சொ.செ.சூ – 21/09/2007

நேத்து கனவில் இந்தப் பதிவு இருவத்தி அஞ்சாவதுன்னு பட்சி சொல்லிச்சி. தமிழ் இணைய தார்மீக கொள்கைக்கேற்ப நன்றி பதிவுதான் போடனும்னு நெனச்சேன். கொஞ்சம் சேஞ்சுக்கு ஒரு சொ.செ.சூ (a.k.a சொந்த செலவில் சூனியம்) பதிவு போட்டா என்னனு தோணிச்சி. தமிழ் இணைய விதிப்படி இருவத்தஞ்சாவது பதிவிலிருந்து ஒரு பதிவர் சொ.செ.சூவுக்கு எலிஜிபில் ஆகிறார். எனக்கு வேற வழியில்ல. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

கொசுவர்த்தி கேள்விகள்.
ஒவ்வொரு வாரமும் ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமா இருக்கும். நம்மால தான் எல்லாம் நடக்குது, நாம் தான் தோள் கொடுத்து, உயிர் கொடுத்து உழைக்கிறோம்னு ப்ராஜெக்ட் மானேஜருக்கு கெத்தா இருக்கும். மத்தவுங்களுக்கு கொஞ்ச நேரமாவது இணையம் இல்லாம ப்ரீயா இருப்போமேனு இருப்பாங்க. நான் கொஞ்ச நேரமாவது தூங்காம இருப்போமேனு இருப்பேன்.

அப்படி இருப்பதிலும் சில சிரமங்கள் இருக்கிறது. மானேஜர் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கிற மாதிரி இருக்கனும். “ஆகா, நீங்க சொல்றது தான் பாயிண்டு. எனக்கு புல்லரிக்கிறது”ங்க மாதிரியான எபக்ட்டுல லுக்கு விடனும். லுக்குலையே சிறந்த லுக்கு, லேசா வாயத் தொறந்துக்கிட்டு ஆச்சரியமாப் பாக்குறது தான். ஆனா ரொம்ப புல்லரிக்கிற மாதிரி தொறக்கக் கூடாது. கொசு கிசு உள்ள பூந்துடும்.

இந்த மாதிரியான கஷ்ட எஃபக்டுல இருக்கும் போது எப்படி ஒருத்தனுக்கு கவனிக்கத் தோணும். அதனால நானே பாரதிராஜாவா மாறி த்ரிஷா, மாதவன், மற்றும் விஜய வச்சி பதினாறு வயதினிலேய ரீஷுட் பண்ணிக்கிட்டு இருப்பேன். இல்லைனா பில் கேட்ஸ் அவ்ளோ சொத்தையும் என் பேருக்கு மாத்தி எழுதித் தர்ரதா கனவு கண்டுக்கிட்டிருப்பேன். இப்போ கொஞ்ச நாளா மார்டீன் கொசுவர்த்தி எஃபக்டுல சில கேள்விகள் மனசுல தோணுது. எனக்கு பதில் தெரியல. தெரிஞ்சவுங்க, அவுங்க மனசுக்குள்ளையே பதில் சொல்லிக் கொள்ளவும்.

 • டாக்டர்ஜி என் குடும்பத்துலேயிருந்து யாராவது அரசியலுக்கு வந்தா நடு ரோட்டுல வச்சி என்னை செருப்பால அடிங்கன்னாரே. யாராவது அவர அடிச்சாங்களா ?
 • தீரன்னு ஒருத்தர் டாக்டர்ஜிய எதுத்துக்கிட்டு வந்தாரே, இப்போ அவர் எங்கே ?
 • சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சி ?
 • வை.கோ அடுத்து எந்த கட்சிக்கு விஸிட் செய்வார் ?
 • தாத்தாஜி பக்கெட்ட எத்துன பிறகு, கட்சி எத்தன பிரிவா ஒடையும் ? மாறன்ஜி + சரத்குமார், விஜயகாந்த் + ஆற்காட்டார் + துரை முருகன், ஸ்டாலின்ஜி + கனிமொழிஜி, மதுரை அரசர்ஜி, செல்வி + தமிழரசு. யப்பா தல சுத்துது.
 • அந்துமணி விவகாரம் என்னாச்சி ?
 • ஜூ.வி & குமுதத்திற்கு அல்வா சாப்பிடுற மாதிரி மேட்டர வாரி வாரி வழங்கிய கன்னட பிரசாத் வழக்கு என்னாச்சி ? ஏன் அவர யாருமே இப்போ கண்டுக்க மாட்டேன்கிறாங்க ?
 • டாக்டர் பட்டம் எவ்ளோ ரூவாய்க்கு கெடைக்கும் ?
 • கிங், குவீன், ஜாக்கில் வரும் சடையன் ஏன் ரம்யாவை அடிக்கடி உரச முயல்கிறார் ? கொஞ்ச நாளா கட்டிப்பிடிக்க வேற முயற்சிக்கிறார். ரெண்டு பேத்துக்குள்ள ஏதாவது பிரச்சனையா ?
 • தாத்தாஜி சிமிண்ட் கம்பேனி எப்போ ஆரம்பிக்கப்படும் ? அல்லது தமிழக தனியார் சிமிண்ட் தொழில்ச்சாலைகள் எப்போ அரசுடமையாக்கப்படும் ?
 • கொஞ்ச நாளா ஈயாடும் இந்த ப்ளாக்குக்கு மக்கள் வந்து பாக்குறாங்களே எப்படி ? யாராவது உண்மையிலே சூனியம் வச்சிட்டாங்களா ?
Posted in சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 21/09/2007
%d bloggers like this: