உருப்படாதது 5/8/2007.

நேரம் வந்தாச்சி.
ப்ளாகர் தோன்றா முன் தோன்றிய மூத்த ப்ரச்சனையாகிய போண்டா போளி ப்ரச்சனை, இந்த மாதம் தமிழ் இணையத்தில் உச்சத்தில் உள்ளது. இது ஒவ்வொரு வருஷமும் ஒரு மாசம் ஃபுல் ஸ்பீடுல இருக்கும். இந்த வருஷத்துல இப்போ டாப் கியர்ல இருக்கு. நிற்க.

தமிழ் இணையத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றான இந்தப் பதிவு (aka வலைப்பூ) கால் நூறை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்துல சில விஷயங்களை தமிழ் இணையத்தின் முன் வைக்கின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் விஷயம், எந்த ஜாதி என்பது. அதுவும் நேரடியா சொல்லக் கூடாதாம். அரசல் புரசலாத் தான் சொல்லனுமாம். என்ன கொடுமையிது சரவணன் ?

அதனால எண்சீர் விருத்தத்தையும், அந்தாதியையும், வெண்பாவையும் மிக்ஸ் பண்ணி கானா உலகநாதனிடம் கன்சல்ட் செய்து வாழ்கையில் முதல் முறையாக ஒரு கவிதை எழுதியுள்ளேன். ஒரு ஜாதி ஒழிய வேண்டும் என்பது உட்கருத்து. அதனால எந்த ஜாதி ஒழிய வேண்டும்னு சொல்றேனோ, அதுக்கு ஆப்போசிட் ஜாதி தான் நான். சீக்ரட்டாத் தான் சொல்லனும்னு தமிழ் இணைய விதி உள்ளது. என்ன செய்ய. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

பத்து மணிக்கு வர்றாங்கோ, அஞ்சு மணிக்கு ஓடுறாங்கோ.

மெயில் அனுப்சிட்டு அடுத்த நிமிஷமே முதுகில மூச்சு விட்டு
மெயில் அனுப்சனே வந்திருக்கானு பாருங்கிறாங்கோ.

கஸ்டமர குளுமைப்படுத்த வாய்க்கு வந்ததை ரிலீஸ் டேட்டுங்றாங்கோ.

சொந்தக்காரனை மேல ஏத்திவிடுறாங்கோ
வேலை செய்யுறவனை கொடுமைப்படுத்தறாங்கோ.

தான் வீட்டில சுகமாத் தூங்க
லேட் நைட் மீட்டிங் அட்டண்ட் பண்ணச்சொல்றாங்கோ.

“Bug”அ அஸைன் பண்ணி அடுத்த நிமிஷம் ஸ்டேட்டஸ் கேக்குறாங்கோ.

கஸ்டமர் சொல்றது ஒரு எளவும் புரியலனாலும்
மண்டைய மண்டைய ஆட்டுறாங்கோ
தெனாவட்டா மீட்டிங் ஸ்ட்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்புன்றாங்கோ.

பிஸினஸ் கிளாஸ்லே வெளிநாடு போறாங்கோ
வேலை செய்யுறவன ஏர் இந்தியா எகனாமிக் கிளாஸ்லே அனுப்பறாங்கோ.

ப்ராஜெக்ட் சக்ஸஸ்னா முன்னாடி வந்து போட்டாவுக்கு போஸ் கொடுக்கறாங்கோ
பீஸ் போனா எங்க பக்கம் கைகாட்டுறாங்கோ.

ஒண்ணுமில்லாத வெட்டி அலப்பறைக்கு மும்மடங்கு சம்பளம் வாங்குறாங்கோ.

கடவுளே, MS Officeசும், MS Project மட்டும் தெரிந்த இந்த
ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ் என்ற ஜாதி ஒழிய வேண்டும்.

ஒலக சினிமா
கல்லூரியில் படிக்கும் வரை, ஒலக சினிமான்னா அறிவு வளர்ச்சிக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தியேட்டரில் போடும் படம்னுதான் நெனச்சிக்கிட்டிருந்தேன். வேலைக்கு சேந்த பிறகு ஒரு நண்பர் கிடைத்தார். அடிக்கடி வெளிநாடு பறக்கும் மக்களிடம் டிவிடி வாங்கி வரச் சொல்வார். காசு கொடுத்து இங்கிலிபீஸ் படம் பாக்குற அளவுக்கு கலி முத்திருச்சானு கேட்டப்ப, பொறுமையா நீயும் பாரேன்னு, கையோடு சில டிவிடியும், ப்ளேயர் இல்லனு சொன்னதும் தன்னோட பிளேயரையும் கொடுத்தார்.

கொடுத்த டிவிடிக்களில் சிலது கருப்பு வெள்ளை அட்டைப்படமாயிருந்தது. அட்டையிலிருக்கும் Uma Thurman னுக்காக நான் பார்த்த முதல், வசனம் பேசும் ஆங்கிலப்படம் “Pulp Fiction”. மொதல்ல அரை மணி நேரம் பாத்துட்டு ஆப் பண்ணிவிட்டேன். “என்னய்யா ஒரே கெட்ட வார்த்தையா பேசுறாங்க” என்றதிற்கு, உங்க வடிவேலு தான் ஏற்கனவே அதையேல்லாம் “ங்*.*”னு தமிழ்ப்படுத்திட்டாரேனு கலாய்த்தார். இருந்தாலும் வசனமும் புரியலைனு சொன்னதால சப்டைட்டிலோடு எப்படிப் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார்.

அப்படியிருந்தும் படம் புரியவில்லை. “செத்த வின்சென்ட் வேகா எப்படிய்யா உயிரோடு வந்தான் ?” என்றதிற்கு, டைம் லைன் படம் போட்டு விளக்கினார். ஆகா. இப்படியெல்லாம் இருக்குமா. ஒரு திரைக்கதையை துண்டு துண்டாக வெட்டி, அங்கையும் இங்கையும் போட்டு எடுத்த படமா. மீண்டும் படம் பார்த்தேன். Finally… Cool…

இரண்டு Professional Hitmanகளின் இரண்டு நாட்கள். சுழன்றடிக்கும் சண்டையில்லை. பேசுவதெல்லாம் கெட்ட வார்த்தைதான் (அடியாட்கள் பின்ன எப்படி பேசுவாங்க). ஆனாலும் எனக்கு பிடிச்சிருந்தது (atlast). சோகம், துக்கம், மெசேஜ் எதுவும் கெடையாது. Just it is two days of two hitman.

ரொம்பப் பிடிச்சது டைட்டிலில் வரும் டிக் டேலின்ட் ம்யூஸிக். நீங்களும் கேளுங்களேன். ஆனாலும் சில கோரங்களும் உள்ளன. வின்சென்ட்வேகா மார்வினை காரில் தவறுதலாக சுடுதல். அப்புறம் போதை ஊசி போடுவது (WTF ?).

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது 5/8/2007.
%d bloggers like this: