உளறல்கள் – 4/11/2007.

நானும் கொஞ்சம் கவலைப்படுறேனே.

நன்றிப் பதிவு, ஜாதிப் பதிவு, வாரநடு கருத்து செய்தி, சொ.செ.சூ பதிவுன்னு தமிழ் இணைய இலக்கணப்படி ஒவ்வொண்ணா செஞ்சி முடிச்சாச்சு. இப்போ கவலைப்படுதல் படலம். தமிழ்நாட்டுல இருக்குறவுங்க இப்போ பெடல் போட் வாங்கலாமா இல்ல விசைப்படகு வாங்கலாமானு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. நானும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கவலைப்படுறேனே.

  • எழுத்தாளார் லா.ச.ரா இறைவனடி சேர்ந்தார். லா.ச.ராவின் புத்தகங்களை பல முறை லைப்ரேரியில் வாங்கி வந்திருக்கிறேன். நானும் கஜினி முகமது மாதிரி பல முறை படித்தும் ஒரு பக்கத்துக்கு மேல தாண்ட முடிவதில்லை. என் வுட் ஹெட்டை நினைச்சா….
  • எண்ணெய் $95 மேல இருக்கு, ஆனா இன்னும் உள்ளூர் பெட்ரோல் விலைய ஏத்தல. அரசு புண்ணியத்தால துண்டுக்கு பதிலா தலைல தார்ப்பாயோட இருக்கும் IOC, BP, HPCL, ONGC யை நினைச்சா….
  • ஐபோன் வந்து ஒரு வாரத்துலையே ஹேக் பண்ணியாச்சு. இப்போ லெப்பர்ட் வந்து முழுசா ஒரு வாரம் ஆகல அதுக்குள்ள PCல ஓட வச்சிட்டாங்க. மேக் வாங்குற காசுல நாலு PC வாங்கி அதை மேக்-ஆ மாத்திரலாமாம். மொதலாளி ஸ்டீவ் ஜாப்ஸ நினனைச்சா….
  • கும்மியடி, தர்ம அடி, மரண அடி, போன்ற எல்லா அடிகளிலும் கொஞ்சம் எடுத்து AMDக்கு Intel வைக்கிறது மெகா அடி. 45nm Quad core Penryn ரிவ்யூல AMDயின் dual core தர்ம அடி வாங்கிச்சாம். என்ன பண்றது இன்னும் AMD Quad core (Phenom) வரலை. எப்ப வந்தாலும் இந்த மெகா அடிய தாங்குமா ? என் ஆதர்ச AMDய நினைச்சா….

Intelன் விஸ்வரூபத்திற்கு காரணமே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, டெய்லி ஆபிஸ்க்கு வந்து வடை டீ சாப்பிட்டுவிட்டு பெஞ்சு தேச்சுட்டுப் போகும் ஆயிரம் மேனேஜர்க்கு கல்தா கொடுத்தது தான். அவிங்கள்ளாம் நேர போயி AMDயில் சேந்துட்டாங்க போலிருக்கு. என்னைக்கு ஒரு கம்பேனி இப்படி வடை டீ மேனேஜர்ஸ்க்கு கல்தா கொடுக்குதோ, அந்த கம்பேனிக்கு அந்த நாள் இனிய நாள்.

  • கனா காணும் காலங்கள் மோனிஷாவ பாத்து சிம்பு வாயிலிருந்து வழியும் வாட்டர் ஃபால்ஸை நினைச்சா….
  • கை வித்தை நாயகன் மனோகர், லொள்ளு சபாவை விட்டு ஓடி ரொம்ப நாள் ஆச்சு. ஏழரை நாட்டு சனியன் விலகினதுனால லொள்ளு சபா ரொம்ப நல்லாவே போயிட்டிருக்கு. ஆனால் கட்சி மாறிய மனோகர் சூப்பர் 10ல் தர்ம அடியும், வசவும் வாங்குவதைப் பார்த்தால்….

ஒலக சினிமா.

நண்பர் சில கருப்பு வெள்ளை படங்கள கொடுத்தார்னு சொன்னேனில்லையா. அதுல ஒரு படம் தான் “ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்”. வாழ்கையில எதாவது புடுங்கிட்டோம்னு தோணுனாலோ இல்ல எதாவது புடுங்குனத நட்டுட்டோம்னு தோணுனாலோ இந்த படத்தப் பாப்பேன். இது வரைக்கும் நாலு தடவை பாத்திருக்கேன் (கால்குலேட் பண்ணப்படாது). வாழ்க்கையில் சுதந்திரமா உயிரோடு இருப்பதே ஒரு வரம்னு தோணும் இப்படத்தை பார்க்கும் போது. ஒவ்வொரு முறையும் இறுதிக் காட்சியிலோ அல்லது படத்தில் நடித்தவர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் ஷிண்ட்லரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியிலோ, என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிடும். புற முதுகு காட்டாத தமிழ் பரம்பரையில் பிறந்ததால் இந்த படத்தை எப்போதும் தனியே இருக்கும் போது தான் பார்ப்பேன்.

இந்த படத்திற்கு இசை ஜான் வில்லியம்ஸ். இறுதிக் காட்சியின் போது வரும் வயலின் சோலோவை வாசித்தவர் Itzhak Perlman. அவரது live performance இங்கே.

நண்பர் பேய் படமெல்லாம் பாப்பியானு கேட்டார். நானும் சிவகாசி, திருப்பாச்சினு அடிச்சுவிட்டேன். அவரு முறைத்துவிட்டு, “Horror” படம் பாத்திருக்கியானு கேட்டார். எனக்கு தெரிஞ்சததெல்லாம் “விட்டலாச்சார்யா”ங்ற டைரக்டர் பேரு மட்டும் தான். அவரும் நான் பொறக்குறதுக்கு முன்னாடி தான் பேய் படம் எடுத்திருக்காரு. பேயயையே காட்டாத ஒரு பேய் படம் பாக்குறியானு கேட்டார். “என்னது ஏங்கிட்ட, ஏங்கிட்டையேவா”னு, நாகேஷ் பாணியில கேட்டுட்டு, “எனக்கு முக்கியமான சைண்டிபிக் ரிசர்ச் இருக்கு அதனால ரொம்ப பிஸி”னு கழண்டுக்க பாத்தேன்.

அவரும் விடாம, எனக்கு மீசை இருப்பதே மண்ணு ஒட்டுறதுக்காகவும், தொடை இருப்பதே நடுங்குறதுக்காகவும் தான்னு வெறுப்பேற்றினார். சிங்கத்துக்கு சீற்றம் வந்தா என்னாகும். குடுய்யானு சொல்லி அந்த பேயில்லாத பேய் படத்த வாங்கிப் பாத்தேன். அந்தப் படம் தான் “The Blairwitch Project“. பண்ணுன மிகப் பெரிய மிஸ்டேக் படத்த தனியா பாத்தது தான்.

அதுக்கப்புறம் சுமார் ரெண்டு மாசம் நைட் வருணபகவான் எழுப்பினார்னா, வீட்ல இருக்குற எல்லா லைட்டையும் போட்டுட்டு சோலி முடிஞ்சவுடனே, ஒண்ணொணா ஆப் பண்ணிட்டு வந்து, கடேசி லைட்ட மட்டும், கையில போர்வையோடு போயி ஆப் பண்ணிணவுடன் போத்தி படுத்துக்குவேன். போர்வையோடு போறதுக்கான காரணம் என்னான்னா, லைட்ட ஆப் பண்ணிணவுடன் இருட்டை வெறும் கண்ணோட பாக்கக்கூடாதுனு இருக்கற ஐதீகத்த காப்பாத்துறதுக்காத் தான்.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 4/11/2007.
%d bloggers like this: