Update (2/11/2015)
கீழ Python அது இதுனு உளறியிருந்தாலும் யூடியூப்ல இருந்து டவுண்லோட் பண்றதுக்கு Pythonலாம் தேவையில்லனு லேட்டா தான் கண்டுபிடிச்சேன். அது தவிர 100MBக்கு மேல டவுண்லோட் பண்ணும் போது அது பல்லிளிச்சிருது. அதனால இப்ப இதை பயன்படுத்துறேன்.,
youtube-dl (exe version) இங்கே. aria2c (external downloader) இங்கே.
பயன்படுத்தும் முறை : (eg : உதயகீதம் படப் பாடல்கள்)
youtube-dl -f bestaudio –external-downloader aria2c –external-downloader-args “–check-certificate=false” https://www.youtube.com/watch?v=KfjlwKHLkDM
டவுண்லோட் பண்ணினது Foobarல அட்டகாசமா ப்ளே ஆகுது.
ரொம்ப நாள் கழிச்சி ப்ளாக்கு வந்து பாத்தா ஒண்ணுமே எழுதல. அதனால தான் இந்த அவசரப் பதிவு. வழக்கமான ஒரு script தான். அதுவும் பழசு தான். யூடியூப்ல இருந்து download பண்றது. ஏற்கனவே இங்க சொல்லியிருக்கேன். அது Perlல எழுதுனது. சுத்தி சுத்தி எழுதியிருப்பேன். அமோக வரவேற்பை பெற்றது. ஒரு ஆள் கூட ஏன்னு சீந்தல. இருந்தாலும் சும்மா இருக்க முடியுமா ? நம்ம ப்ளாக்ல்ல. 🙂
கொஞ்ச நாளா பொழுது போகாம Pythonன நோண்டிட்ருக்கேன். அதுல அட்டகாசமான ரெண்டு modules இருக்கு. ஜஸ்ட் நாலே நாலு வரி தான். அட்சர சுத்தமா டவுண்லோட் பண்ணிடுது. இசைஞானியார் மற்றொரு Official Youtube Channelல ஆரம்பிச்சிருக்காரு. அதுல ஓரளவுக்கு பாட்டுகள்லாம் நல்லா இருக்கு. அதுலேயிருந்து ஹெட்ஃபோன்ல கேட்க நல்லா தான் இருக்கு. ஆனாலும் ஸ்பீக்கர்ல கேட்டா தான் நமக்கு திருப்தி. அதனால இதை எழுதினேன். ஸ்பீக்கர்ல கேட்க ஓரளவுக்கு நல்லா இருக்கு. ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது.
அந்த ரெண்டு modules.:- pafy & youtube-dl
pip install youtube-dl pip install pafy
பிறகு இந்த scriptஐ save பண்ணிக்கவும் (eg., yt_dnld.py)
import pafy
import sys
url = str(sys.argv[1])
video = pafy.new(url)
bestaudio = video.getbestaudio()
bestaudio.download()
இது ஆடியோ மட்டும் டவுண்லோட் பண்ணும். நான் பார்த்த வரைக்கும் பெரும்பாலும் ஆடியோ Opus or AAC format ல இருக்கு. Foobar பயன்படுத்தி கேட்கலாம். VLC வேஸ்ட்டு
How to use ?
python yt_dnld.py <youtube link>
eg., python yt_dnld.py https://www.youtube.com/watch?v=bCirOOIUPQc
வேண்டுமென்றால் FFmpeg பயன்படுத்தி MP3யாக மாற்றிக் கொள்ளலாம்.
ffmpeg -i “input_file.webm” -vn -acodec libmp3lame -aq 2 audio.mp3
You can play with -aq option. இசைஞானி சேனல்ல Audio Jukeboxஆக இருப்பதால் எல்லா பாட்டும் சேந்து ஒரே ஆடியோவா இருக்கும். வேண்டுமென்றால் FFmpeg மூலம் கட் பண்ணிக் கொள்ளலாம்.
ffmpeg -i “input_file.mp3” -vn -acodec copy -ss 00:00:00.000 -t 00:04:41.000 first_song.mp3
-ss is start time.
-t is duration.
ஆனால் பெஸ்ட் க்வாலிட்டி ஆடியோ, HD விடியோவில் இருப்பது தான். அதற்கு முழு விடியோவை டவுண்லோடனும். பிறகு அதிலிருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கனும். நல்ல நெட் கனெக்ஷன் இருப்பவர்கள் ட்ரை பண்ணலாம்.
import pafy
import sys
url = str(sys.argv[1])
video = pafy.new(url)
best = video.getbest()
best.download()
To extract audio.,
ffmpeg -i input_file.mp4 -vn -acodec copy -y audio_only.m4a
எதாவது சந்தேகம்னா மெயில் தட்டிவிடுங்க.