சொ.செ.சூ – 21/09/2007

நேத்து கனவில் இந்தப் பதிவு இருவத்தி அஞ்சாவதுன்னு பட்சி சொல்லிச்சி. தமிழ் இணைய தார்மீக கொள்கைக்கேற்ப நன்றி பதிவுதான் போடனும்னு நெனச்சேன். கொஞ்சம் சேஞ்சுக்கு ஒரு சொ.செ.சூ (a.k.a சொந்த செலவில் சூனியம்) பதிவு போட்டா என்னனு தோணிச்சி. தமிழ் இணைய விதிப்படி இருவத்தஞ்சாவது பதிவிலிருந்து ஒரு பதிவர் சொ.செ.சூவுக்கு எலிஜிபில் ஆகிறார். எனக்கு வேற வழியில்ல. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

கொசுவர்த்தி கேள்விகள்.
ஒவ்வொரு வாரமும் ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமா இருக்கும். நம்மால தான் எல்லாம் நடக்குது, நாம் தான் தோள் கொடுத்து, உயிர் கொடுத்து உழைக்கிறோம்னு ப்ராஜெக்ட் மானேஜருக்கு கெத்தா இருக்கும். மத்தவுங்களுக்கு கொஞ்ச நேரமாவது இணையம் இல்லாம ப்ரீயா இருப்போமேனு இருப்பாங்க. நான் கொஞ்ச நேரமாவது தூங்காம இருப்போமேனு இருப்பேன்.

அப்படி இருப்பதிலும் சில சிரமங்கள் இருக்கிறது. மானேஜர் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கிற மாதிரி இருக்கனும். “ஆகா, நீங்க சொல்றது தான் பாயிண்டு. எனக்கு புல்லரிக்கிறது”ங்க மாதிரியான எபக்ட்டுல லுக்கு விடனும். லுக்குலையே சிறந்த லுக்கு, லேசா வாயத் தொறந்துக்கிட்டு ஆச்சரியமாப் பாக்குறது தான். ஆனா ரொம்ப புல்லரிக்கிற மாதிரி தொறக்கக் கூடாது. கொசு கிசு உள்ள பூந்துடும்.

இந்த மாதிரியான கஷ்ட எஃபக்டுல இருக்கும் போது எப்படி ஒருத்தனுக்கு கவனிக்கத் தோணும். அதனால நானே பாரதிராஜாவா மாறி த்ரிஷா, மாதவன், மற்றும் விஜய வச்சி பதினாறு வயதினிலேய ரீஷுட் பண்ணிக்கிட்டு இருப்பேன். இல்லைனா பில் கேட்ஸ் அவ்ளோ சொத்தையும் என் பேருக்கு மாத்தி எழுதித் தர்ரதா கனவு கண்டுக்கிட்டிருப்பேன். இப்போ கொஞ்ச நாளா மார்டீன் கொசுவர்த்தி எஃபக்டுல சில கேள்விகள் மனசுல தோணுது. எனக்கு பதில் தெரியல. தெரிஞ்சவுங்க, அவுங்க மனசுக்குள்ளையே பதில் சொல்லிக் கொள்ளவும்.

 • டாக்டர்ஜி என் குடும்பத்துலேயிருந்து யாராவது அரசியலுக்கு வந்தா நடு ரோட்டுல வச்சி என்னை செருப்பால அடிங்கன்னாரே. யாராவது அவர அடிச்சாங்களா ?
 • தீரன்னு ஒருத்தர் டாக்டர்ஜிய எதுத்துக்கிட்டு வந்தாரே, இப்போ அவர் எங்கே ?
 • சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சி ?
 • வை.கோ அடுத்து எந்த கட்சிக்கு விஸிட் செய்வார் ?
 • தாத்தாஜி பக்கெட்ட எத்துன பிறகு, கட்சி எத்தன பிரிவா ஒடையும் ? மாறன்ஜி + சரத்குமார், விஜயகாந்த் + ஆற்காட்டார் + துரை முருகன், ஸ்டாலின்ஜி + கனிமொழிஜி, மதுரை அரசர்ஜி, செல்வி + தமிழரசு. யப்பா தல சுத்துது.
 • அந்துமணி விவகாரம் என்னாச்சி ?
 • ஜூ.வி & குமுதத்திற்கு அல்வா சாப்பிடுற மாதிரி மேட்டர வாரி வாரி வழங்கிய கன்னட பிரசாத் வழக்கு என்னாச்சி ? ஏன் அவர யாருமே இப்போ கண்டுக்க மாட்டேன்கிறாங்க ?
 • டாக்டர் பட்டம் எவ்ளோ ரூவாய்க்கு கெடைக்கும் ?
 • கிங், குவீன், ஜாக்கில் வரும் சடையன் ஏன் ரம்யாவை அடிக்கடி உரச முயல்கிறார் ? கொஞ்ச நாளா கட்டிப்பிடிக்க வேற முயற்சிக்கிறார். ரெண்டு பேத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா ?
 • தாத்தாஜி சிமிண்ட் கம்பேனி எப்போ ஆரம்பிக்கப்படும் ? அல்லது தமிழக தனியார் சிமிண்ட் தொழில்ச்சாலைகள் எப்போ அரசுடமையாக்கப்படும் ?
 • கொஞ்ச நாளா ஈயாடும் இந்த ப்ளாக்குக்கு மக்கள் வந்து பாக்குறாங்களே எப்படி ? யாராவது உண்மையிலே சூனியம் வச்சிட்டாங்களா ?
Posted in சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 21/09/2007

யூடியூப் அறிவியல் – பாகம் 2.

படம் பிடித்தல்.

இங்கே டீவியிலிருந்தோ, செட்டாப் பாக்ஸிலிருந்தோ ரிக்கார்ட் செய்வது எப்படி என்பது பற்றி விளக்கப்படும். விசிடியிலிருந்தோ, டிவிடியிலிருந்தோ ரிப் செய்வது எனக்கு தெரியாது. ஆகையால் அவை பற்றி விளக்கப் போவதில்லை. ஆனால் அதற்கு மக்கள் Fairuse , Super , Total Video Convertor etc., போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

Ok. விஷயத்திற்கு வருவோம். Capture செய்வதற்கு என்னென்ன தேவையென்றால்

 • ட்யூனர் கார்ட் (அல்லது) external USB கேப்சர் கார்ட்.
 • VirtualDub என்ற மென்பொருள்.

வீட்டில் கேபிள் கனெச்சன் இருந்தால் கேபிள் ட்யூனர் கார்ட், சாட்டிலைட் கனெக்சன் இருந்தால் சாட்டிலைட் ட்யூனர் கார்ட். Hauppage தான் ட்யூனர் கார்ட்களின் அதாரிட்டி. ஆனால் இந்த ட்யூனர் கார்டின் மூலமாக பே (pay) சானல்களைப் பார்க்க/ரிக்கார்ட் செய்ய முடியாது. அதாவது நீங்கள் செட்டாப் பாக்ஸ் உபயோகப்படுத்தி அதில் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்துவதானால் அந்த சேனல்களைப் பார்க்க/ரிக்கார்ட் செய்ய முடியாது. நேரடி கேபிள் கனெக்சன் என்னறால் கவலை வேண்டாம் அனைத்தையும் பார்க்கலாம்/ரிகார்டு செய்யலாம்.

தொல்லையே இல்லாதது external USB கேப்சர் கார்ட். உங்கள் டீவி AV outல் அல்லது செட்டாப் பாக்ஸ் AV outல் இருந்து கனெக்சன் கொடுத்தால் எதையும் பார்க்கலாம்/ரிகார்டு செய்யலாம். எதுனாலும் கூடவே ஒரு மென்பொருளைக் கொடுப்பார்கள். பெரும்பாலும் Ulead or Cyberlinkன் மென்பொருளாக இருக்கும். அவைகளைக் கொண்டே விடியோவை ரிக்கார்டு செய்யலாம். அம்மென்பொருட்களைப் பயன்படுத்துவதெல்லாம் அவுட் அப் சிலபஸ். எனக்கு தெரியாது.

பிறகு ஏன் VirtualDub ?

 • Ulead, Cyberlink எல்லாமே big fat மென்பொருட்கள். இதயம் பலவீனமான கணிணிகள் மண்டையைப் போடுவதற்கு சாத்தியம் உண்டு.
 • VirtualDub பயன்படுத்தும் போது பிற வேலைகளையும் செய்யமுடியும். அது உங்கள் சிபியூவை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளாது.
 • வெறும் 1MB சைஸ் தான். நம்ப முடிகிறதா ? இன்ஸ்டால் செய்யக் கூடத் தேவையில்லை.
 • அதனுடன் வரும் அருமையான filters. Filters கொண்டு பல வேலைகளைச் செய்யமுடியும். எ.டு. லோகோவை மறைப்பது/சேர்ப்பது, கருப்பு வெள்ளையாக மாற்றுவது etc., etc.,
 • Last but not least அது கட்டற்ற மென்பொருள் (Open Source).

இங்கே ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். எல்லா ட்யூனர்/ USB கேப்சர் காட்டும் Virtualdubல் வேலை செய்யாது. பிறகு எப்படி கண்டுபிடிப்பது ? கொஞ்சம் கஷ்டமான வேலைதான். இணையத்தில் தேட வேண்டும். இல்லையென்றால் Virtualdubல் வேலை செய்கிறதா என்று நாம் தான் சோதித்துப் பார்க்க வேண்டும். இங்கே அனைத்து Capture காட்டுகளைப் பற்றி போட்டுள்ளார்கள். கமெண்டுகளைப் படித்தால் யாரேனும் VirtualDubல் வேலை செய்கிறதா இல்லையா என்பது பற்றி எழுதியிருக்கக்கூடும்.

VirtualDubல் வேலை செய்யவில்லையென்றால் கவலையில்லை உங்கள் மென்பொருளைக் கொண்டே கேப்சர் செய்ய வேண்டியதுதான். வேறு வழியில்லை. உங்களால் .AVI பார்மட்டில் படம் பிடிக்க முடிந்தால் பாகம் 3ல் வந்து கலந்து கொள்ளவும்.

கீழே சொல்வது இங்கிருந்து காப்பி அடித்தது தான். கொஞ்சம் பழைய VirtualDub கொண்டு விளக்கியிருப்பார்கள்.

இன்ஸ்டாலேஷன்.

 • VirtualDubற்கு ஒண்ணும் தேவையில்லை. Exeஐ ரன் பண்ணினால் போதும்.
 • ஆனால் சரியாக செயல்படுவதற்கு முதலில் ட்யூனர் கார்ட்/ external USB கேப்சர் கார்டின் டிரைவர்ஸ் இன்ஸ்டால் ஆகியிருக்க வேண்டும்.

ஆரம்பம்.

External USBயாக இருந்தால், டீவியில/செட்டாப்பாக்சில் விரும்பிய சேனலுக்கு மாற்றி, டீவி/செட்டாப்பாக்ஸ் AV outஐ USB Capture கார்ட்டுடன் கனெக்ட் செய்யவும். ட்யூனர் கார்டாக இருந்தால் சாட்டிலைட்/கேபிள் கனெக்சனை ட்யூனர் கார்டிற்கு கொடுக்கவும்.

External USBகாரர்களுக்காக : இதன் மூலம் வரும் ஒலி அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகையால் உங்கள் Audio Cardன் Line-inல் ஆடியோ கொடுப்பது சிறந்த ஒலி பிடிப்பிற்கு ஏதுவாயிருக்கும்.

VirtualDub .AVIயாக சேமிப்பதால் ஐந்து நிமிடப் பாடலுக்கு குறைந்தது 5GB யாவது தேவைப்படும். Huffyuv கொண்டு கொஞ்சம் குறைக்க முடியும். இப்போ வேண்டாம், அது பற்றி பிறகு பார்க்கலாம்.

படம் பிடித்தல்

 • VirtualDub.exeஐ கிளிக்கவும்.
 • File -> Capture AVI
 • Device -> உங்கள் deviceஐ தேர்ந்தெடுக்கவும்.
 • Audio -> உங்கள் deviceஐ தேர்ந்தெடுக்கவும்.
 • Video -> Video Source. உங்கள் விடியோ சோர்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
 • Video -> Capture Filter -> Video Decoder. உங்கள் ஊர் விடியோ ஸ்டாண்டர்டை தேர்ந்தெடுக்கவும். எது என்று தெரியவில்லையென்றால் இங்கே பார்க்கவும்.

இப்பொழுது அனேகமாக USB Capture card வைத்திருப்பவர்களுக்கு உங்கள் Virtualdub windowவில் படம் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.

 • Tuner card காரர்களுக்கு : Video -> Tuner. உங்கள் நாட்டு pin codeஐ கொடுக்கவும். பின்னர் விரும்பிய சேனலின் நம்பரையும் தேர்ந்தெடுக்கவும். Status Locked என்று வர வேண்டும்.

இப்பொழுது உங்கள் Virtualdub windowவில் படம் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.

 • Video -> Set Custom Format. இங்கே Data Formatஐ YUV2 or YV12 or 24-bit RGB க்கு மாற்றிப் பார்க்கவும். மாற்ற முடியவில்லையென்றால் you are out of luck. VirtualDub உங்களுக்கு வேலை செய்யாது.
 • Capture -> Test Video Capture. இது வெறும் சிமுலேஷன் தான். Windowவிற்கு கீழே உள்ள ஸ்டேடஸ் பாரில் frameகள் ஓடிக் கொண்டிருக்கும். Frame drop ஆகாமலிருப்பது முக்கியம். Frame dropஆனால் Audio -> Audio Playbackஐ disable செய்யவும்.
 • Test Video Captureஐ நிறுத்த “ESC” ஐ அழுத்தவும்.
 • File -> Set Capture File. எங்கே இடம் இருக்கிறதோ அந்த டைரக்டரியை தேர்ந்தெடுத்து. பைல் பெயரைக் கொடுக்கவும்.
 • Capture -> Capture Video.
 • தேவையான அளவு Capture செய்தவுடன், “ESC”ஐ அமுக்கவும்.

Finished. நீங்க கேப்சர் செய்த .AVI சமத்தாக Windows Media Playerல் ப்ளே ஆக வேண்டும். இந்த massive fileஐ youtubeக்காக எப்படி மாற்றுவது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 2.

உளறல்கள் – 11/09/2007.

பெருநோயும் வரவில்லை
வீட்டில் யாரும் சாகவும் இல்லை
பிச்சை எடுக்கும் நிலையும் இல்லை

பசி எடுத்தால் சாப்பிட நிறைய சோறு இருக்கு
வேலையே செய்யாமல் சம்பளம் இருக்கு
நினைத்த இடத்திற்கு போக வாகனம் இருக்கு

நிதமும் உறங்க பிளாட்பாரம் தேடத் தேவையில்லை
மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் நனையும் நிலையும் இல்லை
யாரும் எனை “ச்சீ” என ஒதுக்கவும் இல்லை

இருந்தாலும் ஏன் இந்த கொழுப்பெடுத்த மனது சோகமாயிருக்கிறது ?

தலைவர் Moby கன்டின்யூ பண்றார்.,

“Why Does My Heart Feel So Bad ?”

Why does my heart feel so bad ?
Why does my soul feel so bad ?

These open doors

விடியோ கீழே.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 11/09/2007.

உருப்படாதது 5/8/2007.

நேரம் வந்தாச்சி.
ப்ளாகர் தோன்றா முன் தோன்றிய மூத்த ப்ரச்சனையாகிய போண்டா போளி ப்ரச்சனை, இந்த மாதம் தமிழ் இணையத்தில் உச்சத்தில் உள்ளது. இது ஒவ்வொரு வருஷமும் ஒரு மாசம் ஃபுல் ஸ்பீடுல இருக்கும். இந்த வருஷத்துல இப்போ டாப் கியர்ல இருக்கு. நிற்க.

தமிழ் இணையத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றான இந்தப் பதிவு (aka வலைப்பூ) கால் நூறை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்துல சில விஷயங்களை தமிழ் இணையத்தின் முன் வைக்கின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் விஷயம், எந்த ஜாதி என்பது. அதுவும் நேரடியா சொல்லக் கூடாதாம். அரசல் புரசலாத் தான் சொல்லனுமாம். என்ன கொடுமையிது சரவணன் ?

அதனால எண்சீர் விருத்தத்தையும், அந்தாதியையும், வெண்பாவையும் மிக்ஸ் பண்ணி கானா உலகநாதனிடம் கன்சல்ட் செய்து வாழ்கையில் முதல் முறையாக ஒரு கவிதை எழுதியுள்ளேன். ஒரு ஜாதி ஒழிய வேண்டும் என்பது உட்கருத்து. அதனால எந்த ஜாதி ஒழிய வேண்டும்னு சொல்றேனோ, அதுக்கு ஆப்போசிட் ஜாதி தான் நான். சீக்ரட்டாத் தான் சொல்லனும்னு தமிழ் இணைய விதி உள்ளது. என்ன செய்ய. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

பத்து மணிக்கு வர்றாங்கோ, அஞ்சு மணிக்கு ஓடுறாங்கோ.

மெயில் அனுப்சிட்டு அடுத்த நிமிஷமே முதுகில மூச்சு விட்டு
மெயில் அனுப்சனே வந்திருக்கானு பாருங்கிறாங்கோ.

கஸ்டமர குளுமைப்படுத்த வாய்க்கு வந்ததை ரிலீஸ் டேட்டுங்றாங்கோ.

சொந்தக்காரனை மேல ஏத்திவிடுறாங்கோ
வேலை செய்யுறவனை கொடுமைப்படுத்தறாங்கோ.

தான் வீட்டில சுகமாத் தூங்க
லேட் நைட் மீட்டிங் அட்டண்ட் பண்ணச்சொல்றாங்கோ.

“Bug”அ அஸைன் பண்ணி அடுத்த நிமிஷம் ஸ்டேட்டஸ் கேக்குறாங்கோ.

கஸ்டமர் சொல்றது ஒரு எளவும் புரியலனாலும்
மண்டைய மண்டைய ஆட்டுறாங்கோ
தெனாவட்டா மீட்டிங் ஸ்ட்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்புன்றாங்கோ.

பிஸினஸ் கிளாஸ்லே வெளிநாடு போறாங்கோ
வேலை செய்யுறவன ஏர் இந்தியா எகனாமிக் கிளாஸ்லே அனுப்பறாங்கோ.

ப்ராஜெக்ட் சக்ஸஸ்னா முன்னாடி வந்து போட்டாவுக்கு போஸ் கொடுக்கறாங்கோ
பீஸ் போனா எங்க பக்கம் கைகாட்டுறாங்கோ.

ஒண்ணுமில்லாத வெட்டி அலப்பறைக்கு மும்மடங்கு சம்பளம் வாங்குறாங்கோ.

கடவுளே, MS Officeசும், MS Project மட்டும் தெரிந்த இந்த
ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ் என்ற ஜாதி ஒழிய வேண்டும்.

ஒலக சினிமா
கல்லூரியில் படிக்கும் வரை, ஒலக சினிமான்னா அறிவு வளர்ச்சிக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தியேட்டரில் போடும் படம்னுதான் நெனச்சிக்கிட்டிருந்தேன். வேலைக்கு சேந்த பிறகு ஒரு நண்பர் கிடைத்தார். அடிக்கடி வெளிநாடு பறக்கும் மக்களிடம் டிவிடி வாங்கி வரச் சொல்வார். காசு கொடுத்து இங்கிலிபீஸ் படம் பாக்குற அளவுக்கு கலி முத்திருச்சானு கேட்டப்ப, பொறுமையா நீயும் பாரேன்னு, கையோடு சில டிவிடியும், ப்ளேயர் இல்லனு சொன்னதும் தன்னோட பிளேயரையும் கொடுத்தார்.

கொடுத்த டிவிடிக்களில் சிலது கருப்பு வெள்ளை அட்டைப்படமாயிருந்தது. அட்டையிலிருக்கும் Uma Thurman னுக்காக நான் பார்த்த முதல், வசனம் பேசும் ஆங்கிலப்படம் “Pulp Fiction”. மொதல்ல அரை மணி நேரம் பாத்துட்டு ஆப் பண்ணிவிட்டேன். “என்னய்யா ஒரே கெட்ட வார்த்தையா பேசுறாங்க” என்றதிற்கு, உங்க வடிவேலு தான் ஏற்கனவே அதையேல்லாம் “ங்*.*”னு தமிழ்ப்படுத்திட்டாரேனு கலாய்த்தார். இருந்தாலும் வசனமும் புரியலைனு சொன்னதால சப்டைட்டிலோடு எப்படிப் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார்.

அப்படியிருந்தும் படம் புரியவில்லை. “செத்த வின்சென்ட் வேகா எப்படிய்யா உயிரோடு வந்தான் ?” என்றதிற்கு, டைம் லைன் படம் போட்டு விளக்கினார். ஆகா. இப்படியெல்லாம் இருக்குமா. ஒரு திரைக்கதையை துண்டு துண்டாக வெட்டி, அங்கையும் இங்கையும் போட்டு எடுத்த படமா. மீண்டும் படம் பார்த்தேன். Finally… Cool…

இரண்டு Professional Hitmanகளின் இரண்டு நாட்கள். சுழன்றடிக்கும் சண்டையில்லை. பேசுவதெல்லாம் கெட்ட வார்த்தைதான் (அடியாட்கள் பின்ன எப்படி பேசுவாங்க). ஆனாலும் எனக்கு பிடிச்சிருந்தது (atlast). சோகம், துக்கம், மெசேஜ் எதுவும் கெடையாது. Just it is two days of two hitman.

ரொம்பப் பிடிச்சது டைட்டிலில் வரும் டிக் டேலின்ட் ம்யூஸிக். நீங்களும் கேளுங்களேன். ஆனாலும் சில கோரங்களும் உள்ளன. வின்சென்ட்வேகா மார்வினை காரில் தவறுதலாக சுடுதல். அப்புறம் போதை ஊசி போடுவது (WTF ?).

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது 5/8/2007.
%d bloggers like this: