உளறல்கள் – 3/6/2007.

கடவுள் இருக்காரா ?

ரெண்டு நாள் ஆபீசுக்கு மட்டைய போட்டு ஊருப் பக்கம் போயிருந்தேன். அப்ப தான் லோக்கல் டீவியில இந்த கண்கொள்ளா காட்சிய பாக்க முடிஞ்சது. அதாவது அழகிரிஜியும், தங்கச்சி கனிமொழிஜியும் இந்தக் காதுக்கும் அந்தக் காதுக்கும் ஈனு இளிச்சிக்ட்டு இருக்கற நிகழ்ச்சி. சன் டீவியில போட்டிருக்க மாட்டாங்க. ரொம்ப கண்கொள்ளா காட்சியா இருந்தது. அண்ணனும் தங்கையும் ஒரு சோபால உக்காந்து போஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கனிமொழிஜிக்கு ஓவர் வெக்கம் போல, புது பொண்ணு போல தலைய குனிஞ்சு சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க.

 

இந்த நல்ல நிகழ்ச்சிக்கும், கடவுளுக்கும் என்ன சம்மந்தம் ? கடவுள்னு ஒருத்தர் இல்லனு இது புரூப் பண்ணுது. அந்த மூணு பேரோட பெற்றோர் எவ்ளோ கண்ணீர் விட்டுருப்பாங்க. எதாவது கொஞ்ச ரியாக் ஷன் from கடவுள் ? நஹி. ரம்பா, மேனகாவின் நடனம் பாக்க போயிட்டார்னு நெனக்கறேன். இல்ல, கடவுள்னு ஒரு entityயே கெடையாது போல. நாமும் கேனத்தனமா தெய்வம் நின்னு கொல்லும், அப்பிடி, இப்படினு ரீல் உட்டுக்கிட்டு இருக்கோம். மூணு பேரையும் போட்டுத் தள்ளி முழுசா பத்து நாள் கூட ஆவல, அதுக்குள்ள திருட்டு கும்பல் அததது துண்ட உதறிட்டு வேலய ஆரம்பிச்சுடுச்சிங்க.

 

பழிக்கு பழி.

ஊருக்கு போய் எதாவது உருப்படியா பண்ணனுமேனு கருப்பசாமி குத்தகைதாரர்படம், டிக்கட் எடுத்து தேட்டர்ல போயி பாத்தேன். .வி, ஜூவி, குமுதத்துல கதாநாயகி மீனாச்சி பத்தி ஓவரா பில்டப் குடுத்துருந்தாங்க. ப்ளஸ் கரண் ஒரு நிகழ்ச்சியில படத்தைப்பத்தி ஓவரா பில்டப் குடுத்தார். டைரக்டர் மூர்த்தி வேற கண்ணீர் மல்க எனக்கு வாய்ப்பு குடுத்தனு ஒரு லிஸ்ட் போட்டு நன்றி சொன்னார். இதுனால ஓவரா டென்சனாயி படம் பாத்தேன்.

 

உக்கார்ர எடத்துல வேணக்கட்டி வந்தா எப்படி இருக்கும் ? அதுமாரி ஆச்சி பொழப்பு. படத்தை எப்படா முடிப்பாங்கனு நெளிஞ்சிக்கிட்டே பாத்தேன். காசு குடுத்தாச்சே விட்டுட்டு போகமுடியுமா ? தமிழ் பண்பாடு என்னாவறது.

 

கரண் மதுரை பாஷை பேசுறேன்னு நாலு வார்த்தைக்கு ஒருதடவை ங்கொய்யால” ங்குறாரு. ஒவ்வொரு வார்த்தைக்கும் ய்ய்ங்க னு சேத்துக்குறாரு. மதுரை பாஷைய மயிரை பாஷையாக்கிட்டாரு. ஆக்சுவலா, வடிவேலு பேசுறது தான் சரியான மதுரைத் தமிழ். அவரும் படத்துல இருக்காரு, ஆனா டைரக்டர் ஏன் அவர்கிட்ட கன்சல்ட் பண்ணலனு தெரியல. ஹார்ட்கோர் மதுரைத் தமிழ் வேணும்னா சன் டீவி கலக்கப் போவது யாருல வர்ற மதுரை முத்து மாதிரியாவது டிரை பண்ணியிருக்கலாம்.

 

வடிவேலு ஜோக்கெல்லாம் சுமார் தான். சிரிப்பே வல்ல. ஹீரோயினுக்கு நடிப்பே வல்ல, ஒரே அழுவுற வேல தான். இந்த லச்சனத்துல மானாவாரியா குளோசப் சீன் வேற. கண்றாவி.

 

கரண், ஆனா ஊனா படிக்க வைங்கய்யா, படிக்க வைங்கய்யானு சொல்றாரு. ஆனா, ஹிரோயின் காலேஜுக்கு போயி தூங்குது. கரண் வித்தியாசமாப் பண்ணுரேன் பேர்வழினு சண்டை போடுற சீன்லயெல்லாம் வண்டி வண்டியா வசனம் பேசுறாரு. ஐய்யப்ப சாமிக்கு மாலை போடும் போது அவருக்கு சாமி வருது. வழக்கமா பொம்பளைங்களுக்கு தான் சாமி வரும். ஐய்யப்ப சாமி திடீர்னு கருப்பசாமியா மாறி சண்டைபோடுது. இதிலையும் புது உத்திய கையாண்டிருக்கார் டைரக்டர். என்ன எழவுடா, திரைக்கதைனா என்னானு தெரியாமையே படம் எடுக்க வந்துட்டாய்ங்க.

 

இவனுங்களையேல்லாம் பழிக்கு பழி வாங்க இந்த வருசம் மிச்சத்தையும் தேட்டர் வாசப்படியே மிதிக்காம டவுண்லோட்லையே காலத்த கழிக்க வேண்டியதுதான். “பாபாமுதல் ஷோவுக்கு நான் கொடுத்த டிக்கட்டையே இன்னும் வசூலிக்க வேண்டியதிருக்கு.. சீக்கிரம் சிவாஜிய ரீலீஸ் பண்ணுங்கப்பா.

 

 

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 3/6/2007.
%d bloggers like this: