உளறல்கள் – 23/10/2016

பேலியோ

எல்லா சோசியல் மீடியா ப்ரபல குண்டு அங்கிள்ஸ் & ஆன்ட்டீஸ் பேலியோவ முயற்சி பண்ணி அதை பாப்புலர் ஆக்கிட்ருக்காங்க. நாமளும் சும்மா இருப்போமா…!! பேலியோ ஆரம்பிச்சு, 3 மாசம் முடிஞ்சு, 1 வாரம் ப்ரேக் எடுத்துட்டு மீண்டும் கொஞ்ச நாளா பேலியோ. எப்படி இருக்குனு கேட்டா., சிம்பிளா in summary., It works like magic. குண்டா (obese) இருக்றவுங்களுக்கு பேலியோவ விட்டா வேற வழி இருக்றதா எனக்கு தெரியல.

 

நான் குண்டு கிடையாது. BMI chart படி overweight. நான் BMIய நம்புறது கிடையாது. அதன் Normal வெயிட் படின்னா நான் ஓமக்குச்சி மாதிரி ஆனாத் தான் உண்டு. அதனால beginning of overweight தான் என் டார்கெட். அதுக்கு அஞ்சு கிலோ குறைச்சா போதும். கொஞ்சம் overheadக்காக ரெண்டு கிலோ சேத்து ஏழு கிலோ குறைக்கலாம்னு நினைச்சேன்.

 

எல்லாரையும் போல எனக்கும் சந்தேகம் உண்டு. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கிண்டலாத் தான் ட்விட்லாம் போட்டுட்ருந்தேன். பிறகு நிறைய before & after படங்கள் பாத்த பிறகு ஆரம்பிக்கலாம்னு தோணுச்சி. யூடியூப் விடியோலாம் பாத்தேன். அப்புறம் சில ட்விட்டர்கள் கிட்டலாம் அட்வைஸ் கேட்டுக்கிட்டேன்.

 

ரிசல்ட் – மூணு மாசத்துல அஞ்சு கிலோ குறைச்சிருக்கேன். நிறைய பேரு 15 நாள்ல 8 கிலோ குறைச்சேன்னுலாம் சொல்றாங்க. May be they have lot of weight to shed. But I am happy.

 

Pros

  • ஸ்ட்ரிட்டா ஃபாலோ பண்ணினா கண்டிப்பா பலன்.
  • ரொம்ப எக்சர்ஸைசோ இல்ல ஜிம்முக்கோ போக வேண்டிய தேவையில்லை
  • Snacks cravings இல்ல. அதனால மூணு வேளை சாப்பாடு & ஒரு சாலட்டோட சரி, வேற எதுவும் தேவையில்லை.

 

Cons

  • ஒரு வாரம் low-carb flu இருக்கும்னு சொன்னாங்க. ஆனா எனக்கு 10 நாட்கள், பிறகு 5 நாட்களுக்கு படிப்படியா தான் நார்மலாச்சு.
  • Low-carb flu காலத்தில் உடல் சோர்வு, தலைவலி, உடல்வலிலாம் இருந்துச்சி. இந்த எஃபெக்ட்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தான். But it was bit overwhelming.
  • உடம்பு வேகமாக குறைவதால் “ஙே”னு தோணுறதுக்கு வாய்ப்பிருக்கிறது. But that is how it is.
  • No choice of food. நான் வெஜ்னா நிறைய சாய்ஸ் இருக்குனு சொல்றாங்க. ஆனா எனக்கு அப்படி தெரியல.
  • Difficult to get acceptance from family. கண்டிப்பா மூணு வேளையும் உணவு தயார் செய்து தான் ஆகனும். அதனால மனைவிகள் எதிர்க்க வாய்ப்பிருக்கிறது. சாப்பாடு எடுத்துட்டு போகலைன்னா Subway saladனு ஒரே ஒரு சாய்ஸ் தான். கடுப்பா இருக்கும்.

 

வெயிட் குறைஞ்சது தவிர வேற ஒரு மாற்றமும் இல்லனு நினைக்கிறேன். தலைல நாலு முடிதான் இருக்கு. அதனால முடி வளந்துச்சா இல்ல கொட்டுச்சானு தெரியல. எனக்கு கொஞ்சம் ட்ரை ஸ்கின், ஆனா இப்ப நகத்தால கோடு போட்டா வெள்ளையா கோடு விழுறதில்ல.  பேலியோ க்ரூப் க்ளைம் பண்றதுல.,

  • காலைல வாய் ஸ்மெல் கிடையாது – நிஜம் தான். அவ்ளவா நாறுரது இல்ல.
  • அதிக எனர்ஜி லெவல் – எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. வழக்கம் போல ஆபிஸ்ல நல்லா தூக்கம் வருது.
  • பசி தாங்குதல் – அப்டிலாம் இல்ல. ஒரு வேளை சாப்புடுறது மிஸ் ஆகிடுச்சின்னா, பயங்கரமா பசிக்குது.
  • 40 கிராம்க்கு மேல carbs எடுத்துக் கொள்ளக் கூடாது – அது உண்மைனு தான் நினைக்கிறேன். ஸ்ட்ரிக்ட்டா எந்த carbsசும் எடுக்காத நாட்கள்ல நல்ல பலன் இருக்கு.

 

திரும்ப ப்ளட் டெஸ்ட் எடுத்து பாக்கனும். அதப் பாத்தா தான் முழுமையா என்ன விளைவுகள்னு தெரிய வரும். But may be just me. Libido dropped drastically. பேலியோ க்ருப் க்ளைம் பண்ற மாதிரி இல்ல. Atleast பிட்டு படங்கள பாக்குறத விட்டுட்டு வேற உருப்படியான வேலை செய்ய நேரம் கிடைச்சிருக்கு. 😉 Multivitamin supplement is helping. But not fully.

 

பேலியோனால ஒரே ஒரு அட்வான்டேஜ் தான். எப்பவோ தூக்கிப் போட மனசில்லாத 32” பேன்ட்டுகள போட ஆரம்பிச்சுருக்கேன். 36” பேன்ட்டின் பெல்ட்டை இறுக்கி கட்டிக் கொள்கிறேன்.

 

Next step. டார்கெட்ல இன்னும் 2 கிலோ குறைக்கனும். குறைத்த பிறகு ப்ளட் டெஸ்ட் எடுத்து பாக்கனும். ஒண்ணும் டெரரா இல்லைன்னா, கொஞ்சம் விட்டு விட்டு பேலியோ பண்ணலாம்னு இருக்கேன். 3 months normal then 3 months paleo. என்ன நடக்குதுனு பாக்கலாம்.

 

கபாலி

ரஜினிக்கு கபாலி ஒரு மைல்கல்லா இருக்கோ இல்லியோ, எனக்கு மைல்கல் தான். 5 தடவை தியேட்டரில் பாத்த படமாச்சே. Trailer, Teaser லாம் பாத்துட்டு முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டு காண்டாகிட்டேன். தமிழ் டாக்கீஸ் அண்ணாச்சி & இட்டீஸ் மாதிரி கொலவெறில இருந்தேன்.

 

பிறகு ரஞ்சித்தோட News18 பேட்டி வந்துச்சி. எனக்கு தெரிஞ்சு படத்துல ரெண்டே ரெண்டு வசனம் தான் கொஞ்சம் தலித் ஆதரவு மாதிரி இருந்துச்சி, அந்த இங்லீஷ்கார முதலாளிகிட்ட பேசுறது & வில்லன் கிட்ட சோஃபால உட்கார்ந்துகிட்டு பேசுறது. அதைத் தவிர மீது வசனம்லாம் நார்மலாத் தான் இருந்துச்சி. ஆனா ரஞ்சித்தின் பதில்கள் ரொம்ப பிடிச்சிருந்தது. அவருக்காக மற்றொரு முறை, சந்தோஷ் நாராயணனின் இசைக்காக ஒரு முறை, ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை அடித்து இறக்கி நார்மலா காமிச்சதுக்கு,  அப்புறம் கடைசியா லோகா, வீரசேகரன் & அந்த மெட்ராஸ் பையனுக்காக.

 

ரித்விகா போர்ஷன முழுசா கட் பண்ணியிருக்கலாம் & கலையரசன் / ஜான் விஜய்க்கு பதிலா வேற யாராவது நடிச்சிருக்கலாம்.

 

ரெமோ

படம் நல்லா இருக்கோ இல்லியோ, ஆனா அங்கிள்ஸ் & ஆன்ட்டீஸ் பண்ற கூத்து காமெடியா இருக்கு. இன்னிக்கு தான் stalkingங்றத சினிமால முதல் தடவையா பாக்குற மாதிரி. இதுல ஒரு அங்கிள் 10த்தோ +2வோ ஃபெயில் ஆனவனுக்கு டாக்டர் பொண்ணு கேக்குதோனு. ஏன் +2 படிச்சவன் டாக்டர லவ்வு பண்ணக் கூடாதா ? நிஜத்துல பல கண்றாவிகள் நடக்குது. அங்கிள்க்கு அதெல்லாம் தெரியாது போல.

 

எது என்னமொ, ஆனா நிச்சயம் ஆன பொண்ண ஹிரோ தட்டிட்டு போறத மாத்தி தொலைக்கலாம். நிச்சயம் ஆன மாப்பிள்ளையோட நிலமைய யோசிச்சிப் பாருங்க டைரக்டர்களா.

 

Advertisements
Posted in குப்பை. Comments Off on உளறல்கள் – 23/10/2016
%d bloggers like this: