இசைஞானி எஸ்பிபிக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டத்தை நெட்டிசன்கள் பிரித்து மேய்கிறார்கள். விஷயம் என்னனு தெரியாம கருத்து சொல்லனுங்ற விதிப்படி நாமளும் எதாவது சொல்லுவோம். ராஜா சார் வீட்டுல சும்மா இருக்கும் கார்த்திக் ராஜா & பவதாரிணி க்ரூப் ராஜாவின் பாட்டுக்கள் மூலம் எப்படி பணம் பண்ண முடியும்னு ஏற்கனவே யோசித்து வச்சது தான். 2015ல அகி ம்யூசிக் & பலர் மீது கேஸ் போட்டாங்க. அப்புறம் ராஜா டிஜிட்டல்னு சொந்த லேபிள்ல பாடல் சிடிக்கள் வெளியிட்டாங்க. நெக்ஸ்ட் டார்கெட் எஃப் எம் ரேடியோஸ் & கச்சேரிகள்ல பாடுறவுங்க. சோ அவுங்க கரெக்ட்டான பாதைல தான் போறாங்க.
இந்த ஐடியாவெல்லாம் ரகுமான் கிட்ட இருந்து தான் கிடைச்சதாம். வாய்க்கு வாய் ரகுமானை வசை பாடும் இந்த ராஜரசிகர்கள், கம்ப்யூட்டர் தம்பி இவ்ளோ வருசாமா பண்றாரு, ராஜா பண்ணுனா மட்டும் வந்துறாய்ங்கனு நெட்டிசன்கள் மீது பாய்கிறார்கள். அதுவுமில்லாம கல்யாணம், கோயில்கள்ல பாட்டு போடுறதுக்கு ராஜா சார் ப்ரீயா குடுத்துட்டாராம். ராயல்ட்டி கிடையாது. ஆனா ரகுமான் அப்படி கிடையாதாம் கல்யாணத்துல ரகுமான் பாட்டு போட்டா ரகுமானின் லாயர்ஸ் ஃபர்ஸ்ட் நைட்டின் போது பொண்ணு & பையனுக்கு நடுவுல வந்து படுத்துக்கிட்டு ராயல்ட்டி குடுத்தா தான் வெளிய போவேன்னு சுத்தமா கறந்துருவாய்களாம்.
எஸ்பிபி கச்சேரிகள்ல ஓசிக்கா பாடுறாரு. லம்ப்பா வாங்குவார்ல, கொஞ்சம் ராஜா சாருக்கு குடுத்தா தான் என்னவாம். ராயல்ட்டின்னா சும்மா இல்ல, ஆடியோ கம்பேனிகள் வருசத்துக்கு 10 கோடி குடுக்குதாம். எஃப் எம்ல எப்படியும் 5 கோடி வரும். கச்சேரி ராயல்ட்டி 2 கோடி, கச்சேரி நடத்துறதுல 3 கோடி. 20 கோடி வருசத்துக்கு.
நம்ம பாட்டன், பூட்டன் சொத்து மூலம் வருசத்துக்கு இவ்ளோ பணம் வந்துச்சின்னா சும்மா இருப்போமா ? #ஐ_சப்போர்ட்_கார்த்திக்ராஜா_பவதாரிணி
எஸ்பிபி பையன், ராஜா சார் குடும்பம் களத்துல இருக்றப்ப வைரமுத்து பையன் மட்டும் சும்மா இருப்பாப்ளயா. ராயல்ட்டில இசையமைப்பாளர், பாடலாசிரியர் & தயாரிப்பாளருக்கு ஷேர் இருக்காம். எங்க நைனா ஷேர் எங்கனு கேக்குறாப்ள. பாடுறவரு ராஜா சொல்லிக் குடுத்த மாதிரி பாடுறாரு, ம்யூசிசியன்ஸ் ராஜா சார் நோட்ஸ்ச வாசிக்கிறாங்க. ஆனா, பாடலாசிரியர் அப்படியில்லையே தானா யோசிச்சி எழுதுறாரு. அதலானால அவருக்கும் ராயல்ட்டி குடுக்கனும். ராஜா சார் & பாடலாசிரியர்க்கு சம்பளம் குடுத்து படம் எடுத்ததால தயாரிப்பாளருக்கு ராயல்ட்டி.
எல்லா சோசியல் மீடியா ப்ரபல குண்டு அங்கிள்ஸ் & ஆன்ட்டீஸ் பேலியோவ முயற்சி பண்ணி அதை பாப்புலர் ஆக்கிட்ருக்காங்க. நாமளும் சும்மா இருப்போமா…!! பேலியோ ஆரம்பிச்சு, 3 மாசம் முடிஞ்சு, 1 வாரம் ப்ரேக் எடுத்துட்டு மீண்டும் கொஞ்ச நாளா பேலியோ. எப்படி இருக்குனு கேட்டா., சிம்பிளா in summary., It works like magic. குண்டா (obese) இருக்றவுங்களுக்கு பேலியோவ விட்டா வேற வழி இருக்றதா எனக்கு தெரியல.
நான் குண்டு கிடையாது. BMI chart படி overweight. நான் BMIய நம்புறது கிடையாது. அதன் Normal வெயிட் படின்னா நான் ஓமக்குச்சி மாதிரி ஆனாத் தான் உண்டு. அதனால beginning of overweight தான் என் டார்கெட். அதுக்கு அஞ்சு கிலோ குறைச்சா போதும். கொஞ்சம் overheadக்காக ரெண்டு கிலோ சேத்து ஏழு கிலோ குறைக்கலாம்னு நினைச்சேன்.
எல்லாரையும் போல எனக்கும் சந்தேகம் உண்டு. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கிண்டலாத் தான் ட்விட்லாம் போட்டுட்ருந்தேன். பிறகு நிறைய before & after படங்கள் பாத்த பிறகு ஆரம்பிக்கலாம்னு தோணுச்சி. யூடியூப் விடியோலாம் பாத்தேன். அப்புறம் சில ட்விட்டர்கள் கிட்டலாம் அட்வைஸ் கேட்டுக்கிட்டேன்.
ரிசல்ட் – மூணு மாசத்துல அஞ்சு கிலோ குறைச்சிருக்கேன். நிறைய பேரு 15 நாள்ல 8 கிலோ குறைச்சேன்னுலாம் சொல்றாங்க. May be they have lot of weight to shed. But I am happy.
Pros
ஸ்ட்ரிட்டா ஃபாலோ பண்ணினா கண்டிப்பா பலன்.
ரொம்ப எக்சர்ஸைசோ இல்ல ஜிம்முக்கோ போக வேண்டிய தேவையில்லை
Snacks cravings இல்ல. அதனால மூணு வேளை சாப்பாடு & ஒரு சாலட்டோட சரி, வேற எதுவும் தேவையில்லை.
Cons
ஒரு வாரம் low-carb flu இருக்கும்னு சொன்னாங்க. ஆனா எனக்கு 10 நாட்கள், பிறகு 5 நாட்களுக்கு படிப்படியா தான் நார்மலாச்சு.
Low-carb flu காலத்தில் உடல் சோர்வு, தலைவலி, உடல்வலிலாம் இருந்துச்சி. இந்த எஃபெக்ட்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தான். But it was bit overwhelming.
உடம்பு வேகமாக குறைவதால் “ஙே”னு தோணுறதுக்கு வாய்ப்பிருக்கிறது. But that is how it is.
No choice of food. நான் வெஜ்னா நிறைய சாய்ஸ் இருக்குனு சொல்றாங்க. ஆனா எனக்கு அப்படி தெரியல.
Difficult to get acceptance from family. கண்டிப்பா மூணு வேளையும் உணவு தயார் செய்து தான் ஆகனும். அதனால மனைவிகள் எதிர்க்க வாய்ப்பிருக்கிறது. சாப்பாடு எடுத்துட்டு போகலைன்னா Subway saladனு ஒரே ஒரு சாய்ஸ் தான். கடுப்பா இருக்கும்.
வெயிட் குறைஞ்சது தவிர வேற ஒரு மாற்றமும் இல்லனு நினைக்கிறேன். தலைல நாலு முடிதான் இருக்கு. அதனால முடி வளந்துச்சா இல்ல கொட்டுச்சானு தெரியல. எனக்கு கொஞ்சம் ட்ரை ஸ்கின், ஆனா இப்ப நகத்தால கோடு போட்டா வெள்ளையா கோடு விழுறதில்ல. பேலியோ க்ரூப் க்ளைம் பண்றதுல.,
காலைல வாய் ஸ்மெல் கிடையாது – நிஜம் தான். அவ்ளவா நாறுரது இல்ல.
அதிக எனர்ஜி லெவல் – எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. வழக்கம் போல ஆபிஸ்ல நல்லா தூக்கம் வருது.
பசி தாங்குதல் – அப்டிலாம் இல்ல. ஒரு வேளை சாப்புடுறது மிஸ் ஆகிடுச்சின்னா, பயங்கரமா பசிக்குது.
40 கிராம்க்கு மேல carbs எடுத்துக் கொள்ளக் கூடாது – அது உண்மைனு தான் நினைக்கிறேன். ஸ்ட்ரிக்ட்டா எந்த carbsசும் எடுக்காத நாட்கள்ல நல்ல பலன் இருக்கு.
திரும்ப ப்ளட் டெஸ்ட் எடுத்து பாக்கனும். அதப் பாத்தா தான் முழுமையா என்ன விளைவுகள்னு தெரிய வரும். But may be just me. Libido dropped drastically. பேலியோ க்ருப் க்ளைம் பண்ற மாதிரி இல்ல. Atleast பிட்டு படங்கள பாக்குறத விட்டுட்டு வேற உருப்படியான வேலை செய்ய நேரம் கிடைச்சிருக்கு. 😉 Multivitamin supplement is helping. But not fully.
பேலியோனால ஒரே ஒரு அட்வான்டேஜ் தான். எப்பவோ தூக்கிப் போட மனசில்லாத 32” பேன்ட்டுகள போட ஆரம்பிச்சுருக்கேன். 36” பேன்ட்டின் பெல்ட்டை இறுக்கி கட்டிக் கொள்கிறேன்.
Next step. டார்கெட்ல இன்னும் 2 கிலோ குறைக்கனும். குறைத்த பிறகு ப்ளட் டெஸ்ட் எடுத்து பாக்கனும். ஒண்ணும் டெரரா இல்லைன்னா, கொஞ்சம் விட்டு விட்டு பேலியோ பண்ணலாம்னு இருக்கேன். 3 months normal then 3 months paleo. என்ன நடக்குதுனு பாக்கலாம்.
கபாலி
ரஜினிக்கு கபாலி ஒரு மைல்கல்லா இருக்கோ இல்லியோ, எனக்கு மைல்கல் தான். 5 தடவை தியேட்டரில் பாத்த படமாச்சே. Trailer, Teaser லாம் பாத்துட்டு முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டு காண்டாகிட்டேன். தமிழ் டாக்கீஸ் அண்ணாச்சி & இட்டீஸ் மாதிரி கொலவெறில இருந்தேன்.
பிறகு ரஞ்சித்தோட News18 பேட்டி வந்துச்சி. எனக்கு தெரிஞ்சு படத்துல ரெண்டே ரெண்டு வசனம் தான் கொஞ்சம் தலித் ஆதரவு மாதிரி இருந்துச்சி, அந்த இங்லீஷ்கார முதலாளிகிட்ட பேசுறது & வில்லன் கிட்ட சோஃபால உட்கார்ந்துகிட்டு பேசுறது. அதைத் தவிர மீது வசனம்லாம் நார்மலாத் தான் இருந்துச்சி. ஆனா ரஞ்சித்தின் பதில்கள் ரொம்ப பிடிச்சிருந்தது. அவருக்காக மற்றொரு முறை, சந்தோஷ் நாராயணனின் இசைக்காக ஒரு முறை, ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை அடித்து இறக்கி நார்மலா காமிச்சதுக்கு, அப்புறம் கடைசியா லோகா, வீரசேகரன் & அந்த மெட்ராஸ் பையனுக்காக.
“வரலாறு” படத்துல ஒரு மொக்கையான காட்சி இருக்கும். அசினும் அஜித்தும் ரூம்ல சந்திக்கும் போது அசின் அஜித்தை பயமுறுத்துவதற்காக, அப்பாக்கு சுகர், அம்மாக்கு டிபி, பாட்டிக்கு தலைவலி, அண்ணனுக்கு காக்கா வலிப்புனு தினுசு தினுசா பயமுறுத்தும். ஏறக்குறைய 2015 எனக்கு அப்படித் தான் இருக்கு. சனிப் பெயர்ச்சி தான் காரணம்னு நினைக்கிறேன்.
வேலை செய்த ப்ராஜெக்ட் கேன்சல், லேப்டாப் ஹார்டு டிஸ்க் டமால், ரெக்கார்டு ப்ளேயர் அவுட், கார் பேட்டரி அவுட், பைக் டயர் அவுட், மீடியா ப்ளேயர் ஃபார்மட் ஆகிடுச்சி, etc., etc.,
இதையெல்லாம் தாண்டி ஒரு வேலை பண்ணிருக்கேன். ஆரோவில் 21கிமீ (half marathon) ஓடினேன். ரொம்ப நல்ல டைமிங்ன்னாம் சொல்ல முடியாது.
கிட்டத் தட்ட ஒரு வருடம் இடைவெளிக்கப்புறம் ஓட்டத்தையே ஆரம்பிச்சேன். இந்த கேப்ல வெயிட் வேற நிறைய ஏறிட்டேன். ட்ரைனிங் ஆரபிச்சப்ப 5கிமீ ஓடலாம்னு ஆரம்பிச்சி 1 கிமீ கூட ஓட முடியாம நிப்பாட்டிட்டேன். பிறகு அதெல்லாம் வேலைக்காவாதுனு ரெண்டு வாரம் வாக்கிங்க்ல ஆரம்பிச்சி, 2, 5, 10னு கொஞ்சம் கொஞ்சமாக கிமீஐ ஏற்றினேன். முன்பெல்லாம் ஒரு நாள் ஓடினால் அடுத்த நாள் ரெஸ்ட் விட்றுவேன். இந்த முறை consistency இருக்கனும்ங்றதுக்காக 5x5km, 5x10km லாம் செய்தேன். 5x15km ஓட முடியவில்லை. ஒரு 15kmஏ ஓட முடியவில்லை. அதனால அரோவில் எப்படியும் புஸ் ஆகிவிடும்னு நினைச்சிட்ருந்தேன். நல்ல வேளை கடவுள் புண்ணியத்தால 18km non-stop ஓடினேன். Thanks to the aunties… 😉 அப்புறம் வலது காலில் வலிக்க ஆரம்பித்தது. 2012ல இதே மாதிரி இடது காலில் வலி வந்து ITB பிரச்சனை வந்துவிட்டது. அப்ப நல்ல வேளை நிப்பாட்டி நடக்க ஆரம்பித்தேன். பின்னர் 20கிமீக்கு பிறகு மெதுவாக ஓடி முடித்தேன்.
2:37 டைமிங். கலைஞர் கூற்றுப்படி ரொம்ப சூப்பரான டைமிங்கும் கிடையாது, ரொம்ப கேவலமான டைமிங்கும் கிடையாது. இப்ப அடிக்கடி உமாசங்கர் விடியோ பாக்குறதால தேவ ஆவி என்னுள் இற்ற்றங்கி எதாவது மேஜிக் ஆகி sub 2hrs ல முடிப்பேன்னு கனவுலாம் கண்டேன். அப்டிலாம் ஒண்ணும் ஆகல.ஆனாலும் ஓடி முடிச்சதே நல்ல விஷயம்.
ஆரோவில்ல எப்பவும் ஒரு பாசிட்டிவ் vibes இருக்கும். இந்த தடவை எல்லாரும் சோகமா இருந்த மாதிரி இருந்துச்சி. நோ மெடல். நோ டைமிங். அதெல்லாம் ஓகே, பொங்கல், வடை கூட ரொம்ப சுமார் தான். ஆனா super trail. ஓடிவதற்கு மிகவும் நன்றாக இருந்தது.
மற்றொரு புது வருஷம். இது தான் எனது to-do list for 2015.,
99 days twitter break.
6 half marathons.
5 kg weight reduction.
Career change.
Cutting unnecessary spending.
Detoxing.
எல்லாமே ஒவ்வொரு வருஷ ஆரம்பத்தில் நினைக்கறது தான். இந்த தடவை கண்டிப்பா கடைபிடிக்கனும்னு பார்க்கிறேன்.
இந்த ட்விட்டர் போதை அடங்க கொஞ்ச நாள் ஆகும். முதல்ல கொஞ்ச நாள் என்னோட ஒரிஜினல் ஐடிலேயிருந்து வேடிக்கை பாத்துட்ருந்தேன். இப்ப அவ்ளவா ட்விட்டர் பக்கம் போறதில்லை. எதப் பாத்தாலும் கருத்து சொல்லனும்ங்ற வெறி இன்னும் ஆறல. ரகுமான் பிறந்த நாள், என்னை அறிந்தால் ரிலீஸ் தள்ளிப் போனது, இளையராஜா கப்பல் படப்பாட்டுக்காக கேஸ் போட்டது போன்ற சரித்திர நிகழ்வுகளுக்கு ட்விட் எழுதனும்னு மூளை அரிச்சிட்ருந்தது.
Professionally 2014 மொக்கையான வருடம். ரொம்ப tension ஆன ப்ராஜெக்ட், அதனால ரன்னிங்ஐ நிப்பாட்டி வச்சிருந்தேன். வெயிட் வேற 5கிலோ எறிடுச்சி. இந்த தடவை 6 half-marathon ஆவது ஓடனும்னு பார்க்கிறேன். ட்ரெயின் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. 5 கிமீ ஓடுவதற்கே மூச்சு வாங்குது. முக்கி தக்கி 6 half marathonஆவது ஓடுறனும்னு பார்க்கிறேன். போன வருஷம் நிறைய Runners Forumல 40ன் ஆரம்பத்துல இருக்கற ரன்னர்ஸ் ஹார்ட் அட்டாக்ல போறதா கிட்டத் தட்ட மூணு நாலு நியூஸ் பாத்துட்டேன். 40க்கு வர சில வருஷம் இருந்தாலும் கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. 2013ல நினைத்தவுடனே என்னால் 21 கிமீ ஓட முடியும்னு தைரியம் இருந்தது. அப்படி வர மூணு வருஷம் பிடிச்சது. அத ஒரே வருஷத்துல காலி பண்ணிட்டேன்.
ஒவ்வொரு வருசமும் வெயிட் குறைக்கனும்னு தான் பாக்குறேன். ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியல. இந்த தடவை டூ மச்சு தோப்பை வேறு. சைடு போஸை கண்ணாடில பாத்தா மூணு மாச புள்ளத்தாச்சி மாதிரி இருக்கு.
Career change னா பாக்குற வேலைவிட்டுட்டு வேற வேலை தேடுறதில்லை., அந்த வீரம்லாம் போயி ரொம்ப நாளாச்சி. Pink slipலேயிருந்து எப்படியாவது தப்பிச்சி பொழப்ப ஓட்டனும்ங்றது தான் இப்ப இருக்கும் லட்சியம். எதுக்கும் preparedடா இருக்கனும்லையா. வேற எதாவது பண்ணியாகனும்னா எதாவது ஐடியா இருக்கனும். ஒரு ஐடியாவும் இல்ல. அட்லீஸ்ட் இந்த வருஷம் வேற எதாவது யோசிக்கவாச்சும் செய்யனும்.
போன வருஷம் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க நினைச்சி ஏகப்பட்ட வெட்டிச் செலவு. Vinyl records, Record player, Preampனு. ஆனா எதையும் பயன்படுத்ற நிலமைல இல்ல. இந்த வருஷமாவது இசையிலிருந்து தள்ளி இருக்கனும்.
ரொம்ப நாளா யோசிச்சிட்ருக்றது, detoxingபண்றது பத்தி. கஷ்டமான டயட்லாம் இல்லாம, ஜூஸ், Veggies, soup, போன்ற நீராகாரமா ஒரு வாரமா எடுத்து detox பண்ணனும். அடுத்து cleaning the gut. இது ஒண்ணுமில்ல பேதி மாத்திரை சாப்புடுறது மாதிரி தான். வாரத்தில் ரெண்டு நாள் சமைக்காத உணவா சாப்பிடனும்னு ஒரு ஆசை. அட்லீஸ்ட் பால், சீனி, காபி, அரிசி சாதம்லாம் இல்லாமல். அதுக்கு ஹவுஸ் ஓனர்கிட்ட பர்மிஷன் வாங்கனும்.
ஒலகசினிமா – 2014
Ballad Of Narayama(1958) : ஜாப்பனீஸ் படம். நெட்ல ரொம்ப உருகியிருந்தாங்க. உருக்கும் கதை தான். அதாவது பழங்காலத்துல ஏழை மக்கள் வயதானவர்களை கவனிக்க முடியாத போது வீட்டில் இருப்பவர்களே அவர்களை ஒரு மலை உச்சி சென்று விட்டு விடுவார்கள். முதியவர்கள் அங்கேயே இறக்க வேண்டியது தான். எனக்கு அவ்ளவாக பிடிக்கவில்லை.
Little Miss Sunshine (2006) : ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம், தங்கள் குட்டிப் பொண்ணை Little Miss Sunshine போட்டியில் பங்கேற்க வைக்கும் கதை. க்ளைமாக்ஸ் வேஸ்ட். சுமார் படம்.
Chungking Express (1994) : இதுவும் நெட் ரிவ்யூ படிச்சு ஏமாந்த படம். வேஸ்ட்.
Still Walking (2008) : ஜாப்பனீஸ் படம். ரொம்ப சாதரணமான கதை தான். மகன் தான் கல்யாணம் பண்ணவிருக்கும் விதவை பெண் & அவளின் மகனோடு தன் பெற்றோரை சந்திக்க வருகிறார். அற்புதமான லொகேஷன்கள். எனக்கு பிடிச்சிருந்தது.
Solaris (2002) : Scifi movie, எனக்கு புரியவில்லை. மரண மொக்கை.
Spring Summer Fall Winter And Spring (2003) : Kim Ki Dukன் கொரியன் படம். நல்ல லொகேஷன். புத்த பிட்சுவிடம் இருக்கும் பையன் பற்றிய கதை. சுமார்.
Ok. short list.
Awesome (can watch)
Before Sunset (2004)
Driving Miss Daisy (1989)
Once Upon a Time in the West (1968)
Lock Stock and Two Smoking Barrels (1998)
Mary and Max (2009)
In the Loop (2009)
City Girl (1930)
WALL-E (2008)
On Golden Pond (1981)
Unforgiven (1992)
A Clockwork Orange (1971)
Forbidden Planet (1956)
Vertigo (1958)
28 Days Later (2002)
The Great Escape (1963)
12 Angry Men (1957)
The Three Faces of Eve (1957)
Shutter Island (2010)
Le Samourai (1967)
Still Walking (2008)
Rosemarys Baby (1968)
The Wicker Man (1973)
Tokyo Story (1953)
Spoorloos (1988)
Pan’s Labyrinth(2006)
மொக்கை (better to avoid)
Taxi Driver (1976)
Before Sunrise (1995)
Reservoir Dogs (1992)
The Machinist (2004)
Event Horizon (1997)
The Thing (1982)
Spring Summer Fall Winter And Spring (2003)
Solaris (2002)
Chungking Express (Wong Kar-Wai, 1994)
Little Miss Sunshine (2006)
Ballad Of Narayama(1958)
இசை
சும்மா ஒரு வீம்புக்காக அனிருத் சூப்பர் வாழ்கனு ட்விட்டர்ல கோஷம் போட்டுட்ருந்தேன். காலத்தின் கட்டாயமாக “கத்தி” படம் தியேட்டர்ல பாக்க வேண்டியதிருந்தது.. நிச்சயமாக பிஜிஎம் awesome. சூது கவ்வும்லேயிருந்தே சந்தோஷ் நாராயணன் இசை மீது ஆர்வம் இருந்தது. இப்ப பொங்கலுக்கு விஜய் டிவில ஜிகர்தண்டா பார்த்தேன். மனுஷன் பின்னி எடுத்துருக்கான்யா. மாஃபியா கும்பல் அது காபி கீபினு வந்துருவாங்க. இருக்கட்டுமே, அதனாலென்ன. அனிருத் & சந்தோஷ் நாராயணன் தான் அடுத்த தலைமுறையின் இசையமைப்பாளர்கள். யுவன் வரைக்கும் இருந்த அனைத்து இசையமைப்பாளர்களும் ரிட்டையர் ஆகவேண்டிய தருணமிது. யுவன் உட்பட.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே‘ (The passing of the old the ascendance of the new is the unchanging order of time)
Figure ஆராய்ச்சி – 2014.
போன வருஷம் ரொம்ப ஆராய்ச்சி பண்ண முடியல. இருந்தாலும்.,
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை -மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்
தற்போது தூங்கிக் கொண்டே, வேலை செய்து கொண்டே ட்வீட்டுபவர் உங்கள் மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
ஆசி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
இந்தா பிடி சாபம்… போ…!! தொண்டை கேன்சர் வந்து தான் சாவாய்… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
உடம்பு என்பது உண்மையில் என்ன ? கனவுகள் வாங்கும் பை தானே… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
எனக்கு கடவுளைத் தெரிந்திருப்பது முக்கியமில்லை. கடவுளுக்கு என்னைத் தெரிந்திருப்பது தான் முக்கியம் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா என்று வேத உபநிஷத்து கூறுகிறது – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
கர்த்தரிடம் சீக்கிரமா பூமிக்கு வாங்கன்னேன், நீ சீக்கிரமா மேல வா னு சொன்னார் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
Life is just another wasted opportunity… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
பாடிகாட் முனீஸ்வரனிடம் பேசிக் கொண்டிருந்த போது மேலோகத்திலும் நதி நீர் பிரச்சனை இருப்பதாக கூறினார் – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
Multiple Orgasms is the solution to all worldly problems… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
நிறைய followers கிடைக்க மந்தரித்த தாயத்து அனுப்பப்படும். ரூ.1001 M.O செய்யவும். – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
ஹிஹி… உங்களையெல்லாம் கலாய்ப்பதற்கே யாம் Higgs bosonஐ அனுப்பி வைத்து சித்து விளையாடினோம்… – மஹா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
கரும்புன்னா இனிக்கும், பாவக்காய்ன்னா கசக்கும். புளியங்காய்ன்னா புளிக்கும். இது தான் வாழ்க்கை. – ஶ்ரீலஶ்ரீ ஶ்ரீ.ஶ்ரீ.ஶ்ரீ கூமுட்டையானந்தா சுவாமிகள்.
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்… கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா ?
ரோசு ரோசு ரோசு… அழகான ரோசு நீ… பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ… – புலவர் ஓணாண்டி
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
Secret is the boost of my energy…!!
ட்ராபிக் சிக்னல்ல பல்சர் 15 sec முன்னாடி வந்து நிக்குது, டிவிஎஸ்-50 15 sec லேட்டா வந்து நிக்கிது. பச்சை சிக்னல் போட்ட உடனே ரெண்டும் ஒரே நேரத்துல தான் போகுது…
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்…
யாரோட ட்விட் படிச்சா பொறி கலங்கி பூமி அதிர்றது உடம்புல தெரியுதோ அவன் தான்டா… கூமுட்டை
முட்டை வழியா கோழி பொறக்கும்… கோழி வழியா முட்டை பொறக்கும்…
67, Married, Teetotaller, CTO of a startup, Ambitious, Hardworking, Caring, Passionate, Straight forward, Friendly, Jovial, Liar, Energetic Simple person…
27, Bachelor, Teetotaller, CTO of a startup, Ambitious, Hardworking, Caring, Passionate, Straight forward, Friendly, Jovial, Liar, Energetic Simple person…
என்கிட்ட இருக்கிறதை எடுத்துக் கொடுக்கிறேன் பாக்கியம்ன்னோ, பிச்சைன்னோ, இல்ல நான் வாங்கின கடன் என்றோ எப்படினாலும் எடுத்துக் கொள்ளட்டும்…
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் வாலன்டியராக தொபுக்கடீர்னு விழுந்து கடப்பாரை நீச்சலடிப்பவன். லண்டன் இசைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவன். இசை விற்பன்னன்…
இசை எங்கேயிருந்து வருது தெரியுமா ? கீழ இருக்கிற ட்விட்லேயிருந்து வருது…!!
Indian Born Confused Alien… தொடர்புக்கு 044-40504050 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்…
இப்போல்லாம் நிறைய படம் பார்க்கிறேன்னு நினைக்கிறேன். காலைக்காட்சி ரூ.100 தான்னு இப்போ தான் கண்டுபுடிச்சேன். அதனால உணர்ச்சிவசப்பட்டு சுந்தரபாண்டியன், தாண்டவம் பாத்தேன். காவேரி பிரச்சனைனால “மாற்றான்” இன்னும் வல்ல. அதுவும் நல்லதுக்கு தான் போல்ருக்கு. “சாட்டை” ஏன் வரலனு தெரியல. எப்படியாவது பாத்துடனும்னு நினைச்சேன். ஆனா முடியல.
விமர்சனம் – சுந்தரபாண்டியன்
இணைய விமர்சனம் படிக்காம பாத்தது. ட்விட்டர்ல நல்லா இருக்குனு சொன்னாங்க. அப்புறம் சசிகுமார் மீது இருக்கும் நம்பிக்கைல பாத்தேன். நல்லா இருந்தது. குடுத்த காசு வீணாகல. ஹீரோயின் செமையாக இருந்தார். என் காலேஜ் டைம்ல மார்க் குடுத்துருந்தோம்ன்னா B+ (above average figure). அதனால ஹீரோயினுக்காக நிறைய சண்டை இருப்பது வாஸ்தவம் தானே.
இயல்பான வசனங்கள். சசிகுமார் நண்பர்களாக வந்தவுங்களும் சூப்பர். பரோட்டா சூரி கொஞ்சம் அதிகமா பேசுரார். ஆனா சிரிப்பு வருது. இன்னும் ரெண்டு மூணு ஹிட்டு குடுத்தா சந்தானத்துக்கு அடுத்த படியா வரலாம்.
ஹீரோயினை நல்ல தைரியசாலியா காமிச்சிருந்தது எனக்கு பிடிச்சிருந்தது. தேவை இல்லாம அழுகுறது இல்ல. ஆனா அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் போது அழுகிறார். நெகிழ்ச்சியான காட்சி. காஸ்ட்யூம்லாம் அவ்ளவா கவனிக்க மாட்டேன், ஆனா இந்த படத்துல ஹீரோயின் போடும் தாவணி, சுடிதார்லாம் செமையா இருந்துச்சி. நல்ல கலர் காம்பினேஷன்ஸ்.
கதை நாடோடிகளின் inverse. நண்பர்கள் சசிகுமாரின் காதலை பிரித்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஹீரோ அதை முறியடித்து நட்புக்காக நண்பர்களை மன்னித்துவிடுகிறார்.
விமர்சனம் – தாண்டவம்
டைரக்டர் விஜய் படம் ஒண்ணும் பாத்ததில்லை. பல பேரு கழுவி ஊத்தியிருந்தாலும் அனுஷ்கா & ஏமி க்காக போனேன். ஐயையோ கொடுமை. நிறைய லாஜிக் மிஸ்ட்டேக்கு. தமிழ்ப் படங்கள்ல லாஜிக் மிஸ் ஆவுறது சகஜம் தான். ஆனா இதுல டூமச்சு. எப்படி இந்த விஜய்ய நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் பண்றாங்கனு தெரியல.
Promo விற்காக டிவியில் வந்த போது கூட ஒரு fire இல்ல. சும்மா வழவழ கொழகொழனு பேசுறார். விக்ரம் அதுக்கு மேல. கெழட்டு லுக் வந்துருச்சி, பின்ன எதுக்கு இவ்ளோ க்ளோசப் ஷாட்கள்னு தெரியல. அனுஷ்கா சேலைல வர்ற சீன்லாம் ஓக்கே. மத்தபடி கடைசி பாட்டுல (பீச்சு மண்ணுல படம் போட்ருப்பாய்ங்களே…) உயரமான கெழவியா இருக்கார். ஏமி வத்திப் போன வெள்ளைக்காரி மாதிரி இருக்கு. லிப்சிங்க்கே இல்ல, பின்ன என்ன எழவுக்கு தமிழ்ப் படங்கள்ல நடிக்கனும்.
இந்த படத்துல கடுப்பு லிஸ்ட் பெருசா இருந்தாலும், சில.,
– லண்டன்ல சந்தானம் டாக்ஸியைத் தவிர வேறு எவனும் டாக்ஸி ஓட்டலியா ? படத்துல ஃபுல்லா அவரு ஒருத்தர் தான் டாக்ஸி ஓட்டுராரு. அனைவரும் அவரு டாக்ஸில தான் ஏறுராங்க.
– துப்பறியும் புலி விக்ரம், சும்மா தரைல இருந்தே 20 மாடிக்கு மேல இருக்கும் வில்லன்கள் பேசுவதைப் பார்த்து, (பைனாகுலர்ல) கண்டுபிடிக்கிறார்.
இன்னும் மூணு மாசத்துல 2012 முடியப் போவுது. உலகம் அழிஞ்சாலும் அழிஞ்சிரும். அதனால 2012ல செய்ய நினைச்சு, முடிச்சது என்னல்லாம்னு ஒரு லுக் விட்டேன்.
ட்விட்டர் Perl scriptஐ முடிக்க வேண்டும். – Done
யூடியூப் Perl scriptஐ முடிக்க வேண்டும். – Download script done. ஆனா tag, descriptionலாம் மாற்றும் டெக்னிக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். அதையும் முடிக்கனும்.
ஆறு ஹாஃப் மாரத்தானாவது ஓட வேண்டும். – Done
ரன்னிங்க்காக பற்றி பதிவு எழுத வேண்டும். – Done (started).
ட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். – ஒரு மாசமா ட்விட்டர் பக்கம் அவ்ளவா போறதில்லை. நிறைய நேரம் கிடைச்ச மாதிரி இருக்கு.
மாதத்துக்கு ஒரு பதிவு. – ??
வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டும். – பொதுவா நான் இருக்கும் ப்ராஜெக்ட்ல, ஒண்ணு கஸ்டமர் ஓடிடுவான், இல்ல தானே ப்ராஜெக்ட் ஊத்திக்கும். ஆனா இந்த முறை ப்ராஜெக்ட் நல்லா போயிட்ருக்கு. ஏன்னு தெரியல !!
பொதுவா ஜனவரிக்குள்ள அந்தந்த வருஷத்தில் செய்யப் போகும் டுபாக்கூர் லிஸ்டை சொல்லுவது வழக்கம். இந்த முறையும் செய்ய நினைச்சேன். எத்தன நாளைக்கு தான் டுபாக்கூர் லிஸ்ட்டே குடுப்பதுனு விட்டுட்டேன். 2011 லிஸ்டப் பாத்தா ஒரே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் உண்மையா சொல்லியிருக்கேன். மராத்தான் ஓட்டம் தான்.
2011ல ஃபுல் மராத்தான் ஓடாட்டியும், ஹாஃப் ஓடினேன். இந்த வருஷம் ஓரளவுக்கு புளுகாமல் உண்மையான லிஸ்ட எழுதுறேன், நடக்குதான்னு பாக்கலாம்.,
ட்விட்டர் Perl scriptஐ முடிக்க வேண்டும்.
யூடியூப் Perl scriptஐ முடிக்க வேண்டும்.
ஆறு ஹாஃப் மாரத்தானாவது ஓட வேண்டும்.
ரன்னிங்க்காக பற்றி பதிவு எழுத வேண்டும்.
ட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும்.
மாதத்துக்கு ஒரு பதிவு.
வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டும்.
மலேசியா வாசுதேவன் :
எனக்கு மிகவும் பிடித்த பாடகர். சின்ன வயசில் சிலோன், திருச்சி வானொலியில் கேட்கும் போது பெரும்பாலும், “இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், *****” என்று ஏதாவது ஒரு பாடகியின் பேர் இருக்கும். மலேசியா வாசுதேவனைக் கேட்பது என்பது அரிது தான். அப்புறம் ஆபிசில் சேர்ந்து MP3 கலெக்ஷன் எல்லாம் ஆரம்பித்த போது தான், மலேசியாவைக் கேட்க ஆரம்பித்தேன். கேட்டவுடன் வசீகரித்தது குரல். கேட்க கேட்கத்தான் தெரிந்தது அவர் குரலை எப்படியெல்லாம் மாடுலேட் செய்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் என்று.
இசையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாதெனினும், எனக்கே அவரின் குரல் பாடல்களில் இசைக்குப் போட்டியாக தனித்து நிற்பது போல் தோன்றும். பின்னர் யூடியூபில் பாடல்களை வலையேற்றும் போது, அவர் பாடிய பாடல்களை மட்டும் பல தடவை முழுமையாக கேட்டு ரசித்த பின் தான் வலையேற்றுவேன். சினிமாவிலும் வில்லனாக, பெரும்பாலும் மைனராக வந்து தனி முத்திரை பதித்தவர். மென்மையான குரலும், அவர் பேசுவதுமே வில்லத்தனமாத்தான் இருக்கும். தமிழ் பேப்பரில் கானா பிரபாவின் அஞ்சலி, அவரைப் பற்றிய சிறு தொகுப்பைச் சொல்கிறது.
அவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், மிகவும் பிடித்தவை இவை.,
2011ல் காசு கொடுத்து பார்த்த முதல் படம். காசு வேஸ்ட் ஆகவில்லை. கச்சிதமாகப் பொருந்தும் casting. கதை இது தான், “இந்திய விமானம் கடத்தப்படுகிறது, ஆர்மி கமாண்டோஸ் கடத்திய தீவிரவாதிகளைச் சுட்டு பயணிகளை மீட்க்கின்றனர். இதற்கு நடுவில், பயணிகள் பேசிக் கொள்வதும், தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளின் மனநிலையும், ஆர்மி கமாண்டோ ஆபிஸரின் சாகசங்களும்” தான் கதை.
ஆர்மி ஆபிஸராக நாகார்ஜுன். ஆளு அம்பது வயசானாலும் கிண்ணுனு இருக்கார். உதயம் படத்துல பாத்தது. அப்பவே வாய்க்குள்ள தான் பேசுவார். இப்பவும் அப்படித்தான். வசனமும், அவரின் மிடுக்கும் தான் வலுசேர்க்கிறது. ஏறக்குறைய அவரது ரசிகனாகிவிட்டேன். அதை மாற்ற “ராகடா” பார்க்க வேண்டும். ;-p
நடிகராக பப்லு & அவரது ரசிகராக பாலாஜி, கலக்குகிறார்கள். வேலையில்லாத பட்டதாரியாக ஒருவர் (?) டென்சன் ஏத்துரமாதிரியே புர்ச்சியா பேசுகிறார். என்கிட்ட துப்பாக்கியிருந்தா நானே போட்டிருப்பேன். நல்ல வேளையாக, தீவிரவாதியே போட்டுத் தள்ளுகிறார். அந்த ஃப்ளைட் அட்டெண்ட் இத்துனூன்டு ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வருகிறார். இந்த மாதிரி எங்கும் பார்த்ததில்லை 😉 (ஒருவேளை கிங்ஃபிஷரின் காஸ்ட்யூமாக இருக்குமோ). அவரும் மெளனமாக வந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.
முஸ்லீம்களை தீவிரவாதிகளா கொஞ்சம் ஓவராத்தான் காட்டுகிறார்கள். ராதா மோகன், “ஹிந்து பேப்பரை முஸ்லீமும் படிக்கிறாங்க. மொஹல் பிரியாணிய ஹிந்துவும் தான் சாப்புடுறாங்க” என்ற தத்துவத்தைக் கூறியதால் மன்னிக்கலாம். ஆனால் விருதகிரியின், “எல்லா மனுஷங்களுக்கும் ஏ, பி குரூப் ரத்தம் இருக்கலாம் ஆனா மனுஷங்களா நாம எல்லாருமே ஒரே குரூப் தான்” என்ற வசனத்தை நக்கலடிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல (கேப்டன் தானே அடுத்த துணை முதல்வர்).
நியூஸ் கேதரிங் நிருபர்களின் வாயசைப்பும் வசனமும் ஏகப்பட்ட voice sync issue. ஒரு வேளை தெலுங்கில் பேசுகிறார்களோ என்னமோ. ஏர்போட்டுக்குள் போகும் நிருபரின் குரலும் அவருக்கு பொருந்தவில்லை. ஓக்கே. மொத்தத்தில் கொடுத்த காசு வேஸ்ட் ஆகாம வேல்யூ ஃபார் மணி உள்ள படம்.
சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு டேப் ரிக்கார்டர் பொட்டி இருந்தது. சான்யோ மேக். லெப் ஸைட் டேப் போடலாம். ரைட் ஸைட்ல ஸ்பீக்கர். காலைல அப்பா அதுல தான் திருச்சி, திருநெல்வேலி, சிலோன் நியூஸ் கேப்பார். அப்புறம் நாங்க படிக்கறதுக்காக ஒரு மணி நேரம் சுச் ஆப். அப்புறம் கேசட் போடுவார். சினிமா பாட்டு கேசட் தான். எல்லாமே ரிக்கார்டு செஞ்சது. கடையிலெல்லாம் போயி கேசட் வாங்குறதில்ல. துபாய், சிங்கப்பூர்லேருந்து வர்ரவுங்ககிட்ட சொல்லி வச்சி பிலிப்ஸ், சோனி, ட்டிகே, மேக்ஸல்னு தான் வாங்குவார். பெறகு ஊர்லயே பேமஸா இருந்த ரிக்கார்டிங் கடையில ரிக்கார்ட் பண்ணுவார். படத்துல உள்ள எல்லாப் பாட்டும் கெடையாது, ஸ்பெஷலா குறிப்பிட்ட பாட்டுகள் தான். எல்லாமே சூப்பரா இருக்கும். மாக்ஸிமம் இளையராஜா பாட்டு தான். அருமையா இருக்கும்.
திடீர்னு கொஞ்ச வருஷம் கழிச்சி அப்பா சினிமா பாட்டு கேக்குறத நிறுத்திட்டார். அவர் பாட்டு கேக்குறவரைக்கும் கேஸட்டையோ டேப் பிளேயரையோ யாரும் தொட முடியாது. கேக்குறத நிறுத்திட்டவுடனே நியூஸ் கேக்குறதுக்கு மட்டும்னு ஒரு ட்ரான்ஸிஸ்டர் வாங்கிட்டார். அப்புறம் நம்ம கிட்ட டேப் ரிக்கார்டர் வந்துச்சி. ஆப் பண்றது, பிளே, ரீவைண்ட், பார்வர்டு எல்லாம் கத்துக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம் தான் (அப்பா இல்லாதப்ப). எல்லா பாட்டும் மனப்பாடம் ஆயிருச்சி.
சரி, செஞ்ச பாவத்துக்கு வருவோம். பாட்டேல்லாம் மனப்பாடமாயிருச்சேனு சொல்லி இஷ்டத்துக்கு அந்த கேசட்டுகள்ள ரேடியோவ ரிக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன். ரொம்ப போர் அடிக்கவே ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாதப்ப ரெண்டே ரேண்டு கேசட்ட மட்டும் வச்சிட்டு மீதி எல்லாத்தையும் பழய பேப்பர்காரன்ட்ட போட்டு பேரிக்கா வாங்கி சாப்புட்டுட்டேன். விவரம் தெரியாத வயசு. இப்போ நெனச்சாலும் ரொம்ப வருத்தப்படுவேன்.
Ok. சுய சொறிதல் ஸ்டாப். எல்லா கேசட்டும் போனாலும், பாட்டெல்லாம் ஞாபகம் வச்சி இப்போ MP3யா எல்லாப் பாட்டையும் டவுண்லோட் பண்ணிட்டேனு வையுங்க. ஆனா ஒண்ணு மட்டும் உறுத்துது. பாட்ட ரெக்கார்டு பண்ணவர் டேப் முடியுற கடேசித் துண்டுலெல்லாம் மேற்கத்திய பாட்டுகள சேத்திருப்பார். அந்த பீட் மட்டும் தான் ஞாபகமிருக்கும். என்ன பேரு, ஊரு ஒண்ணும் தெரியாது, இப்ப வரைக்கும். ஆனா லக்குல ரெண்டு மூண கண்டுபிடிச்சுட்டேன். அது யாருன்னா BoneyM, ABBA & Donna Summer. இன்னும் சில பேர யூடியூப்ல கண்டு பிடிச்சேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன். 1970’s & 1980‘s Disco வ