சொ.செ.சூ – 17/09/2012

ரொம்ப நாளாச்சு சொசெசூ வச்சி. அதுக்கு அர்த்தம் எனக்கே மறந்துடுச்சி. சொந்த செலவில் சூனியம். இணைய விமர்சனங்களை விமர்சிக்கலாம்னு பாக்குறேன்.  ஏன்னா அது தான் சுலபமான சொசெசூ.

நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள்

ட்விட்டரில் இருக்கும் இளையராஜா கொலைவெறிப் படைகள் படத்தின் டீசர்கள் வந்தவுடனே ஆ, ஊ, சூப்பர், மெய்சிலிர்க்குதுனு சவுண்டு உடுவது வழக்கம். நானும் அவர்களை நம்பி பாட்டு டாரண்ட் வந்தவுடனே டவுண்லோடினேன். பாடல்கள்லாம் ரொம்ப சுமார் தான்.

நான் சுமார்னு சொல்றதுக்கு முன்னாடியே இளைஞர்கள் பலர் பாடல்களைக் கிழித்து தொங்கவிட்டிருந்தார்கள். யாரும் இளையராஜாவை கிண்டலடிக்கவில்லை. ஆனால் கொலைவெறி கும்பல், “தே*டியா பயலுக, மனநோயாளிகள், போய் *யடிங்கடா, ஞானசூனியங்கள், கழுதைகளுக்கு ஏன் கற்பூர வாசனை”ன்லாம் அர்ச்சனைய ஆரம்பித்திருந்தார்கள். இளையராஜா இந்த மாதிரி ரசிகர்கள் கிடைக்க ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கனும்.

யுவன் அவரு குரலுக்கு ஏத்த மாதிரி தானே இசையமைச்சு பாடிக்கிட்டிருந்தாரு…. அவர்கிட்ட போயி பாட்டக் குடுத்து…. முடிஞ்ச வரைக்கும் அவரு முக்கியிருக்காரு. அவருக்கு கொடுத்த ரெண்டு பாடலும் படு த்ராபை (சாய்ந்து, சாய்ந்து, பெண்கள் என்றால்). என்னோடு வா வா, வானம் மெல்ல ரெண்டு பாடல்கள் தான் தேறுது. காற்றைக் கொஞ்சம்  ஓகே. மற்றதெல்லாம் சூர மொக்கைகள்.

ஒருவேளை பாடல்களெல்லாம் கெளதம் மேனனின் picturizationன்னால பிரபலமடையலாம். சமந்தா இருக்கவே இருக்கார். ஆனால் இளையராஜாவின் இசை என்பது picturization , பாடல் வரி, இதையெல்லாம் மிஞ்சி இருக்கும்…  அப்பிடிப் பார்த்தால் நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஏமாற்றமே.

நீதி : அடிச்சி பிடிச்சி டவுண்லோடாமல், புதுப் பாடல்கள் டிவியில் வரும் வரை அமைதி காக்கவும்.

அட்டக்கத்தி, முகமூடி, வழக்கு எண் 18/9

அட்டக்கத்திக்கு பெரும்பாலோனர் சூப்பர், காமெடி அட்டகாசம்னாலாம் விமர்சனம் பண்ணியிருந்தாங்க. நம்பி தியேட்டருக்கு போய் பாத்தேன். முதல் அரைமணி நேரம் ஓகே. கொஞ்சம் சிரிக்கலாம். அதுக்கப்புறம் சவ்வு மிட்டாய் மாதிரி இழுக்குறாங்க. சுலபமா ஊகிக்க முடிஞ்ச க்ளைமாக்ஸ். விட்டா போதும்னு ஓடி வந்தேன்.

முகமூடிய சொல்லிவச்ச மாதிரி அனைவரும் கழுவி ஊத்தியிருந்தார்கள். மிஷ்கினின் கறுப்பு கண்ணாடியாலோ இல்ல பேட்டிகளாலோ பாதிக்கப்பட்டவர்கள் போல. நெகடிவ் விமர்சனத்துக்காகவே தியேட்டரில் பாத்தேன். ரொம்ப மோசம் இல்லை. க்ளைமாக்ஸ் தான் அறுவையாக இருந்தது. முக்கால் வாசிப் படம் நல்லாவே இருந்தது. பின்னணி இசை அட்டகாசம். கே-னு ஒருத்தர் இசையமைச்சிருக்கார். சூப்பர். அவரு தான் “யுத்தம் செய்”க்கும் இசை போல. அது ரணகொடூரமா இருக்கும். ஆனா இதுல அசத்திட்டார்.

கொஞ்சம் பழசு தான். விமர்சனம்னவுடனே வழக்கு எண் 18/9 ஞாபகம் வந்துச்சி. மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு, ட்விட்டர் சமூகம் ஆவேசப்பட்டு (படம் தாறுமாறாக  ஓடாததால “இந்த தமிழ்ச் சமூகமும், நாடும் நாசமாப் போகட்டும்”னு ஆவேசப்பட்டார்கள்). நேர்த்தியாக, குறையே சொல்ல முடியாமல், உண்மைச் சம்பவத்தை ஆவணப்படுத்தியதைப் போல் எடுத்த படம். க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் தமிழ் சினிமா மாதிரி. போட்ட காசை கண்டிப்பா தயாரிப்பாளர் எடுத்திருப்பாரு. ஆனா மெகா ஹிட் ஆவலனு ஆவேசப்படுவதெல்லாம் ரொம்ப ஓவரு.

நீதி : இணைய விமர்சனம் படித்து காசை தியேட்டரில் வீணடிக்காதீர்.

Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 17/09/2012

ஓட்டம் – 8/9/2012

தமிழன்னா கருந்து கந்தசாமியாத் தான் இருக்கனும்னு ஒரு விதி இருக்கு. அதுவும் எது கைல கிடைச்சாலும் விமர்சனம் பண்ணி உண்டு இல்லனு ஆக்கிறனும். ஆகையினால நானும் கருத்து சொல்லி, விமர்சனம் எழுதி உலகத்தை உயர்த்துவதற்கான பதிவு இது.

எப்போதாவது ஓடும் ஓட்டத்தைப் பற்றி குறிப்பு எழுதி, மதிப்பெண் குடுக்கலாம்னு இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஓடுனதப் பத்தி சொல்றேன்.

Dream Runners 2012.

இவுங்க ஒரு புது க்ரூப். சென்னை பெசன்ட் நகர்ல ஓடுறவுங்க போல்ருக்கு. அவுங்க நடத்தும் முதல் ஓட்டம் இது தான். Bib ஐ ஒரு ஃபர்னிச்சர் கடைல வந்து வாங்கிக்க சொன்னார்கள். ட்ரைன்ல எறங்குனா பெசன்ட் நகர்ல எறங்கலாமானு உறுதிப் படுத்திக்கிட்டேன்.  அருமையான பையும், டி-ஷர்ட்டும் கொடுத்தார்கள். டி-ஷர்ட்டுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். ஒண்ணு நான் சைஸ்சை தப்பா சொல்லியிருப்பேன், இல்லைனா அவுங்க குடுப்பது தப்பான சைஸா இருக்கும். இங்கு L-க்கு பதிலாக M-ஐ கொடுத்திருந்தார்கள். டி-ஷர்ட் சுமாராத் தான் இருந்தது.

ட்ரைன்ல போகலாம்னு காலைல எந்திருச்சி, வார்ம்-அப்லாம் முடிச்சி 3.45க்கே ட்ரைன் ஸ்டேஷன் நோக்கி சென்றேன். சென்டரல் பாலத்துக்கு கீழ இருக்கு போல. பார்க்னு ஒரு ஸ்டேஷன். பார்க் டவுன்னு ஒரு ஸ்டேஷன். நான் ஏறவேண்டியது பார்க் டவுன்.  பாலத்துக்கு முன்னாடியே ஒரு ஆட்டோக்காரரு இன்னிக்கு ஞாயிறு சார் ட்ரைன் 7 மணிக்கு தான்னு பயத்தக் கெளப்பினாரு. எதுக்கும் நானே பாத்துர்றேன்னு போய் பார்த்தேன். ஸ்டேஷனுக்கு பூட்டு போட்டு வச்சிருந்தாங்க. பிறகு வேற வழியில்லாம திரும்பிப் போய் அதே ஆட்டோல ஏறினேன். ரூ.250 வாங்கிக்கிட்டு பெசன்ட் நகர் பீச்ல 4.15க்கே எறக்கி விட்டுட்டார்.

ஒரு குருவி குஞ்சக் காணோம். முந்தின நாள் மழை பெஞ்சதால பீச்சு ஒரு கண்றாவி கோலத்தில் இருந்தது. ஒரு வழியா 4.45 மணிக்கு ஆர்கனைசர்ஸ் வந்தாங்க. பிறகு என் மூட்டைமுடிச்சை baggage counter ரில் கொடுப்பதற்காக சென்றேன். ரேஸ் முடிஞ்ச பிறகு ஒரு நண்பரை சந்திப்பதாக திட்டம், அதனால பேண்ட், டிஷர்ட்டுனு வேற கொண்டு வந்திருந்தேன்.

அங்கே சென்று விசாரித்தா, baggage counterனு ஓண்ணு கிடையாதுனு சொன்னாங்க. மகா எரிச்சலாக இருந்தது. பெருசா பெங்களூர்ல இருந்துலாம் ரன்னர்ஸ் வர்றாங்கனு பேட்டிலாம் குடுத்திருந்தாங்க. பெங்களூர்ல இருந்து வர்றவன் கூட ஹோட்டலையுமா கூட்டிட்டு வருவான்.

ஒரு ஆன்ட்டி ஒரு மூலைல வச்சிருங்க, on your own riskக்குன்னாங்க. வச்சிட்டு வந்தேன்.  ஓட்டம் ஆரம்பிச்சது. முடிப்பதற்கு அரை மணி முன்னால மழை பெய்ய ஆரம்பிச்சது. மழைல ஓடி முடிச்சது நல்லா இருந்தது. ஒடி முடிஞ்சவுடன் பையைத் தேடினால் வச்ச இடத்துலையே இருந்தது, மழைல நனைஞ்சு போயி. கடுப்பாக இருந்தது.  அவர்கள் கொடுத்த பைதான். வாட்டர் ஃப்ரூபாக இருந்ததால் எதுவும் ரொம்ப நனையவில்லை.

மெடலோடு இலவசமாக Butterfly வாட்டர் பாட்டிலையும் கொடுத்தார்கள். நல்லா இருந்தது. மழையோடு ஓட்டம், வாட்டர் பாட்டில் இதானால் பை நனைஞ்ச மேட்டர் பெரிசாக தெரியல.

Websitehttp://www.dreamrunners.in/index.html

Fee :  Rs.500

Organization : நன்றாக இருந்தது. Water station எல்லாம் சரியாக இருந்தது. முதலில் வரும் Water station ரொம்ப நேரம் கழித்து வந்தது போல் இருந்தது. மழை வந்த பிறகு, பாதி route guides எஸ்சாகி விட்டார்கள். முடிக்கும் போது தனியாக வந்ததால், ரோட்டில் சென்றவரிடம் வழி கேட்டு சென்றேன்.

Course : பெசன்ட் நகரின் சந்துகளில் இருந்தது. பரவாயில்லை.

Summary : Will come back next year if they provide baggage storage.

Posted in உளறல், ஓட்டம். Comments Off on ஓட்டம் – 8/9/2012
%d bloggers like this: