உருப்படாதது – 7/8/2007.

நன்றி நவிலல்.

ஒரு வழியா யூடியூபில் மக்கள் வருகை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்ததை இன்னைக்கு தாண்டிருச்சி. அதனால ஒரு நன்றிப் பதிவு. நன்றிப் பதிவு போடலேனா சாமி கண்ணக் குத்திருமாம்ல. தமிழ் இணைய தர்மத்தை மீற முடியுமா.

– யூடியூப கண்டுபுடிச்ச Chad Hurley, Steve Chen and Jawed Karim,
– யூடியூப யானை விலை கொடுத்து வாங்கிய கூகிளின் Larry Page and Sergey Brin,
– எனக்கு இன்ஸ்பிரேசனான அருமையான தமிழ் பாடல் தொகுப்பை வைத்திருக்கும் பழனிக்குமார், விஜயகுமார், மற்றும் செந்தில்,
– டெக்கினிக்கல் உதவி செய்த விடியோ ஹெல்ப் வலை தளம். )
– ரெண்டு லட்சக்கணக்கான ரசிகர்கள்.

போன்றவர்களுக்கு எனது நன்றி.

இந்த பொன்னான தருணத்தில் தினமலர், தினமணி, தினதந்தி, குமுதம், ஆ.வி, இன்னபிற பத்திக்கைகளிலிருந்து பேட்டி எடுத்தார்கள். அதிலிருந்து ஒரு சின்ன தொகுப்பு.,

கே : இந்த துறையில் நுழையனும்னு எப்படி தோணிச்சு ?
ப     : பிறந்ததிலேயிருந்தே ஒரு கலை தாகத்தோட தான் இருந்தேன். யூடியூப்ல நொழஞ்சது தற்செயலான விஷயமில்லை அது காலத்தின் கட்டாயம்.

கே : யூடியூப் இல்லாட்டி இந்நேரம் என்னவா ஆகியிருப்பீங்க ?
ப     : ஓப்பி அடிக்காத நல்ல சாப்ட்வேர் இஞ்ஜினியரா இல்ல ஒரு டாக்டரா ஆகியிருப்பேன்.

கே : ஏன் பாடல்களையே எடுக்கறீங்க, ஏன் படங்களை எடுக்கறதில்லை ?
ப     : பாடல்கள் தான் என் கலை தாகத்தை தணிக்குது. படம் எடுக்கறதுன்னா சிரமமான வேலை. கதை, திரைக்கதை அப்பிடி இப்படின்னு ஒரே தலைவலி. ரீலீசானா படம் ஓடுமா ஓடாதானு வேற தெரியாது. புதுப் படம்னா கண்டிப்பா உள்ள வச்சிருவாங்க. பாடல்கள் தான் வசதி. அஞ்சி நிமிஷம் தான். நடிகர்களின் கால்ஷீட் ஈசியா கெடைக்கிது.

கே : கருப்பு வெள்ளைப் பாடல்கள் தேவையா ? அத இப்ப யாரு பாக்கறாங்க ?
ப     : எல்லாரும் ஒரு காலத்துல சின்ன பசங்களா இருந்து தான் இப்போ பெரிசா ஆயிருக்கோம். அதுக்காக சின்ன வயச மறக்க முடியுமா ? அது போலத்தான் பாடல்கள்ங்றது கருப்பு வெள்ளை, ஈஸ்ட் மேன் கலர், வண்ணம் இப்படீன்னு பல படிக்கட்டுகளைத் தாண்டி வந்திருக்கு. வண்ணம் வந்திருச்சுனு கருப்பு வெள்ளைய மறக்கக்கூடாது. மேலும் டமில் நாட்டுல இப்போ வரும் சந்ததியினருக்கு யாருக்குமே டமில் மொலின்னா என்னான்னு தெரியல. அவுங்கள்ளாம் எதிர்காலத்துல டமில்னா என்னனு தெரிய இது ஒரு வாய்ப்பா இருக்கும்.

கே : ஏன் தமிழ்ப் பாடல்களே எடுக்கறீங்க. வேற்று மொழி பாடல்களை எடுக்கும் எண்ணம் இருக்குதா ?
ப     : டமில் எனது தாய் மொலி. நான் ஒரு டமில் மொலி வெரியன். அதுக்குத்தான் முதலிடம். மேலும் பிற மொழிகள்ல பலத்த போட்டி இருக்குது.

கே : யூடியூபுல தமிழ் இயக்குனர்களிடம் என்ன வகையான போட்டிகள் இருக்குது ?
ப     : இங்கையும் பைரசி பரவிருச்சி. எப்போ பாட்ட ரிலீஸ் பண்ணுவாங்க அத எப்போ சுட்டு காசாக்குவோம்னு ஒரு கூட்டமே இருக்கு. அதத் தவிர மற்ற ஒரிஜினல் இயக்குனர்கள் தான் உண்டு தங்கள் வேலை உண்டுனு இருக்காங்க.

கே : உங்களுக்குனு ஒரு திரட்டி உருவாக்கும் எண்ணம் இருக்கா ?
ப     : அடி வாங்க வைக்கனும்னு முடிவோட இருக்கீங்களா ?

கே : உங்க எதிர்கால திட்டம் என்ன ?
ப     : இந்தக் கலை என்னோடவே போயிறக் கூடாது, அதை பலருக்கும் தெரிவிக்கனும்னு தோணிச்சி. அதுக்காக நம்ம “இலவச” தாத்தாஜியப் போய்ப் பாத்தேன். அவர் எனது சாதனைகளையெல்லாம் பாராட்டி, ஏன் நீங்க ஒரு இலவசக் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கக்கூடாதுனு சொன்னார். அதுக்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலையே மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்துள்ளார்.
கூடிய விரைவில் அங்கே “தமிழ்நாடு யூடியூப் அறிவியல் பல்கலைக்கழகம்”னு ஆரம்பிக்கப்போறோம். அங்கே அனைவருக்கும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

கே : அங்க இட ஒதுக்கீடு உண்டா ?
ப     : கண்டிப்பா. எல்லாருக்கும் தனித் தனி இருக்கைகள் உண்டு. வேணும்னா கணவர்கள், மனைவிகளுக்கு தங்கள் மடியில் இட ஒதுக்கீடு தந்து உட்கார வச்சிக்கலாம்.

கே : பல்கலைக்கழகத்துல என்னன்ன கற்றுத் தரப்படும் ?
ப     : இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பல்வேறு யோசனைகள் இருக்கு. சில அடிப்படைப் பாடங்கள் கண்டிப்பாயிருக்கும்.,

– காமெரா : வகைகள், யூடியூபிற்கு சிறந்தது Arriflex or Panavision ?
– எடிட்டிங் : ஏவிட் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துவது எப்படி ?
– ஆடியோ : கம்போசிங் செய்வது எப்படி ? 24 டிராக், 32 டிராக், டால்பி, டிடிஎஸ் etc.,etc.,
– நடனம் அமைப்பது எப்படி ?
– பாடல்கள் எழுதுவது எப்படி ?

இப்படிப் பலப்பல.

கே : நன்றி.
ப     : நன்றி.

பின் குறிப்பு : இவ்வாறு என் மூஞ்சிய நானே கண்ணாடியில பாத்து ரத்தம் வரும்படியாக சொறிஞ்சிக்கிட்டு இருக்கும் வேளையிலே வேறு சில யூடியூப் விடியாக்கள் பற்றி சொல்லியே ஆகணும். தயவு செய்து கமெண்டுகளப் படிச்சிராதீங்க.

“Little Superstar” : 65 லட்சம் பார்வைகள்.
Crazy Indian Music Video : 48 லட்சம் பார்வைகள்.
இதெல்லாம் ஒரு விடியோவின் பார்வைகள். நான் சொறிஞ்சிக்கிறது 200 சொச்ச விடியோக்களின் பார்வைகள்.

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 7/8/2007.
%d bloggers like this: