சொ.செ.சூ – 17/09/2012

ரொம்ப நாளாச்சு சொசெசூ வச்சி. அதுக்கு அர்த்தம் எனக்கே மறந்துடுச்சி. சொந்த செலவில் சூனியம். இணைய விமர்சனங்களை விமர்சிக்கலாம்னு பாக்குறேன்.  ஏன்னா அது தான் சுலபமான சொசெசூ.

நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள்

ட்விட்டரில் இருக்கும் இளையராஜா கொலைவெறிப் படைகள் படத்தின் டீசர்கள் வந்தவுடனே ஆ, ஊ, சூப்பர், மெய்சிலிர்க்குதுனு சவுண்டு உடுவது வழக்கம். நானும் அவர்களை நம்பி பாட்டு டாரண்ட் வந்தவுடனே டவுண்லோடினேன். பாடல்கள்லாம் ரொம்ப சுமார் தான்.

நான் சுமார்னு சொல்றதுக்கு முன்னாடியே இளைஞர்கள் பலர் பாடல்களைக் கிழித்து தொங்கவிட்டிருந்தார்கள். யாரும் இளையராஜாவை கிண்டலடிக்கவில்லை. ஆனால் கொலைவெறி கும்பல், “தே*டியா பயலுக, மனநோயாளிகள், போய் *யடிங்கடா, ஞானசூனியங்கள், கழுதைகளுக்கு ஏன் கற்பூர வாசனை”ன்லாம் அர்ச்சனைய ஆரம்பித்திருந்தார்கள். இளையராஜா இந்த மாதிரி ரசிகர்கள் கிடைக்க ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கனும்.

யுவன் அவரு குரலுக்கு ஏத்த மாதிரி தானே இசையமைச்சு பாடிக்கிட்டிருந்தாரு…. அவர்கிட்ட போயி பாட்டக் குடுத்து…. முடிஞ்ச வரைக்கும் அவரு முக்கியிருக்காரு. அவருக்கு கொடுத்த ரெண்டு பாடலும் படு த்ராபை (சாய்ந்து, சாய்ந்து, பெண்கள் என்றால்). என்னோடு வா வா, வானம் மெல்ல ரெண்டு பாடல்கள் தான் தேறுது. காற்றைக் கொஞ்சம்  ஓகே. மற்றதெல்லாம் சூர மொக்கைகள்.

ஒருவேளை பாடல்களெல்லாம் கெளதம் மேனனின் picturizationன்னால பிரபலமடையலாம். சமந்தா இருக்கவே இருக்கார். ஆனால் இளையராஜாவின் இசை என்பது picturization , பாடல் வரி, இதையெல்லாம் மிஞ்சி இருக்கும்…  அப்பிடிப் பார்த்தால் நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஏமாற்றமே.

நீதி : அடிச்சி பிடிச்சி டவுண்லோடாமல், புதுப் பாடல்கள் டிவியில் வரும் வரை அமைதி காக்கவும்.

அட்டக்கத்தி, முகமூடி, வழக்கு எண் 18/9

அட்டக்கத்திக்கு பெரும்பாலோனர் சூப்பர், காமெடி அட்டகாசம்னாலாம் விமர்சனம் பண்ணியிருந்தாங்க. நம்பி தியேட்டருக்கு போய் பாத்தேன். முதல் அரைமணி நேரம் ஓகே. கொஞ்சம் சிரிக்கலாம். அதுக்கப்புறம் சவ்வு மிட்டாய் மாதிரி இழுக்குறாங்க. சுலபமா ஊகிக்க முடிஞ்ச க்ளைமாக்ஸ். விட்டா போதும்னு ஓடி வந்தேன்.

முகமூடிய சொல்லிவச்ச மாதிரி அனைவரும் கழுவி ஊத்தியிருந்தார்கள். மிஷ்கினின் கறுப்பு கண்ணாடியாலோ இல்ல பேட்டிகளாலோ பாதிக்கப்பட்டவர்கள் போல. நெகடிவ் விமர்சனத்துக்காகவே தியேட்டரில் பாத்தேன். ரொம்ப மோசம் இல்லை. க்ளைமாக்ஸ் தான் அறுவையாக இருந்தது. முக்கால் வாசிப் படம் நல்லாவே இருந்தது. பின்னணி இசை அட்டகாசம். கே-னு ஒருத்தர் இசையமைச்சிருக்கார். சூப்பர். அவரு தான் “யுத்தம் செய்”க்கும் இசை போல. அது ரணகொடூரமா இருக்கும். ஆனா இதுல அசத்திட்டார்.

கொஞ்சம் பழசு தான். விமர்சனம்னவுடனே வழக்கு எண் 18/9 ஞாபகம் வந்துச்சி. மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு, ட்விட்டர் சமூகம் ஆவேசப்பட்டு (படம் தாறுமாறாக  ஓடாததால “இந்த தமிழ்ச் சமூகமும், நாடும் நாசமாப் போகட்டும்”னு ஆவேசப்பட்டார்கள்). நேர்த்தியாக, குறையே சொல்ல முடியாமல், உண்மைச் சம்பவத்தை ஆவணப்படுத்தியதைப் போல் எடுத்த படம். க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் தமிழ் சினிமா மாதிரி. போட்ட காசை கண்டிப்பா தயாரிப்பாளர் எடுத்திருப்பாரு. ஆனா மெகா ஹிட் ஆவலனு ஆவேசப்படுவதெல்லாம் ரொம்ப ஓவரு.

நீதி : இணைய விமர்சனம் படித்து காசை தியேட்டரில் வீணடிக்காதீர்.

Advertisements
Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 17/09/2012
%d bloggers like this: