எனது ட்விட்டர் பயோல உளறினது. சுயசரிதை எழுதும் போது தேவைப்படும்.
- இங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஹேட் எ டாங்க்கி, டாங்க்கி டைட் ஃபாதர் க்ரைட் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- புள்ளி வைத்த இடங்களில் இலவசமாக கோலம் போடப்படும் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- எது என்னுதோ அது உன்னுது. எது உன்னுதோ அது என்னுது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- பர்ஸ்சின் கனம் அறிந்து பிச்சை எடு…!! – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு வடக்கு திசையிலிருந்து ஒரு சுபச் செய்தி வரும் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- யதோ யதோ கவாசாகி அதோ அதோ மிட்சுபிஷி – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன என்ற மந்திரத்தை மறவாதீர்கள் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை -மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்
- தற்போது தூங்கிக் கொண்டே, வேலை செய்து கொண்டே ட்வீட்டுபவர் உங்கள் மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- ஆசி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- இந்தா பிடி சாபம்… போ…!! தொண்டை கேன்சர் வந்து தான் சாவாய்… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- உடம்பு என்பது உண்மையில் என்ன ? கனவுகள் வாங்கும் பை தானே… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- எனக்கு கடவுளைத் தெரிந்திருப்பது முக்கியமில்லை. கடவுளுக்கு என்னைத் தெரிந்திருப்பது தான் முக்கியம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா என்று வேத உபநிஷத்து கூறுகிறது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- கர்த்தரிடம் சீக்கிரமா பூமிக்கு வாங்கன்னேன், நீ சீக்கிரமா மேல வா னு சொன்னார் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- Life is just another wasted opportunity… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- பாடிகாட் முனீஸ்வரனிடம் பேசிக் கொண்டிருந்த போது மேலோகத்திலும் நதி நீர் பிரச்சனை இருப்பதாக கூறினார் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- Multiple Orgasms is the solution to all worldly problems… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- நிறைய followers கிடைக்க மந்தரித்த தாயத்து அனுப்பப்படும். ரூ.1001 M.O செய்யவும். – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- யாமறிந்த துண்டுகளிலே குற்றாலத் துண்டு போல் வேறெதையும் காணோம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- பெண்கள் குடிப்பதில் தவறில்லை, ஆனால் வீதியில் மயங்கி விழுந்து கிடக்கக் கூடாது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- Dec-21, 2012ல உலகம் அழியாது, ஆனா Home Loan Interest Rate 25% ஆகிடும். – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- தப்பெல்லாம் தப்பே இல்லை, சரியெல்லாம் சரியே இல்லை. தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- அனைவரிடமும் இதயம் இருக்கிறது, சிலரிடம் தான் அதில் அன்பு இருக்கிறது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- தோசை சுடும் போது கருகினால், அது தோசையின் குற்றமல்ல, கேஸ் அடுப்பின் குற்றம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- Commentஏ இல்லாத அடுத்தவன் codeஐ, எவன் புரிஞ்சுக்கிட்டு bug fix பண்றானோ அவன் தான் கடவுள் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- உரிச்சுப் பாத்தா வெங்காயத்துல ஒண்ணும் இருக்காது. ஆனா கண்ணு எரியும் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன், கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- Code எழுதுவதால் நானும் இறைவனே… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- ஹிஹி… உங்களையெல்லாம் கலாய்ப்பதற்கே யாம் Higgs bosonஐ அனுப்பி வைத்து சித்து விளையாடினோம்… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- கரும்புன்னா இனிக்கும், பாவக்காய்ன்னா கசக்கும். புளியங்காய்ன்னா புளிக்கும். இது தான் வாழ்க்கை. – ஶ்ரீலஶ்ரீ ஶ்ரீ.ஶ்ரீ.ஶ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
- ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்… கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா ?
- ரோசு ரோசு ரோசு… அழகான ரோசு நீ… பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ… – புலவர் ஓணாண்டி
- நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
- Secret is the boost of my energy…!!
- ட்ராபிக் சிக்னல்ல பல்சர் 15 sec முன்னாடி வந்து நிக்குது, டிவிஎஸ்-50 15 sec லேட்டா வந்து நிக்கிது. பச்சை சிக்னல் போட்ட உடனே ரெண்டும் ஒரே நேரத்துல தான் போகுது…
- வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்…
- யாரோட ட்விட் படிச்சா பொறி கலங்கி பூமி அதிர்றது உடம்புல தெரியுதோ அவன் தான்டா… கூமுட்டை
- முட்டை வழியா கோழி பொறக்கும்… கோழி வழியா முட்டை பொறக்கும்…
- 67, Married, Teetotaller, CTO of a startup, Ambitious, Hardworking, Caring, Passionate, Straight forward, Friendly, Jovial, Liar, Energetic Simple person…
- 27, Bachelor, Teetotaller, CTO of a startup, Ambitious, Hardworking, Caring, Passionate, Straight forward, Friendly, Jovial, Liar, Energetic Simple person…
- என்கிட்ட இருக்கிறதை எடுத்துக் கொடுக்கிறேன் பாக்கியம்ன்னோ, பிச்சைன்னோ, இல்ல நான் வாங்கின கடன் என்றோ எப்படினாலும் எடுத்துக் கொள்ளட்டும்…
- நல்லவன் எனக்கு நானே நல்லவன்… சொல்லிலும், செயலிலும் நல்லவன்… உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை… ஊருக்கு தீமை செய்தவனில்லை…
- இசை என்னும் இன்ப வெள்ளத்தில் வாலன்டியராக தொபுக்கடீர்னு விழுந்து கடப்பாரை நீச்சலடிப்பவன். லண்டன் இசைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவன். இசை விற்பன்னன்…
- இசை எங்கேயிருந்து வருது தெரியுமா ? கீழ இருக்கிற ட்விட்லேயிருந்து வருது…!!
- Indian Born Confused Alien… தொடர்புக்கு 044-40504050 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்…
- புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
- வென் யூ ஆர் ரெடி, ஐ வில் அப்பியர்…