சொ.செ.சூ – 02/03/2011.

ஒலக சினிமா :

நடுநிசி நாய்களை எல்லோரும் கடிச்சு கொதறிக்கிட்டு இருக்காங்க. அது சொல்லும் கருத்து புரியும் அளவுக்கு அறிவில்லை என்பதால் பார்க்கவில்லை. பெரும்பாலும் படம் ரிலீசான உடனே அடுத்த நாளே ஸ்கிரீன் பிரிண்ட் டவுண்லோடிங்க்கு வந்துறும். ஆனா நடுநிசி கொஞ்சம் லேட்டா தான் வந்தது. Pirate பண்றவனுக்கே பிடிக்கலெ போல. நடுநிசி சொல்ல வந்த கருத்துக்கு நடுவுல incestங்ற பதத்தை தமிழுக்கு சினிமா மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள். டிக்‌ஷ்னரியில incestட்னா “Sexual intercourse between persons too closely related to marry (as between a parent and a child)”. இதப் படிச்சவுடனே வாந்தி வர்றவுங்க, நடுநிசி பாத்தவுங்க நிலைமைய யோசிச்சிப் பாருங்க. நிற்க.

2011ல ஒலக சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு போவோம்னு இங்கிலீபீஸ் தவிற வேறு மொழி படமா பாக்கலாம்னு ஆராய்ச்சி பண்ணினேன். ஸ்வாஹிலி தவிர மீதி எல்லா மொழிப் படங்களுக்கும் நம்ம மக்கள் தமிழில் ரிவியூ எழுதுகிறார்கள்.  சரின்னு சொல்லி கொரியன் பக்கம் திரும்புனேன். சோஜு, “சிக்”கென்ற பெண்கள், நாய்க்கறி தவிர வேறு ஒண்ணு உலுக்கி எடுத்துவிட்டது. அவுங்க மம்மியை “அம்மா” என்றும், டாடியை “அப்பா” என்றும் அழைக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் டமில் பற்றினால் சிலிர்த்தெழுந்து அனைத்து முடிகளும் அட்டென்ஷனுக்கு வந்துவிட்டன. ஆராய்ச்சியாளர்கள் விரைவாக கொரியாவில் தமிழ்க் கொடியேற்றிய அந்த அரசன் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.

Best Korean Moviesனு கூகிள்கிட்ட கேட்டு டவுண்லோட் பண்ணின முதல்ப் படம் Old Boy. Old Boyயா ? Old Manன்னுல்ல இருக்கணும்னு என் ஆங்கிலப் புலமைய மெச்சியபடி டவுண்லோட் பண்ணி பாத்தேன். பொதுவா ஏதாவது படம் பார்த்தவுடன் வரும் சோகம், சந்தோஷம், வெறுப்பு, கோபம் போன்ற சராசரியான உணர்வு வராமல் ஒருவிதமான dark feeling. தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸின் இறுதி பதினைந்து நிமிடத்தில் நடுநிசியின் மெயின் டாபிக்கான incest வருகிறது. அது தான் கிளைமாக்ஸின் காரணகர்த்தா.

பழிவாங்கும் கதை தான். Self narrative ஸ்டைலில் ஒடுகிறது படம். எனக்கு Max Payne கேம் தான் ஞாபகத்துக்கு வந்தது. இசையும் ஒருமாதிரி கேம் இசை மாதிரி தான் இருக்கிறது. சில இடங்களில் வித்தியாசமாக இருக்கிறது. அதைக்கூட சில நாட்கள் ரிங்டோனாக வைத்திருந்தேன். நடுநிசி சூடு அடங்குவதற்கு முன் எழுத வேண்டும் என்று எழுதியது. பின்னாடி எழுதினால் டர்ர்ர்ர்ர் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.

Old Boy (2003) கதை :
ஓதேசு தான் ஹீரோ. அன்று மகளின் பிறந்த நாள். குடித்துவிட்டு போலிஸ் ஸ்டேஷனில் அலம்பல் பண்ணுகிறார். நண்பர் பெயிலில் எடுத்து விடுவிக்கிறார். இருவரும் ஓதேசுவின் மகளிடமும், மனைவியிடமும் டெலிபோன் பூத்திலிருந்து பேசுகிறார்கள். நண்பர் பேசிவிட்டு ஓதேசுவைப் பார்த்தால் காணவில்லை. கட். ஓதேசு இருப்பது ஒரு private prisonனில். ரெண்டு மாசமாகிவிட்டது. “கத்துறான் கதறுறான், எதுக்குடா என்னை உள்ள வச்சிருக்கீங்கனு”, பதில் கிடையாது. எவனும் பேசவே மாட்டேங்குறாங்க. கதவின் கீழே ஒரே ஒரு குட்டிக் கதவு அதன் வழியாக சாப்பாடு வருகிறது. Fried wanton மட்டும். எவன் முகத்தையும் பார்க்க முடியவில்லை. எவனும் பேசவும் மாட்டேன்கிறான். ரூமில் இருக்கும் டீவியில் இருந்து தான் சவுண்ட் வரவேண்டும்.

மயக்க வாயு அனுப்பி பின்னர் அவருக்கு முகச்சவரம், முடிவெட்டு விடுகின்றனர். ஒரு வருஷம் போய்விட்டது. டீவியில் மனைவி கொலை, மகள் தத்துக் கொடுக்கப்பட்டாள், போலிஸ் ஓதேசுவைத் தான் குற்றவாளி என்று தேடுதிறது என்று நியூஸில் வருகிறது. ஓதேசு மணிகட்டை அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றார். மயக்க வாயு அனுப்பி அவர் காப்பாற்றப் படுகிறார். தன் எதிரி யாரோதான் பழிவாங்குகிறார் என்று ஓதேசு யாராக இருக்கும் என்று சந்தேகித்து நோட்டு நோட்டாக எழுத்தித் தள்ளுகிறார். Shadow boxing செய்கிறார்.

மூன்றாவது வருடம் ஒரு எக்ஸ்ட்ரா chop stick கிடைக்கிறது. அதை வைத்து சுவரைத் தோண்ட ஆரம்பிக்கிறார். பதினோராவது வருஷம் சுவரில் ஓட்டை விழுகிறது. ஆனால் அடுத்து ஒரு சுவர் இருக்கிறது. பதினைந்தாவது வருஷம் அடுத்த சுவரையும் ஒட்டை போட்டு முதன்முறையாக வெளிக் காற்றை கைகளால் தீண்டுகிறார். மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை நீரைக் குடிக்கின்றார். மயக்க வாயு வருகிறது. கட்.

ஓதேசுவுக்கு கோட், சூட், வாட்ச் எல்லாம் போடப்பட்டு மொட்டை மாடியில் விடுவிக்கப்படுகிறார். ஒரு பிச்சைக்காரன் பர்ஸ் நிறையப் பணமும், ஒரு செல்போனும் கொடுக்கிறான். ஓதேசு சூஷி ஹோட்டலுக்கு போகிறார். போன் வருகிறாது, “என்ன ஓதேசு கோட் சூட் எப்படி ? I miss you”னு ஒருத்தன் சொல்லுகிறான். ஹோட்டலில் ஓதேசு மயங்கி விழ சூஷி chef மிடோ அவள் இடத்துக்கு ஓதேசுவை அழைத்து பார்த்துக் கொள்கிறாள். ஓதேசுவின் நோட்ஸை படித்து ஓதேசுவின் மீது பரிதாபப்படுகிறாள். இருவரும் சேர்ந்து ஓதேசு பதினைந்து வருஷம் சாப்பிட்ட fried wanton செய்யும் ஹோட்டலைத் தேடுகின்றனர். இடையில் ஒரு நாள் உடலுறவு கொள்கின்றனர்.

ஓதேசு ஒரு நாள் private prisonனை கண்டுபிடிக்கின்றார். சண்டையில் காயம். ஓதேசுவை ஒரு டாக்ஸியில் ஒருவன் (வில்லன்) அனுப்புகிறான். செல்லும் போது “ஓதேசு, எப்படி இருக்க ?” என்று சொல்லி மறைகிறான். பிறகு வில்லனே வந்து இன்னும் ஐந்து நாளில் எதற்கு உன்னை பதினைந்து வருடம் காவலில் வைத்திருந்தேன் என்று கண்டுபிடி என்று கூறுகிறான். கண்டுபிடிக்காவிடில் மிடோ இறந்துவிடுவாள். கண்டுபிடித்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறுகிறான். மிடோவும் ஓதேசுவும் தப்பித்து ஓடுகிறார்கள்.

இதுவரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. Self narrativeஆக இருப்பதால் நன்றாக இருந்தது.

கிளைமாக்ஸ் :
ஓதேசு காரணத்தை கண்டுபிடித்து வில்லனிடம் கூறுகிறான். “முட்டாள் ஓதேசுவே, பதினைந்து வருஷம் உன்னை உள்ளே வைத்திருந்த நான் உன்னை ஏன் வெளியே விட்டேன், என்று ஏன் யோசிக்கவில்லை ?”. ஒரு போட்டோ ஆல்பத்தைக் காண்பிக்கிறான் அதில் ஓதேசுவின் மகள் படம் மூன்று வயதில் ஆரம்பித்து, வளர, வளர மிடோவாக மாறுகிறது. வில்லன் ஓதேசுவையும் மிடோவையும் சந்த்திக்க வைக்க இருவரையும் ஹிப்னோடைஸ் செய்துள்ளான் என்று தெரிகிறது.

ஓதேசு, வில்லனிடம் மிடோவிடம் ரகசியத்தை சொல்லாதே என்று கெஞ்சுகிறார். தன் நாக்கை அறுத்துக் கொள்கிறார். வில்லன் ஓதேசுவிடம் சொல்லியதற்கேற்ப தற்கொலை செய்துகொள்கிறான். ஓதேசு தன்னை ஹிப்னாடைஸ் சேய்த பெண்மணியிடமே மிடோவின் ரகசியத்தை மறக்க வைக்குமாறு கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஹிப்னாடைஸ் செய்கிறார்.

கொசுறு :

  • முடிவு தெரியாமல் படம் நிறைவடைகிறது. ஹிப்னாடைஸ் முடிந்தவுடன் மிடோவும் ஓதேசுவும் பிரிந்து விடுவதாக நான் நினைத்து முடித்துக் கொண்டேன்.
  • Torrent இங்கே கிடைக்கிறது.
  • Memorable quotes for Oldboyல பிடிச்சது.,  Your gravest mistake wasn’t failing to find the answer. You can’t find the right answer if you ask the wrong questions.
Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 02/03/2011.