உருப்படாதது – 28/08/2007.

அழகிய ஆபத்து.
போன வாரம் நடந்த மிஸ்.டீன் யூ.எஸ்.ஏ என்ற போட்டியில் கலந்து கொண்ட சவுத் கரோலினா அழகி சொல்லும் முக்கிய கருத்தை கேளுங்கள்.

புரியாதவர்கள் கீழே படிக்கவும்.

I personally believe that US Americans are unable to do so because, uh,
some… people out there in out nation don’t have maps, and, uh, I believe
that our education like such as South Africa and, uh, the Iraq everywhere
like, such as and … I believe that they should, our education over here in
the US should help the US, er, should help South Africa and should help the
Iraq and the Asian countries, so we will be able to build up a future for
our children.

கொலை வெறி.
தமிழ் வெறியோடு இருந்த என்னை திடீரென யூடூபாண்டவர் இந்த பாட்டில் கொண்டுவிட்டுவிட்டார். அதிலிருந்து இந்த பாட்டை டெய்லி ஒரு அம்பது தடவையாவது கேக்குறேன். சோ நைஸ். அர்த்தம் தான் புரியல.

நாட்டுக்கு முக்கியம்.
குமுதம் லைட்ஸ் ஆன் பகுதிக்கு செய்தி சேகரிக்கும் நபர் ஒருவர் நண்பரானார். அவர் சொன்ன செய்திகள் இவை.,

அட்டகாசம்.
சிவாஜி ராவ் கெய்க்வார்ட் என்ற நடிகர் தமிழ் சினிமாவில் பீலா விட்டுக் கொண்டு இருப்பது அறிந்ததே. இந்திய நதி நீர் இணைப்புக்கு அவர் ஒரு கோடி ரூபாய் தராமல் டிமிக்கி கொடுத்ததால் அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. தமிழ் இணைய கில்லாடிகள் சிலர் அவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளனர். மூக்கழக இயக்குனர்/நடிகருடன் கைகோர்த்துள்ள இவர்கள் விரைவில் ஒரு திரைப்படத்தை வெளியிட உள்ளார்கள். மூக்கழகர் தான் இயக்குனர். இணைய கில்லாடி ஒருவரைக் கேட்ட போது.,

“இந்த சிவாஜி ராவ் கெய்க்வார்ட் செய்யுற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லைங்க. வர்ரேன்கிறாரு ஆனா வரமாட்டாரு. தர்ரேன்கிறாரு ஆன தரமாட்டேன்கிறாரு. ஒண்ணுஞ் செரியில்ல. அவரால தான் இந்த தொழிலே நடக்குற மாதிரி பேசுறாரு. அதனால நாங்க ஒரு படம் எடுத்து அவருக்கு பாடம் புகட்டலாம்னு இருக்கோம். இந்த படத்துல எல்லாருமே புதுமுகம் தான். அனைவரும் தமிழ் இணையத்துல தீவிரமா செயல்படுரவுங்க. தமிழ் மேல உயிரையே வச்சிருக்றவுங்க.

பல புதுமைகள இந்த படத்துல செய்திருக்கறோம். ஹீரோ ஹீரோயின் வயசு வித்தியாசமெல்லாம் நூத்துக் கணக்குல இருக்காது. ஜஸ்ட் நாலே நாலு வயது தான். ஹீரோ தமிழ் இணையத்துல பிரபலமானவர். அவரை விட நாலு வயசு கம்மியான ஹீரோயினத் தான் புக் பண்ணியிருக்கோம். அப்பதான் இயற்கையா இருக்கும். ஆனா அந்த சிவாஜி ராவ் கெய்க்வார்ட் தன் பேத்தி வயதுள்ள பெண்களோடு நடிக்கறார்.

படத்தோட பட்ஜட் பத்து லட்சம் தான். நடிகர்கள் இலவசமாவே நடித்து தர்றாங்க. டெக்னீசியன்ஸ் எல்லாமே தமிழ் இணையத்துல இருக்கறவுங்க தான். உலகம் முழுவதும் தமிழர்கள் இருப்பதால் பலர் எங்க நாட்டுல இலவசமா சூட்டிங் நடத்துங்கனு ஆர்வமா இருக்காங்க. இது வரைக்கும் 30 லட்சம் டிக்கெட் வித்திருக்கு. ஒரு டிக்கெட் பத்து டாலர்கள். இது இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். இது வரை நடக்காத சாதனை. படத்த தியேட்டர்ல போய் பாக்க முடியாது. இணையத்துல தான் பாக்க முடியும்.

இந்தப் படம் வந்ததும் சிவாஜி ராவ் கெய்க்வார்ட் எனக்கு சினிமாவே வேண்டாமுனு தமிழ்நாட்ட விட்டு ஓடப் போவது நிச்சயம்.”

சும்மா அதிருதில்ல.

மினி பிட்ஸ்.

  • தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவருக்கு கொடுக்கப்படும் விருது இந்த வருடம் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷிணிக்கு வழங்கப்பட இருக்கிறது. (சிறுவர்கள் அவரது குளோசப் முகத்தைப் பார்த்து அலறுவதால் கார்னியர் ப்ரூட்டிஸ் நிறுவனமே அவரது முகத்தை இலவசமாக செம்மைப்படுத்த முன்வந்துள்ளது.)
  • சோகம் நிறைந்த தமிழர் வாழ்வில் கிச்சு கிச்சு மூட்டும் பாஸ்கி மற்றும் ஒய்.ஜி.மகேந்திரா இருவரும், இரவு பகலாக ப்ளேபாய் ஜோக்ஸ், ப்ளான்ட் ஜோக்ஸ், லெட்டர் டூ பென்ட் ஹவுஸ் போன்ற புத்தகங்களை மனப்பாடம் பண்ணிவருகிறார்களாம். (சீக்கிரமா அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லுங்க பாஸ்).
  • தொலைக்காட்சி தொகுப்பாளர் சேதுவை அமேரிக்காவிலிருக்கும் “Girls Gone Wild” நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது. “கண்ணியமாகப் பேசும் அவர் எங்கள் நிகழ்ச்சியும் தொகுக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்று அந்நிறுவனத்தார் கூறுகின்றனர். (வீட்டுல புல் மீல்ஸைக் கண்ணுல காமிச்சிட்டு, குழம்பு சாதத்தோட தொரத்தி விட்டுர்றாங்களாம்.)
  • தமிழக கல்வி அமைச்சகம், தொலைக்காட்சித் தொடரான “கனாக் காணும் காலங்கள்”ஐ பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. “இந்த தொடரைப் பார்க்கும் மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதோடு, வாழ்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். அதனால் தான் இதைக் கட்டாய பாடத்திட்டதில் சேர்த்துள்ளோம். க.கா.கா பீரியடில் அனைத்து வகுப்பறையிலும் க.கா.கா காண்பிக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிலும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும்” என்று தாத்தாஜி கூறியுள்ளார். (அந்த ப்ளஸ் ஒன் மாணவர் எங்க ஹேர் கலரிங் பண்ணுறார் ? அடுத்து மாணவிகளின் டாட்டூ தானே ? )
  • Mensa நிறுவனம் சூர்யா தொடரை நிறுத்தியதால் சூர்ய தொலைக்காட்சி மேல் வழக்கு தொடுக்கவுள்ளது. “பல பெண்மணிகளின் IQ 200க்கு மேல் தாண்டுவதற்கு காரணமே சூர்யா தொடர் தான். அதை நிறுத்தியது வேதனைக்குரியது. அதை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்” என்று Mensa நிறுவனம் கூறுகிறது. (இந்து ப்ளைட் ஆச்சிடண்டில் சாகாமல் தப்பித்து வருகின்றார். இது தான் சூர்யா-2 வின் கதை. )
  • சூர்யா தொடரை நிறுத்தியது போல் ஆனந்தம், கோலங்கள் போன்றவையும் நிறுத்தப்படும் என்ற வதந்தி பரவியது. இதனால் தமிழமே கொதித்துப் போயுள்ளது. நான்கு, ஐந்து வயது சிறுவர் சிறுமியர் சூர்ய தொலைக்காட்சி முன்னர் தர்ணா செய்யவுள்ளனர். “நாங்க பிறக்கும் போதே ஆனந்தம், கோலங்கள் பாத்து தான் பிறந்தோம். நாங்க இருக்கும் வரை அதைப் பார்த்துக் கொண்டேதான் இருப்போம்.” என்று கோபாவேசமாக கூறுகின்றனர். (ஜென்மச்சனி விடாதுங்கோ !! )
Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 28/08/2007.
%d bloggers like this: