உளறல்கள் – 13/02/2008

கொஞ்ச நாளாவே ரொம்ப வேலை புளூ (கரெக்ட்டான ஸ்பெல்லிங்க்கோட எழுத ஆசை தான். ஆனால் அந்த அளவிற்கு வேலையில்லை). அதுக்குள்ள புது வருஷம் வந்து பல விஷயங்கள் நடந்துருச்சு.

ரெண்டு மூணு மாசமா யூடியூப்ல பல பேரை சஸ்பெண்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஏற்கனவே ஹிந்தி பாடல்கள் அப்லோட் செய்றவங்க சஸ்பெண்ட் ஆனதை தற்செயலாப் பாத்தேன். தமிழ்ல அப்படி எதுவும் இருக்காது, அதுவும் பழைய பாடல்களை வலையேற்றவுங்களை சஸ்பெண்ட் செய்யமாட்டாங்கனு நினைச்சேன். ஆனா suspension is happening. காப்பி அடிச்சு போடுறவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆனா எனக்கு இன்னும் யூடியூப்லேயிருந்து சஸ்பென்ஷன் மெயில் வரலை. ஒருவேளை ஆட்டோ கீட்டோ அனுப்பப் போறாங்களோ என்னமோ ? பயம்மாயிருக்கு.

VCD/DVDயிலிருந்து ரிப் பண்ணி போடுறவுங்களுக்குத் தான் முதலில் ஆப்பு வைக்கிறாங்கனு நினைக்கிறேன். கம்ப்ளெயிண்ட் கொடுத்தது யாராயிருக்கும் ? அரச டீவி நிறுவனம் ? பிள்ளையார் நிறுவனம் இல்ல எகிப்து உலக அதிசய நிறுவனம். அவுங்க தான் ப்ளாக் எல்லாம் வச்சி கிசு கிசு எழுதற அளவுக்கு இருக்காங்க. என்ன நடக்குதுனு பாக்கலாம்.

2007ன் அகில உலக சிறந்த தமிழ் ப்ளாக் அவார்டு கொடுக்கறதுல குடுமிபிடி சண்டை நடந்துக்கிட்டிருந்தது. என்ன ஆச்சுனு தெரியலை. நானும் ஒருவருக்கு அவார்ட் குடுக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்குள்ள 2008 ஆரம்பிச்சி ஒரு மாசமும் ஓடிருச்சி. ஒன்று, இரண்டு, மூன்று இடங்கள் யாருக்காவது போகட்டும். ஆனா 0th இடம் (aka சுழி, வட்டம், ஜீரோ, முட்டை), உலக சமாதானம், வறுமை ஒழிப்பு, அரசியல் ஆரூடம் (ctrl-c, ctrl-v இல்லாம சிமெண்ட் கம்பேனிகள் பத்தி எழுதுனதை ரீவைண்ட் பண்ணிப் பாருங்க), விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு முன்னேற்றம் & தமிழ் வளர்ச்சி போன்ற பல விஷயங்களில் அடித்து கலக்கும் இந்தப் பதிவே 2007ல் 0th இடம் பிடித்த அகில உலக தமிழ் வலைப்பதிவு. யப்பா.. மூச்சு வாங்குது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

தமிழ் இணையம் தவறவிட்ட 2007.
2007ல் தமிழ் கூறும் நல்லுலகம் தவறவிட்ட செய்தி, பிரிட்னி ஸ்பியர்ஸின் 16 வயது தங்கை ஜேமி லின் தாயானது. Zoey 101ன் பரம ரசிகனான எனது தலையில் இந்த செய்தி pow (இடி, பேரிடி)யாக விழுந்தது. ஏற்கனவே High School musicalன் Vanessa Hudgens பிறந்த நாள் ட்ரெஸில் போஸ் கொடுத்தார், Hannah Montanaவின் Miley Cyrus வேறு தன் நண்பியோடு சேர்ந்து மிட்டாய் சாப்பிட்டார்.

இந்த மூன்று டீவி நிகழ்ச்சிகளை டீவியில் பார்த்தாலே, லாட்டரி சீட்டை தூக்கிப் போட்டு விசிலடித்துப் பார்க்கும் எனக்கு 2007 is a bad year.

கடவுளுக்கு வைக்கும் 2008ன் கோரிக்கைகள்.

  • நயன்தாரா liposuction செய்யாமலிருக்க வேண்டும்.
  • ஷ்ரேயா நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்த வேண்டும்.
  • ஆபிசில் வேலை செய்யும் போது முழிப்பு வராமலிருக்க வேண்டும்.
  • விஜய் டீவி “மதுரை”யை நிப்பாட்ட வேண்டும். I hate it. ஊரு மானத்த வாங்காதீங்க. அல்லது பேர மாத்துங்க.
  • சன், விஜய் டீவியை ctrl-c, ctr-v செய்வதை நிப்பாட்ட வேண்டும். Creative head… போன்ற headகளை தொரத்தினாலே சரியாகிவிடும்.
  • திவ்யதர்ஷிணிக்கு தமிழ் பேச வரவேண்டும்.
  • சன் ம்யூசிக் நேயர் டாக் வரும் போது தானாகவே டீவி ம்யூட் ஆகி விடவேண்டும்.

எ.டு.
ஹேமா : ஹலோ யாரு, பேரு சொல்லுங்க.
எதிர்முனை : நீங்களே கண்டுபுடிங்க பாக்கலாம்.
ஹேமா : யாருன்னு தெரியலையே. என்னிக்கு பேசுனீங்க.
எதிர்முனை : நேத்து.
ஹேமா : மணியா ?
மணி : கரெக்டுங்க.
ஹேமா : வீட்ல அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி. அப்புறம் உங்க குட்டிப் பூனை எல்லாம் செளக்கியமா ?
மணி : எல்லாம் செளக்கியம். அது பூனையில்லீங்க. நாய்.
ஹேமா : நாயா ? அப்போ நீங்க பூனை மணியில்லையா, நாய் மணியா ?
மணி : ஆமாங்க. இருங்க, இன்னும் என் ப்ரெண்ட்ஸ், பிச்சுமணி, வேலுமணி, ரமணி எல்லாம் பேசனுமா.
ஹேமா : குடுங்க.
பிச்சு, வேலு, ரமணி : ……….
ஹேமா : ஓகே. உங்க எல்லாத்துக்காகவும் இந்தப் பாடல் வருது. என்ஜாய் பண்ணுங்க.

கொடுமடா சாமி. சூரியன் FM இதவிட பெருங்கொடுமையா இருக்கு.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 13/02/2008
%d bloggers like this: