உளறல்கள் – 15/5/2007.

யூடியூப் சமாசாரம்.

      யூடியூப் அக்கவுண்ட் ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆச்சி. இது வரைக்கும் நாப்பதாயிரம் பேர் பாத்திருக்காங்க. ஐம்பதாயிரம் ஆச்சின்னா (50k) பொன்விழா எடுக்கலாம்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, அக்கவுண்டையே இழுத்து மூட வேண்டியதாயிரும் போல. வேறொன்னுமில்ல யூடியூப், Star India copyright infringement ங்குற பேர்ல காபி வித் அனுகிளிப்பிங்ஸையெல்லாம் தூக்கிட்டங்க.

      யூடியூப்அ எதிர்த்து ஒரு கிளிப்பிங் தயாரிச்சி, அத யூடியூப்லயே ஏத்தி அவுங்க மானத்தை வாங்கியிருக்கலாம். ஹி, ஹி. அவுங்க என்ன தமிழ்மணம் நிர்வாகமாபின்னாடி ராடு உட்டுறமாட்டாங்களா. மெயில் வந்து அஞ்சி நிமிசத்துக்குள்ள காபி வித் அனு“,” “த்ரிஷா, விக்ரம் இண்டர்வியூ“, “விவேக்குங்கோ“, “சுஜாதாவுடன் சந்திப்புஎல்லாத்தையும் பின்னங்கால் பிடறியில் அடிக்கும் வேகத்தில் டெலிட் பண்ணிட்டேன். வீட்டுக்கு போலிஸ் கிலீஸ் அனுப்பிச்சிட்டாங்கன்னா. விஜய் டீவியிலேருந்து சுட்ட பாட்டெல்லாம் இருக்கு. அதுக்கும் தடை போட்டங்கன்னா, தூக்கிற வேண்டியதுதான். என் கலைச்சேவைக்கு வந்த சோதனை. பாட்டுகளுக்கு வருகை கம்மி தான். இருக்குறத வச்சி சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.

 

தாத்தா அடிக்கும் லூட்டி.

      ஸ்டாலின்ஜி அண்டு மாறன்ஜி ரெண்டு பேரும் சேந்து தான் கருத்தை கணிச்சிருப்பாங்கனு மொதல்ல நெனச்சேன். அழகிரிஜிக்கு ஆப்பு வைக்க. சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில சன் நியூஸ்ல அழகிரிஜியின் ஆட்கள் அதைச் செய்தார்கள், இதைச் செய்தார்கள்னு நாள் புல்லா போட்டு தாக்கிக்கிட்டு இருந்தாங்க. இருக்கறதுலையே சூப்பர் என்னான்னா சன் டீவி காமெரா, ஆட்கள் உள்ள போறத காட்டுது, உடைக்கறத காட்டுது, ஒரு ஆள் பெட்ரோல் குண்டை தூக்கி போடுறத காட்டுது, தீ நல்லா எறியுது, அப்புறம் வினோத் உடல தூக்கிட்டு வர்றதையும் காட்டுது. என்னே.. பொறுப்புணர்ச்சி. எனக்கு புல்லரிச்சிடிச்சி.

      இப்போ என்னடான்னாதாத்தாஜி, ஸ்டாலின்ஜி, அழகிரிஜி, கனிமொழிஜி, எல்லாரும் சேந்து மாறன்ஜிக்கு ஆப்பு வச்சிட்டாங்க போல. தீபாவளிக்கு ராக்கெட் கொளுத்தும் போது இப்படி தான் ஆகும். ராக்கெட்ட கொளுத்துன பின், விர்ருனு வானத்துல ஒரு ரவுண்ட் அடிச்சி நம்ம டவுசர் பாக்கெட்ல வந்து வெடிக்கும். அம்பது வருசம்னா சும்மாவா…. மாறன்ஜியின் வயசே அம்பது கெடையாது. யாருக்கிட்ட யாரு நூல் உடுறது….

      எல்லா ஜிக்களும் தாத்தாஜி எப்போ பக்கெட்ட எத்துவார்னு காத்துக்கிட்டுருக்காங்க போல. அவரு என்னடான்னா டெய்லி ஒரு படி காயகல்பம் சாப்புட்டாப்புல எல்லாத்தையும் அடிச்சு ஆடுறாரு.

 

வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை

      மொத மொத பிளைட் ஏறி, ஹேண்ட் லக்கேஜ காலுக்கடியில வச்சிட்டு (எவனும் லவட்டிறக்கூடாதுல்ல), வாந்தி எடுக்கற பாக்கெட்ட வச்சி காத்துக்காக வீசும் போதுதான் கவனிச்சேன். என்னாடா பிய்ய்ங், பிய்ய்ங், டொய்ங்க், டொய்ங்க்னு அமுக்கிக்கிட்டு இருக்குறத போடுராங்களேன்னு. குத்து பாட்டா பாத்து போடக்கூடாதனு கவலையாயிட்டேன்.

      பின்னாடி தான் தெரிஞ்சது அந்த டொய்ங்க் டொய்ங்கெல்லாம் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசைனு. அப்படியே அறிவு தாகமெடுத்து பின்னி பெடலெடுக்கல. எப்பையாவது கேப்பேன். பேரு, ஊரு தெரியாது. ஒரு நண்பர் தான் சொன்னார் அவுங்கல்லாம் மொஸார்ட், பாக்னு.

சரி, இந்த கிளாசிக்கல் இசைய கிட்டார்ல வாசிச்சா எப்படி இருக்கும்மொதோ ஒரிஜினலக் கேளுங்க.

Vivaldi Four Season (Summer).

Johann Pachelbel’s Canon in D.

இப்போ கிட்டார்.,

Fun Two’s Vivaldi Four Season (Summer).

Fun Two’s Canon.

Jerry C’s Canon.

      எப்பிடி இருக்கு… Fun Twoவின் கிளிப்பிங்ஐ இது வரை ரெண்டு சம்திங் சம்திங்…. பேர் பாத்திருக்காங்க. யாராவது அவருக்கு அவார்ட் தரக்கூடாதா ?

Advertisements
Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 15/5/2007.
%d bloggers like this: