெரியவருக்கு ஒரு லூசு அல்லது ஒரு நல்ல மகன்.
    லூசுப் பையன் எஸ்.ஜே. சூர்யா.

கண்டிப்பா ஒரு மகள். அவளுடைய புருசன் ஒரு ரவுடி.
    மகள் சரண்யா. அவரோட புருசன் இளவரசு.

மகளுக்கு ஒரு பெண். அந்த பெண் மாமனத்தான் கட்டிகுவேன்னு அடம்பிடிக்கனும்.
    ப்ரீதி வர்மா. கொசுறுக்கு அவர் வயசுக்கு வராமல் இருக்கார். நான் எப்ப வயசுக்கு வருவேனு வர்ரவுங்க போரவுங்கக்கிட்ட கேட்டு பாக்குறவுங்கள நெளிய வைக்கிறார்.

வில்லனுக்கு ஒரு பெண். அந்த பெண் கதாநாயகன காதல் பண்ணனும்.
    இருக்கு. அனுதாபத்திற்கு அந்த பெண் ஒரு கால் ஊனம்.

ஒரு மைனர். அவருக்கு கைத்தடி.
    மணிவண்ணன். சார்லி.

மைனர் ஆபாச வசனம் பேச ஒரு பிகரு.
    மாளவிகா.

ஒரு ஏழை கதாநாயகி.
    மீரா ஜாஸ்மின். பானை செய்கிறவர்.

பரிவட்டம் சீன் & யாருக்கு கட்டுறதுனு சண்டை. கோயில் முன்னாடி பாட்டு & சண்டை.
கண்டிப்பா உண்டு. 

கதை.
    ஏழை கதாநாயகி, வில்லன் மகள், அக்கா மகள் மூவரும் கதாநாயகன காதல் பண்ணுகிறார்கள்.  வாக்கு தவறாத பெரியவர் ஒரு கட்டத்தில் வில்லனின் மகளுக்கே தன் மகனை மணம் முடிப்பதாக வாக்கு கொடுக்கிறார். அப்பாவின் வாக்கை அவரின் மரணத்திற்குப் பிறகு மகன் காப்பாற்றுகிறார். இது தான் கதை.

    ஆரம்பத்தில் சூர்யா ஏதோ கப்பல் கவுந்த மாதிரி லுக்கு விடுவது காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணந்ததற்காகவாம். மரண லுக்கு. ப்ளாஷ்பாக்கில் கதை. துப்பாக்கி, பானை, சுடுவது, மசாலா, அப்பிடி இப்பிடினு கோடம்பாக்க கிராமத்து பார்முலாவுல ஆபாசத்த கலந்தா கெடைக்கிறது தான் “திருமகன்”. காசு குடுத்து பாக்காதீங்க. டவுன்லோடு பண்ணி ஒரு தடவ பாக்கலாம்.

Posted in குப்பை. Comments Off on திருமகன் ஒரு திறனாய்வு.
%d bloggers like this: