1985ல் செய்த பாவம்.

சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு டேப் ரிக்கார்டர் பொட்டி இருந்தது. சான்யோ மேக். லெப் ஸைட் டேப் போடலாம். ரைட் ஸைட்ல ஸ்பீக்கர். காலைல அப்பா அதுல தான் திருச்சி, திருநெல்வேலி, சிலோன் நியூஸ் கேப்பார். அப்புறம் நாங்க படிக்கறதுக்காக ஒரு மணி நேரம் சுச் ஆப். அப்புறம் கேசட் போடுவார். சினிமா பாட்டு கேசட் தான். எல்லாமே ரிக்கார்டு செஞ்சது. கடையிலெல்லாம் போயி கேசட் வாங்குறதில்ல. துபாய், சிங்கப்பூர்லேருந்து வர்ரவுங்ககிட்ட சொல்லி வச்சி பிலிப்ஸ், சோனி, ட்டிகே, மேக்ஸல்னு தான் வாங்குவார். பெறகு ஊர்லயே பேமஸா இருந்த ரிக்கார்டிங் கடையில ரிக்கார்ட் பண்ணுவார். படத்துல உள்ள எல்லாப் பாட்டும் கெடையாது, ஸ்பெஷலா குறிப்பிட்ட பாட்டுகள் தான். எல்லாமே சூப்பரா இருக்கும். மாக்ஸிமம் இளையராஜா பாட்டு தான். அருமையா இருக்கும்.

திடீர்னு கொஞ்ச வருஷம் கழிச்சி அப்பா சினிமா பாட்டு கேக்குறத நிறுத்திட்டார். அவர் பாட்டு கேக்குறவரைக்கும் கேஸட்டையோ டேப் பிளேயரையோ யாரும் தொட முடியாது. கேக்குறத நிறுத்திட்டவுடனே நியூஸ் கேக்குறதுக்கு மட்டும்னு ஒரு ட்ரான்ஸிஸ்டர் வாங்கிட்டார். அப்புறம் நம்ம கிட்ட டேப் ரிக்கார்டர் வந்துச்சி. ஆப் பண்றது, பிளே, ரீவைண்ட், பார்வர்டு எல்லாம் கத்துக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம் தான் (அப்பா இல்லாதப்ப). எல்லா பாட்டும் மனப்பாடம் ஆயிருச்சி.

சரி, செஞ்ச பாவத்துக்கு வருவோம். பாட்டேல்லாம் மனப்பாடமாயிருச்சேனு சொல்லி இஷ்டத்துக்கு அந்த கேசட்டுகள்ள ரேடியோவ ரிக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன். ரொம்ப போர் அடிக்கவே ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாதப்ப ரெண்டே ரேண்டு கேசட்ட மட்டும் வச்சிட்டு மீதி எல்லாத்தையும் பழய பேப்பர்காரன்ட்ட போட்டு பேரிக்கா வாங்கி சாப்புட்டுட்டேன். விவரம் தெரியாத வயசு. இப்போ நெனச்சாலும் ரொம்ப வருத்தப்படுவேன்.

 Ok. சுய சொறிதல் ஸ்டாப். எல்லா கேசட்டும் போனாலும், பாட்டெல்லாம் ஞாபகம் வச்சி இப்போ MP3யா எல்லாப் பாட்டையும் டவுண்லோட் பண்ணிட்டேனு வையுங்க. ஆனா ஒண்ணு மட்டும் உறுத்துது. பாட்ட ரெக்கார்டு பண்ணவர் டேப் முடியுற கடேசித் துண்டுலெல்லாம் மேற்கத்திய பாட்டுகள சேத்திருப்பார். அந்த பீட் மட்டும் தான் ஞாபகமிருக்கும். என்ன பேரு, ஊரு ஒண்ணும் தெரியாது, இப்ப வரைக்கும். ஆனா லக்குல ரெண்டு மூண கண்டுபிடிச்சுட்டேன். அது யாருன்னா BoneyM, ABBA & Donna Summer. இன்னும் சில பேர யூடியூப்ல கண்டு பிடிச்சேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன். 1970’s & 1980‘s Disco வ

மற்ற லிங்குகள்…..

Lipps Inc : Funky Town
BoneyM : Daddy Cool
BoneyM : Rasputin
BoneyM : MaBaker
Abba: Dancing Queen
Abba: Mama mia
Abba: Super Trouper
Donna Summer : Hot Stuff
Donna Summer : Love to Love you baby 
 
பின் குறிப்பு : இருக்கிற முடியெல்லாம் பிச்சி ஒரு வழியா எப்படி சன் டீவி, விஜய் டீவி பாட்டுகளை ஒழுங்கா யூடியூப்ல ரிக்கார்ட் பண்றதுனு கண்டுபிடிச்சி சில பாட்டுகள போட்டுள்ளேன். மேகமே மேகமே, ஒரு ஜீவன் அழைத்தது, அழகிய விழிகளில், சும்மா கிடந்த சிட்டுக்குருவி, ஏதோ நினைக்கிறேன் & என்னைப் பந்தாட பிறந்தவளே.

ஏதோ கிளிச்சிட்டாப்புல நெனச்சா, வந்தார் வேலூர் விஜயகுமார். இன்னும் சூப்பரா இருக்கு அவரோட வீடியோஸ். சூப்பர் பாட்டுகள். கண்டிப்பா பாருங்க.

Posted in குப்பை. Comments Off on 1985ல் செய்த பாவம்.

விடுபட்டவை – Bittorrent மற்றும் யூ டியூப்

சென்ற பதிவில் யூ டியூப் சுட்டியை தவறுதலாக கொடுத்துவிட்டதால் பலர் கூமுட்டையின் விருப்ப வீடியோவிற்கு (kuumuttai’s favourite video) இணைந்துள்ளார்கள். ஆனால் கூமுட்டையின் uploaded videoவிற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். சரியான சுட்டி இங்கே. முந்தைய பதிவிலும் மாற்றிவிட்டேன். முன்பு இணைப்பு (subscribe) செய்தவர்கள், புதிய சுட்டியின் மூலம் மீண்டும் இணைப்பு (subscribe) செய்யுமாறு வேண்டுகிறேன்.

Bittorrent பற்றி எழுதியதைப் பலர் பார்த்திருக்கின்றனர் என்று WordPress கூறுகிறது. ஆகையால் விடுபட்ட சில விஷயங்களையும் கூறுகிறேன்.

1. நீங்கள் என்ன download செய்கிறீர்கள் என்பதை கவனத்துடன் தேர்வு செய்யுங்கள். வைரஸ்கள் அதிகமாக உலாவுமிடம் bittorent எரியாக்கள். ஆகையால் உங்கள் கணிணியில் anti-virus மென் பொருள் இருப்பது அவசியம்.

2. Download வேகத்தைக் கூட்டுவதற்காக port forwardingஐ பரிந்துரைக்கின்றனர், உங்கள் வீட்டில் உங்கள் routerல் இதைச் செய்ய வேண்டும். சுட்டி இங்கே. Firewall பயன்படுத்தினால் அதிலும் அந்த portஐ திறக்க வேண்டும். வேலையிடத்தில் இதைச் செய்யமுடியாது (சிஸ் அட்மின் ஆப்பு வச்சிடுவார்). வீட்டில் செய்து பாருங்கள். ஆனால் port forwarding செய்வதால் hackers உங்கள் கணிணியை பயன் படுத்த முடியும் என்று படித்துள்ளேன். புரிபடாத விஷயம் என்பதால் செய்வதில்லை.

3. பலர் unlimited இணைய இணைப்பு எடுத்திருப்பார்கள், வேஸ்டா இருக்கே என்று கவலையுறாமல், ஒரு torrentஐ ஆரம்பித்தால் ஒரு நாள் முழுக்க download செய்து உங்கள் வயிற்றில் பாலை வார்க்கும்

4. பல torrentகள் ஒரு வருடம், இரு வருடம் என உயிரோடு (seeders இருந்தால் உயிர் இருக்குனு அர்த்தம்) இருக்கும். ஆனால் தமிழ் படங்கள் அப்படியல்ல, ஒரு வாரம் இருந்தாலே பெரிசு. நம்ம மக்கள் download பண்ணியவுடன் seed செய்ய மாட்டார்கள், உடனே கடைய மூடிவிடுவார்கள். ஆகையால் பிடித்த படம் வந்தவுடனே download செய்யவும். ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் torrent செத்து இருக்கும்.

5. Coupload, rapidshareல் மக்கள் உடனே படத்தை போடுகிறார்கள். அதெல்லாம் Cam பிரிண்டுகளாக இருக்கும். ஒரு மாதம் காத்திருந்தால் torrentல் மக்கள் DVDrip செய்து, தரமாக வெளியிடுவார்கள். மேலும் பல பழைய மற்றும் புதிய படங்கள் torrentல் divx formatல் கிடைக்கும். டிவிடியில் அல்லது சிடியில் எழுதி படம் பார்க்க வேண்டியது தான்.

6. உலக சினிமாவைப் பார்க்க விரும்பினால் torrentஐ அணுகினால் போதும். நல்ல உலக சினிமாக்கள் கிடைக்கின்றன. மேலும் பல கணிணி புத்தகங்கள், மின் புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் என வகை வகையாக கிடைகின்றன.

7. Pirated மின் பொருள் பக்கம் தலை வைத்து படுக்காமலிருப்பது நல்லது. எந்த நேரத்துல அது உங்க வீட்டு அட்ரஸ போலீசுக்கு (இணையம் மூலமாக) அனுப்பும்னு சொல்ல முடியாது.

Ok, இதோட bittorrent புராணம் ஸ்டாப்.

Posted in குப்பை. Comments Off on விடுபட்டவை – Bittorrent மற்றும் யூ டியூப்

தமிழ் புத்தாண்டில் ஒரு புதிய இணைய தொலைக்காட்சி உதயம்.

இப்புத்தாண்டில் புதிய இணைய தொலைக்காட்சி ஆரம்பமாகியுள்ளது. தற்பொழுது பரிட்சார்த்த முறையில் சன் டீவி மற்றும் விஜய் டீவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ டியூப் என்ற இணைய தளத்தின் மூலம் ஒளிபரப்பாகும். இவ்விணைய தொலைக்காட்சியைப் பார்க்க விரும்புவோர் இங்கே சுட்டவும்.

Ok. சொறிதல் ஸ்டாப். சும்மா தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ரிக்கார்டு செய்து யூ டியூபில் போட்டுள்ளேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

ஒளி, ஒலி தரம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். அதைக் கற்ற பின்னர் அதைப் பற்றி தனிப் பதிவாக இடுகிறேன்.

புத்தாண்டு நிகழ்சியிலே கலக்கல்கள் ரெண்டு. ஒண்ணு சங்கரின் சிவாஜி திரைப்படம் பற்றிய நேர்காணல். ரஜினி சும்மா முப்பது வயது இளைஞர் போலிருந்தார். அடுத்தது விஜய் டீவில் விவேக்கின் மூன்று மணி நேர ராஜாங்கம். அட்டகாசமாயிருந்தது.

1. வள்ளுவருங்கோ. விவேக் திருவள்ளுவர் போல வேடமிட்டு சென்னைக்குச் சென்று கலாய்த்தல். கையில் எழுத்தாணிக்கு பதில் ஸ்குரூ டிரைவர் வைத்திருந்தது காமெடி. பகுதி 1. பகுதி 2.

2. விவேக் பேட்டி. சொல்லி அடிப்பேன் குழுவினருடன் விவேக் பேட்டி. விவேக்கே விவேக்கை பேட்டி கண்டார். நல்லாயிருந்தது. பகுதி 1. பகுதி 2.

3. ஸ்பெஷல் ஜில்லுனு ஒரு ஜோடி. பிக்பாக்கெட விவேக்கும், பிச்சை எடுக்கும் கோவை சரளாவும் கலக்கும் நிகழ்ச்சி. பரவாயில்லை. பகுதி 1. பகுதி 2.

4. சன் டீவியில், “பீமா” படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விக்ரம், த்ரிஷா பேட்டி. பேட்டி எடுத்த ஆனந்தக்கண்ணன் த்ரிஷாவிடம் ஓவரா வழிஞ்சார். இத்தனைக்கு கல்யாணமாகி கொழந்த குட்டி இருக்காம். தலையெழுத்து. விக்ரம் ரொம்ப நல்லாவே பேசுவார். ஆனா அவருக்கு பேச வாய்ப்பு கம்மி. த்ரிஷா பதிலளிச்சதும், அவர் பேசினார். சப்பை கேள்விங்க.

த்ரிஷா ரொம்ப அழகா இருந்தார் 😉 (நம்ம பங்கு வழிசல்). வீடியோவ resize பண்ணியதால் அவ்ளோ நல்லாயில்ல. ஆனந்தக்கண்ணனை முடிந்த வரைக்கும் எடிட் பண்ணிவிட்டேன். பகுதி 1. பகுதி 2.

Posted in குப்பை. Comments Off on தமிழ் புத்தாண்டில் ஒரு புதிய இணைய தொலைக்காட்சி உதயம்.

இங்கிலிபீஸ் ராப் பாடல்கள் ஒரு திறனாய்வு.

திறனாய்வு நான் செய்யல, பில் மெகெர்னு ஒருத்தர் செஞ்சது. அமேரிக்காவுல இருக்குறவுங்களுக்கு இவர் பரிச்சயமாக இருக்கணும்.

நம்ம பாடலாசிரியர்களும் சிறுமூளை பெருமூளைக்கெல்லாம் டார்ச்சர் கொடுத்து, “சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா”, “உன் பாவடை நாடவுல பம்பரம் உடட்டுமா”, “நீ எனக்குள் நுழைய, நான் உனக்குள் வளைய”…. அப்படீன்னு எழுதிக்கிட்டு வராங்க. அமேரிக்க அண்ணாச்சிங்க என்னா செய்யுறாங்கனு பாப்போம். விளக்கத்த பில் சொல்றாரு, பாருங்க. அவரு சொல்றதுல முக்கியமானது என்னனா “உங்கள் பிள்ளைகளின் ஸ்லாங் உங்களுக்கு புரியாது, அவர்கள் கேட்கும் பாடல்களின் அர்த்தமும் உங்களுக்கு புரியாது”. சரி விசயத்துக்கு வருவோம்.

பின்குறிப்பு : தமிழ்ல நல்ல பாட்டுகள் பல இருக்கு. கொஞ்சம் தேடிப்பிடிச்சி தான் வெவகாரமான பாட்ட கண்டு பிடிக்க வேண்டியதாச்சி. என்ன பண்றது, நா ரொம்ப நல்லவன்.

Posted in குப்பை. Comments Off on இங்கிலிபீஸ் ராப் பாடல்கள் ஒரு திறனாய்வு.

நேற்று ரிலீசான தமிழ்ப் படங்கள், Pirated மென்பொருட்கள் கிடைக்குமிடங்கள்.

முன் குறிப்பு : Bittorrent என்றால் என்ன ? என்று தான் தலைப்பை வைக்க நெனச்சேன். பிறகு சும்மா குமுதம் டைப் தலைப்பு வச்சேன்.  “நான் சொல்லலைன்னா இதெல்லாம் எங்க கெடைக்கும்னு உங்களுக்கு தெரியாதா என்ன.” 😉

Ok, விஷயத்திற்கு வருவோம். Bittorrentனா என்ன ? சுத்தமான தமிழ்ல சொன்னா “BitTorrent is a peer-to-peer (P2P) communications protocol for file sharing.” நன்றி விக்கிபீடியா.

உதாரணத்திற்கு உங்க நண்பர் சிவாஜி படம் சூப்பர் பிரிண்ட் என்னிடம் இருக்கு. File size 1 GB தான்என்று சொன்னால் என்ன செய்வீர்கள். எனக்கு ஒன்னு, எங்க பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒன்னு அப்படி ஆர்டர் பண்ண மாட்டீங்களா.. இப்படி ஒரு அம்பது பேர் சேந்து கேட்டால் உங்க நண்பர் நொந்து போய்டுவார் இல்லியா. ஐம்பது பேருக்கும் அந்த file பகிர்வதற்காக அவர் செலவிடும் hosting resource அதிகம்.

அதையே இப்படி பண்ணிணால் எப்படி ? அந்த 1 GB file1MB யாக துண்டுகளாக்குவது, அப்ப ஆயிரம் 1MB துண்டுகள் கெடைக்கும். அந்த ஐம்பது பேரும் ஒரு நெட்வொர்க் அமைத்து 1MB, 1MBயாக பகிர்ந்துக்காலாமில்லையா. அதுவும் எப்படி, ஒவ்வொருவரும் தனக்கு பக்கத்தில் இருப்பவருக்கு 1MB துண்டை அனுப்ப வேண்டும், அதே போல் தனக்கு பக்கத்தில் இருப்பவரிடமிருந்து பெற வேண்டும். ஆக, இப்படி ஒன்றாகச் சேர்ந்து file பகிர்ந்தால், file வைத்திருப்பவர் தேவையில்லாமல் bandwidth செலவு செய்யத் தேவையில்லை. 50 x 1GBக்கு பதில் 1000 x 1MB செலவு செய்தால் போதும். அந்த நெட்வொர்க்கில் ஆயிரம் 1MBக்களை அனுப்பிவிட்டால் உங்கள் நண்பரின் வேலை முடிந்தது. பின்னர் அந்த நெட்வொர்க்கில் இருக்கும் மற்றவர்கள் தங்களுக்குள்ளாகவே அனைவரும் அந்த fileஐ பெறும் வரை பரிமாறிக் கொண்டேயிருப்பர். இந்த டெக்னிக் (வரைமுறை, protocol) தான் Bittorrent.

இதில் முக்கிய குறிச் சொற்கள் எனென்ன ?

Seeder : முழு fileஐயும் வைத்திருப்பவர். Download செய்ய ஆரம்பிப்பவர் பின்னர் முழு fileஐயும் பெற்றுவிட்டால் அவரும் seeder தான்.

Peer : இவரிடம் முழு fileலும் கிடையாது. அதனால் மற்றவர்களிடம் வாங்கியும் கொடுத்தும் கொண்டிருப்பவர்.

Swarm : ஒரு fileஐ பகிர்வதற்கா இருக்கும் கூட்டதின் பெயர். Group of seeders and peers are called as a swarm.

Tracker : seeder, peer கூட்டத்தை கண்காணிக்கும் சர்வர். இது தான் எந்த துண்டை யாருக்கு அனுப்பலாம், எந்த துண்டை மொதல்ல அனுப்பனும், போன்ற விஷயங்களைச் செய்யும்.

.torrent file : Download பண்ணவிருக்கும் file பத்தின தகவல்களை உடைய file.

Client : இது தான் நம்ம கணிணியில் செயல்படும் செயலி. இதில் .torrent file கொடுக்கவும். உடனே அது tracker contact பண்ணி seeders எத்தன பேர் இருக்காங்க, peers எத்தன பேர் இருக்காங்கனு கண்டு புடிச்சி, துண்டுகளை ஒன்னொன்னா download பண்ணும்.

ratio : Upload, download ratio. சில தமிழ் பட சைட்டுகள் ratio ஒன்றுக்கு கீழே போனால் அக்கவுண்டை கேன்சல் செய்துவிடுவார்கள்.

Port Forwarding : இது கொஞ்சம் வெவகாரமான விஷயம். எனக்கு புரியல.

Enabling Port in Firewall : Port Forwarding பண்ணினா இதையும் செய்யனும்.

இப்ப வரைக்கும் file, file ன்னே சொல்லிக்கிட்டிருக்கேன். அது தான் Bittorrentடின் புதுமை. என்ன download பண்ணுறோம்கிறது downlaod பண்றவரின் முழு பொறுப்பாகும். Client, Tracker எல்லாம் இதிலேயிருந்து தப்பிச்சிர்ராங்க. அதுனால தான் pirated மென் பொருள், MP3 இசை, நீலப்படங்கள், sதிரைப்படங்கள் முதலியன சுலபமாக பகிரப்படுகின்றன. இணையத்தில 35% டிராபிக bittorentனால தானாம். அதனால் உங்க வேலையிடத்தில் bittorrent தடை செய்யப்பட்டிருக்கலாம்.

சிறந்த client எது : சந்தேகமேயில்லாமல் utorrent அது தான். azureus, bitcomet இதெல்லாம் மற்ற client கள். சிறந்த torrent searchers : demonoid, isohunt, mininova இது மூன்றும் எனது சாய்ஸ். torrentspy & piratebay are ok, but not very good.

சிறந்த tracker : மேற்சொன்ன அனைத்து searchers களுமே trackerகளாக இருக்கின்றன. ஆகையால் தனி trackerகளை தேட வேண்டிய அவசியமில்லை.

ஒரு சின்ன சோதனை முயற்சி..

utorrentஐ நிறுவவும். முதல் முறை செயல்படுத்தும் போது connection speedஐ கேட்கும்.

– PC World April 2007 downlaod செய்வோம்.

அதற்கான .torrentஇங்கேயிருந்து download செய்யவும்.

utorrentல் அந்த .torrentஐ கொடுக்கவும்.

எத்தனை seeders மற்றும் peers இருக்கிறார்களோ அதைப் பொறுத்து ஸ்பீடு இருக்கும். மெதுவாக ஆரம்பித்து பின்னர் ஸ்பீடு கூடும்.

சரி தமிழ் படங்களுக்கு இருக்கான்னா. இருக்கு இங்கே மற்றும் இங்கே. அவர்களுடைய மொத்த torrents பார்க்க இங்கே சொடுக்கவும்torrrent டவுண்லோடு பண்ணுவதற்கு இருக்க account வேண்டும், ஆகையால் அதை முதலில் create பண்ணுங்கள். free தான்.

ஆக மொத்தம் அவுங்கவுங்களுக்கு தேவையானதை டவுண்லோடு பண்ணி சுபீட்சமாக இருக்கவும்.

Posted in குப்பை. Comments Off on நேற்று ரிலீசான தமிழ்ப் படங்கள், Pirated மென்பொருட்கள் கிடைக்குமிடங்கள்.

சிவாஜி பாட்டுகள் அனைத்தும் ரெடி.

எப்ரல் 4 தான் ரிலீஸ்னு சொன்னாங்க, ஆனா தமிழ் பீட்ல இப்பவே கெடைக்கிது. ஏற்கனவே லீக்கவுட் ஆன பாடல்க்ள் எல்லாமே இருக்கு. பாவம் சில தீவிர ரசிகர்கள் அதெல்லாம் “fake” பாட்டுக்கள்னு நெனச்சிக்கிட்டு இருந்தாங்க. சரி, நம்ம தர வரிசையப் பாக்கலாம்.

1. சூரியனும் சந்திரனும் : எஸ்.பி.பி.
2. சகானா சாரல் தூவுதோ : உதித் நாராயண்.
3. வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி : ஹரிஹரண்.

மத்தது எல்லாமே லிச்டுல வர வாய்ப்பே இல்லாதவை. படம் “பாபா” மாதிரி இருக்கக்கூடாதுனு தீவிர ரசிகர்கள் இப்பவே யாகம் நடத்துவது நல்லது.

Posted in குப்பை. Comments Off on சிவாஜி பாட்டுகள் அனைத்தும் ரெடி.
%d bloggers like this: