உளறல்கள் – 22/02/2011.

மலேசியா வாசுதேவன் :
எனக்கு மிகவும் பிடித்த பாடகர். சின்ன வயசில் சிலோன், திருச்சி வானொலியில் கேட்கும் போது பெரும்பாலும், “இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், *****” என்று ஏதாவது ஒரு பாடகியின் பேர் இருக்கும். மலேசியா வாசுதேவனைக் கேட்பது என்பது அரிது தான். அப்புறம் ஆபிசில் சேர்ந்து MP3 கலெக்‌ஷன் எல்லாம் ஆரம்பித்த போது தான், மலேசியாவைக் கேட்க ஆரம்பித்தேன். கேட்டவுடன் வசீகரித்தது குரல். கேட்க கேட்கத்தான் தெரிந்தது அவர் குரலை எப்படியெல்லாம் மாடுலேட் செய்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் என்று.

இசையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாதெனினும், எனக்கே அவரின் குரல் பாடல்களில் இசைக்குப் போட்டியாக தனித்து நிற்பது போல் தோன்றும். பின்னர் யூடியூபில் பாடல்களை வலையேற்றும் போது, அவர் பாடிய பாடல்களை மட்டும் பல தடவை முழுமையாக கேட்டு ரசித்த பின் தான் வலையேற்றுவேன். சினிமாவிலும் வில்லனாக, பெரும்பாலும் மைனராக வந்து தனி முத்திரை பதித்தவர். மென்மையான குரலும், அவர் பேசுவதுமே வில்லத்தனமாத்தான் இருக்கும். தமிழ் பேப்பரில் கானா பிரபாவின் அஞ்சலி, அவரைப் பற்றிய சிறு தொகுப்பைச் சொல்கிறது.

அவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், மிகவும் பிடித்தவை இவை.,

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா.
சுகம் சுகமே.
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி.
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு.
ஆனந்த தேன் காற்று தாலட்டுதே.
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை.

RIP. :’-(

சொ.செ.சூ – 22/02/2011

பயணம் – திரைவிமர்சனம்.

2011ல் காசு கொடுத்து பார்த்த முதல் படம். காசு வேஸ்ட் ஆகவில்லை. கச்சிதமாகப் பொருந்தும் casting. கதை இது தான், “இந்திய விமானம் கடத்தப்படுகிறது, ஆர்மி கமாண்டோஸ் கடத்திய தீவிரவாதிகளைச் சுட்டு பயணிகளை மீட்க்கின்றனர். இதற்கு நடுவில், பயணிகள் பேசிக் கொள்வதும், தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளின் மனநிலையும், ஆர்மி கமாண்டோ ஆபிஸரின் சாகசங்களும்” தான் கதை.

ஆர்மி ஆபிஸராக நாகார்ஜுன். ஆளு அம்பது வயசானாலும் கிண்ணுனு இருக்கார். உதயம் படத்துல பாத்தது. அப்பவே வாய்க்குள்ள தான் பேசுவார். இப்பவும் அப்படித்தான். வசனமும், அவரின் மிடுக்கும் தான் வலுசேர்க்கிறது. ஏறக்குறைய அவரது ரசிகனாகிவிட்டேன். அதை மாற்ற “ராகடா” பார்க்க வேண்டும். ;-p

நடிகராக பப்லு & அவரது ரசிகராக பாலாஜி, கலக்குகிறார்கள். வேலையில்லாத பட்டதாரியாக ஒருவர் (?) டென்சன் ஏத்துரமாதிரியே புர்ச்சியா பேசுகிறார். என்கிட்ட துப்பாக்கியிருந்தா நானே போட்டிருப்பேன். நல்ல வேளையாக, தீவிரவாதியே போட்டுத் தள்ளுகிறார். அந்த ஃப்ளைட் அட்டெண்ட் இத்துனூன்டு ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வருகிறார். இந்த மாதிரி எங்கும் பார்த்ததில்லை 😉 (ஒருவேளை கிங்ஃபிஷரின் காஸ்ட்யூமாக இருக்குமோ). அவரும் மெளனமாக வந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.

முஸ்லீம்களை தீவிரவாதிகளா கொஞ்சம் ஓவராத்தான் காட்டுகிறார்கள். ராதா மோகன், “ஹிந்து பேப்பரை முஸ்லீமும் படிக்கிறாங்க. மொஹல் பிரியாணிய ஹிந்துவும் தான் சாப்புடுறாங்க” என்ற தத்துவத்தைக் கூறியதால் மன்னிக்கலாம். ஆனால் விருதகிரியின், “எல்லா மனுஷங்களுக்கும் ஏ, பி குரூப் ரத்தம் இருக்கலாம் ஆனா மனுஷங்களா நாம எல்லாருமே ஒரே குரூப் தான்” என்ற வசனத்தை நக்கலடிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல (கேப்டன் தானே அடுத்த துணை முதல்வர்).

நியூஸ் கேதரிங் நிருபர்களின் வாயசைப்பும் வசனமும் ஏகப்பட்ட voice sync issue. ஒரு வேளை தெலுங்கில் பேசுகிறார்களோ என்னமோ. ஏர்போட்டுக்குள் போகும் நிருபரின் குரலும் அவருக்கு பொருந்தவில்லை. ஓக்கே. மொத்தத்தில் கொடுத்த காசு வேஸ்ட் ஆகாம வேல்யூ ஃபார் மணி உள்ள படம்.

Posted in உளறல், குப்பை, சொ.செ.சூ. Comments Off on உளறல்கள் – 22/02/2011.
%d bloggers like this: