உளறல்கள் – 14/10/2012.

இப்போல்லாம் நிறைய படம் பார்க்கிறேன்னு நினைக்கிறேன். காலைக்காட்சி ரூ.100 தான்னு இப்போ தான் கண்டுபுடிச்சேன். அதனால உணர்ச்சிவசப்பட்டு சுந்தரபாண்டியன், தாண்டவம் பாத்தேன். காவேரி பிரச்சனைனால “மாற்றான்” இன்னும் வல்ல. அதுவும் நல்லதுக்கு தான் போல்ருக்கு. “சாட்டை” ஏன் வரலனு தெரியல. எப்படியாவது பாத்துடனும்னு நினைச்சேன். ஆனா முடியல.

விமர்சனம் – சுந்தரபாண்டியன்

இணைய விமர்சனம் படிக்காம பாத்தது. ட்விட்டர்ல நல்லா இருக்குனு சொன்னாங்க. அப்புறம் சசிகுமார் மீது இருக்கும் நம்பிக்கைல பாத்தேன். நல்லா இருந்தது. குடுத்த காசு வீணாகல. ஹீரோயின் செமையாக இருந்தார். என் காலேஜ் டைம்ல மார்க் குடுத்துருந்தோம்ன்னா B+ (above average figure). அதனால ஹீரோயினுக்காக நிறைய சண்டை இருப்பது வாஸ்தவம் தானே.

இயல்பான வசனங்கள். சசிகுமார் நண்பர்களாக வந்தவுங்களும் சூப்பர். பரோட்டா சூரி கொஞ்சம் அதிகமா பேசுரார். ஆனா சிரிப்பு வருது. இன்னும் ரெண்டு மூணு ஹிட்டு குடுத்தா சந்தானத்துக்கு அடுத்த படியா வரலாம்.

ஹீரோயினை நல்ல தைரியசாலியா காமிச்சிருந்தது எனக்கு பிடிச்சிருந்தது. தேவை இல்லாம அழுகுறது இல்ல. ஆனா அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் போது அழுகிறார். நெகிழ்ச்சியான காட்சி. காஸ்ட்யூம்லாம் அவ்ளவா கவனிக்க மாட்டேன், ஆனா இந்த படத்துல ஹீரோயின் போடும் தாவணி, சுடிதார்லாம் செமையா இருந்துச்சி. நல்ல கலர் காம்பினேஷன்ஸ்.

கதை நாடோடிகளின் inverse. நண்பர்கள் சசிகுமாரின் காதலை பிரித்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஹீரோ அதை முறியடித்து நட்புக்காக நண்பர்களை மன்னித்துவிடுகிறார்.

விமர்சனம் – தாண்டவம்

டைரக்டர் விஜய் படம் ஒண்ணும் பாத்ததில்லை. பல பேரு கழுவி ஊத்தியிருந்தாலும் அனுஷ்கா & ஏமி க்காக போனேன். ஐயையோ கொடுமை. நிறைய லாஜிக் மிஸ்ட்டேக்கு. தமிழ்ப் படங்கள்ல லாஜிக் மிஸ் ஆவுறது சகஜம் தான். ஆனா இதுல டூமச்சு. எப்படி இந்த விஜய்ய நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் பண்றாங்கனு தெரியல.

Promo விற்காக டிவியில் வந்த போது கூட ஒரு fire இல்ல. சும்மா வழவழ கொழகொழனு பேசுறார். விக்ரம் அதுக்கு மேல. கெழட்டு லுக் வந்துருச்சி, பின்ன எதுக்கு இவ்ளோ க்ளோசப் ஷாட்கள்னு தெரியல. அனுஷ்கா சேலைல வர்ற சீன்லாம் ஓக்கே. மத்தபடி கடைசி பாட்டுல (பீச்சு மண்ணுல படம் போட்ருப்பாய்ங்களே…) உயரமான கெழவியா இருக்கார். ஏமி வத்திப் போன வெள்ளைக்காரி மாதிரி இருக்கு. லிப்சிங்க்கே இல்ல, பின்ன என்ன எழவுக்கு தமிழ்ப் படங்கள்ல நடிக்கனும்.

இந்த படத்துல கடுப்பு லிஸ்ட் பெருசா இருந்தாலும், சில.,

–    லண்டன்ல சந்தானம் டாக்ஸியைத் தவிர வேறு எவனும் டாக்ஸி ஓட்டலியா ? படத்துல ஃபுல்லா அவரு ஒருத்தர் தான் டாக்ஸி ஓட்டுராரு. அனைவரும் அவரு டாக்ஸில தான் ஏறுராங்க.

–    துப்பறியும் புலி விக்ரம், சும்மா தரைல இருந்தே 20 மாடிக்கு மேல இருக்கும் வில்லன்கள் பேசுவதைப் பார்த்து, (பைனாகுலர்ல) கண்டுபிடிக்கிறார்.

–    கல்யாணமான அனுஷ்க்கா ஐபிஎஸ் வீட்டுக்காரரை எஸ்.ஐ யானு கேட்டுட்டு, அப்படியே நம்புறார். ஆனா நாலஞ்சு சீனுக்கு எஸ்.ஐ ன்னே நம்புறார். எகொசாஇ.

–    அனுஷ்கா தன் லட்சியம் நிறைவேறும் வரை ஃபர்ஸ்ட்டு நைட்டு வேணாம்கிறார். இந்த காலத்துல சைக்கிள் கேப்புல பசங்க ஏரோப்பிளேனே ஓட்டுராங்க. அனுஷ்கா மாதிரி ஃபிகர வச்சிக்கிட்டு எப்புடி, இப்பிடி. இதுல வேற ரெண்டு சீன்ல படுக்கைல படுத்திருக்கும் அனுஷ்கா கண்ணாலேயே விக்ரமை தூங்குங்கனு சொல்றாங்க. தியேட்டர்ல படம் பாத்த பயபுள்ளைங்க படு கேவலமா கமெண்ட் அடிக்கிறாங்க.

–    ஆயுத ரகசியத்தை USB stickல கடத்துராங்க. ஆனா அதை கூரியர்ல லண்டனுக்கு அனுப்புறாங்களாம். அடப்பாவிகளா டேய்.

–   ஆங்கிலத்தில் பேசுறதுக்குலாம் தமிழ்ல சப்-டைட்டில் போடுறாங்க. அதுல நிறைய எழுத்துப்பிழைகள். என்ன எழவு மிஸ்டர்.விஜய் ?

விஜய் சார், முடியல. தயாரிப்பாளர்கள்லாம் பாவம். விட்றுங்க.

 மிட் டெர்ம் அப்டேட்டு

இன்னும் மூணு மாசத்துல 2012 முடியப் போவுது. உலகம் அழிஞ்சாலும் அழிஞ்சிரும். அதனால 2012ல செய்ய நினைச்சு, முடிச்சது என்னல்லாம்னு ஒரு லுக் விட்டேன்.

  1. ட்விட்டர் Perl scriptஐ முடிக்க வேண்டும். – Done
  2. யூடியூப் Perl scriptஐ முடிக்க வேண்டும். – Download script done.  ஆனா tag, descriptionலாம் மாற்றும் டெக்னிக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். அதையும் முடிக்கனும்.
  3. ஆறு ஹாஃப் மாரத்தானாவது ஓட வேண்டும். – Done
  4. ரன்னிங்க்காக பற்றி பதிவு எழுத வேண்டும். – Done (started).
  5. ட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். – ஒரு மாசமா ட்விட்டர் பக்கம் அவ்ளவா போறதில்லை. நிறைய நேரம் கிடைச்ச மாதிரி இருக்கு.
  6. மாதத்துக்கு ஒரு பதிவு. – ??
  7. வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டும். – பொதுவா நான் இருக்கும் ப்ராஜெக்ட்ல, ஒண்ணு கஸ்டமர் ஓடிடுவான், இல்ல தானே ப்ராஜெக்ட் ஊத்திக்கும். ஆனா இந்த முறை ப்ராஜெக்ட் நல்லா போயிட்ருக்கு. ஏன்னு தெரியல !!
Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 14/10/2012.
%d bloggers like this: