சொ.செ.சூ – 21/11/2007

நேத்து யூடியூப்ல மொத்த வருகை பத்து லட்சத்தை தாண்டிருச்சி. ஆகஸ்ட் ஏழாம் தேதி போஸ்ட்டுல ரெண்டு லட்சம் பேர் வந்திருந்ததா எழுதியிருந்தேன். மூணே மூணு மாசத்துல அஞ்சு மடங்கு எகிறியிருக்கு. அப்போ 200 பாட்டு இருந்துச்சி, இப்போ 500 பாட்டு இருக்கு. ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ் இதையெல்லாம் நோட் பண்ணா நல்லது. ஆனா அவுங்களே இப்போ ப்ளாக் எழுதி முக்கியமான வேல பாத்துக்கிட்டிருக்காங்க.

எங்க மேனேஜர் நோட் பண்ணிட்டார்னு நினைக்கிறேன். இப்போல்லாம் அடிக்கடி கேபின்ல அயர்ந்து தூங்கிட்டிருக்கும் போது எழுப்பி, “என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலியேனு பரிதாபமா கேக்குறார். நானும் பரிதாபப்பட்டு, “இனிமே கொறட்டை உடாம தூங்குறேன் சார்னு அவர் தலை மேல சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கிறேன்.

500 பாட்டாயிருச்சி அடுத்து என்ன செய்யலாம்ங்றதுக்காக, கமல், விக்ரம், சூர்யாவிற்கு போன் பண்ணி கேட்டேன். எல்லோரும் கோரசாக, “எதாவது வித்யாசமா பண்ணுனு கட்டளையிட்டனர். சரின்னு ஆபீஸ் வேலைய ஆரம்பிச்சேன். கனவுல ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வந்தார்.

பிரச்சனை தீர எதாவது வழி சொல்லுங்க.”

நீயுமா ?”.

என்ன சொல்றீங்கன்னே புரியல. யூடியூப்ல வித்யாசமா செய்ய ஏதாவது வழி சொல்லுங்கன்னா.”

சரி, எல்லா டேகை (tag)யும் ஜப்பானிய மொழிக்கு மாத்திரு. அங்க தான் டான்சிங் மாஸ்டர் ரஜினி பயங்கர பாப்புலரா இருக்காராம்“.

ஜப்பானிய மொழி தெரியாதே“.

அப்ப சீன மொழிக்கு மாத்து. அவுங்களும் கெட்டுப்போகட்டும்“.

அதுவும் தெரியாதே“.

சரி, தொலைஞ்சி போ. எதாவது நீச பாஷைக்கு மாத்து“.

 

கனவு கட்டாயிருச்சி. எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு டர்ட்டி பாஷை டமில் மொலி தான். அதை விட ரொம்ப டர்ட்டி பாஷையான இங்கிலிபீஸ்ல தான் ஏற்கனவே உள்ள tagல்லாம் இருக்கு, சரி, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவோம்னு நினைச்சேன்.

அடுத்து பச்சைத்தமிழர்களான கேப்டனுக்கும், நெப்ஸ்க்கும் போன் போட்டேன்.

ஏமி, செப்பண்டின்னு தூய டமிலில் பேசினார்கள். இந்த மாதிரி tagஐயெல்லாம் டமிலுக்கு மாற்றலாம்னு இருக்கேன்னதும்,

பல பச்சை டமிலர்களுக்கு டமில்ல டைப் அடிக்கவே தெரியாதே. வீறு கொண்ட இளைஞன் போலிருந்த உன் யூடியூப் அக்கவுண்ட் இனி நடை தளர்ந்த கிழவன் போல் ஆயிருமேஎன்றனர்.

பொத்தி வச்ச மல்லிகை போல இருக்கும் என் விடியோவை பலர் தமிழ்ப் பட வில்லன்கள் போல் இஸ்துகினு போயிடுரானுங்க. இதுல நீங்க வேற. உங்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது. கொஞ்சம் சுத்தி முத்தி பாருங்க.“

என்ன சொல்லுவினம் ?” என்று வினவினார்.

என்னத்த சொல்றது, பாக்கலாம் கேப்டன்”.

வேலைக்கு போக போஸ்தானண்டி?”

இல்ல கேப்டன். இன்னைக்கி வீட்லையே தூங்கிட்டேன்”.

அட்ரஸ் செப்பண்டி. உறுப்பினர் கார்டு ஒண்ணு அனுப்பி வைக்கிறேன்”.

ஐயோ, ஆள உடுங்க.”

Posted in சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 21/11/2007
%d bloggers like this: