உருப்படாதது – 28/1/2011.

2011னின் சபதங்கள்…

 • பாதியில் எழுதி முடிக்காமல் உள்ள நாவலை முடிக்கவேண்டும்.
 • தேர்தலில் ஒரு நல்ல ஓட்டு, ரெண்டு கள்ள ஓட்டு போட வேண்டும். துட்டு நெறையா குடுக்குறவுங்களுக்கு கள்ள வோட்டு, ஐபோன் கொடுக்குறவுங்களுக்கு நல்ல வோட்டு. இலவச டெக்னாலஜி எங்கையோ போய்க்கிட்டுருக்கு.
 • சென்னைப் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். மொத்தம் 6543 பக்கங்கள். நெனைச்சாலே கண்ணக்கட்டுது.
 • ட்விட்டரில் 10000 ஃபாலோயர்சைச் சேக்க வேண்டும்.
 • ரொம்ப நாளா குறும்படம் எடுக்கனும்னு சொல்லிக்கிட்டிருக்கிற நண்பருக்கு ஃபைனான்ஸ் பண்ணனும். ரொம்ப நல்ல கதை. இப்போ நெனைச்சாலே கண் கலங்குது. உருக்கமான கதை. கதை கீழே இருக்கு. மிஷ்கின் படிக்காம இருக்கனும்.
 • ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வாங்கி வச்ச ஆர்மோனியம் சும்மா தூங்குது. துடைக்கவாவது கத்துக்கனும்.
 • மாரத்தான் ஓட்டம். இங்க எங்க நடக்குதுனு தெரியல. ஆனா எப்படியாவது ஓடி முடிக்கனும், இன்ஸ்டால்மண்ட்லேயாவது.
 • பத்து உலக சினிமா, ஐந்து லோக்கல் சினிமா, மூணு நாவல், ஏழு கவிதைத் தொகுப்பு, நாலு ரெஸ்டாரண்ட், எட்டு கையேந்திபவன்… இதெல்லாம் இந்த வருஷ விமர்சன லிஸ்ட்ல இருக்கு. எப்படியாவது முடிக்கனும். டமிள் இணையக் கடமைனு ஒண்ணு இருக்கில்ல.
 • வாங்கியிருக்கிற Canon EOS 7Dயை வச்சி PiT போட்டி ஒண்ணுலயாவது ஜெயிக்கனும்.

குறும்படக் கதை :
கரிசல் காட்டில் ஒரு ஏழைப் பாட்டி. விறகு எடுத்துத் தான் பசி போக்கிக் கொள்ள வேண்டும். அவளுக்கு ஒரு மகள். சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர். விவாகரத்தானவர், ஒரே ஒரு டீனேஜ் பையன். பையன் *சு விட்டாலும் Yo man, whaz up, என்று தான் கேட்கும். அந்த அளவுக்கு நாகரீக உலகில் இருப்பவன். நிறுவனம் ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் மீட்டிங்கிற்காக ஒரு மாசம் அவரை அமேரிக்காவிற்கு அனுப்புகிறது. மகனைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. மகனைத் தாயிடம் விட்டுச் செல்கிறார்.

நாகரீகப் பேரனும், கரிசல் பாட்டியும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது கதை. நிறைய சுவாரசியம் உண்டு. பேரன் KFC fried chicken கேட்க, பாட்டி நாட்டுக் கோழிக் குழம்பு வைக்கிறதும், FTV பாக்க வேண்டும் என்று சொல்ல, பாட்டி பஞ்சாயத்து டீவியில் “வயலும் வாழ்வும்” வைப்பதும் என்று செல்கிறது. பின்னர் பாட்டியின் மனது மெச்சும்படியாக, பாட்டியின் ஒரு ஏக்கர் தரிசு நிலத்தில் “பசுமை விகடன்” படித்து, பேரன் கம்பு விளைவிப்பதும், நாட்டாமையின் மகளை சைட் அடித்து கல்யாணம் முடித்து ஊர் ப்ரசிடண்ட் ஆவதும் என்று முடிகிறது.

லேட்டா வந்தாலும்…
சென்னைப் புத்தக கண்காட்சியில வாங்குன புத்தக லிஸ்டை எல்லோரும் எழுதியாகனும்னு ஒரு (தலை)விதி இருக்கு. கஷ்டப்பட்டு நாலு முறை அங்கு சென்று வாங்கிய புத்தகங்களைப் பற்றி கட்டாயம் எழுதியாகனும். போன வருஷம் என்னென்ன புத்தகம் வாங்கனும்னு லிஸ்ட் எடுத்துப்போய் பேஜாராகிவிட்டது. கடை கடையா தேடி அலையனும், ஒண்ணு தேடுற புக் இருக்காது. இல்லைன்னா டிஸ்ப்ளே புக் மாதிரி அழுக்கா இருக்கும். போனது கடேசி ரெண்டு நாள்ளயில்ல. இந்த தடவை அப்படியாயிடக்கூடாதுன்னு லிஸ்ட் எதுவும் எடுக்கல. போனதும் முதல் வாரத்திலையே. ஜெனரல் டாபிக் மட்டும் தேர்ந்தெடுத்து, சூட்டோடு சூடா அங்கையே படித்து வாங்கின புத்தகங்கள்.,

இலக்கியம்
1. கம்பராமாயணத்தில் திராவிடம்  – சி.கோதண்டபாணி.
2. தொல்காப்பியம் மூலமும் உரையும் – தமிழக அரசுப் பதிப்பகம்.
3. இளைஞன் : திரைக்கதை, வசனம் – கலைஞர் மு.கருணாநிதி.

அரசியல்
4. வயலுக்கு பாயும் செங்குருதி  – காபூலிவாலா.
5. குடவோலை அரசியல்    –  செழியன் முத்துசாமி.
6. விஜயாலய சோழன் வரலாறு – துரை பிரசன்னா.

சமையல்
7. ஒரு மணி நேரத்தில் உலக சமையல் (சீனா) – ஜிங் லி (தமிழில் கா.சாமிநாதன்).
8. பத்திய சமையல் குறிப்புகள் – அருமை நாயகம்.

ஆன்மீகம்
9. எங்கு காணினும் சக்தி    – வி.பத்மநாபன்.
10. நீங்கள் கேட்க நினைத்த ஆன்மீக பதில்கள்    – பசி.செல்வம்.

கவிதை
11. செம்மாந்த மலர்கள் – வை.குமரவேல்.
12. எழுதாத கவிதைகள் – மு.ராஜாராமன்.

கதைகள்
13. கரிசல் பூமியின் ஊற்று – கீரனூர் செல்வி.
14. ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு – சி.செந்தில் கணேசன்.
15. சிறந்த சாகித்ய அக்காடமி தமிழ்க் கதைகள் 1975-1995 – சாகித்ய அக்காடமி.

கட்டுரைகள்
16. லெமூரியாவைத் தேடி    – வ.ராஜசேகர்.
17. கட்டுடைக்கும் வாழ்வியல்    –  ர.வெங்கடக்கிருஷ்ணன்.
18. உதவி டைரக்டரின் நாட்குறிப்பு  – குயிலன்.

Posted in உருப்படாதது. Comments Off on உருப்படாதது – 28/1/2011.

உளறல்கள் – 12/01/2011.

1/1/11
இந்த பேன்சி தேதியில ஸ்பெஷலா மீனா குழந்தை பெத்துக்கிட்டதாக படிச்சேன். நல்லது தானே. காருக்கே extra காசு கொடுத்து பேன்சி நம்பர் வாங்குறோம். மீனாவின் அடிச்சுவட்டில் போய் அதவுட பேன்சி தேதி ஒண்ணு இருக்கு ie., 11/11/11. அந்த சாதனைய செய்ய விருப்படுறவுங்க இப்பவே ஹோம் வொர்க்க ஆரம்பிக்கனும். அப்பதான் டெலிவரிக்கு டைம் சரியா இருக்கும்.

ட்விட்டர்
வேலை என்ற ஆப்பு இருந்ததுனால ரொம்ப நாளா வலை பக்கமே வர்றதில்ல. Social networking அது இதுன்னு சொல்றாங்க. என்னன்னே  புரியல. இப்போதான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கியிருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டிருக்கேன். ட்விட்டர்ல யார ஃபாலோ பண்றதுனு ஒரு பெரிய குழப்பம். Tamil celebrity twittersனு கூகிள்ல தேடி வசுந்தரா, த்ரிஷானு ரொம்ப முக்கியமானவங்களா ஃபாலோ பண்றேன்.

இந்த வசுந்தராங்ற பொண்ணு “தென்மேற்கு பருவக் காற்று”ங்க படத்துல நடிக்கிற பொண்ணு போல. ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை ட்வீட் பண்ணுது. ஏன் தெ.மே.ப.கா-ல நடிச்சதுனு தெரியல. பருத்தி வீரன் ப்ரியா மணி மாதிரி ஃபீல்ட் அவுட் ஆகாம இருந்தா சரிதான். முதல் subscriptionங்றதுனால கொஞ்சம் R&D பண்ணினேன். பொண்ணு தமிழ்நாடு தான் போல. கொஞ்சம் மூக்கு ஆப்பரேஷன் (சந்தியாவுக்கு செஞ்ச டாக்டர்க்கிட்ட போகாம இருக்கணும்),  Acne treatment, ஒரு சூப்பர் ஹிட், கொஞ்சம் அதிஷ்ட்டம் ஆகியவை உடனடித் தேவை.

சேட்டன்களின் சேட்டை
கொஞ்ச நாளா சேனல் மாத்தும் போது ஏசியாநெட், சூர்யா டிவியும் மாட்டுது. அதுல பாத்தோம்னா சேட்டன்கள் தமிழ்ப்பாட்டு பாடிக்கிட்டிருக்காங்க. எல்லாம் சூப்பர் சிங்கர் மாதிரியான நிகழ்ச்சிகள். நாம எப்பவாது மலையாளப் பாட்ட பாடுறோமா ? அதுவும் ரொம்ப நல்லா பாடுறாங்க. 80s, 90s மற்றும் புதுப்பாட்டுனு பின்றாங்க. சேட்டன்களின் இந்த கொலைவெறிக்கு என்ன காரணம்னு தெரியல.

2011
2011 கோரிக்கைகளை வைக்க வேண்டிய நேரம் வந்ததாச்சு.

 • தமன்னா, த்ரிஷா, ஜெனிலியா போன்ற சப்பை ஃபிகர்களாகவே பாத்து போரடிக்குது. சோனாக்‌ஷி சின்கா மாதிரி யாரையாவது கொண்டு வாங்கப்பா கோடம்பாக்கத்து சிங்கங்களே.
 • UTV Bindass, Zoom, Colorsனு ஹிந்தி சேனல்களில் உள்ள ரியாலிட்டி ப்ரோக்ராம்லாம் terrorஆ இருக்குது. பேரன்ட்ஸ் மாற்றம், பாய் ஃப்ரெண்ட் மாற்றம், Big bossனு பின்றாங்க. நாம இன்னும் மானாட எருமையாட, சூப்பர் சிங்கர்லேயிருந்து (அதுல வேற ஜூனியர், சீனியர், பூட்ட கேஸ்னு பல வெர்ஷன் வேற) இன்னும் மாறாமவே இருக்கோம்.
 • அமீர் பாவம் “பருத்தி வீரன்”ற படத்தை சிவகுமார் கேங் டார்ச்சரைத் தான்டி டைரெக்ட் பண்ணி வெளியிட்டார். அது வந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சி ஆனா நம்ப கோடம்பாக்கத்து சிங்கங்கள் அதை மறக்காம இன்னும் கிராமத்து படமா எடுத்து டார்ச்சர் பண்ணுராய்ங்க. நம்ம ஸ்லாங் கூட மாறிடிச்சு. இந்த வருஷமாவது கைலி, வேட்டியிலிருந்து பேண்ட், சூட்டுக்கு மாறுங்கப்பா. இல்லைன்னா சப்டைட்டிலோடு ஹிந்தி படங்களை டவுண்லோட் பண்ணி பாக்க வேண்டியதுதான்.
 • 2010 ஃபுல்லா Apple மயம் தான். Apple லோகோவோட ஜட்டி வந்திருந்தாக் கூட மக்கள் வாங்க க்யூவுல நின்னுருப்பாங்க. 2011ல மாற்றம் வரப்போகுது. Android, எங்கும் எதிலும் Android தான். Smart Phone, Tablet, Personal Media Player எல்லாத்துலையும் Android தான். NHM பத்ரி Android based eReader கொண்டு வந்தால் சூப்பரா இருக்கும். அப்புறம் அவுங்க டைட்டில்சையெல்லாம் eReaderலையும் வெளியிடலாம். Almost Amazon-Kindle business style. 2011ல கண்டிப்பா Rs.10,000க்கு eReader கொண்டு வரமுடியும் (Rockchip based).
 • AMDயின் Bulldozer, Bobcat., Intelன் Sandy Bridgeன் சேலஞ்சை சமன் செய்ய வேண்டும்.  Beat பண்ணுமான்னு சந்தேகமா இருக்கு.
Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 12/01/2011.

நிஜமாவே சொ.செ.சூ – 06/01/2011.

டிஸ்கி : சொந்த செலவில ஆப்பு.

இவ்ளோ நாள் எஸ்கேப் ஆனதுல என்னென்ன மாறியிருக்குதுனு எழுதி எழுதி போரடிக்குது. ஆனா ஏன் இவ்ளோ நாள் எஸ்கேப்ங்றத கண்டிப்பா எழுதியே ஆகனும். “வரலாறு முக்கியம்”னு மண்ணின் மைந்தர் வடிவேலுவே சொல்லியிருக்கார்ல.

வேலை செய்யாம உடம்பும் மூளையும் துருப்பிடிச்சதுனால இந்தியன் (Indian owned) கம்பேனிக்கு மாறினேன். கொஞ்சம் வேலை செய்யலாமேனு தான் போனேன். சிவாஜி படத்துல வாசு விக்ரம் ஆன மாதிரி ஆகிடுச்சு, “ஆப்பு வச்சாங்க ஆனா எடுக்க மறந்துட்டாங்க”. ஆனா இங்க சொந்த செலவுல நானே எனக்கு வச்ச ஆப்பு.

பொதுவாவே ஷெட்யூலெல்லாம் வெட்டி முறிக்கிர நேரம், காபி குடிக்கிற நேரம், நெட்ல உலாவுர நேரம், கண்ணத் தொரந்துக்கிட்டே தூங்குற நேரம் எல்லாத்துக்கும் சேத்து 3x டைம் போட்டு மேனேஜர் கிட்ட ஷெட்யூல் கொடுப்போம். ஆனா அங்க என்னன்னா கஸ்டமர்கிட்ட சொல்றதே 0.5x தான். இல்லேன்னா வேற எங்கையாவது கஸ்டமர் ஓடிட்டா என்ன பண்றது. அப்புறம் கஸ்டமர் இஷ்டத்துக்கு specக்க வேற மாத்துவான், ஆனா deadline மாறவே மாறாது. OMG. கிளிஞ்சது போங்க. பிறகு 0.25x நேரத்துல முடிக்கனும்.

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் 9am to 12am வேலை. ஷெட்யூல் கொடுமைய மீட் பண்ணுறதுக்கு சனிக்கிழமையும், ஞாயிறு அரை நேரமும் வரணும். டப்பா டான்ஸ் ஆடிடுச்சு. மக்கள் அதுக்கு மேல, bugக fix பண்ணுங்கப்பா, integrationனுக்கு வாங்கப்பானு ஒவ்வொருத்தன் காலிலும் விழாத குறையாக் கேக்கனும். கொஞ்சம் எகிறினால், என்னால் இதுதான் முடியும் இல்லேன்னா நீயாப் பாத்துக்கனு சோகமா நிப்பாங்க.

கஸ்டமர் அதுக்கு மேல. உலகம் பூரா ஒவ்வொரு மேனேஜரா வச்சி, 24hrsசும் ஸ்டேடஸ் கேப்பாங்க. கரெக்ட்டா நைட் பன்னென்டு மணிக்கு சாப்பிடும் போது கால் பண்ணுவாங்க. இந்த மாதிரி கேவலமா ரிலீஸ் பண்ணிட்டு சோறா திங்கிறனு அர்ச்சனை வேறு.

இதுக்கு மேல அங்க இருந்தோம்னா இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் கருகிடும்னு வேலை மாறிவிட்டேன். மாறி இப்போ ரெண்டு மாசமாகுது. மீண்டும் MNCக்கே வந்தாச்சு. வந்தோமா சீட்ட தேச்சோமா, லைட்டா வேலையும் செஞ்சோமானு பொழுது போகுது. அதானால மீண்டும் எழுதுத்துப்பணி (?) ஆரம்பம்.

இதனால Indian ஓனருங்களுக்கு சொல்றது என்னன்னா…

 • கொடுக்குற சம்பளத்துக்கு அதிகமா கறக்கனும்னு நினைக்காதீங்க.
 • Happy Employees results in Happy Customers. எங்களுக்கும் பெர்சனல் டைம் வேணும் மேனேஜர் சார்.
 • Appreciation & Recognition ரொம்ப முக்கியம் தலைவா. இல்லேன்னா மக்கள் எதுக்கு வேலை செய்றோம், ஏன் வேலை செய்றோம்னு தலைய சொறிஞ்சிக்கிட்டே இருப்பாங்க.
 • எதுக்கெடுத்தாலும் Engineersச குறை சொல்றத விட்டுட்டு Senior Managementக்கும் கொஞ்சம் ஆப்பு வையுங்க.
 • Get a big fat rich stupid customer. பிச்சக்காரன்கிட்ட போயி பிச்ச எடுக்கக்கூடாது.

 

Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off on நிஜமாவே சொ.செ.சூ – 06/01/2011.
%d bloggers like this: