உருப்படாதது – 28/08/2007.

அழகிய ஆபத்து.
போன வாரம் நடந்த மிஸ்.டீன் யூ.எஸ்.ஏ என்ற போட்டியில் கலந்து கொண்ட சவுத் கரோலினா அழகி சொல்லும் முக்கிய கருத்தை கேளுங்கள்.

புரியாதவர்கள் கீழே படிக்கவும்.

I personally believe that US Americans are unable to do so because, uh,
some… people out there in out nation don’t have maps, and, uh, I believe
that our education like such as South Africa and, uh, the Iraq everywhere
like, such as and … I believe that they should, our education over here in
the US should help the US, er, should help South Africa and should help the
Iraq and the Asian countries, so we will be able to build up a future for
our children.

கொலை வெறி.
தமிழ் வெறியோடு இருந்த என்னை திடீரென யூடூபாண்டவர் இந்த பாட்டில் கொண்டுவிட்டுவிட்டார். அதிலிருந்து இந்த பாட்டை டெய்லி ஒரு அம்பது தடவையாவது கேக்குறேன். சோ நைஸ். அர்த்தம் தான் புரியல.

நாட்டுக்கு முக்கியம்.
குமுதம் லைட்ஸ் ஆன் பகுதிக்கு செய்தி சேகரிக்கும் நபர் ஒருவர் நண்பரானார். அவர் சொன்ன செய்திகள் இவை.,

அட்டகாசம்.
சிவாஜி ராவ் கெய்க்வார்ட் என்ற நடிகர் தமிழ் சினிமாவில் பீலா விட்டுக் கொண்டு இருப்பது அறிந்ததே. இந்திய நதி நீர் இணைப்புக்கு அவர் ஒரு கோடி ரூபாய் தராமல் டிமிக்கி கொடுத்ததால் அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. தமிழ் இணைய கில்லாடிகள் சிலர் அவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளனர். மூக்கழக இயக்குனர்/நடிகருடன் கைகோர்த்துள்ள இவர்கள் விரைவில் ஒரு திரைப்படத்தை வெளியிட உள்ளார்கள். மூக்கழகர் தான் இயக்குனர். இணைய கில்லாடி ஒருவரைக் கேட்ட போது.,

“இந்த சிவாஜி ராவ் கெய்க்வார்ட் செய்யுற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லைங்க. வர்ரேன்கிறாரு ஆனா வரமாட்டாரு. தர்ரேன்கிறாரு ஆன தரமாட்டேன்கிறாரு. ஒண்ணுஞ் செரியில்ல. அவரால தான் இந்த தொழிலே நடக்குற மாதிரி பேசுறாரு. அதனால நாங்க ஒரு படம் எடுத்து அவருக்கு பாடம் புகட்டலாம்னு இருக்கோம். இந்த படத்துல எல்லாருமே புதுமுகம் தான். அனைவரும் தமிழ் இணையத்துல தீவிரமா செயல்படுரவுங்க. தமிழ் மேல உயிரையே வச்சிருக்றவுங்க.

பல புதுமைகள இந்த படத்துல செய்திருக்கறோம். ஹீரோ ஹீரோயின் வயசு வித்தியாசமெல்லாம் நூத்துக் கணக்குல இருக்காது. ஜஸ்ட் நாலே நாலு வயது தான். ஹீரோ தமிழ் இணையத்துல பிரபலமானவர். அவரை விட நாலு வயசு கம்மியான ஹீரோயினத் தான் புக் பண்ணியிருக்கோம். அப்பதான் இயற்கையா இருக்கும். ஆனா அந்த சிவாஜி ராவ் கெய்க்வார்ட் தன் பேத்தி வயதுள்ள பெண்களோடு நடிக்கறார்.

படத்தோட பட்ஜட் பத்து லட்சம் தான். நடிகர்கள் இலவசமாவே நடித்து தர்றாங்க. டெக்னீசியன்ஸ் எல்லாமே தமிழ் இணையத்துல இருக்கறவுங்க தான். உலகம் முழுவதும் தமிழர்கள் இருப்பதால் பலர் எங்க நாட்டுல இலவசமா சூட்டிங் நடத்துங்கனு ஆர்வமா இருக்காங்க. இது வரைக்கும் 30 லட்சம் டிக்கெட் வித்திருக்கு. ஒரு டிக்கெட் பத்து டாலர்கள். இது இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். இது வரை நடக்காத சாதனை. படத்த தியேட்டர்ல போய் பாக்க முடியாது. இணையத்துல தான் பாக்க முடியும்.

இந்தப் படம் வந்ததும் சிவாஜி ராவ் கெய்க்வார்ட் எனக்கு சினிமாவே வேண்டாமுனு தமிழ்நாட்ட விட்டு ஓடப் போவது நிச்சயம்.”

சும்மா அதிருதில்ல.

மினி பிட்ஸ்.

 • தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவருக்கு கொடுக்கப்படும் விருது இந்த வருடம் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷிணிக்கு வழங்கப்பட இருக்கிறது. (சிறுவர்கள் அவரது குளோசப் முகத்தைப் பார்த்து அலறுவதால் கார்னியர் ப்ரூட்டிஸ் நிறுவனமே அவரது முகத்தை இலவசமாக செம்மைப்படுத்த முன்வந்துள்ளது.)
 • சோகம் நிறைந்த தமிழர் வாழ்வில் கிச்சு கிச்சு மூட்டும் பாஸ்கி மற்றும் ஒய்.ஜி.மகேந்திரா இருவரும், இரவு பகலாக ப்ளேபாய் ஜோக்ஸ், ப்ளான்ட் ஜோக்ஸ், லெட்டர் டூ பென்ட் ஹவுஸ் போன்ற புத்தகங்களை மனப்பாடம் பண்ணிவருகிறார்களாம். (சீக்கிரமா அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லுங்க பாஸ்).
 • தொலைக்காட்சி தொகுப்பாளர் சேதுவை அமேரிக்காவிலிருக்கும் “Girls Gone Wild” நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது. “கண்ணியமாகப் பேசும் அவர் எங்கள் நிகழ்ச்சியும் தொகுக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்று அந்நிறுவனத்தார் கூறுகின்றனர். (வீட்டுல புல் மீல்ஸைக் கண்ணுல காமிச்சிட்டு, குழம்பு சாதத்தோட தொரத்தி விட்டுர்றாங்களாம்.)
 • தமிழக கல்வி அமைச்சகம், தொலைக்காட்சித் தொடரான “கனாக் காணும் காலங்கள்”ஐ பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. “இந்த தொடரைப் பார்க்கும் மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதோடு, வாழ்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். அதனால் தான் இதைக் கட்டாய பாடத்திட்டதில் சேர்த்துள்ளோம். க.கா.கா பீரியடில் அனைத்து வகுப்பறையிலும் க.கா.கா காண்பிக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிலும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும்” என்று தாத்தாஜி கூறியுள்ளார். (அந்த ப்ளஸ் ஒன் மாணவர் எங்க ஹேர் கலரிங் பண்ணுறார் ? அடுத்து மாணவிகளின் டாட்டூ தானே ? )
 • Mensa நிறுவனம் சூர்யா தொடரை நிறுத்தியதால் சூர்ய தொலைக்காட்சி மேல் வழக்கு தொடுக்கவுள்ளது. “பல பெண்மணிகளின் IQ 200க்கு மேல் தாண்டுவதற்கு காரணமே சூர்யா தொடர் தான். அதை நிறுத்தியது வேதனைக்குரியது. அதை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்” என்று Mensa நிறுவனம் கூறுகிறது. (இந்து ப்ளைட் ஆச்சிடண்டில் சாகாமல் தப்பித்து வருகின்றார். இது தான் சூர்யா-2 வின் கதை. )
 • சூர்யா தொடரை நிறுத்தியது போல் ஆனந்தம், கோலங்கள் போன்றவையும் நிறுத்தப்படும் என்ற வதந்தி பரவியது. இதனால் தமிழமே கொதித்துப் போயுள்ளது. நான்கு, ஐந்து வயது சிறுவர் சிறுமியர் சூர்ய தொலைக்காட்சி முன்னர் தர்ணா செய்யவுள்ளனர். “நாங்க பிறக்கும் போதே ஆனந்தம், கோலங்கள் பாத்து தான் பிறந்தோம். நாங்க இருக்கும் வரை அதைப் பார்த்துக் கொண்டேதான் இருப்போம்.” என்று கோபாவேசமாக கூறுகின்றனர். (ஜென்மச்சனி விடாதுங்கோ !! )
Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 28/08/2007.

யூடியூப் அறிவியல் – பாகம் 1.

“கஷ்டப்பட்டு படித்து பாசாவதை விட, முன்னாடி இருப்பவனை பார்த்து எழுதி முதல் மார்க் வாங்குவதே நன்று.”

இது தமிழ்ப் பெரியவர்களின் வாக்கு. இதை தூய தமிழில் “ஆட்டையப் போடுவது” என்று கூறுகிறார்கள்.
இந்த யூடியூப் உலகத்தில் இதை எப்படி கடைபிடிப்பது என்பதை இந்த “யூடியூப் அறிவியல் – பாகம் 1″ல் பார்க்கலாம்.

அடிப்படை

முதலில் தேவை ஒரு யூடியூப் அக்கவுண்ட். அப்புறம் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்தவுடன் “அப்லோட்”ஐ அமுக்கி விடியோவை சேர்க்க தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ். Youtube FAQவை படித்து தெரிந்து கொள்ளவும்.

சரி. நீங்க யூடியூப்ல பல விடியோக்களப் பாக்கும் போது, சில விடியோக்களால கவரப்படுறீங்க, ஆட்கொள்ளப்படுறீங்க. உடனே இந்த வீடியோவை “ஆட்டையப் போட்டு” நம்ம அக்கவுண்ட்டில் சேர்த்தால் என்னன்னு தோணுது. அதை எப்படி செய்வது ?

ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு “இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை”, ரெண்டாவது “இந்திய சினிமா இயக்குனர்கள் முறை”. சாப்ட்வேர் முறைன்னா காப்பி பேஸ்ட் செய்வது. இயக்குனர் முறைன்னா இந்திய கலாச்சாரத்திற்கு எற்ப தலை சீவி, பொட்டு வச்சி, பவுடர் போட்டு விடுவது.

Ok. சொறிதல் ஸ்டாப்.

இப்படியெல்லாம் “ஆட்டையப் போடுவதால்” என்ன பயன் ?

 • உங்கள் அக்கவுண்ட்டில் உங்களுக்கு பிடித்த விடியோவை சுட்டு வைக்கமுடியும். Actualஆ இது தேவையேயில்லை. உங்களுக்கு பிடித்த பிறரது விடியோவை Favourite Listல் சேமித்து வைக்க முடியும்.
 • பலர் விடியோவில் embeddingஐ disable செய்திருப்பார்கள். உங்கள் அக்கவுண்டில் சுட்டுப் போட்டு embeddingஐ enable செய்து கொள்ளலாம்.
 • Embedding enable செய்த பின்னர், நீங்களே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து (eg., ததிக (தமிழ்த் திரைப்பாடல்கள் கழகம்)) அதில் பகுதிவாரியாக படம் காட்டலாம், பார்ப்பதற்கு பணம் வசூலிக்கலாம், Google Adsense இன்ன பிற வஸ்துக்களைப் போட்டு பணம் சம்பாதிக்கலாம்.
 • ஒரிஜினலா படம் போட்டவர் ஒருவேளை “மாமியார் வீட்டுக்கு” சென்றாலோ அல்லது “Fine கட்டினாலோ” நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்கலாம்.

இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை :

 • உங்களுக்கு பிடித்த யூடியூப் விடியோவின் அட்ரஸை எடுக்கவும் (ie., URL).
 • http://www.keepvid.com ல் அதை கொடுக்கவும்.
 • கொஞ்ச நேரம் கழித்து, டவுண்லோட் லிங்க் வரும்.
 • அதை கிளிக்கி, getfile என்ற ஒரு பைலை டவுண்லோட் செய்யவும்.
 • விடியோவின் ஓடும் நேரத்தைப் பொறுத்து 5MBயிலிருந்து 20MB வரை இந்த பைலின் அளவு மாறுபடும்.
 • இந்த getfile என்பது ஒண்ணுமில்ல, அது ஒரு Adobe Flash பைலாகும்.
 • அதுக்கு ஒரு நல்ல பேரு வச்சி, extensionன .FLV என்று மாற்றவும்.

அம்புட்டுத்தேன். இந்த .FLV பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.

இந்திய சினிமா இயக்குனர்கள் முறை :

இந்த முறைல என்ன செய்யலாம்னா, உங்கள் வசதிக்கேற்ப,

 • உங்கள் பெயர், பட டைட்டில், பாடியவர் பெயர், இசையமைப்பாளர் பெயர் etc., etc. முதலியவைகளை சப் டைட்டில்களாகவோ (sub title), டைட்டிலாவோ (title) சேர்க்கலாம்.
 • உங்கள் லோகோவைச் சேர்க்கலாம்.
 • பிடித்த கலைஞர்களை வாழ்த்தி சின்ன விடியோ கிளிப்பிங்கை சேர்க்கலாம்.

இதுக்கு இலவச Windows Movie Makerஐ பயன்படுத்தலாம். அதில் உள்ள அனைத்து featureஐக் கொண்டு விடியோவை தலைகீழாக மாற்றிவிடலாம். ஒரிஜினலாக அப்லோட் செய்தவனுக்கே அடையாளம் தெரியாமல் செய்துவிடலாம். ஆனால் Windows Movier Makerக்கு Adobe Flash fileஐ அடையாளம் தெரியாது. முதலில் Adobe Flashஐ .AVIஆ மாற்ற வேண்டும். அதுக்கு FFMPEGஐ பயன்படுத்தலாம். இங்க போயி FFMPEG binaryஐ டவுண்லோடு செய்யவும். சரி, ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்க்கலாம்.

 • இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறைப்படி உங்களுக்கு பிடித்த விடியோவின் Adobe Flash பைலை டவுண்லோடு செய்து கொள்ளவும்.
 • பின்னர் FFMPEG கொண்டு Adobe Flashஐ .AVIயாக மாற்றுங்கள்.
 • அதற்கு command promptல் ffmpeg -i get_video.flv -vcodec rawvideo -acodec copy get_video.avi என்று கொடுக்கவும். இங்கு get_video.flv என்பது இன்புட் பைல், get_video.avi என்பது அவுட்புட் பைல். உங்களுடையது வேறு என்றால் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்.
 • Raw video என்பதால் .AVIயின் அளவு 800MBயிலிருந்து 1.5GB வரை மாறுபடும்.
 • பின்னர் Windows Movier Makerல் அந்த .AVIஐ திறந்து உங்கள் வசதிக்கேற்ப சேர்க்க வேண்டியதைச் சேர்க்கவும், வெட்ட வேண்டியதை வெட்டவும்.
 • Save to my computerஐ கிளிக்கி .WMA வாக சேமித்துக் கொள்ளவும். Best Quality for playback on my computer அல்லது Show more choices போய் High Quality video (small) தேர்வு செய்யவும்.
 • கொஞ்ச நேரம் கழித்து .WMA பைல் கிடைக்கும்.

அம்புட்டுத்தேன். இந்த .WMA பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.

அடுத்த பகுதியில படம் புடிக்கறது எப்படினு பாக்கலாம்.

Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 1.

உருப்படாதது – 7/8/2007.

நன்றி நவிலல்.

ஒரு வழியா யூடியூபில் மக்கள் வருகை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்ததை இன்னைக்கு தாண்டிருச்சி. அதனால ஒரு நன்றிப் பதிவு. நன்றிப் பதிவு போடலேனா சாமி கண்ணக் குத்திருமாம்ல. தமிழ் இணைய தர்மத்தை மீற முடியுமா.

– யூடியூப கண்டுபுடிச்ச Chad Hurley, Steve Chen and Jawed Karim,
– யூடியூப யானை விலை கொடுத்து வாங்கிய கூகிளின் Larry Page and Sergey Brin,
– எனக்கு இன்ஸ்பிரேசனான அருமையான தமிழ் பாடல் தொகுப்பை வைத்திருக்கும் பழனிக்குமார், விஜயகுமார், மற்றும் செந்தில்,
– டெக்கினிக்கல் உதவி செய்த விடியோ ஹெல்ப் வலை தளம். )
– ரெண்டு லட்சக்கணக்கான ரசிகர்கள்.

போன்றவர்களுக்கு எனது நன்றி.

இந்த பொன்னான தருணத்தில் தினமலர், தினமணி, தினதந்தி, குமுதம், ஆ.வி, இன்னபிற பத்திக்கைகளிலிருந்து பேட்டி எடுத்தார்கள். அதிலிருந்து ஒரு சின்ன தொகுப்பு.,

கே : இந்த துறையில் நுழையனும்னு எப்படி தோணிச்சு ?
ப     : பிறந்ததிலேயிருந்தே ஒரு கலை தாகத்தோட தான் இருந்தேன். யூடியூப்ல நொழஞ்சது தற்செயலான விஷயமில்லை அது காலத்தின் கட்டாயம்.

கே : யூடியூப் இல்லாட்டி இந்நேரம் என்னவா ஆகியிருப்பீங்க ?
ப     : ஓப்பி அடிக்காத நல்ல சாப்ட்வேர் இஞ்ஜினியரா இல்ல ஒரு டாக்டரா ஆகியிருப்பேன்.

கே : ஏன் பாடல்களையே எடுக்கறீங்க, ஏன் படங்களை எடுக்கறதில்லை ?
ப     : பாடல்கள் தான் என் கலை தாகத்தை தணிக்குது. படம் எடுக்கறதுன்னா சிரமமான வேலை. கதை, திரைக்கதை அப்பிடி இப்படின்னு ஒரே தலைவலி. ரீலீசானா படம் ஓடுமா ஓடாதானு வேற தெரியாது. புதுப் படம்னா கண்டிப்பா உள்ள வச்சிருவாங்க. பாடல்கள் தான் வசதி. அஞ்சி நிமிஷம் தான். நடிகர்களின் கால்ஷீட் ஈசியா கெடைக்கிது.

கே : கருப்பு வெள்ளைப் பாடல்கள் தேவையா ? அத இப்ப யாரு பாக்கறாங்க ?
ப     : எல்லாரும் ஒரு காலத்துல சின்ன பசங்களா இருந்து தான் இப்போ பெரிசா ஆயிருக்கோம். அதுக்காக சின்ன வயச மறக்க முடியுமா ? அது போலத்தான் பாடல்கள்ங்றது கருப்பு வெள்ளை, ஈஸ்ட் மேன் கலர், வண்ணம் இப்படீன்னு பல படிக்கட்டுகளைத் தாண்டி வந்திருக்கு. வண்ணம் வந்திருச்சுனு கருப்பு வெள்ளைய மறக்கக்கூடாது. மேலும் டமில் நாட்டுல இப்போ வரும் சந்ததியினருக்கு யாருக்குமே டமில் மொலின்னா என்னான்னு தெரியல. அவுங்கள்ளாம் எதிர்காலத்துல டமில்னா என்னனு தெரிய இது ஒரு வாய்ப்பா இருக்கும்.

கே : ஏன் தமிழ்ப் பாடல்களே எடுக்கறீங்க. வேற்று மொழி பாடல்களை எடுக்கும் எண்ணம் இருக்குதா ?
ப     : டமில் எனது தாய் மொலி. நான் ஒரு டமில் மொலி வெரியன். அதுக்குத்தான் முதலிடம். மேலும் பிற மொழிகள்ல பலத்த போட்டி இருக்குது.

கே : யூடியூபுல தமிழ் இயக்குனர்களிடம் என்ன வகையான போட்டிகள் இருக்குது ?
ப     : இங்கையும் பைரசி பரவிருச்சி. எப்போ பாட்ட ரிலீஸ் பண்ணுவாங்க அத எப்போ சுட்டு காசாக்குவோம்னு ஒரு கூட்டமே இருக்கு. அதத் தவிர மற்ற ஒரிஜினல் இயக்குனர்கள் தான் உண்டு தங்கள் வேலை உண்டுனு இருக்காங்க.

கே : உங்களுக்குனு ஒரு திரட்டி உருவாக்கும் எண்ணம் இருக்கா ?
ப     : அடி வாங்க வைக்கனும்னு முடிவோட இருக்கீங்களா ?

கே : உங்க எதிர்கால திட்டம் என்ன ?
ப     : இந்தக் கலை என்னோடவே போயிறக் கூடாது, அதை பலருக்கும் தெரிவிக்கனும்னு தோணிச்சி. அதுக்காக நம்ம “இலவச” தாத்தாஜியப் போய்ப் பாத்தேன். அவர் எனது சாதனைகளையெல்லாம் பாராட்டி, ஏன் நீங்க ஒரு இலவசக் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கக்கூடாதுனு சொன்னார். அதுக்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலையே மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்துள்ளார்.
கூடிய விரைவில் அங்கே “தமிழ்நாடு யூடியூப் அறிவியல் பல்கலைக்கழகம்”னு ஆரம்பிக்கப்போறோம். அங்கே அனைவருக்கும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

கே : அங்க இட ஒதுக்கீடு உண்டா ?
ப     : கண்டிப்பா. எல்லாருக்கும் தனித் தனி இருக்கைகள் உண்டு. வேணும்னா கணவர்கள், மனைவிகளுக்கு தங்கள் மடியில் இட ஒதுக்கீடு தந்து உட்கார வச்சிக்கலாம்.

கே : பல்கலைக்கழகத்துல என்னன்ன கற்றுத் தரப்படும் ?
ப     : இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பல்வேறு யோசனைகள் இருக்கு. சில அடிப்படைப் பாடங்கள் கண்டிப்பாயிருக்கும்.,

– காமெரா : வகைகள், யூடியூபிற்கு சிறந்தது Arriflex or Panavision ?
– எடிட்டிங் : ஏவிட் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துவது எப்படி ?
– ஆடியோ : கம்போசிங் செய்வது எப்படி ? 24 டிராக், 32 டிராக், டால்பி, டிடிஎஸ் etc.,etc.,
– நடனம் அமைப்பது எப்படி ?
– பாடல்கள் எழுதுவது எப்படி ?

இப்படிப் பலப்பல.

கே : நன்றி.
ப     : நன்றி.

பின் குறிப்பு : இவ்வாறு என் மூஞ்சிய நானே கண்ணாடியில பாத்து ரத்தம் வரும்படியாக சொறிஞ்சிக்கிட்டு இருக்கும் வேளையிலே வேறு சில யூடியூப் விடியாக்கள் பற்றி சொல்லியே ஆகணும். தயவு செய்து கமெண்டுகளப் படிச்சிராதீங்க.

“Little Superstar” : 65 லட்சம் பார்வைகள்.
Crazy Indian Music Video : 48 லட்சம் பார்வைகள்.
இதெல்லாம் ஒரு விடியோவின் பார்வைகள். நான் சொறிஞ்சிக்கிறது 200 சொச்ச விடியோக்களின் பார்வைகள்.

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 7/8/2007.
%d bloggers like this: