1985ல் செய்த பாவம்.

சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு டேப் ரிக்கார்டர் பொட்டி இருந்தது. சான்யோ மேக். லெப் ஸைட் டேப் போடலாம். ரைட் ஸைட்ல ஸ்பீக்கர். காலைல அப்பா அதுல தான் திருச்சி, திருநெல்வேலி, சிலோன் நியூஸ் கேப்பார். அப்புறம் நாங்க படிக்கறதுக்காக ஒரு மணி நேரம் சுச் ஆப். அப்புறம் கேசட் போடுவார். சினிமா பாட்டு கேசட் தான். எல்லாமே ரிக்கார்டு செஞ்சது. கடையிலெல்லாம் போயி கேசட் வாங்குறதில்ல. துபாய், சிங்கப்பூர்லேருந்து வர்ரவுங்ககிட்ட சொல்லி வச்சி பிலிப்ஸ், சோனி, ட்டிகே, மேக்ஸல்னு தான் வாங்குவார். பெறகு ஊர்லயே பேமஸா இருந்த ரிக்கார்டிங் கடையில ரிக்கார்ட் பண்ணுவார். படத்துல உள்ள எல்லாப் பாட்டும் கெடையாது, ஸ்பெஷலா குறிப்பிட்ட பாட்டுகள் தான். எல்லாமே சூப்பரா இருக்கும். மாக்ஸிமம் இளையராஜா பாட்டு தான். அருமையா இருக்கும்.

திடீர்னு கொஞ்ச வருஷம் கழிச்சி அப்பா சினிமா பாட்டு கேக்குறத நிறுத்திட்டார். அவர் பாட்டு கேக்குறவரைக்கும் கேஸட்டையோ டேப் பிளேயரையோ யாரும் தொட முடியாது. கேக்குறத நிறுத்திட்டவுடனே நியூஸ் கேக்குறதுக்கு மட்டும்னு ஒரு ட்ரான்ஸிஸ்டர் வாங்கிட்டார். அப்புறம் நம்ம கிட்ட டேப் ரிக்கார்டர் வந்துச்சி. ஆப் பண்றது, பிளே, ரீவைண்ட், பார்வர்டு எல்லாம் கத்துக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம் தான் (அப்பா இல்லாதப்ப). எல்லா பாட்டும் மனப்பாடம் ஆயிருச்சி.

சரி, செஞ்ச பாவத்துக்கு வருவோம். பாட்டேல்லாம் மனப்பாடமாயிருச்சேனு சொல்லி இஷ்டத்துக்கு அந்த கேசட்டுகள்ள ரேடியோவ ரிக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன். ரொம்ப போர் அடிக்கவே ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாதப்ப ரெண்டே ரேண்டு கேசட்ட மட்டும் வச்சிட்டு மீதி எல்லாத்தையும் பழய பேப்பர்காரன்ட்ட போட்டு பேரிக்கா வாங்கி சாப்புட்டுட்டேன். விவரம் தெரியாத வயசு. இப்போ நெனச்சாலும் ரொம்ப வருத்தப்படுவேன்.

 Ok. சுய சொறிதல் ஸ்டாப். எல்லா கேசட்டும் போனாலும், பாட்டெல்லாம் ஞாபகம் வச்சி இப்போ MP3யா எல்லாப் பாட்டையும் டவுண்லோட் பண்ணிட்டேனு வையுங்க. ஆனா ஒண்ணு மட்டும் உறுத்துது. பாட்ட ரெக்கார்டு பண்ணவர் டேப் முடியுற கடேசித் துண்டுலெல்லாம் மேற்கத்திய பாட்டுகள சேத்திருப்பார். அந்த பீட் மட்டும் தான் ஞாபகமிருக்கும். என்ன பேரு, ஊரு ஒண்ணும் தெரியாது, இப்ப வரைக்கும். ஆனா லக்குல ரெண்டு மூண கண்டுபிடிச்சுட்டேன். அது யாருன்னா BoneyM, ABBA & Donna Summer. இன்னும் சில பேர யூடியூப்ல கண்டு பிடிச்சேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன். 1970’s & 1980‘s Disco வ

மற்ற லிங்குகள்…..

Lipps Inc : Funky Town
BoneyM : Daddy Cool
BoneyM : Rasputin
BoneyM : MaBaker
Abba: Dancing Queen
Abba: Mama mia
Abba: Super Trouper
Donna Summer : Hot Stuff
Donna Summer : Love to Love you baby 
 
பின் குறிப்பு : இருக்கிற முடியெல்லாம் பிச்சி ஒரு வழியா எப்படி சன் டீவி, விஜய் டீவி பாட்டுகளை ஒழுங்கா யூடியூப்ல ரிக்கார்ட் பண்றதுனு கண்டுபிடிச்சி சில பாட்டுகள போட்டுள்ளேன். மேகமே மேகமே, ஒரு ஜீவன் அழைத்தது, அழகிய விழிகளில், சும்மா கிடந்த சிட்டுக்குருவி, ஏதோ நினைக்கிறேன் & என்னைப் பந்தாட பிறந்தவளே.

ஏதோ கிளிச்சிட்டாப்புல நெனச்சா, வந்தார் வேலூர் விஜயகுமார். இன்னும் சூப்பரா இருக்கு அவரோட வீடியோஸ். சூப்பர் பாட்டுகள். கண்டிப்பா பாருங்க.

Posted in குப்பை. Comments Off on 1985ல் செய்த பாவம்.
%d bloggers like this: