உளறல்கள் – 20/06/2007.

டீவி விடு தூது.

இப்பல்லாம் சன் நியூஸ் பாத்தாலே ஒரே தாத்தாவின் சொற்பொழிவு தான். அப்பப்ப ஸ்டாலின் வேற தலய காட்டிட்டு போறார். முந்தியெல்லாம் தாத்தாவப் பத்தி நியூஸ் வரும், ஸ்டாலின்கிற பேரே நியூஸ்ல வராது. அடுத்து என்ன, அழகிரி பேட்டியா ?

நாட்டாமையின் தீர்ப்பு.

ஆனாலும் யாரையும் குத்தம் சொல்ல முடியாது. ஒரு சாப்ட்வேர் கம்பேனியில் ஜுனியர் ப்ரோகிராமரா வேலைக்கு சேந்து, படிப்படியா ப்ரோகிராமர், சீனியர் எஞ்சினியர், டெக் லீட், இப்படியேல்லாம் முன்னேறி (?), மேனேஜராகப் போற நேரத்துல உங்க அத்தையோட பேரன் வந்து, “இந்த கம்பேனி என்னோடது, நீ வீட்டுக்கு கெளம்புன்னா”, எப்படி இருக்கும். ரத்தம் கொதிக்குதுல்ல.

மாறன் பிரதர்ஸ்க்கு மூணே மூணு வாரிசுகள் தான். இப்போதைய நிலவரப்படி ஆளுக்கு 300 கோடி தேறும். ஆனா தாத்தா குடும்பம் அப்படியா., கிட்டத்தட்ட ஏழெட்டு இருக்கு. ஸ்டாலினுக்கு அடுத்து யார் முதல்வர்னு இப்பையே போட்டி இருக்கு (அழகிரி பையன் x ஸ்டாலின் பையன்).

தாத்தாவின் வாரிசுகள் தமிழகத்தையும், மாறன் பிரதர்ஸ் வியாபாரத்தையும் பிரித்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் இந்த நாட்டாமையின் தீர்ப்பு.

சூப்பர் சிங்கர் ஜூனியர்.

இப்போ என்னடான்னா எல்லாருக்கும் மேக்கப் போட்டு உட்டுட்டாய்ங்க. என்ன கண்றாவியோ. சின்னப்பசங்க தானே, அப்படியே இருந்தா என்ன ? மேக்கப் கூடாதுங்றதில்ல. ஆரம்பத்தில இருந்த மாதிரியே இருக்கலாம். இப்போ என்னடான்னா ஹேர் ஸ்டைலிங் என்ன, வித்யாசமான உடைகள் என்ன. பையங்களுக்கு சட்டையில பொத்தானே இருக்காது போல. எப்பப் பாத்தாலும் தொறந்து போட்டுட்டே வர்ராங்க. எனக்கு புடிச்ச பசங்களெலாம் எலிமினேட் ஆயிட்டதால அவ்ளவா பாக்குறதில்ல.

குப்பை.

எக்கச்சக்க தமிழ் இணைய வானொலிகள் இருக்கு. அதப்பத்தி கூகிள்ல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தப்ப சூரியன் FM லிங்க் கெடச்சது. இங்க போயி, “Isaitamil Swasam Online Radioனு பாக்கவும். Tune னு அமுக்கி அந்த .pls பைலை WinAmpல் திறக்கவும். நேரடி லிங்க் இது. WinAmpல் திறக்கவும்.

ஆகா, என்னா மாதிரி பேசுதுங்க நம்ம டமில் குத்து விளக்குகள். நீயெல்லாம் போன் பண்ண வந்துட்டங்ற மாதிரியான ஏளனம் கலந்த பேச்சு. நம்ம டமில் ரத்ததின் ரத்தங்கள் லைன் கெடச்சது அடையிற புளங்காகிதிதப் பாத்தா (கேட்டா), உடம்பெல்லாம் புல்லரிக்கும். இந்தப் பாட்ட ஊர்ல இருக்கற எல்லாத்துக்கும் டெடிக்கேட்பண்ணுங்கனு சொல்லி அவர்கள் அடையும் ஆனந்ததை நினைத்தால் மயிர் கூச்செரியும்.

Ok. குப்பைக்கு ஒரு சூரியன் FM.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 20/06/2007.
%d bloggers like this: