உளறல்கள் – 04/03/2008.

போன வாரம் ரெண்டு பெரிய சோக நிகழ்ச்சிகள் நடந்து விட்டன.

ஃபீலிங்ஸ் – 1.
தல சுஜாதா இறைவனடி சேர்ந்துவிட்டார். பெரும்பாலானவர்களைப் போல் நானும் தமிழில் கதைகள் படிப்பது சுஜாதா மூலமாகத் தான் ஆரம்பிச்சேன். வாசிப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது…. “வாசிப்பு”னு நான் சொல்வதே காமெடியா இருக்கு. “உச்சக்கட்டம்”னா, ஸ்கூல்ல கடேசி பெஞ்சில உக்காந்துக்கிட்டு பாடப்புத்தகத்துக்கு நடுவுல சுஜாதா புத்தகம் படிப்பது. அப்போ பெரும்பாலும் சயின்ஸ் ஃபிக்ஷன் தான். ரொம்ப ஆர்வமா இருக்கும். அப்படியே அரத்தூக்கத்துல கனவுல மிதக்குறதுக்கும் வசதியா இருக்கும். பிற்காலத்தில் சாஃப்ட்வேர் இஞ்சினியராகுவதற்கு பயிற்சியாக்கும்.

ஏழு கழுதை வயசானதுக்குப் பிறகு படிப்பது அவரது சிறுகதைகளைத் தான். “மத்யமர் கதைகள்” தொகுப்பு ரொம்ப பிடிச்சது. சுஜாதா மூலமாகத் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச மற்றொரு எழுத்தாளரைத் தெரிந்து கொண்டேன் (சுப்ரமண்ய ராஜு). சுஜாதாவின் பழைய எழுத்துக்களை இன்றும் படித்தாலும் அவரது “அனிதாவின் காதல்கள்”க்கு பின்னர் எழுதியதை படிக்க விருப்பம் இருந்ததில்லை. ஏனோ தெரியவில்லை. “அனிதாவின் காதல்கள்” சுஜாதா ஸ்டைல் கிடையாது. அதுக்கு பிறகு “இரண்டாவது காதல் கதை”யும் படிக்க ட்ரை பண்ணினேன். முடியல.

ஸ்கூல்ல இருந்த போது லைப்ரேரியில் புத்தகம் எடுத்து படிப்பது வழக்கம். அப்போ ஒரு விளையாட்டு விளையாடுவேன். அட்டைப்படத்தைப் பார்க்காமலே, வெறும் ஒரு பத்தி மட்டும் படித்து சுஜாதா எழுதியதா என்று கண்டுபிடிப்பது. 100% சக்ஸஸ் ரேட் தான். RIP தலைவா.

விசா பதிப்பகத்தின் க்வாலிட்டி கொடுமையா இருக்கு. யாராவது சுஜாதாவின் சிறுகதைகளை ரெண்டு மூணு வால்யூமா நல்ல தரத்தில் வெளியிட்டால் நல்லாயிருக்கும்.

ஃபீலிங்ஸ் – 2.
எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு யூடியூப் அப்லோடர் senthil5000 ஐ சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. யாரு காப்பிரைட் ரிப்போர்ட் கொடுத்தாங்கனு தெரியல. போன வாரத்துலேயிருந்து நானும் எதுவும் அப்லோட் பண்ணவில்லை. என்ன நடக்குதுனு பாக்கனும்.

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 04/03/2008.
%d bloggers like this: