யூடியூப் அறிவியல் – பாகம் 3.

இப்போ உங்ககிட்ட இருப்பது uncompressed raw விடியோவாகும். அதை அப்படியே வலையேற்ற முடியாது. யூடியூபிற்கென சில விதிமுறைகள் இருக்கு. அவை என்ன என்பது யூடியூப் பக்கத்திலே கொடுத்திருக்கிறார்கள். இங்கே , இங்கே மற்றும் இங்கே பார்க்கவும். இவை இப்பதிவு எழுதும் நேரத்தில் இருந்தவை. ஒருவேளை வரும் காலங்களில் யூடியூப் அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

யூடியூப் பரிந்துரை செய்வது என்ன ?

* 320×240 resolution.
* 30 frames per second.
* MPEG4 (Divx, Xvid) format.
* MP3 audio (mono).
* 100MB file size limit.
* 10-minute length limit.

இதுல ரெண்டு ஸ்டேஜ் இருக்கு.

 • முதலில் விடியோவை 320×240 சைஸில் 30 fpsற்கு (frames per second) மாற்றுவது.
 • இரண்டாவது விடியோவை Xvidற்கும், ஆடியோவை MP3க்கு மாற்றுவது.

Xvidற்கு மாற்றிய பின்னர் 100MBக்கு மேல் இருந்தாலோ, ஓடும் நேரம் பத்து நிமிடத்திற்கு மேலே இருந்தாலோ யூடியூபில் வலையேற்ற முடியாது. Xvidற்கு மாற்றுவதற்கு Xvid codec தேவை. அதனை இங்கே சென்று டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். Xvid என்பது open source MPEG-4 codec ஆகும்.

Filters.

ஸ்டேஜ்களை விரிவா பாக்குறதுக்கு முன்னாடி VirtualDubல filtersனா என்னனு பாத்துறலாம். விடியோ filter என்பது விடியோவில் மாற்றம் செய்ய உதவுவதாகும். என்ன மாற்றம் ? Resize filter கொண்டு விடியோவின் சைஸை மாற்றலாம். Logo filter கொண்டு லோகோ சேர்க்கலாம். Grayscale filter கொண்டு விடியோவை கறுப்பு வெள்ளையாக மாற்றலாம்.

VirtualDubல் இது போல பல built-in filters இருக்கின்றன. பயன்படுத்தும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட filtersஐ உபயோகப்படுத்தலாம். ஒரே ஒரு பிரச்சனை. VirtualDub, கொடுக்கப்பட்ட filtersகளை முழு விடியோவிற்கும் அப்ளை செய்யும். முதல் 1 நிமிடத்திற்கு மட்டும் லோகோ வேண்டும் பிறகு வேண்டாம், போன்ற வேலைகள் செய்ய முடியாது.

ஸ்டேஜ் 1

நாம் கேப்சர் செய்யும் போது மிக துல்லியமாக கேப்சர் செய்திருக்க மாட்டோம். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கேப்சர் செய்திருப்போம். அந்த தேவையற்ற பகுதிகளை எப்படி ட்ரிம் பண்ணுவது ? கீழே இருப்பது VirtualDubன் பட்டன்கள்.

vdub.jpg

Left, Right cursor கீக்களைக் கொண்டு ஒவ்வொரு frameஆக முன்னும் பின்னும் செல்லலாம். Alt+Left, Alt+Right அழுத்தினால் 50 frame முன்னும் பின்னும் செல்லும். அல்லது ஸ்லைடரை drag செய்து விரும்பிய இடத்திற்கு செல்லலாம். Ok. தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு முதலில் அதை செலெக்ட் செய்ய வேண்டும். ஆரம்பத்தை பட்டன் 12 கொண்டு தேர்வு செய்யவும். இறுதியை பட்டன் 13 கொண்டு தேர்வு செய்யவும். Delete அழுத்தி தேவை இல்லாத அந்த பகுதியை நீக்கவும். இதனால் fileல் இருந்து டெலிட் ஆகாது. Just not included for the processing.

 • தேவையற்ற பகுதிகளை மேற்சொன்னபடி நீக்குங்கள்.
 • Video->Filters->Add->Resize.
 • Resize options :Aspect Ratio -> Disabled. New Size -> Absolute Pixels (320 x 240). Press ok to exit from the menu.
 • Video->Frame Rate->Frame Rate Conversion->Convert to fps (30). Press ok to exit from the menu.

இப்போ இந்த புதிய சைஸ் (320 x 240) விடியோவை சேவ் பண்ண வேண்டும். அதற்கு File->Save as AVI. ஒரு புதிய பேரைக் கொடுக்கவும். விடியோவின் நேரத்தைப் பொறுத்து இது 1.5GBயிலிருந்து 2.5GBவரை மாறலாம். முடியும் வரை காத்திருக்கவும்.

ஸ்டேஜ் 2

இந்த ஸ்டேஜில் விடியோவை Xvidற்கும், ஆடியோவை MP3க்கு மாற்றலாம். தொடர்ந்து செல்வதற்கு முன் Xvid codecஐ கணிணியில் நிறுவுங்கள். அப்போது தான் விடியோவை Xvidற்கு மாற்ற முடியும். Xvid compression என்பது இரண்டு ஸ்டேஜ் (two-pass encoding) ஆக நடைபெறும். முதல் passல் விடியோ analysis செய்யப்பட்டு video.pass என்ற fileலில் எழுதப்படும். இரண்டாவது passல் encoding நடைபெறும். Single passசும் இருக்கிறது. ஆனால் youtubeல் அந்த விடியோ கேவலமாக இருக்கும்.

 • ஸ்டேஜ் 1ல் சேவ் பண்ணிய புதிய .AVI பைலை ஒபன் செய்யவும். File->Open video file.
 • Audio->Full Processing mode.
 • Audio->Compression. Select MPEG Layer-3 and select 32 kBits/s, 24,000Hz, Mono. Press ok to exit from the menu.
 • Video->Full Processing mode.
 • Video->Compression. Select Xvid MPEG-4 codec. Xvid codec இன்ஸ்டால் ஆகியிருக்காவிட்டால் இந்த ஆப்ஷன் வராது.
 • Configure. Profile@Level -> Unrestricted. Encoding type -> Twopass – 1st pass. Quality Preset -> General Purpose.
 • Press Ok (twice) to exit the Main window.
 • File -> Save as AVI. எதாவது ஒரு பைல் பேரைக் கொடுக்கவும். Important : Enable “Don’t run this job now; add it to job control so I can run it in batch mode”.
 • Press Save. Batch mode எனேபிள் செய்திருப்பதால் இப்பொழுதே சேவ் செய்யாது. அடுத்து செகண்ட் பாஸையும் job controlல் சேர்ப்போம்.

Second pass.

 • Video->Compression. Select Xvid MPEG-4 codec.
 • Configure. Encoding type -> Two pass – 2nd pass. Click Target size button to toggle to Target bitrate. Target bitrate -> 1500.
 • Press Ok (twice) to exit the Main window.
 • File -> Save as AVI. இப்போ சரியான பேரைக் கொடுக்கவும். Important : Enable “Don’t run this job now; add it to job control so I can run it in batch mode”.
 • Press Save.

Xvid Encoding

இப்போ first pass மற்றும் second pass ஐ ஜாப் கண்ட்ரோலில் சேர்த்தாகிவிட்டது.

 • F4ஐ அழுத்தி ஜாப் கண்ட்ரோல் விண்டோவை திறக்கவும்.
 • நீங்கள் சேர்த்த இரு ஜாபும் இருக்க வேண்டும்.
 • Start.

முடியும் வரை காத்திருக்கவும். உங்கள் கண்ணியை பொறுத்து மூன்று நிமிஷமும் ஆகலாம். பத்து நிமிஷமும் ஆகலாம். முடிந்தவுடன் VirtualDubஐ விட்டு வெளியேறவும். இப்போது இரு பைல்கள் இருக்கும். First passன் போது கொடுத்த பைலை டெலிட் செய்துவிடலாம். அது தேவையில்லை. இரண்டாவது passன் போது கொடுத்த பைல் தான் Xvid encoded file. விண்டோஸ் மீடியா பிளேயரில் சமர்த்தாக ப்ளே ஆக வேண்டும்.

அம்புட்டுதேன். அந்த பைலை உங்கள் யூடியூப் அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும். 100MBக்கு மேல் சைஸ் இருந்தால், second pass target bitrateஐ 1000க்கு குறைத்து மீண்டும் “ஸ்டேஜ் 2″வை செய்யவும். அல்லது ஓடும் அளவை கத்தரித்து மீண்டும் “ஸ்டேஜ் 2″வை செய்யவும்.

பாகம் 4ல் நான் செய்யும் சில விஷயங்களைக் கூறுகிறேன் (eg., logo removal).

டிஸ்கி (aka disclaimer)

 • எனக்கு தெரிஞ்சதத் தான் சொல்லியிருக்கேங்றதால இது சரியான முறை கெடையாது.
 • இங்க சொன்ன முறைய பயன்படுத்தி உங்க கணினி படுத்துக்குச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு கெடையாது.
 • மேலே சொன்ன எல்லாமே Google, Doom, Videohelp மூலமாக கிடைத்தவை தான்.
 • நீங்க யூடியூப்ல வலையேற்றி, மாறன் பிரதர்ஸோ, முர்டாக்கோ இல்ல தாத்தாஜியோ உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புனா அதுக்கு நான் பொறுப்பு கெடையாது.
Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 3.
%d bloggers like this: