உளறல்கள் – 09/10/2007.

nostalgia : Longing for something past.
nostalgic : Unhappy about being away and longing for familiar things or persons.

“மாதா பிதா குரு தெய்வம்”ங்ற லிஸ்ட்ல தமிழ் இளைஞர்களுக்குகென முதலாவதா ஒண்ணு மறஞ்சு இருக்கு. அது என்னான்னா, சினிமா. லெச்சரர் மேல ராக்கெட் விடுறது, பிட் அடிக்கறது, அஞ்சு நிமிஷத்துல பணக்காரனா ஆவுறது, லவ் லெட்டர் குடுக்குறதுனு பல விஷயங்கள சினிமா தான் சொல்லித் தருது. இந்த மாதிரியான வாழ்வியல் கருத்துகள போதித்தாலும் ஒரு முக்கியமான விஷயமும் இருக்கு. அது தான் பழைய நினைவுகள கிளறி விடுறது. நடந்தது, நடக்காதது, இருந்தது, இல்லாதது போன்ற விஷயங்களை அசைபோட்டு தூங்கும் போது பாயை பிராண்டுவதற்கு தூண்டுகோலாக சினிமா இருக்குது.

போன வாரம் சன் டீவியில 7G ரெயின்போ காலனியப் பாத்தவுடன நானும் பாயை பிராண்ட ஆரம்பிச்சுட்டேன். கிட்டத்தட்ட எல்லா தமிழ் இளைஞர்களுக்கும் உள்ள ஆசைதான். அழகான, அறிவான, தைரியமான, தெளிவான, பக்கபலமான, நமக்கு தைரியம் சொல்ற etc., etc., போன்ற காதலி கிடைக்கமாட்டாளாங்ற ஆசை. பொத்தாம் பொதுவாச் சொன்னால் இது சொ.செ.சூ பதிவா மாறுவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறது. அட்லீஸ்ட் 0.00000003% பெர்செண்டேஜாவது இருக்கும். ( 1/மூணு கோடி கணக்கு சரிதானே ?).

சரி, அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, ஏவிட் எக்ஸ்பிரச மனசுல வச்சி, சுரேஷ் அர்ஸ், ஆண்டனி, B.லெனின் & V.T.விஜயன் ஆகியோர்களை மனசுல நெனச்சி, நான் ஷ்ரேயாவின் குரலில் இருக்கும் “நினைத்து நினைத்து”ங்ற பாடல டைரக்ட் பண்ணியிருக்கிறேன். பாட்ட நீங்க இங்க பார்க்கலாம். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 09/10/2007.
%d bloggers like this: