உளறல்கள் – 10/9/2017

உருப்படியா எதாவது எழுதனும்னு தோணுது, ஆனா என்ன எழுதனும்னு தெரியல. Anyhow.,

கணினியில் பயன்படுத்தும் செயலிகள் :
இந்த செயலிகள் நான் பயன்படுத்துவது. இதுவரைக்கும் வேற alternative வேணும்னு தோணல.

  1. KeePass : பாஸ்வேர்டுகள் சேமித்து வைக்க பயன்படுத்துவது. ஒரே ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டு போதும்.
  2. MediaInfo : மீடியா ஃபைலின் formatஅ அறிந்துகொள்ள.
  3. 7Zip : zip & unzip.
  4. Deluge : டாரன்ட் டவுண்லோடர்.
  5. eKalappai : தமிழில் எழுத உதவும் செயலி.
  6. WinDirStat : டாப் லெவெல்ல டிஸ்க்ல என்ன இருக்குனு தெரிய உதவும். பெரும்பாலும் ஹார்ட்டிஸ்க் ரொம்பிருச்சின்னா எதை டெலிட் பண்றதுங்றதுக்கு உதவும்.
  7. Win32DiskImager : டிஸ்க் இமேஜ் உருவாக்க. பெரும்பாலும் Linux Live image, diagnostic software image உருவாக்க பயன்படுத்துவேன்.
  8. NP++ : code எழுத.
  9. SDFormatter : SD card format பண்ண.
  10. WinSCP : SFTP client.
  11. MobaXterm : SSH, Telnet client.
  12. foobar2000 : ஆடியோ ப்ளேயர்
  13. EAC : ஆடியோ சிடிய rip பண்ண.
  14. ffmpeg : swiss army knife for media processing. 🙂
  15. aria2c : மற்றொரு டாரன்ட் டவுண்லோடர் (command line)
  16. youtube-dl : youtube டவுண்லோடர்

Alternative இருப்பது :

  1. Firefox – Edge : விண்டோஸ் 10ல பெரும்பாலும் Edge தான் பயன்படுத்துறேன். சில சமயம் Firefox.
  2. VLC – Film & TV : விண்டோஸ் 10ல பெரும்பாலும் Film & TV தான். சில சமயம் சப்டைட்டில் ஒழுங்கா வராது, அப்ப VLC.

AliExpress :
கொஞ்ச நாளா அடிக்கடி போறது AliExpress siteக்கு தான். ஆதி காலத்துலையே இதோட ஓனர் Alibaba பத்தி தெரிஞ்சிருந்தாலும் சீன சைட்ங்றதால வாங்குறதுக்கு ரொம்ப பயம். பிறகு R&Dல தெரிஞ்சது என்னன்னா அமேசான், Flipkartல விக்கும் பேரு தெரியாத எல்லா எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் (power bank, headphone, charger etc.,) aliexpressல இருந்து வர்றது தான்னு. அங்க வாங்கி இங்க கொஞ்சம் ரேட் ஏத்தி விக்கிறாங்க. அதனால aliexpress லயே வாங்கிப் பாத்தா என்னனு தோணுச்சி. நிறைய ஐட்டம்ஸ் இப்ப இங்க தான் வாங்குறேன். பிரச்சனை எதுவும் இல்லை. எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம்லாம் பெங்களூர் SP ரோட்லியே வாங்கலாம். ஆனா.,

  • SP ரோட்ல பார்க்கிங்கே கிடைக்காது. செம கடுப்பாகும்.
  • நான் வாங்க நினைத்த ஐட்டம் சிலது அவனுகளுக்கு புரியவேயில்ல. eg., 2.5″HDD to 3.5″HDD adapter. PCI eSATA express card. இதெல்லாம் aliexpress ஈசியா கிடைக்குது.

ஆனாலும் சில ப்ரச்சனைகள் இருக்கு.,

  • டெலிவரி டைம். பெரும்பாலும் tracking number இருக்கும் ஷிப்பிங் தான் தேர்ந்தெடுப்பது. அதுவே 30-40 நாள் ஆகிரும். Tracking number இல்லாததுன்னா 90-110 நாள் வரைக்கும் ஆகிருக்கு.
    அவ்ளோ நாள் பொறுமை வேணும். இப்ப பெரும்பாலும் Aliexpress stardard shipping தான் தேர்ந்தெடுக்கிறேன். அது சீனா to மலேசியா/சிங்கப்பூர் to சென்னைக்கு வருது. பெரும்பாலும் 20-30 நாளுக்குள்ள வந்துருது.
    சைனா போஸ்ட்ன்னா 30-40 நாட்கள். கல்கத்தா இல்ல மும்பைக்கு போயி பெங்களூருக்கு வரணும். லோக்கல் ஆட்கள் தான் 15 நாளுக்கு மேல எடுத்துக்குறாங்க. சீனால இருந்து வர்றதுக்கு 15 நாள் தான் ஆகுது (approx).
  • கஸ்டம்ஸ். இது வரைக்கும் மாட்டல.
  • Safe delivery : இதுவரைக்கும் எதுவும் உடையல. உடைஞ்சா நாம திருப்பி அனுப்பி அப்புறமா தான் காசு கிடைக்கும். அதெல்லாம் எவ்ளோ நாளாகும்னு தெரியல.
  • Deal/Flash Saleனு பெரும்பாலும் விலைய ஏத்தி இறக்கி சொல்லும் Flipkart/Amazon Lightning மாதிரி தான் இங்கையும். கொஞ்சம் பொறுமையா search பண்ணி பாத்தா நல்ல டீல் கிடைக்கும்.

மார்ச் & நவம்பர்ல இவனுக proper சேல் போடுறாங்கனு நினைக்கிறேன்.

வாங்கின பொருள்கள்லியே best value for money .,

  • Tecsun PL-310ET Full Band Radio : அப்பாவுக்காக வாங்கினேன். வீட்ல இருந்த பழைய ரேடியோல வெறும் கொடைக்கானல் FM மட்டும் தான் வரும். இதுல மதுரை FM எல்லாம் வருது. மொத்தம் 6 FMs.
  • 2.5″ USB 3.0 SATA HDD enclosure : மார்ச் மாச சேல்ல வாங்கினேன். 300 ரூவாக்கும் கம்மி தான்.
  • Used Intel Core 2 Quad Q9400 : இங்க நான் வாங்குன விலைக்கு dual core தான் விக்கிறாங்க. இது Quad.

RPi :
RPi (Raspberry Pi) பழைய வெர்சன் (version 2) ஒரு saleல வாங்கினேன். ஆடியோ ப்ளே பண்ண வாங்கினேன். விடியோவும் பாத்தா என்னனு தோணுச்சி. கண்டிப்பா இது FireTV or Chromecastக்கு ஈடாகாது. ஆனாலும் நல்லா தான் இருக்கு. Raspbian Liteங்றதால எல்லாமே command line. So, not user friendly. 🙂 ஆடியோக்கு இதை அடிச்சுக்க வேற ஆளு இல்லை. ஆடியோ செட்டப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

விடியோ செட்டப்.,

  • OS : Raspbian Lite
  • Softwares (RPi): omxplayer, aria2c, ffmpeg, youtube-dl
  • Software (PC) : MobaXterm
  • HW : External powered USB hub (for HDD)

Powered USB hub கண்டிப்பா வேணும் இல்லைன்னா HDD connect பண்ண முடியாது. USB-SD card reader பயன்படுத்தாலாம் ஆனா அது 1080p HD விடியோவுக்கு திணறுது. பெரும்பாலும் தமிழ்பாறைகள் & யூடியூப்ல இருந்து தான் டவுண்லோட் பண்றது.

தமிழ் பாறைகள் : aria2c பயன்படுத்தி டவுண்லோடு. மேக்சிமம் 700MB தான். பிறகு omxplayer பயன்படுத்தி விடியோ பார்க்க. 700MB விடியோ 640×272 ரெசல்யூசன்ல இருக்கு. என்னோட டிவி Full HD கிடையாது. 1024 x 768 தான். அதனால omxplayerஅ இப்படி குடுக்குறேன்.

sudo omxplayer -b –win 0,100,1023,667 <video file>

Not bad. நல்லா இருக்கு.

Youtube : நல்ல பாட்டுகள 1080pல டவுண்லோடு பண்றேன், youtube-dl பயன்படுத்தி. Command.,

youtube-dl –ffmpeg-location “ffmpeg path” -f “bestvideo[height<=?1080]+bestaudio/best” “youtube link”

இந்த விடியோக்கள பாக்க.,

sudo omxplayer -b –win 0,0,1023,767 <video file>

 

 

Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உளறல்கள் – 10/9/2017

உளறல்கள் – 20/03/2017

இசைஞானி எஸ்பிபிக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டத்தை நெட்டிசன்கள் பிரித்து மேய்கிறார்கள். விஷயம் என்னனு தெரியாம கருத்து சொல்லனுங்ற விதிப்படி நாமளும் எதாவது சொல்லுவோம். ராஜா சார் வீட்டுல சும்மா இருக்கும் கார்த்திக் ராஜா & பவதாரிணி க்ரூப் ராஜாவின் பாட்டுக்கள் மூலம் எப்படி பணம் பண்ண முடியும்னு ஏற்கனவே யோசித்து வச்சது தான். 2015ல அகி ம்யூசிக் & பலர் மீது கேஸ் போட்டாங்க. அப்புறம் ராஜா டிஜிட்டல்னு சொந்த லேபிள்ல பாடல் சிடிக்கள் வெளியிட்டாங்க. நெக்ஸ்ட் டார்கெட் எஃப் எம் ரேடியோஸ் & கச்சேரிகள்ல பாடுறவுங்க. சோ அவுங்க கரெக்ட்டான பாதைல தான் போறாங்க.

இந்த ஐடியாவெல்லாம் ரகுமான் கிட்ட இருந்து தான் கிடைச்சதாம். வாய்க்கு வாய் ரகுமானை வசை பாடும் இந்த ராஜரசிகர்கள், கம்ப்யூட்டர் தம்பி இவ்ளோ வருசாமா பண்றாரு, ராஜா பண்ணுனா மட்டும் வந்துறாய்ங்கனு நெட்டிசன்கள் மீது பாய்கிறார்கள். அதுவுமில்லாம கல்யாணம், கோயில்கள்ல பாட்டு போடுறதுக்கு ராஜா சார் ப்ரீயா குடுத்துட்டாராம். ராயல்ட்டி கிடையாது. ஆனா ரகுமான் அப்படி கிடையாதாம் கல்யாணத்துல ரகுமான் பாட்டு போட்டா ரகுமானின் லாயர்ஸ் ஃபர்ஸ்ட் நைட்டின் போது பொண்ணு & பையனுக்கு நடுவுல வந்து படுத்துக்கிட்டு ராயல்ட்டி குடுத்தா தான் வெளிய போவேன்னு சுத்தமா கறந்துருவாய்களாம்.

எஸ்பிபி கச்சேரிகள்ல ஓசிக்கா பாடுறாரு. லம்ப்பா வாங்குவார்ல, கொஞ்சம் ராஜா சாருக்கு குடுத்தா தான் என்னவாம். ராயல்ட்டின்னா சும்மா இல்ல, ஆடியோ கம்பேனிகள் வருசத்துக்கு 10 கோடி குடுக்குதாம். எஃப் எம்ல எப்படியும் 5 கோடி வரும். கச்சேரி ராயல்ட்டி 2 கோடி, கச்சேரி நடத்துறதுல 3 கோடி. 20 கோடி வருசத்துக்கு.

நம்ம பாட்டன், பூட்டன் சொத்து மூலம் வருசத்துக்கு இவ்ளோ பணம் வந்துச்சின்னா சும்மா இருப்போமா ? #ஐ_சப்போர்ட்_கார்த்திக்ராஜா_பவதாரிணி

எஸ்பிபி பையன், ராஜா சார் குடும்பம் களத்துல இருக்றப்ப வைரமுத்து பையன் மட்டும் சும்மா இருப்பாப்ளயா. ராயல்ட்டில இசையமைப்பாளர், பாடலாசிரியர் & தயாரிப்பாளருக்கு ஷேர் இருக்காம். எங்க நைனா ஷேர் எங்கனு கேக்குறாப்ள. பாடுறவரு ராஜா சொல்லிக் குடுத்த மாதிரி பாடுறாரு, ம்யூசிசியன்ஸ் ராஜா சார் நோட்ஸ்ச வாசிக்கிறாங்க. ஆனா, பாடலாசிரியர் அப்படியில்லையே தானா யோசிச்சி எழுதுறாரு. அதலானால அவருக்கும் ராயல்ட்டி குடுக்கனும். ராஜா சார் & பாடலாசிரியர்க்கு சம்பளம் குடுத்து படம் எடுத்ததால தயாரிப்பாளருக்கு ராயல்ட்டி.

மதன் கார்க்கி நெக்ஸ்டு ராஜா சார்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்னு நம்புவோம். #ஐ_சப்போர்ட்_மதன்_கார்க்கி  ஆல்சோ.

 

Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 20/03/2017

உளறல்கள் – 31/01/2017

மெரினா போராட்டம்

எதாவது கருத்து சொல்லலாம்னா அதுக்குள்ள போராட்டம் முடிஞ்சிருச்சி. ஏகப்பட்ட வாட்ஸ் அப், FB மெசேஜ்களால எத நம்புறது, எத நம்பக்கூடாதுனு தெரிய மாட்டேங்குது.

க்விஸ்

பதில் தெரியாட்டியும் இசை க்விஸ் எல்லாத்தையும் பாத்துர்றது. கானாவோட க்விஸ் 100வது எபிசோட்லியே நிக்கப் போவுது. அப்புறம் போன வருஷம் ராஜா க்வில் சீசன் 4 பாதிலையே நின்னுறுச்சி. அதில் இருக்கும் manual process தான் காரணம்னு நினைக்கிறேன். வேலைப்பளு வந்துட்டா அதுக்கு நிறைய நேரம் ஒதுக்க முடியாது.

அதனால automated processing பண்ணினா என்னனு தோணுச்சி. Posting, approval of comments, uploading audio clip, tagging etc., can be automated as much as possible. மொதல்ல wordpress api படிச்சேன். வெறுத்துட்டேன். எந்த சரியான டைரக்‌ஷனும் கிடைக்கல. நான் படிச்ச வரையும் அது web app க்கானதுனு நினைக்கிறேன். மேலும் அவை (rest api, json api) wordpress சோட distributionனுக்கானது (wordpress.org requiring manual installation and maintenance), not wordpress.com

பிறகு திரும்ப blogger api. It was easy and simple. Able to post, modify post etc., ஆனால் comment moderation பண்ண முடியல. Developer forumல கேட்டா பதில் ஒண்ணையும் காணோம். So, back to wordpress again. இப்ப XML-RPC api பத்தி படிச்சேன். Wow… good. Posting, modify post, comment moderation everything works. ஆனா ஆடியோ அப்லோட் பண்ண முடியல. காசு குடுத்தா தான் இடம் குடுப்பானாம்.

அப்புறம் ஓசில யாரு இடம் குடுப்பானு ஆராய்ஞ்சு, soundcloud waste. Luckily archive.org is working. இனிமே மானே-தேனேனு எழுதி முடிச்சிறலாம். வெட்டி வேலை தான், ஆனா பொழுது போகுது.

இந்த scriptஅ வச்சி க்விஸ் ஆரம்பிக்கலாமா இல்லையானு இன்னும் முடிவு பண்ணல. மக்கள் participate பண்ணுவாங்களானு டவுட்டா இருக்கு.

 

 

Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உளறல்கள் – 31/01/2017

உளறல்கள் – 16/05/2016

நாட்டுல மக்கள்லாம் ஓட்டு போட்டுட்ருக்காங்க. வோட்டர் ஐடி இல்லாததால நாம புதுசா என்னென்ன பதிவு எழுதலாம்னு இருக்கோம்னு ஒரு லிஸ்ட் போட்டா என்னனு தோணுச்சி.

  1. யூடியூப் ஆராய்ச்சிகள் – யூடியூப்க்கு திரும்ப வந்துருக்கேன். புதுசா என்ன பண்றேன்னு சொல்லும் பதிவு.
  2. இசை ஆராய்ச்சிகள் – My journey (mostly missteps) towards cheap audiophile stereo setup.
  3. எம்.எஸ்.வி – ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஜிரா கிட்ட எம்.எஸ்.வி க்விஸ்காக ஒரு லிஸ்ட் குடுத்தேன். அத பதிவா எழுதனும்னு ரொம்ம்ம்ம்ப்ப நாளா ஐ திங்க் பண்ணிட்ருக்கேன்.
  4. ரெண்டு சீரியசான பதிவுகள் – ஆனா என்னனு முடிவு பண்ணல… LOL 😀

 

Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 16/05/2016

உளறல்கள் – 08/03/2015.

இன்னிக்கு “மகளிர் தினம்”. ஒரு புத்தகத்தப் பத்தி சொல்லலாம்னு பார்க்கிறேன். “Taking Charge of Your Fertility“னு ஒரு புத்தகம். நான் ரொம்ப குட்டிப் பையனா இருக்கும் போது படிச்சது. அதாவது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி படிச்சேன்.  பெண்களின் உடற்கூறு பற்றி தெளிவாக எளிதில் புரியும்படி சொல்லியிருப்பார்கள். மாதவிடாய், cycles பற்றி. கருத்தரிக்க முயற்சி பண்ணுபவர்கள், Natural family planning பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

மென்சஸ் பற்றி என் மனைவியிடம் பேசிய போது, “ஐயையோ இத பத்திலாம் பேசக்கூடாது”னு பயந்துட்டாங்க. பின்னர் உனக்கு தெரிஞ்சது பத்தி சொல்லுன்னா, “இது பெண்களுக்கு கடவுள் குடுத்த சாபம், தீட்டு, ஆம்பளைங்க சந்தோசமா இருக்காங்க, அவுங்களுக்கும் இந்த மாதிரி மூணு நாள் தீட்டு வரணும்”னுலாம் டென்சனாகிட்டாங்க. பிறகு நான் படிச்சதுலேயிருந்து எனக்கு புரிஞ்சதச் சொன்னேன். அவருக்கு மென்சஸ் ஏன் வருகிறது என்பது பற்றி தெரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உதிரத்தில் கருத்தரிக்காத பெண்ணின் கருமுட்டை வெளியேறுவது, ஒரு cycleல் ஒரே ஒரு கருமுட்டை மட்டும் Ovaryலே யிருந்து வெளியேறி கருத்தரிப்பிற்காக காத்திருந்து பின்னர் 24 மணி நேரத்திலே மடிந்து விடுவது பற்றி சொன்னேன்.

இப்ப வேற ரொம்ப ஞாபகம் இல்லை. ஆனால் அனைத்து பெண்களும், ஆண்களும் படிக்க வேண்டிய புத்தகம்னு நினைக்கிறேன்.

Twitterல சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல மக்கள் பெண்கள் பற்றி கேனத்தனமாக ட்விட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழ் கூறும் இணைய உலகத்துல கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேருந்து சில பழக்கம் உண்டு. அதுல பெண்களை தரக்குறைவா பேசுவது. அப்புறம் கற்பு, காதல் பற்றி யாராவது பேசினா, “இதையெல்லாம் உன் தாய், தங்கை, மனைவி etc etc., கிட்ட போய் சொல்லுவியா”ம்பாங்க. அட்லீஸ்ட் பொதுவெளியிலாவது பெண்களை நாகரிகமாக நடத்தக் கற்றுக் கொள்ளலாம். ம்ம்… இதே நேரத்துல தான் Nirbhaya caseல defence lawers பெண்கள் பற்றி பிற்போக்குத்தனமா கருத்துகள சொல்லிக்கிட்ருக்காங்க.

பல வருஷத்திற்கு முன் வேலை விஷயமாக சீனாவிற்கு போயிருந்தேன். அது கவர்மன்ட் கம்பேனி அதனால நிறைய Interns இருப்பாங்க. ஆங்கிலத்துல பேசனுங்றதுக்காக பலர் என்னிடம் பேசுவாங்க. எல்லாரும் கண்டிப்பா கேக்குற ஒரே விஷயம் எனக்கு கேர்ல் ஃப்ரெண்ட் இருக்கானு தான். #அவ்வ்வ் அதுக்கு எங்க போறது. கேர்ல் ஃப்ரெண்ட் இல்லேன்னா பயங்கர ஆச்சரிமாகிடுவாங்க. பிறகு தான் சில பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அங்க காதல், கல்யாணம்லாம் Western countries மாதிரி. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும். ஆனா காதல்ல கை ஓங்கியிருப்பது பெண்களிடம் தான். அவுங்க தான் தனக்கு பிடித்த ஆணை தேர்ந்தெடுக்கறாங்க. லவ்வு பண்ண பொண்ணு கிடைக்காம பேச்சிலரா இருந்த அங்கிள்ஸ் சிலரையெல்லாம் காட்டுனாங்க. பாவமா இருந்தது. ஒரு பையன் ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டான், ஐயாம் வெரி லக்கி என் லவ்வர் யூஎஸ்ல பி.ஹெடி பண்ணுது. அவளுக்கு க்ரீன் கார்டு எப்படியும் கிடைச்சிடும், அப்புறம் நானும் போயிடுவேன்னான்.

Actualஆ என்ன சொல்ல வர்றேன்னா. பெண்கள் தங்கள் துணையை அவர்களாகவே தேர்தெடுத்துக் கொள்கிறார்கள். இதனால வெட்டிப் பசங்க, வேலையத்தவுங்க, மூடர்கள் இவுங்களெல்லாம் ஆட்டோமாட்டிக்காக ரிஜெக்ட் ஆகிவிடுகிறார்கள். நம்மாட்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ்ங்ற பேர்ல சுலபமா வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

மனம் விட்டு பேசிப் பழகிய பின்னர் மணவாழ்க்கையில் எற்ற தாழ்வு இருக்காதுனு நினைக்கிறேன். அங்க வீட்டு வேலையெல்லாம் சமமாக செய்ய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வது கூட பெண் ஓகே சொன்ன பின்னர் தான். இங்கேயும் அதே போல் மாற்றம் வரும்னு நினைக்கிறேன். அப்புறம் ஆட்டோமாட்டிக்காக நம்மாட்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்வார்கள். #My opinion _/\_

Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உளறல்கள் – 08/03/2015.

உளறல்கள் – 17-01-2015.

மற்றொரு புது வருஷம். இது தான் எனது to-do list for 2015.,

  1. 99 days twitter break.
  2. 6 half marathons.
  3. 5 kg weight reduction.
  4. Career change.
  5. Cutting unnecessary spending.
  6. Detoxing.

எல்லாமே ஒவ்வொரு வருஷ ஆரம்பத்தில் நினைக்கறது தான். இந்த தடவை கண்டிப்பா கடைபிடிக்கனும்னு பார்க்கிறேன்.

இந்த ட்விட்டர் போதை அடங்க கொஞ்ச நாள் ஆகும். முதல்ல கொஞ்ச நாள் என்னோட ஒரிஜினல் ஐடிலேயிருந்து வேடிக்கை பாத்துட்ருந்தேன். இப்ப அவ்ளவா ட்விட்டர் பக்கம் போறதில்லை. எதப் பாத்தாலும் கருத்து சொல்லனும்ங்ற வெறி இன்னும் ஆறல. ரகுமான் பிறந்த நாள், என்னை அறிந்தால் ரிலீஸ் தள்ளிப் போனது, இளையராஜா கப்பல் படப்பாட்டுக்காக கேஸ் போட்டது போன்ற சரித்திர நிகழ்வுகளுக்கு ட்விட் எழுதனும்னு மூளை அரிச்சிட்ருந்தது.

Professionally 2014 மொக்கையான வருடம். ரொம்ப tension ஆன ப்ராஜெக்ட், அதனால ரன்னிங்ஐ நிப்பாட்டி வச்சிருந்தேன். வெயிட் வேற 5 கிலோ எறிடுச்சி. இந்த தடவை 6 half-marathon ஆவது ஓடனும்னு பார்க்கிறேன். ட்ரெயின் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. 5 கிமீ ஓடுவதற்கே மூச்சு வாங்குது. முக்கி தக்கி 6 half marathonஆவது ஓடுறனும்னு பார்க்கிறேன். போன வருஷம் நிறைய Runners Forum40ன் ஆரம்பத்துல இருக்கற ரன்னர்ஸ் ஹார்ட் அட்டாக்ல போறதா கிட்டத் தட்ட மூணு நாலு நியூஸ் பாத்துட்டேன். 40க்கு வர சில வருஷம் இருந்தாலும் கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. 2013ல நினைத்தவுடனே என்னால் 21 கிமீ ஓட முடியும்னு தைரியம் இருந்தது. அப்படி வர மூணு வருஷம் பிடிச்சது. அத ஒரே வருஷத்துல காலி பண்ணிட்டேன்.

ஒவ்வொரு வருசமும் வெயிட் குறைக்கனும்னு தான் பாக்குறேன். ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியல. இந்த தடவை டூ மச்சு தோப்பை வேறு. சைடு போஸை கண்ணாடில பாத்தா மூணு மாச புள்ளத்தாச்சி மாதிரி இருக்கு.

Career change னா பாக்குற வேலைவிட்டுட்டு வேற வேலை தேடுறதில்லை., அந்த வீரம்லாம் போயி ரொம்ப நாளாச்சி. Pink slipலேயிருந்து எப்படியாவது தப்பிச்சி பொழப்ப ஓட்டனும்ங்றது தான் இப்ப இருக்கும் லட்சியம். எதுக்கும் preparedடா இருக்கனும்லையா. வேற எதாவது பண்ணியாகனும்னா எதாவது ஐடியா இருக்கனும். ஒரு ஐடியாவும் இல்ல. அட்லீஸ்ட் இந்த வருஷம் வேற எதாவது யோசிக்கவாச்சும் செய்யனும்.

போன வருஷம் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க நினைச்சி ஏகப்பட்ட வெட்டிச் செலவு. Vinyl records, Record player, Preampனு. ஆனா எதையும் பயன்படுத்ற நிலமைல இல்ல. இந்த வருஷமாவது இசையிலிருந்து தள்ளி இருக்கனும்.

ரொம்ப நாளா யோசிச்சிட்ருக்றது, detoxingபண்றது பத்தி. கஷ்டமான டயட்லாம் இல்லாம, ஜூஸ், Veggies, soup, போன்ற நீராகாரமா ஒரு வாரமா எடுத்து detox பண்ணனும். அடுத்து cleaning the gut. இது ஒண்ணுமில்ல பேதி மாத்திரை சாப்புடுறது மாதிரி தான். வாரத்தில் ரெண்டு நாள் சமைக்காத உணவா சாப்பிடனும்னு ஒரு ஆசை. அட்லீஸ்ட் பால், சீனி, காபி, அரிசி சாதம்லாம் இல்லாமல். அதுக்கு ஹவுஸ் ஓனர்கிட்ட பர்மிஷன் வாங்கனும்.

ஒலகசினிமா – 2014

Ballad Of Narayama(1958) : ஜாப்பனீஸ் படம். நெட்ல ரொம்ப உருகியிருந்தாங்க. உருக்கும் கதை தான். அதாவது பழங்காலத்துல ஏழை மக்கள் வயதானவர்களை கவனிக்க முடியாத போது வீட்டில் இருப்பவர்களே அவர்களை ஒரு மலை உச்சி சென்று விட்டு விடுவார்கள். முதியவர்கள் அங்கேயே இறக்க வேண்டியது தான். எனக்கு அவ்ளவாக பிடிக்கவில்லை.

Little Miss Sunshine (2006) : ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம், தங்கள் குட்டிப் பொண்ணை Little Miss Sunshine போட்டியில் பங்கேற்க வைக்கும் கதை. க்ளைமாக்ஸ் வேஸ்ட். சுமார் படம்.

Chungking Express (1994) : இதுவும் நெட் ரிவ்யூ படிச்சு ஏமாந்த படம். வேஸ்ட்.

Still Walking (2008) : ஜாப்பனீஸ் படம். ரொம்ப சாதரணமான கதை தான். மகன் தான் கல்யாணம் பண்ணவிருக்கும் விதவை பெண் & அவளின் மகனோடு தன் பெற்றோரை சந்திக்க வருகிறார். அற்புதமான லொகேஷன்கள். எனக்கு பிடிச்சிருந்தது.

Solaris (2002) : Scifi movie, எனக்கு புரியவில்லை. மரண மொக்கை.

Spring Summer Fall Winter And Spring (2003) : Kim Ki Dukன் கொரியன் படம். நல்ல லொகேஷன். புத்த பிட்சுவிடம் இருக்கும் பையன் பற்றிய கதை. சுமார்.

Ok. short list.

Awesome (can watch)

  • Before Sunset (2004)
  • Driving Miss Daisy (1989)
  • Once Upon a Time in the West (1968)
  • Lock Stock and Two Smoking Barrels (1998)
  • Mary and Max (2009)
  • In the Loop (2009)
  • City Girl (1930)
  • WALL-E (2008)
  • On Golden Pond (1981)
  • Unforgiven (1992)
  • A Clockwork Orange (1971)
  • Forbidden Planet (1956)
  • Vertigo (1958)
  • 28 Days Later (2002)
  • The Great Escape (1963)
  • 12 Angry Men (1957)
  • The Three Faces of Eve (1957)
  • Shutter Island (2010)
  • Le Samourai (1967)
  • Still Walking (2008)
  • Rosemarys Baby (1968)
  • The Wicker Man (1973)
  • Tokyo Story (1953)
  • Spoorloos (1988)
  • Pan’s Labyrinth(2006)

மொக்கை (better to avoid)

  • Taxi Driver (1976)
  • Before Sunrise (1995)
  • Reservoir Dogs (1992)
  • The Machinist (2004)
  • Event Horizon (1997)
  • The Thing (1982)
  • Spring Summer Fall Winter And Spring (2003)
  • Solaris (2002)
  • Chungking Express (Wong Kar-Wai, 1994)
  • Little Miss Sunshine (2006)
  • Ballad Of Narayama(1958)

இசை

சும்மா ஒரு வீம்புக்காக அனிருத் சூப்பர் வாழ்கனு ட்விட்டர்ல கோஷம் போட்டுட்ருந்தேன். காலத்தின் கட்டாயமாக கத்திபடம் தியேட்டர்ல பாக்க வேண்டியதிருந்தது.. நிச்சயமாக பிஜிஎம் awesome. சூது கவ்வும்லேயிருந்தே சந்தோஷ் நாராயணன் இசை மீது ஆர்வம் இருந்தது. இப்ப பொங்கலுக்கு விஜய் டிவில ஜிகர்தண்டா பார்த்தேன். மனுஷன் பின்னி எடுத்துருக்கான்யா. மாஃபியா கும்பல் அது காபி கீபினு வந்துருவாங்க. இருக்கட்டுமே, அதனாலென்ன. அனிருத் & சந்தோஷ் நாராயணன் தான் அடுத்த தலைமுறையின் இசையமைப்பாளர்கள். யுவன் வரைக்கும் இருந்த அனைத்து இசையமைப்பாளர்களும் ரிட்டையர் ஆகவேண்டிய தருணமிது. யுவன் உட்பட.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே‘ (The passing of the old the ascendance of the new is the unchanging order of time)

Figure ஆராய்ச்சி – 2014.

போன வருஷம் ரொம்ப ஆராய்ச்சி பண்ண முடியல. இருந்தாலும்.,

Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 17-01-2015.

உளறல்கள் – 26/09/2014.

எனது ட்விட்டர் பயோல உளறினது. சுயசரிதை எழுதும் போது தேவைப்படும்.

  • இங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஹேட் எ டாங்க்கி, டாங்க்கி டைட் ஃபாதர் க்ரைட் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • புள்ளி வைத்த இடங்களில் இலவசமாக கோலம் போடப்படும் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • எது என்னுதோ அது உன்னுது. எது உன்னுதோ அது என்னுது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • பர்ஸ்சின் கனம் அறிந்து பிச்சை எடு…!! – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு வடக்கு திசையிலிருந்து ஒரு சுபச் செய்தி வரும் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • யதோ யதோ கவாசாகி அதோ அதோ மிட்சுபிஷி – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன என்ற மந்திரத்தை மறவாதீர்கள் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை -மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்
  • தற்போது தூங்கிக் கொண்டே, வேலை செய்து கொண்டே ட்வீட்டுபவர் உங்கள் மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • ஆசி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • இந்தா பிடி சாபம்… போ…!! தொண்டை கேன்சர் வந்து தான் சாவாய்… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • உடம்பு என்பது உண்மையில் என்ன ? கனவுகள் வாங்கும் பை தானே… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • எனக்கு கடவுளைத் தெரிந்திருப்பது முக்கியமில்லை. கடவுளுக்கு என்னைத் தெரிந்திருப்பது தான் முக்கியம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா என்று வேத உபநிஷத்து கூறுகிறது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • கர்த்தரிடம் சீக்கிரமா பூமிக்கு வாங்கன்னேன், நீ சீக்கிரமா மேல வா னு சொன்னார் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • Life is just another wasted opportunity… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • பாடிகாட் முனீஸ்வரனிடம் பேசிக் கொண்டிருந்த போது மேலோகத்திலும் நதி நீர் பிரச்சனை இருப்பதாக கூறினார் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • Multiple Orgasms is the solution to all worldly problems… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • நிறைய followers கிடைக்க மந்தரித்த தாயத்து அனுப்பப்படும். ரூ.1001 M.O செய்யவும். – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • யாமறிந்த துண்டுகளிலே குற்றாலத் துண்டு போல் வேறெதையும் காணோம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • பெண்கள் குடிப்பதில் தவறில்லை, ஆனால் வீதியில் மயங்கி விழுந்து கிடக்கக் கூடாது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • Dec-21, 2012ல உலகம் அழியாது, ஆனா Home Loan Interest Rate 25% ஆகிடும். – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • தப்பெல்லாம் தப்பே இல்லை, சரியெல்லாம் சரியே இல்லை. தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • அனைவரிடமும் இதயம் இருக்கிறது, சிலரிடம் தான் அதில் அன்பு இருக்கிறது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • தோசை சுடும் போது கருகினால், அது தோசையின் குற்றமல்ல, கேஸ் அடுப்பின் குற்றம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • Commentஏ இல்லாத அடுத்தவன் codeஐ, எவன் புரிஞ்சுக்கிட்டு bug fix பண்றானோ அவன் தான் கடவுள் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • உரிச்சுப் பாத்தா வெங்காயத்துல ஒண்ணும் இருக்காது. ஆனா கண்ணு எரியும் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன், கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • Code எழுதுவதால் நானும் இறைவனே… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • ஹிஹி… உங்களையெல்லாம் கலாய்ப்பதற்கே யாம் Higgs bosonஐ அனுப்பி வைத்து சித்து விளையாடினோம்… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • கரும்புன்னா இனிக்கும், பாவக்காய்ன்னா கசக்கும். புளியங்காய்ன்னா புளிக்கும். இது தான் வாழ்க்கை. – ஶ்ரீலஶ்ரீ ஶ்ரீ.ஶ்ரீ.ஶ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
  • ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்… கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா ?
  • ரோசு ரோசு ரோசு… அழகான ரோசு நீ… பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ… – புலவர் ஓணாண்டி
  • நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
  • Secret is the boost of my energy…!!
  • ட்ராபிக் சிக்னல்ல பல்சர் 15 sec முன்னாடி வந்து நிக்குது, டிவிஎஸ்-50 15 sec லேட்டா வந்து நிக்கிது. பச்சை சிக்னல் போட்ட உடனே ரெண்டும் ஒரே நேரத்துல தான் போகுது…
  • வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்…
  • யாரோட ட்விட் படிச்சா பொறி கலங்கி பூமி அதிர்றது உடம்புல தெரியுதோ அவன் தான்டா… கூமுட்டை
  • முட்டை வழியா கோழி பொறக்கும்… கோழி வழியா முட்டை பொறக்கும்…
  • 67, Married, Teetotaller, CTO of a startup, Ambitious, Hardworking, Caring, Passionate, Straight forward, Friendly, Jovial, Liar, Energetic Simple person…
  • 27, Bachelor, Teetotaller, CTO of a startup, Ambitious, Hardworking, Caring, Passionate, Straight forward, Friendly, Jovial, Liar, Energetic Simple person…
  • என்கிட்ட இருக்கிறதை எடுத்துக் கொடுக்கிறேன் பாக்கியம்ன்னோ, பிச்சைன்னோ, இல்ல நான் வாங்கின கடன் என்றோ எப்படினாலும் எடுத்துக் கொள்ளட்டும்…
  • நல்லவன் எனக்கு நானே நல்லவன்… சொல்லிலும், செயலிலும் நல்லவன்… உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை… ஊருக்கு தீமை செய்தவனில்லை…
  • இசை என்னும் இன்ப வெள்ளத்தில் வாலன்டியராக தொபுக்கடீர்னு விழுந்து கடப்பாரை நீச்சலடிப்பவன். லண்டன் இசைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவன். இசை விற்பன்னன்…
  • இசை எங்கேயிருந்து வருது தெரியுமா ? கீழ இருக்கிற ட்விட்லேயிருந்து வருது…!!
  • Indian Born Confused Alien… தொடர்புக்கு 044-40504050 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்…
  • புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
  • வென் யூ ஆர் ரெடி, ஐ வில் அப்பியர்…
Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 26/09/2014.

உளறல்கள் – 08-09-2014.

உலக சினிமா

நேத்து என் ட்விட்டர் ஃப்ரொஃபைல் படத்தை totoro_by_joao_sembe-d3f4l4xஇந்த படமாக மாற்றினேன். யாரும் ஏன், எதுக்குனு கேக்கல. 😉 அதனால விட்டுற முடியுமா. ப்ளாக் எதுக்கு இருக்கு, எழுதித் தள்ளுவோம்.

அனிமேஷன் படம் எல்லாத்துக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். டாம் & ஜெர்ரி, பாப் ஐ, டொனால்ட் டக், ரோட் ரன்னர், ஜானி ப்ராவோ இதெல்லாம் சின்ன வயசுல ரசிச்சி பார்த்ததுண்டு. “பெருசு” ஆனப் பிறகு, இதையெல்லாம் பார்ப்பதை விட்டாச்சி. அப்புறம் Disney/Pixar’s Toy Story, Lion King, Finding Nemo லாம் பார்த்து ரசிச்சாச்சி.

2007ல் னு நினைக்கிறேன், யூடியூபை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது. “My Neighbour Totoro” ட்ரைலரைப் பார்த்தேன். ஒரு விதமான childish happiness ஐ உண்டாக்கியது. பிறகு முழுப் படத்தையும் டவுண்லோடு பண்ணிப் பார்த்தேன். அப்புறம் அதன் டைரக்டர் Hayao Miyazaki பற்றியும் தேடிப் படித்தேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவரது படங்கள் பெரும்பாலும் கையால் வரைந்து செய்யப்படும் அனிமேஷன் படங்கள்.

அப்புறம் அவர் டைரக்ட் செய்த அனைத்து படங்களையும் பார்த்தாச்சி. அவரின் படங்களின் முன் Disney/Pixarன் படங்களெல்லாம் குப்பைகள் (“Up”ஐ தவிர்த்து).

Grandeur imagination, fantasy, vibrant colors, attention to detail, films with a message இதெல்லாம் தான் ஹைலைட். பெரும்பாலும் பெண்கள் தான் ஹீரோயினாகவோ இல்லை வில்லனாகவோ இருப்பார்கள். பறக்கும் தீம் எல்லாப் படத்திலும் இருக்கும். அட்காசமான இசை. சொல்லுவதற்கு வேறு ஒண்ணும் தோணல. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்க.

நான் ஜப்பானிய ஆடியோ + சப்டைட்டிலோடு பார்ப்பது வழக்கம். ஆங்கில ஆடியோ மொக்கையாக இருக்கும். சில படங்களில் க்ளைமாக்ஸ் கொஞ்சம் கடியாக இருந்தாலும், அனைத்தும் படங்களும் ரசிக்கக் கூடியவையே.

இங்கே, இங்கே அவரின் படைப்புகளின் சிலாகிப்புகளை படிக்கலாம். இங்கே அருமையான ரிவ்யூக்கள் இருக்கின்றன. Hayao Miyazakiக்கு 73 வயசாகிவிட்டதால் ரிட்டையராகிவிட்டார். இனிமேல் அவர் டைரக்‌ஷனில் படம் வராது.

எனது லிஸ்ட்.

  1.  My Neighbor Totoro
  2. The Wind Rises
  3. Nausicaä of the Valley of the Wind
  4. Kiki’s Delivery Service
  5. Castle in the Sky
  6. Porco Rosso
  7. Princess Mononoke
  8. Howl’s Moving Castle
  9. Ponyo
  10. Spirited Away

animation-master-hayao-miyazaki-retires-from-feature-filmmaking-header

Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உளறல்கள் – 08-09-2014.

சொசெசூ – 07-09-2014.

          போன பதிவுல நான் என்ன எழுதியிருக்கேன்னு எனக்கே புரியல. சிலர் “ஐடி தொழில் அவ்ளோ தானா, அழிஞ்சிருமா”ங்ற ரேஞ்சில என்கிட்ட கேட்ருந்தாங்க. நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்ல. இருந்தாலும் சொல்ல வர்றத தெளிவா மீண்டும் சொல்லிடலாம்னு பார்க்கிறேன். சொந்த கருத்து தான். அதனால திட்றதுன்னா, இந்த ப்ளாக ஏன் படிச்சோம்னு நீங்களே உங்கள திட்டிக்கோங்க… 🙂

          இந்தியன் ஐடி துறைங்றது பெரும்பாலும் mediocre talented மக்களை வைத்து செய்யும் தொழில். இது நம்ம பாஸ்கள், அவர்களின் பாஸ்கள் (வெள்ளக்காரன்) எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். அதனால தான் வேலை செய்யறவனை விட, வேலைய செய்ய வச்சி முடிச்சி காட்டுறவனுக்கு (மேனேஜர்) தான் மதிப்பு அதிகம்.

ட்விட்டர், ப்ளாக்லலாம் கெக்கே பிக்கேனு உளறியிருந்தாலும் ExtrovertVSIntrovertஎன்னுடைய குணம் என்பது shy & introvertக்கும் நடுவுல வர்றதுனு நினைக்கிறேன். மேனேஜர் ஆவதற்கு சற்றும் பொருந்தாத குணம் அது. அதனால தான் ரொம்ப பொலம்பிட்டேன்னு நினைக்கிறேன். அதுவுமில்லாம என்னுடைய ஆதர்சங்கள்லாம் programmingல் சூரப்புலிகள். அதனால மேனேஜர் ஆவதற்குரிய தகுதிகளை வளர்த்துக்காமல் இருந்துவிட்டேன்.

அதனால என்ன சொல்ல வர்றேன்னா (சீக்கிரம் சொல்லித் தொலைக்கிறது).

  • 5+ வருடங்கள் experienceக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மேனேஜர் தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
  • மேனேஜிங் என்பது அனுபவம் + திறமையால் வருவது.
  • இங்கே மேனேஜர் பற்றி கொடுத்துள்ளார்கள். Theoretical தான். அதில் கூறியபடி ஒரு தகுதி வாய்ந்த மேனேஜரை பார்ப்பது அரிது.
    டெக்னிகல் அறிவு இல்லாமல் மேனேஜராக இருக்க முடியும். ஆனால் டீம்ல மதிப்பு இருக்காது. அதனால அப்பப்ப ப்ராஜெக்ட் பற்றிய அறிவு மழுங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
  • DK Publishingல் Essential Managersனு ஒரு seriesஏ இருக்கிறது.
  • டீம்ல் இருக்கும் அனைவராலும் விரும்பப்படும் மேனேஜராக இருப்பது ரொம்ப கடினம். சில சமயம் @இட்ஸ்ப்ரசாந்த் ஆகக் கூட வாய்ப்பு இருக்கிறது (வர்றவன், போறவன்லாம் கலாய்ப்பான்). ஆனாலும் execution தான் முக்கியம். எடுத்த ப்ராஜெட்டை எப்பாடுபட்டாவது (டீம்ல ஒரு சில மாங்கா மடையர்கள் இருந்தாலும்) முடிக்க வேண்டும்.
  • Ok, finally. A successful manager gets 3x of his highest paid team member.

சரி, சொசெசூ (சொந்த செலவில் சூனியம்) மேட்டருக்கு வருவோம்.

         இசைஞானி ரசிகர்கள் தான் தமிழ் இணையவெளியில் நீக்கமற நிறைந்துள்ளார்கள். Blog  ஃபேமஸ் ஆக இருந்த காலத்துல இசை வெறி ஏத்திக்கனும்னா சில குறிப்பிட்ட ப்ளாக்களை படித்தால் போதும். இப்ப ட்விட்டர்ல ராஜா + ரகுமான் (ஏன் ரகுமானோட சண்டைனு எனக்கு இன்னும் புரியறதில்லை) அப்பப்ப வரும். ட்விட்டர்ல எல்லாமே சீசன் தான். விஜய்+தல சீசன் கொஞ்ச நாள் ஓடும், பிறகு பெண்ணியம், கிரிக்கெட், உலக சினிமா, லெக்கிங்ஸ் தேவையா இல்லியா, சும்மா கலாய்த்தல். ராஜா+ரகுமான் அப்பப்ப வந்து போகும்.

          அவுங்கவுங்க க்ரூப்ல கலாய்த்துக் கொண்டாலும், சில சமயம் “பூனைக்குட்டி வெளியே வந்தது”ங்ற மாதிரி ராஜா க்ருப் மற்றவர்களை “லோ க்ளாஸ், ஞான சூனியங்கள், தத்திகள்”னு வசை பாடுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை, அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது நினைப்பேன். ராகம், ஸ்வரம், இன்ன பிறனு பிரித்து ஆராய்ந்து ரசிப்பதும் ஒரு கலை தான். ஆனால், அது தெரியாதவர்களை மட்டமாக எண்ணக் கூடாதில்லையா. இளையராஜா இசையமைப்பது இசை பற்றி தெரியாத பாமரனுக்கு தான். அவன் தான்  காசு குடுத்து டிக்கட் வாங்கி, படம் பார்த்து இளையராஜாவை இந்த நிலமையில் வைத்துள்ளான். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….

          சரி, மெயின் மேட்டருக்கு வருவோம். ரொம்ப  காலத்துக்கு முன்னாடி நானூறு கேசட்கள் வைத்திருந்தேன். பல்வேறு காரணத்தினால் எல்லாமே அபேஸ் ஆகிவிட்டன (பெரும்பாலும், கேட்டுட்டு குடுத்துற்ரேன்னு, திரும்ப வராது). அப்புறம் ஒரு அட்டை பெட்டி ஃபுல்லா வீடு மாறும் போது தொலைந்து விட்டது.

          திரும்ப கலெக்‌ஷன்சை ஆரம்பினும்னா இணையத்தில் டவுண்லோடனும். அது பெரும்பாலும் குப்பைதான். MP3 வந்த காலத்தில், சிறந்த தரம்னு 128kbpsல ரெக்கார்டு பண்ணியிருப்பாங்க.

          கொஞ்ச வருஷத்திற்கு முன்னாடி தான் இளையராஜா Agi Musicங்ற கம்பேனிக்கு தன் முழு creation களை விற்பனை செய்ய உரிமம் கொடுத்திருந்தார். அவுங்க கொஞ்ச MP3 சிடிக்களை வெளியிட்டாங்க. தரம் நன்றாக இருந்தது. ஆனால் soundcloudல் raja4ever கொடுக்கும் தரம் போல் இல்லை.

          அப்புறம் திடீர்னு அவர்கள் ஆன்லைன் only modeக்கு போய்விட்டார்கள், அதாவது iTunesல் மட்டும் தான் வாங்க முடியும். iTunes என்ன மாதிரியான எழவு என்றால் அது பாட்டை Apple productsல் மட்டும் தான் ப்ளே ஆக விடும். DRM shit. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் சிடி வெளியிட்ட மறுநாளே டாரண்ட் வெளியே வந்துவிடும். பிறகு அவர்கள் என்ன செய்வார்கள். Piracy killed music industry. Now music industries are killing music.

          இப்பொழுது இளையராஜா குடும்பம் Agi music மேல கேஸ் போட்டுள்ளது. ராயல்டி கொடுக்கவில்லையாம். இது எப்ப முடியும்னு தெரியவில்லை. சிலகாலமாக LPயில் பாட்டுகள் கேட்க ஆரம்பித்துள்ளேன். இவையெல்லாம் அந்தக் காலத்துல ம்யூசிக் ரெக்காட்டிங் ஸ்டுடியோ வைத்துள்ளவர்கள் தள்ளிவிடும் ரெக்கார்டுகள். பெரும்பாலும் தேய்ந்து போய் தான் இருக்கும். சில மிக நல்ல தரத்தில் இருக்கிறது.

          அதே தரத்தில் ராஜாவின் அனைத்து பாடல்களையும் கேட்க முடியுமானு தெரியவில்லை. அதற்கான முயற்சியும் நடக்கிறதான்னும் தெரியல. இப்ப புதுசா இளையராஜா ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளார்கள். எனக்கென்னமோ இளையராஜா குடும்பம் Agi musicன் ரைட்சை கேன்சல் செய்துவிட்டு அவர்களே iTunesல் வெளியிடுவார்கள்னு நினைக்கிறேன். iShit வைத்திருக்காதவன் கதி என்ன ?

          Audio steganography என்று ஒன்று இருக்கிறது. இளையராஜா ரசிகர் மன்றத்தின் மூலமாக Audio steganography enabled high quality audio வை நேரடியாக விற்பனை செய்யலாம். நடக்குமானு தெரியல. இணையத்தில் முஷ்டியை முறுக்கும் மாஃபியா ரசிகர்கள், அனைவருக்கும் இளையராஜாவின்  இசை, நல்ல தரத்தில் கிடைக்கச் செய்யும் உருப்படியான முயற்சியில் இறங்கலாம். நல்ல தரத்தில் கொடுத்தால் கண்டிப்பாக மக்கள் காசு கொடுத்து வாங்குவார்கள்.

          இளையராஜா செய்த அற்புதங்களை, ஆடியோ தரமற்ற யூடியூபில் கேட்கும் நிலையுள்ளது. எ.டு ஒன்னும் தெரியாதா பாப்பா, வருது வருது விலகு விலகு, அட மச்சமுள்ள மச்சான். மேற் சொன்ன பாடல்களிலெல்லாம் ஞானியார் அடி பின்னி எடுத்திருப்பார். எனக்கு இன்னும் அந்த ரெக்காட்டுகள் கிடைக்கவில்லை. அந்த பாடல்களையெல்லாம் உயர்ந்த க்வாலிட்டியில் கேட்காமலேயே போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்று கவலையாக உள்ளது.

Posted in உருப்படாதது, உளறல். Comments Off on சொசெசூ – 07-09-2014.

ரொம்ப நிறைய புலம்பல்கள் – 13/04/2014

வாழ்க்கை வழக்கம் போல சோகமா போயிட்ருக்கு. பொதுவா ஃபீல்ட் அவுட் ஆகுற நடிகர்கள் சொல்றது என்னான்னா.,

  •     நல்லவுங்க யாருனு தெரியாம எல்லாரையும் நம்பினேன்.
  •     கஷ்டம்னு வரும் போது தான் மற்றவர்களின் சுயரூபம் தெரியுது.

இது போதாதுனு “கஷ்டம் வந்தா தனியா வராது. சொந்தக்காரங்க பலரை சேத்துக்கிட்டு ஒட்டு மொத்தமா வரும்”னு ஒரு general rule வேற இருக்கு. இதெல்லாம் அடுத்தவுங்களுக்கு நடந்தா அட்வைஸ் பண்ணிட்டு போய்ட்டே இருப்போம். நமக்கு நடந்தா, #அவ்வ்வ்…. டூ மச் ப்ராப்ளம்ஸ். சோ, இதெல்லாம் எப்படியும் முடிஞ்சிரும்னு நம்பிக்கையோட வாழ்க்கை போயிட்ருக்கு.

Procrastination நம்ம கூடப் பிறந்த சொத்து. எப்படியும் நடக்கும்னு தெரியும், இருந்தாலும் ஒண்ணும் பண்ணாம இருப்பது நம்ம ஸ்டைல். இந்திய சாஃப்ட்டுவேர் கம்பேனிகளுக்குன்னே ஒரு தர்மம் இருக்கு. அதாவது 5 வருஷத்துக்கு மேல எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா ஜூனியர் மேனேஜராகவாவது ஆகியிருக்கனும். ஆனா, நமக்கும் மேனேஜர் போஸ்ட்டுக்கும் ரொம்ப தூரம். பொதுவா காஃபிடேரியாக்களில் நடக்கும் மேனேஜர்களை கழுவி ஊற்றும் விவாதங்களில் நம்ம கருத்து தான் நிறைய இருக்கும். எல்லாம் தெரிஞ்சே நாம எப்படி மேனேஜர் ஆகுறது. ஆனா விதி வலியது இல்லியா. எதுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் டபுள் டிஜிட் அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவை மேனேஜர் போஸ்ட் ட்ரை பண்ணனும்னு ஒரு இந்திய கம்பேனியில் ஜாயின் பண்ணினேன். உஸ்ஸ்ஸ்… மரண அடி. யாராவது ஒருவருக்கு கூட நல்லவனாக இருக்க முடிதாத நிலை. விலகிவிட்டேன்.

இப்ப மீண்டும் பட்டி, டிங்கரிங் பார்க்கும் வேலை. டபுள் டிஜிட் எக்ஸ்பீரியன்ஸ்டு சாஃப்ட்வேர் இஞ்சினியர் என்பது இந்தியாவைப் பொருத்த வரையில் கையறு/முதிர்கன்னி நிலை. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. ஏற்கனவே மேனேஜர் வேலை பார்த்திருப்பதால் கொஞ்சம் இன்சைடர் வேலை தெரியும். இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்ல ஒருத்தனுக்கு பதில், மூணு கத்துக்குட்டிகளிடம் வேலை வாங்கலாம். தக்கி முக்கி எப்படியாவது வேலையை முடித்துவிடுவார்கள். அவர்களை மேய்க்க ஒரு டெக் லீட்னு ஒருத்தனை போட்டால் ஒரு முழு டீம் கிடைத்துவிடும். எப்ப இந்த மாதிரி யோசிச்சி என்னைய வேலைய விட்டு அனுப்ப போறாய்ங்களோ தெரியல. ஆனா இந்த மாதிரி “ஙே” நிலமைல மாட்டுறது புதுசில்லை. எப்படியோ கைய ஊன்றி கரணம் பண்ணி தப்பிச்சிடுவேன். இப்ப எப்பிடியாகுதுனு பார்க்கலாம். இதுல வேற புதுசா வீட்டுக்கடன் வேற. காலம் போன காலத்துல புது வீடு.

சாஃப்டுவேர் வேலைல தாக்குபிடிக்கிறக்கு ஒரு தனித்திறமை வேண்டும். ஒரு காலத்துல அதை கிண்டலடிச்சாலும்,இப்ப அது ஒரு திறமைனு தான் தோணுது. Being creative in doing jalra & projecting yourself high.

  •     சின்ன வேலை செஞ்சிட்டு, பெருசா சாதிச்சா மாதிரி சொல்லிக் கொள்வது.
  •     சின்ன சின்ன progressஐக் கூட எல்லாரிடமும் காட்டுவது.
  •     மீட்டிங்கில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நிறைய பேசுவது.

சுருங்க சொல்லனும்னா, டீம்மில் பெரியாளாக காட்டிக் கொள்வது. இதுக்கெல்லாம் கண்டிப்பாக தனி மூளை தேவை.

உஸ்ஸ்ஸ்… வருங்காலம் கஷ்டகாலம்னு தெளிவாத் தெரியுது.

Posted in உருப்படாதது, உளறல். Comments Off on ரொம்ப நிறைய புலம்பல்கள் – 13/04/2014
%d bloggers like this: