உருப்படாதது – 19/10/2007.

Yin Yang.
வேலை கெடச்ச புதுசுல சென்னை சிட்டி வாழ்க்கை எல்லாமே புதுசா இருந்துச்சி. சின்ன ஊர்லேயிருந்து சென்னைக்கு வந்திருந்ததால எல்லாமே ஆன்னு வாயப் பொளக்க வச்சது. ஆபீஸ்லையும் இதே கதி தான்.

“ஆ, இவ்ளோ பெரிய கட்டடமா”, “ஆ. குஷன் வச்ச சேரா”, “ஆ. எனக்கே எனக்குனு கம்ப்யூட்டரா”, “ஆ. மத்தியானம் ஃப்ரீயா சாப்பாடா”. இப்படீனு எடுத்ததுக்கெல்லாம் வாயப் பொளந்துக்கிட்டிருந்தேன். லண்டன், நியூயார்க்ல பிறந்து டெய்லி விமானத்துல வந்து போயிடிருக்கும் சிட்டி மைந்தர்களும் ஆபீசில் இருந்தார்கள். அவர்கள் வாயத் தொறந்தாலே தாய்மொழியாம் பீட்டரில் தான் பேசுவார்கள். என்னை மாதிரியான விருமாண்டி கோஷ்டியினரைத் திரும்பிக்கூட பாக்கமாட்டார்கள். Of course எங்களுக்கு அதனால் ஒரு கவலையும் இல்லை.

பிறகு, “வேரியபிள் யூஸ் பண்ணுரதுக்கு முன்னாடி டிக்ளேர் பண்ணனும், கம்பேர் பண்ணுறதுக்கு சிங்கிள் ஈக்குவல் இல்ல டபுள் ஈக்குவல், ஒவ்வொரு ஸ்டேட்மண்ட் இறுதியிலும் செமி கோலன் வைக்கணும்”, போன்ற அறிவியல் உண்மைகளை அவர்களுக்கு எடுத்து இயம்பினதுனால கொஞ்சம் இறங்கி என்னோட பேச ஆரம்பிச்சாங்க. வேற எதுல ? டமில் மொலில தான்.

அதுல ஒருத்தர் பயங்கர பணக்காரர் ஆபிசுக்கே கார்ல தான் வருவார். ஒரு நாள் அவருடைய ப்ரோக்ராம்ல சில சிங்குச்சா பண்ணி ஓட வச்சேன். ரொம்ப இம்ப்ரஸாகி நீ இன்னைக்கு வீட்டுக்கு வானு இன்வைட் பண்ணினார். பெரிய பணக்கார வீடாச்சா, நானும் வாயப் பொளந்துக்கிட்டு எல்லாத்தையும் பாத்திக்கிட்டிருந்தேன். அவர் ரூம்ல தான் முதன்முதலாக ஒரு ஹைகிளாஸ் ஆடியோ சிஸ்டத்தைப் பார்க்கிறேன். அதைப் பார்த்ததும் அடைந்த ஆனந்தத்தை எழுத்தில் எழுத முடியாது.

Denon சிஸ்டம், B&W ஸ்பீக்கர்கள். ஃப்ரண்ட் ஸ்பீக்கர்ஸே ஏறக்குறைய என் இடுப்பு உயரத்திற்கு இருந்தன. அதுல பாட்டு போடுய்யானதுக்கு போட்டார் பாருங்க ஒண்ணு. தலைமுடியெல்லாம் பிச்சுக்கிச்சி. என்னய்யானதுக்கு, அதுதான் டெக்னோ மியூசிக்ன்னார். முந்தைய நாள் அவரும் அவருடைய காதலியும் அந்தப் பாட்டைப் போட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்களாம். என்ன கொடுமையிது.

இந்த மாதிரியான் டெக்னோ மியூசிக்கெல்லாம் டிஸ்கொத்தேல போடுவாங்களாம். எள் விழக்கூட இடமில்லாத இடத்துல ஆண்களும் பெண்களுமாக டெக்க்னோவிற்கு டான்ஸ் ஆடுவாங்களாம். வாயப் பொளக்கறதத் தவிற வேறு வழியேயில்ல.

பிறகு நானும் டெக்னோ கேக்குற அளவிற்கு முன்னேறிட்டேன்னு வையுங்க. ஆபிஸ்லையும் சில சமயம் கேப்பேன். Bug குத்துமதிப்பா எங்க இருக்குனு தெரிஞ்சிருச்சின்னா, டெக்னோ கேட்டுக்கிட்டே அவைகளை வேட்டையாடுவதே தனி சுகம். எங்க இருக்குன்னே தெரியலைன்னா எங்க மேனேஜர் “கேட்டதையெல்லாம் கொடுக்கும் கிருஷ்ணா, கிருஷ்ணா. Bug எங்க இருக்குனு காட்டப்பானு” பாடிக்கிட்டிருப்பார்.

Paul Van Dykனு ஒரு DJ இருக்கார். புல்லாங்குழலும், வயலினும் இசைக்க வேண்டிய கவிதையான காட்சியமைப்பிற்கு டெக்னோ போட்டிருக்கார். ஆனாலும் காட்சி ஏற்படுத்தும் தாக்கத்தில் இம்மி கூட குறையவில்லை. நீங்களும் பாருங்கள்.

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 19/10/2007.
%d bloggers like this: