உளறல்கள் – 08/03/2015.

இன்னிக்கு “மகளிர் தினம்”. ஒரு புத்தகத்தப் பத்தி சொல்லலாம்னு பார்க்கிறேன். “Taking Charge of Your Fertility“னு ஒரு புத்தகம். நான் ரொம்ப குட்டிப் பையனா இருக்கும் போது படிச்சது. அதாவது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி படிச்சேன்.  பெண்களின் உடற்கூறு பற்றி தெளிவாக எளிதில் புரியும்படி சொல்லியிருப்பார்கள். மாதவிடாய், cycles பற்றி. கருத்தரிக்க முயற்சி பண்ணுபவர்கள், Natural family planning பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

மென்சஸ் பற்றி என் மனைவியிடம் பேசிய போது, “ஐயையோ இத பத்திலாம் பேசக்கூடாது”னு பயந்துட்டாங்க. பின்னர் உனக்கு தெரிஞ்சது பத்தி சொல்லுன்னா, “இது பெண்களுக்கு கடவுள் குடுத்த சாபம், தீட்டு, ஆம்பளைங்க சந்தோசமா இருக்காங்க, அவுங்களுக்கும் இந்த மாதிரி மூணு நாள் தீட்டு வரணும்”னுலாம் டென்சனாகிட்டாங்க. பிறகு நான் படிச்சதுலேயிருந்து எனக்கு புரிஞ்சதச் சொன்னேன். அவருக்கு மென்சஸ் ஏன் வருகிறது என்பது பற்றி தெரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உதிரத்தில் கருத்தரிக்காத பெண்ணின் கருமுட்டை வெளியேறுவது, ஒரு cycleல் ஒரே ஒரு கருமுட்டை மட்டும் Ovaryலே யிருந்து வெளியேறி கருத்தரிப்பிற்காக காத்திருந்து பின்னர் 24 மணி நேரத்திலே மடிந்து விடுவது பற்றி சொன்னேன்.

இப்ப வேற ரொம்ப ஞாபகம் இல்லை. ஆனால் அனைத்து பெண்களும், ஆண்களும் படிக்க வேண்டிய புத்தகம்னு நினைக்கிறேன்.

Twitterல சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல மக்கள் பெண்கள் பற்றி கேனத்தனமாக ட்விட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழ் கூறும் இணைய உலகத்துல கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேருந்து சில பழக்கம் உண்டு. அதுல பெண்களை தரக்குறைவா பேசுவது. அப்புறம் கற்பு, காதல் பற்றி யாராவது பேசினா, “இதையெல்லாம் உன் தாய், தங்கை, மனைவி etc etc., கிட்ட போய் சொல்லுவியா”ம்பாங்க. அட்லீஸ்ட் பொதுவெளியிலாவது பெண்களை நாகரிகமாக நடத்தக் கற்றுக் கொள்ளலாம். ம்ம்… இதே நேரத்துல தான் Nirbhaya caseல defence lawers பெண்கள் பற்றி பிற்போக்குத்தனமா கருத்துகள சொல்லிக்கிட்ருக்காங்க.

பல வருஷத்திற்கு முன் வேலை விஷயமாக சீனாவிற்கு போயிருந்தேன். அது கவர்மன்ட் கம்பேனி அதனால நிறைய Interns இருப்பாங்க. ஆங்கிலத்துல பேசனுங்றதுக்காக பலர் என்னிடம் பேசுவாங்க. எல்லாரும் கண்டிப்பா கேக்குற ஒரே விஷயம் எனக்கு கேர்ல் ஃப்ரெண்ட் இருக்கானு தான். #அவ்வ்வ் அதுக்கு எங்க போறது. கேர்ல் ஃப்ரெண்ட் இல்லேன்னா பயங்கர ஆச்சரிமாகிடுவாங்க. பிறகு தான் சில பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அங்க காதல், கல்யாணம்லாம் Western countries மாதிரி. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும். ஆனா காதல்ல கை ஓங்கியிருப்பது பெண்களிடம் தான். அவுங்க தான் தனக்கு பிடித்த ஆணை தேர்ந்தெடுக்கறாங்க. லவ்வு பண்ண பொண்ணு கிடைக்காம பேச்சிலரா இருந்த அங்கிள்ஸ் சிலரையெல்லாம் காட்டுனாங்க. பாவமா இருந்தது. ஒரு பையன் ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டான், ஐயாம் வெரி லக்கி என் லவ்வர் யூஎஸ்ல பி.ஹெடி பண்ணுது. அவளுக்கு க்ரீன் கார்டு எப்படியும் கிடைச்சிடும், அப்புறம் நானும் போயிடுவேன்னான்.

Actualஆ என்ன சொல்ல வர்றேன்னா. பெண்கள் தங்கள் துணையை அவர்களாகவே தேர்தெடுத்துக் கொள்கிறார்கள். இதனால வெட்டிப் பசங்க, வேலையத்தவுங்க, மூடர்கள் இவுங்களெல்லாம் ஆட்டோமாட்டிக்காக ரிஜெக்ட் ஆகிவிடுகிறார்கள். நம்மாட்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ்ங்ற பேர்ல சுலபமா வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

மனம் விட்டு பேசிப் பழகிய பின்னர் மணவாழ்க்கையில் எற்ற தாழ்வு இருக்காதுனு நினைக்கிறேன். அங்க வீட்டு வேலையெல்லாம் சமமாக செய்ய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வது கூட பெண் ஓகே சொன்ன பின்னர் தான். இங்கேயும் அதே போல் மாற்றம் வரும்னு நினைக்கிறேன். அப்புறம் ஆட்டோமாட்டிக்காக நம்மாட்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்வார்கள். #My opinion _/\_

Advertisements
Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உளறல்கள் – 08/03/2015.
%d bloggers like this: