உளறல்கள் – 21/05/2007.

 விஜய் டீவி vs சன் டீவி.

யூடியூப்ல பாட்டு ரெக்கார்ட் பண்ணுவதற்காக இப்போதெல்லாம் அடிக்கடி டீவி பாக்க வேண்டியதாயிருக்கு. பெரும்பாலும் விஜய் அண்டு சன்கிறதால கம்பேரிசன். விஜய் டீவியில தற்பெருமை தாங்கமுடியாது. தன்னோட நிகழ்ச்சிகளையே விளம்பரப்படுத்தி பாக்குறவுங்களை படுத்திருவாங்க. சன் ஓகே, அடிக்கடி பெண்கள் உள்ள விளம்பரங்களை போடுறாங்க.

அஞ்சலி, அரசி, கோலங்கள், ஆனந்தம்க்கெல்லாம் வச்சுது ஆப்பு, விஜய்யின் “8.30க்கு என்ன பாக்கலாம்“. க்ளாஸ் குறு நாடகங்கள். மொத்தம் 5 எபிசோட்னு நெனக்கிறேன். இது வரைக்கும் ரெண்டு வாரமா பாக்குறேன். சன் டீவி சீரியல் டைரக்டர்ஸ் எல்லாம் அதப்பாத்து தூக்கு போட்டுக்கலாம். நாடகம் முடிஞ்ச பிறகு வர்ற சுகாசினியின் பிரச்சார வசனம் ஓக்கே. சுத்தமான தமிழ்ல பேசுவதால அவரது அலம்பல் மேக்கப்பை மறந்து ரசிக்க முடியுது.

அன்புடன்நடத்தும் கவுதமி கொஞ்சம் வாயில இருக்கறத துப்பிட்டு பேசலாம். ஏதோ வாயில வச்சுக்கிட்டே பேசுற மாதிரியே இருக்கு. காபி வித் அனு, அஸ் யூஷுவல் பெஸ்ட். பேட்டிக்கு வர்ரவுங்களையும் பொருத்து இருக்கு. சோபனா அண்டு பழனிவேல் நிகழ்ச்சி ஒரு எளவும் புரியல. ஆனா கங்கை அமரன் & எஸ்.பி.பி சூப்பர். கவுதமியால அவுங்களையேல்லாம் ஹேண்டில் பண்ணவே முடியாது. அனு ஹாசன் சிரிச்சி அவுங்ககிட்ட பேசுறதே கலக்கல்.

விஜய் டீவி கலக்க போறது யாரு கோஷ்டி தான் சன்ல போயி அசத்தப் போவது யாருன்னு பண்ணுதுங்க. அதுங்க சன் டீவிக்கு போடுற சிங்குசா இருக்கே, தாங்க முடியாது. விஜய் டீவிக்காரய்ங்க சம்பளமே குடுக்கல போல்ருக்கு. எல்லாரும், வாழ வைத்த சன் டீவி வாழ்கனு சொல்லிட்டு தான் நிகழ்ச்சிய ஆரம்பிக்கிறாங்க. ரெண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு. ஆனா சன்ல மதுரை முத்துஇருக்கறதால, அத மட்டும் ஸ்பெஷலாப் பாப்பேன்.

கண்ணுல வெளக்கெண்ணய்.

யூடியூப்பிற்காக வீடியோ ரென்டர் பண்ணும் போது ப்ரேம் பை ப்ரேம் பாட்டேல்லாம் உக்காந்து பாப்பேன். அப்ப கண்டுபுடுச்ச நோபல் பரிசுக்கான சங்கதிகள்

  • ஹீரோயின்ஸ் ஏன் பெரும்பாலும் செருப்பே போட மாட்டேங்குறாங்க ? கல்லு, மண்ணு, காடு, மலை எந்த இடமானாலும் செருப்பே கெடையாது. காலு வலிக்காதா ? பனிப் பிரதேசம் இல்லை வெளிநாடுன்னா செருப்பு போட்டுக்குறாங்க. ஆனாலும், இத்தனூண்டு ட்ரேஸ் தான். ஹீரோ மட்டும் கலர் கலரா ஜெர்கின் போட்டுக்கலாம்.

  • 80ஸ் பாட்டுகள்ல இந்த கொடுமையப் பாக்கலாம். பாட்டுக்கு நடுவுல ஹீரோயின் ட்ரெஸ் மாத்தலாம் அது ஓக்கே, ஆனா ஏன்யா ஹேர் ஸ்டைலை மாத்துறீங்க. ஒரு ஷாட்ல நீளமான கூந்தல், பத்து செகண்டுக்கப்பறம் பாப் கட்டிங், அப்புறம் மீண்டும் நீளமான கூந்தல். என்ன கொடுமையிது.

  • டீவி சீரியல் இன்ட்ரோ பாட்டுக்கு ஆடுறவுங்க எல்லோரும் ஒரு காலத்துல கூட்டத்தோட கூட்டமா ஆடுனவுங்க தான்.

  • ஒரு நண்பிக்கு கூட்டத்துல தாமிரபரணிஹீரோயினப் பாத்திருக்கேன். அப்புறம் காதல்சந்தியா ஒரு படத்துல குட்டி முருகனா வந்திருக்காங்க.

  • காளிபடத்துல அடி ஆடு பூங்கொடியேவுல வர்றது பாடகி அனுராதா ஸ்ரீராம்னு நெனைக்கறேன். சந்தேகம் இருந்தா கீழே உள்ள படத்தப் பாருங்க.

anu_01.jpg 

anu_02.jpg

மற்றது

  • ஒரு வழியா பெடரர் நடாலுக்கு ஆப்பு வச்சிட்டார். 2-6, 6-2, 6-0. 81ரு வெற்றிக்கப்பரம் ஒரு வழியா நடால் தோத்துட்டார்.

  • பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓப்பன் சோர்ஸ் மின் பொருட்கள் மேலே patent litigation போடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. GPL version 3 வர்ர நேரத்துல இந்த கொடுமை வேற. என்ன நடக்குதுனு பாக்கலாம்.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 21/05/2007.

உளறல்கள் – 15/5/2007.

யூடியூப் சமாசாரம்.

      யூடியூப் அக்கவுண்ட் ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆச்சி. இது வரைக்கும் நாப்பதாயிரம் பேர் பாத்திருக்காங்க. ஐம்பதாயிரம் ஆச்சின்னா (50k) பொன்விழா எடுக்கலாம்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, அக்கவுண்டையே இழுத்து மூட வேண்டியதாயிரும் போல. வேறொன்னுமில்ல யூடியூப், Star India copyright infringement ங்குற பேர்ல காபி வித் அனுகிளிப்பிங்ஸையெல்லாம் தூக்கிட்டங்க.

      யூடியூப்அ எதிர்த்து ஒரு கிளிப்பிங் தயாரிச்சி, அத யூடியூப்லயே ஏத்தி அவுங்க மானத்தை வாங்கியிருக்கலாம். ஹி, ஹி. அவுங்க என்ன தமிழ்மணம் நிர்வாகமாபின்னாடி ராடு உட்டுறமாட்டாங்களா. மெயில் வந்து அஞ்சி நிமிசத்துக்குள்ள காபி வித் அனு“,” “த்ரிஷா, விக்ரம் இண்டர்வியூ“, “விவேக்குங்கோ“, “சுஜாதாவுடன் சந்திப்புஎல்லாத்தையும் பின்னங்கால் பிடறியில் அடிக்கும் வேகத்தில் டெலிட் பண்ணிட்டேன். வீட்டுக்கு போலிஸ் கிலீஸ் அனுப்பிச்சிட்டாங்கன்னா. விஜய் டீவியிலேருந்து சுட்ட பாட்டெல்லாம் இருக்கு. அதுக்கும் தடை போட்டங்கன்னா, தூக்கிற வேண்டியதுதான். என் கலைச்சேவைக்கு வந்த சோதனை. பாட்டுகளுக்கு வருகை கம்மி தான். இருக்குறத வச்சி சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.

 

தாத்தா அடிக்கும் லூட்டி.

      ஸ்டாலின்ஜி அண்டு மாறன்ஜி ரெண்டு பேரும் சேந்து தான் கருத்தை கணிச்சிருப்பாங்கனு மொதல்ல நெனச்சேன். அழகிரிஜிக்கு ஆப்பு வைக்க. சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில சன் நியூஸ்ல அழகிரிஜியின் ஆட்கள் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள்னு நாள் புல்லா போட்டு தாக்கிக்கிட்டு இருந்தாங்க. இருக்கறதுலையே சூப்பர் என்னான்னா சன் டீவி காமெரா, ஆட்கள் உள்ள போறத காட்டுது, உடைக்கறத காட்டுது, ஒரு ஆள் பெட்ரோல் குண்டை தூக்கி போடுறத காட்டுது, தீ நல்லா எறியுது, அப்புறம் வினோத் உடல தூக்கிட்டு வர்றதையும் காட்டுது. என்னே.. பொறுப்புணர்ச்சி. எனக்கு புல்லரிச்சிடிச்சி.

      இப்போ என்னடான்னாதாத்தாஜி, ஸ்டாலின்ஜி, அழகிரிஜி, கனிமொழிஜி, எல்லாரும் சேந்து மாறன்ஜிக்கு ஆப்பு வச்சிட்டாங்க போல. தீபாவளிக்கு ராக்கெட் கொளுத்தும் போது இப்படி தான் ஆகும். ராக்கெட்ட கொளுத்துன பின், விர்ருனு வானத்துல ஒரு ரவுண்ட் அடிச்சி நம்ம டவுசர் பாக்கெட்ல வந்து வெடிக்கும். அம்பது வருசம்னா சும்மாவா…. மாறன்ஜியின் வயசே அம்பது கெடையாது. யாருக்கிட்ட யாரு நூல் உடுறது….

      எல்லா ஜிக்களும் தாத்தாஜி எப்போ பக்கெட்ட எத்துவார்னு காத்துக்கிட்டுருக்காங்க போல. அவரு என்னடான்னா டெய்லி ஒரு படி காயகல்பம் சாப்புட்டாப்புல எல்லாத்தையும் அடிச்சு ஆடுறாரு.

 

வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை

      மொத மொத பிளைட் ஏறி, ஹேண்ட் லக்கேஜ காலுக்கடியில வச்சிட்டு (எவனும் லவட்டிறக்கூடாதுல்ல), வாந்தி எடுக்கற பாக்கெட்ட வச்சி காத்துக்காக வீசும் போதுதான் கவனிச்சேன். என்னாடா பிய்ய்ங், பிய்ய்ங், டொய்ங்க், டொய்ங்க்னு அமுக்கிக்கிட்டு இருக்குறத போடுராங்களேன்னு. குத்து பாட்டா பாத்து போடக்கூடாதனு கவலையாயிட்டேன்.

      பின்னாடி தான் தெரிஞ்சது அந்த டொய்ங்க் டொய்ங்கெல்லாம் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசைனு. அப்படியே அறிவு தாகமெடுத்து பின்னி பெடலெடுக்கல. எப்பையாவது கேப்பேன். பேரு, ஊரு தெரியாது. ஒரு நண்பர் தான் சொன்னார் அவுங்கல்லாம் மொஸார்ட், பாக்னு.

சரி, இந்த கிளாசிக்கல் இசைய கிட்டார்ல வாசிச்சா எப்படி இருக்கும்மொதோ ஒரிஜினலக் கேளுங்க.

Vivaldi Four Season (Summer).

Johann Pachelbel’s Canon in D.

இப்போ கிட்டார்.,

Fun Two’s Vivaldi Four Season (Summer).

Fun Two’s Canon.

Jerry C’s Canon.

      எப்பிடி இருக்கு… Fun Twoவின் கிளிப்பிங்ஐ இது வரை ரெண்டு சம்திங் சம்திங்…. பேர் பாத்திருக்காங்க. யாராவது அவருக்கு அவார்ட் தரக்கூடாதா ?

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 15/5/2007.
%d bloggers like this: