உருப்படாதது – 26/11/2007.

பிரசவ வேதனை.

பிரசவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும், சுமார் மூணு வாரம் பிரசவ வேதனை அனுபவிச்சேன். AMDக்கு எப்படியோ தெரியல, ஆனா மூணு வாரமா anandtech, tomshardware, the-inquirer, tech-report னு மவுசை அமுக்கியதுல என் ஆள்காட்டி விரல் ரேகை தீஞ்சு போயிருச்சு. ஒருவழியா நவம்பர் 19 தேதி AMD Spider சிஸேரியன்ல பிறந்துட்டார்.

 

பிறந்த மூணு குழந்தைகள்ல ரெண்டு நல்லா புஷ்டியா கொழு கொழுனு இருக்குங்க. AMD 790 chipset & 38xx GPU. மற்றொரு குழந்தையான Pheom நிலை தான் படுமோசம். குறைபிரசவம் வேறு. AMD9700க்கு பிறவிக்கோளாறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். என்ன கொடுமை.

 

AMD வெப்சைட்ல “சிங்கம் போல வாராண்டி என் செல்லப் பேராண்டி“ ரேஞ்சுல பீலா உடுறாங்க.. பிறக்கப் போறது காகிதப் புலிகள் தான்னு முன்னாடியே தெரிஞ்சாலும் ஒரு ஆர்வம் தான். ஆனாலும் Phenomமை தவிர்த்து மற்ற இருவரும் சூப்பர்.

 

எப்பவுமே ATIயின் GPU வந்தவுடன் கொஞ்சம் ஜகா வாங்கி பின்னர் ஒரு Catalyst driver update வந்தவுடன் சுழன்றடிக்கும். ஆனாலும் கொஞ்ச நாளாவே ATIக்கு போதாத நேரம் தான். DirectX 10 சப்போர்ட் செய்ய நேரம் பிடித்தது. போன ஜெனெரேஷன் 19xx GPUல ஊருக்கே சமைத்து போடுற அளவிற்கு ஹீட்டிங் ப்ராப்ளம். ஆனா ஒரு வழியா DirectX 10.1 சப்போர்ட்டோட 38xx GPU வந்திருச்சி. Price-Performanceல இப்போதைக்கு ATIய அடிச்சுக்க Nvidiaவிற்கு கொஞ்ச நேரம் பிடிக்கும்.

 

Pheom நிலமை இந்த அளவிற்கு மோசமாக இருக்கும்னு நினைச்சே பாக்கலை. அட்லீஸ்ட் Q6600வை அடிக்கும்னு நினைச்சேன். ஆனா Q6600 அடுத்த வருஷம் வரவிருக்கும் Phenom 9900வையே அடிச்சி தூக்கிரும்னு பேசிக்கிறாங்க. ஆனாலும் Price-PerformanceAMDய அடிச்சுக்க முடியாது. அடுத்த வருஷம் வரவிருக்கும் மேலும் சில GPU, AMD Southbridge SB700, மற்றும் updated Phenom should rock.

 

2004-2006ல் முடிசூடா மன்னனாக இருந்த AMD இப்போ அவுங்களுடைய நிரந்தர இடமாகிய இரண்டாவதற்கு போயிட்டாங்க. ரொம்ப ஓவரா ஆடக்கூடாதுனு AMDக்கு புரிஞ்சா சரி.

கணினிய மாத்தலாம்னு இருக்கேன். பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

 

Wow
என்னா video composition. ஒரு செகண்டுக்கு எத்தனை முறை விடியோ கட் ஆகுது. டெக்னிக்கலா தெரியலனாலும் மிகவும் கவர்ந்த விடியோ. Lyrics பட்டைய கெளப்புதுல்ல.

“Potential Breakup Song”

 

It took too long
It took too long
It took to long for you to call back
And normally I would just forget that
Except for the fact it was my birthday
My stupid birthday

 

I played along
I played along
I played along
rolled right off my back
But obviously my armor was cracked
What kind of a boyfriend would forget that?
Who would forget that?

 

The type of guy who doesn’t see
What he has until she leaves
Don’t let me go
Cause without me, you know you’re lost
Wise up now or pay the cost
Soon you will know

 

You’re not livin’ till you’re livin’
Livin’ with me
You’re not winnin’ till you’re winnin’
Winnin’ me
You’re not gettin’ till you’re gettin’
Gettin’ to me
You’re not livin’ till you’re livin’
living for me

 

This is the potential breakup song
Our album needs just one
Oh baby please
Please tell me

 

We got along
We got along
We got along until you did that
Now all I want is just my stuff back
Do you get that?
Let me repeat that
I want my stuff back

 

You can send it in a box
I don’t care just drop it off
I won’t be home
Cause without me, you know you’re lost
Minus you I’m better off
Soon you will know

 

You’re not livin’ till you’re livin’
Livin’ with me
You’re not winnin’ till you’re winnin’
Winnin’ me
You’re not gettin’ till you’re gettin’
Gettin’ to me
You’re not livin’ till you’re livin’
living for me

 

You can try, you can try
You know I know it’d be a lie
Without me you’re gonna die
So you better think clearly, clearly
Before you nearly, nearly
Mess up the situation that your gonna miss dearly, dearly
C’mon

 

You’re not livin’ till you’re livin’
Livin’ with me
You’re not winnin’ till you’re winnin’
Winnin’ me
You’re not gettin’ till you’re gettin’
Gettin’ to me
You’re not livin’ till you’re livin’
living for me

 

This is the potential breakup song
Our album needs just one
Oh baby please
Please tell me

 

This is the potential make-up song
please just admit you’re wrong
Which will it be?
Which will it be?

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 26/11/2007.

சொ.செ.சூ – 21/11/2007

நேத்து யூடியூப்ல மொத்த வருகை பத்து லட்சத்தை தாண்டிருச்சி. ஆகஸ்ட் ஏழாம் தேதி போஸ்ட்டுல ரெண்டு லட்சம் பேர் வந்திருந்ததா எழுதியிருந்தேன். மூணே மூணு மாசத்துல அஞ்சு மடங்கு எகிறியிருக்கு. அப்போ 200 பாட்டு இருந்துச்சி, இப்போ 500 பாட்டு இருக்கு. ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ் இதையெல்லாம் நோட் பண்ணா நல்லது. ஆனா அவுங்களே இப்போ ப்ளாக் எழுதி முக்கியமான வேல பாத்துக்கிட்டிருக்காங்க.

எங்க மேனேஜர் நோட் பண்ணிட்டார்னு நினைக்கிறேன். இப்போல்லாம் அடிக்கடி கேபின்ல அயர்ந்து தூங்கிட்டிருக்கும் போது எழுப்பி, “என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலியேனு பரிதாபமா கேக்குறார். நானும் பரிதாபப்பட்டு, “இனிமே கொறட்டை உடாம தூங்குறேன் சார்னு அவர் தலை மேல சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கிறேன்.

500 பாட்டாயிருச்சி அடுத்து என்ன செய்யலாம்ங்றதுக்காக, கமல், விக்ரம், சூர்யாவிற்கு போன் பண்ணி கேட்டேன். எல்லோரும் கோரசாக, “எதாவது வித்யாசமா பண்ணுனு கட்டளையிட்டனர். சரின்னு ஆபீஸ் வேலைய ஆரம்பிச்சேன். கனவுல ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வந்தார்.

பிரச்சனை தீர எதாவது வழி சொல்லுங்க.”

நீயுமா ?”.

என்ன சொல்றீங்கன்னே புரியல. யூடியூப்ல வித்யாசமா செய்ய ஏதாவது வழி சொல்லுங்கன்னா.”

சரி, எல்லா டேகை (tag)யும் ஜப்பானிய மொழிக்கு மாத்திரு. அங்க தான் டான்சிங் மாஸ்டர் ரஜினி பயங்கர பாப்புலரா இருக்காராம்“.

ஜப்பானிய மொழி தெரியாதே“.

அப்ப சீன மொழிக்கு மாத்து. அவுங்களும் கெட்டுப்போகட்டும்“.

அதுவும் தெரியாதே“.

சரி, தொலைஞ்சி போ. எதாவது நீச பாஷைக்கு மாத்து“.

 

கனவு கட்டாயிருச்சி. எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு டர்ட்டி பாஷை டமில் மொலி தான். அதை விட ரொம்ப டர்ட்டி பாஷையான இங்கிலிபீஸ்ல தான் ஏற்கனவே உள்ள tagல்லாம் இருக்கு, சரி, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவோம்னு நினைச்சேன்.

அடுத்து பச்சைத்தமிழர்களான கேப்டனுக்கும், நெப்ஸ்க்கும் போன் போட்டேன்.

ஏமி, செப்பண்டின்னு தூய டமிலில் பேசினார்கள். இந்த மாதிரி tagஐயெல்லாம் டமிலுக்கு மாற்றலாம்னு இருக்கேன்னதும்,

பல பச்சை டமிலர்களுக்கு டமில்ல டைப் அடிக்கவே தெரியாதே. வீறு கொண்ட இளைஞன் போலிருந்த உன் யூடியூப் அக்கவுண்ட் இனி நடை தளர்ந்த கிழவன் போல் ஆயிருமேஎன்றனர்.

பொத்தி வச்ச மல்லிகை போல இருக்கும் என் விடியோவை பலர் தமிழ்ப் பட வில்லன்கள் போல் இஸ்துகினு போயிடுரானுங்க. இதுல நீங்க வேற. உங்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது. கொஞ்சம் சுத்தி முத்தி பாருங்க.“

என்ன சொல்லுவினம் ?” என்று வினவினார்.

என்னத்த சொல்றது, பாக்கலாம் கேப்டன்”.

வேலைக்கு போக போஸ்தானண்டி?”

இல்ல கேப்டன். இன்னைக்கி வீட்லையே தூங்கிட்டேன்”.

அட்ரஸ் செப்பண்டி. உறுப்பினர் கார்டு ஒண்ணு அனுப்பி வைக்கிறேன்”.

ஐயோ, ஆள உடுங்க.”

Posted in சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 21/11/2007

உளறல்கள் – 4/11/2007.

நானும் கொஞ்சம் கவலைப்படுறேனே.

நன்றிப் பதிவு, ஜாதிப் பதிவு, வாரநடு கருத்து செய்தி, சொ.செ.சூ பதிவுன்னு தமிழ் இணைய இலக்கணப்படி ஒவ்வொண்ணா செஞ்சி முடிச்சாச்சு. இப்போ கவலைப்படுதல் படலம். தமிழ்நாட்டுல இருக்குறவுங்க இப்போ பெடல் போட் வாங்கலாமா இல்ல விசைப்படகு வாங்கலாமானு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. நானும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கவலைப்படுறேனே.

  • எழுத்தாளார் லா.ச.ரா இறைவனடி சேர்ந்தார். லா.ச.ராவின் புத்தகங்களை பல முறை லைப்ரேரியில் வாங்கி வந்திருக்கிறேன். நானும் கஜினி முகமது மாதிரி பல முறை படித்தும் ஒரு பக்கத்துக்கு மேல தாண்ட முடிவதில்லை. என் வுட் ஹெட்டை நினைச்சா….
  • எண்ணெய் $95 மேல இருக்கு, ஆனா இன்னும் உள்ளூர் பெட்ரோல் விலைய ஏத்தல. அரசு புண்ணியத்தால துண்டுக்கு பதிலா தலைல தார்ப்பாயோட இருக்கும் IOC, BP, HPCL, ONGC யை நினைச்சா….
  • ஐபோன் வந்து ஒரு வாரத்துலையே ஹேக் பண்ணியாச்சு. இப்போ லெப்பர்ட் வந்து முழுசா ஒரு வாரம் ஆகல அதுக்குள்ள PCல ஓட வச்சிட்டாங்க. மேக் வாங்குற காசுல நாலு PC வாங்கி அதை மேக்-ஆ மாத்திரலாமாம். மொதலாளி ஸ்டீவ் ஜாப்ஸ நினனைச்சா….
  • கும்மியடி, தர்ம அடி, மரண அடி, போன்ற எல்லா அடிகளிலும் கொஞ்சம் எடுத்து AMDக்கு Intel வைக்கிறது மெகா அடி. 45nm Quad core Penryn ரிவ்யூல AMDயின் dual core தர்ம அடி வாங்கிச்சாம். என்ன பண்றது இன்னும் AMD Quad core (Phenom) வரலை. எப்ப வந்தாலும் இந்த மெகா அடிய தாங்குமா ? என் ஆதர்ச AMDய நினைச்சா….

Intelன் விஸ்வரூபத்திற்கு காரணமே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, டெய்லி ஆபிஸ்க்கு வந்து வடை டீ சாப்பிட்டுவிட்டு பெஞ்சு தேச்சுட்டுப் போகும் ஆயிரம் மேனேஜர்க்கு கல்தா கொடுத்தது தான். அவிங்கள்ளாம் நேர போயி AMDயில் சேந்துட்டாங்க போலிருக்கு. என்னைக்கு ஒரு கம்பேனி இப்படி வடை டீ மேனேஜர்ஸ்க்கு கல்தா கொடுக்குதோ, அந்த கம்பேனிக்கு அந்த நாள் இனிய நாள்.

  • கனா காணும் காலங்கள் மோனிஷாவ பாத்து சிம்பு வாயிலிருந்து வழியும் வாட்டர் ஃபால்ஸை நினைச்சா….
  • கை வித்தை நாயகன் மனோகர், லொள்ளு சபாவை விட்டு ஓடி ரொம்ப நாள் ஆச்சு. ஏழரை நாட்டு சனியன் விலகினதுனால லொள்ளு சபா ரொம்ப நல்லாவே போயிட்டிருக்கு. ஆனால் கட்சி மாறிய மனோகர் சூப்பர் 10ல் தர்ம அடியும், வசவும் வாங்குவதைப் பார்த்தால்….

ஒலக சினிமா.

நண்பர் சில கருப்பு வெள்ளை படங்கள கொடுத்தார்னு சொன்னேனில்லையா. அதுல ஒரு படம் தான் “ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்”. வாழ்கையில எதாவது புடுங்கிட்டோம்னு தோணுனாலோ இல்ல எதாவது புடுங்குனத நட்டுட்டோம்னு தோணுனாலோ இந்த படத்தப் பாப்பேன். இது வரைக்கும் நாலு தடவை பாத்திருக்கேன் (கால்குலேட் பண்ணப்படாது). வாழ்க்கையில் சுதந்திரமா உயிரோடு இருப்பதே ஒரு வரம்னு தோணும் இப்படத்தை பார்க்கும் போது. ஒவ்வொரு முறையும் இறுதிக் காட்சியிலோ அல்லது படத்தில் நடித்தவர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் ஷிண்ட்லரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியிலோ, என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிடும். புற முதுகு காட்டாத தமிழ் பரம்பரையில் பிறந்ததால் இந்த படத்தை எப்போதும் தனியே இருக்கும் போது தான் பார்ப்பேன்.

இந்த படத்திற்கு இசை ஜான் வில்லியம்ஸ். இறுதிக் காட்சியின் போது வரும் வயலின் சோலோவை வாசித்தவர் Itzhak Perlman. அவரது live performance இங்கே.

நண்பர் பேய் படமெல்லாம் பாப்பியானு கேட்டார். நானும் சிவகாசி, திருப்பாச்சினு அடிச்சுவிட்டேன். அவரு முறைத்துவிட்டு, “Horror” படம் பாத்திருக்கியானு கேட்டார். எனக்கு தெரிஞ்சததெல்லாம் “விட்டலாச்சார்யா”ங்ற டைரக்டர் பேரு மட்டும் தான். அவரும் நான் பொறக்குறதுக்கு முன்னாடி தான் பேய் படம் எடுத்திருக்காரு. பேயயையே காட்டாத ஒரு பேய் படம் பாக்குறியானு கேட்டார். “என்னது ஏங்கிட்ட, ஏங்கிட்டையேவா”னு, நாகேஷ் பாணியில கேட்டுட்டு, “எனக்கு முக்கியமான சைண்டிபிக் ரிசர்ச் இருக்கு அதனால ரொம்ப பிஸி”னு கழண்டுக்க பாத்தேன்.

அவரும் விடாம, எனக்கு மீசை இருப்பதே மண்ணு ஒட்டுறதுக்காகவும், தொடை இருப்பதே நடுங்குறதுக்காகவும் தான்னு வெறுப்பேற்றினார். சிங்கத்துக்கு சீற்றம் வந்தா என்னாகும். குடுய்யானு சொல்லி அந்த பேயில்லாத பேய் படத்த வாங்கிப் பாத்தேன். அந்தப் படம் தான் “The Blairwitch Project“. பண்ணுன மிகப் பெரிய மிஸ்டேக் படத்த தனியா பாத்தது தான்.

அதுக்கப்புறம் சுமார் ரெண்டு மாசம் நைட் வருணபகவான் எழுப்பினார்னா, வீட்ல இருக்குற எல்லா லைட்டையும் போட்டுட்டு சோலி முடிஞ்சவுடனே, ஒண்ணொணா ஆப் பண்ணிட்டு வந்து, கடேசி லைட்ட மட்டும், கையில போர்வையோடு போயி ஆப் பண்ணிணவுடன் போத்தி படுத்துக்குவேன். போர்வையோடு போறதுக்கான காரணம் என்னான்னா, லைட்ட ஆப் பண்ணிணவுடன் இருட்டை வெறும் கண்ணோட பாக்கக்கூடாதுனு இருக்கற ஐதீகத்த காப்பாத்துறதுக்காத் தான்.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 4/11/2007.
%d bloggers like this: