யூடியூப் அறிவியல் – பாகம் 4.

Embedding disable ஆகியுள்ள யூடியூப் விடியோவை embed செய்வது எப்படி ?

கிட்டத்தட்ட எல்லா விடியோவிலும் embedding disable செஞ்சிருப்பேன். அதானால அடிக்கடி கண்ணாடியில பாத்து, மீசைய முறுக்கிக்கிட்டே முண்டாவ தட்டி, “சிங்கம்லே”னு சொல்லிக் கொள்வது வழக்கம். புது வருஷம் வேற வந்துருச்சி, சுயபரிசோதனை, சுயசோதனை, சுயதேடல் இதெல்லாம் செய்ய வேண்டிய நேரம். அதுக்கு முதல்ல செய்யவேண்டியது நம்ம பேரை நாமே கூகிள்ல தேடுவது. 2008 அமோகமா இருக்கனும்னு “kuumuttai”னு கூகிள்ல தேடினேன்.

ஒரு பேஜுல மூணே மூணு லிங்க் தான் வரும்னு நினைச்சேன். ப்ளாகர் பதிவு, வேர்ட்ப்ரஸ் பதிவு அப்புறம் யூடியூப் பக்கம்னு. ஆனா பக்கம் பக்கமா “kuumuttai” பிரபலமா இருந்துச்சி. என்ன எழவுன்னே புரியல. ரெண்டாவது பேஜுல இந்த லிங்க் கெடச்சது. ஏதோ விடியோ திரட்டி போல. திரட்டின்னாலே இப்போ கொஞ்சம் பயமா இருக்குறதால சரியா பாக்கல. பின்னர் ஒரு நாள் பாக்கும் போது, எல்லா விடியோவும் அவுங்க வெப்சைட்டிலேயே ப்ளே ஆச்சி. இது எப்படி சாத்தியம்னு என் சிறு மூளைக்குள்ள இருந்த ஐன்ஸ்டீன் அடிக்கடி தூக்கத்துல கெட்ட கனவா அனுப்பிக்கிட்டிருந்தாரு.

நானும் இம்சை தாங்காம “HTML for dummies”சை மனப்பாடம் செய்ய ஆரம்பிச்சேன். இந்த வருஷம் ஆரம்பமே சரியில்ல போலிருக்கு, ஒரு பக்கம் படிச்சாலே தூக்கத்துலேயிருந்து முழிப்பு வந்துருது. வேற வழியில்லாம ஆசனா ஆண்டியப்பன் சொல்லுற மாதிரி பத்மாசனம், சிரசாசனம், வஜ்ராசனம், சிம்மாசனம்(?) இந்த நாலையும் ஒரே நேரத்துல செஞ்சி, கடவுளை நோக்கி தியானம் செஞ்ச போது, வெளிர் நீல நிற ஒளி பேக்கிரவுண்டுல அசீரரி சொல்லிச்சி, “ரைட் கிளிக் செஞ்சி view source info செய்யவும்”னு. பதில் இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நெனைக்கவேயில்லை.

Ok. சொறிஞ்சிங்க்ஸ் ஸ்டாப்.

– முதலில் உங்களுக்கு பிடிச்ச embedding disable செய்யப்பட்ட விடியோவின் லிங்கை எடுத்துக்கொள்ளவும்.

– எ.டு. http://youtube.com/watch?v=8YaQZ1row-o இது, வசந்தம் பாடிவர (பெண்) – இரயில் பயணங்களில் லிங்க்.

– பிறகு ப்ளாகர் போஸ்டில் Edit HTML க்கு சென்று, இவ்வாறு சேர்க்கவும்.,

<embed src=”http://youtube.com/v/8YaQZ1row-o&rel=0&#8243; type=”application/x-shockwave-flash” wmode=”transparent” height=”350″ width=”425″></embed>

– அதாவது /watch?v யை /v/ னு மாத்தனும்.

– மற்றொரு எ.டு. பூ முகம் சிவக்க – அம்மா படப்பாடல். இது நண்பர் விஜயகுமாரின் விடியோ.
லிங்க் இங்கே., http://youtube.com/watch?v=TYWGsmHwn8A

அதை embed செய்ய.,
<embed src=”http://youtube.com//v/TYWGsmHwn8A&rel=0&#8243; type=”application/x-shockwave-flash” wmode=”transparent” height=”350″ width=”425″></embed>

– Embed செய்யப்பட்ட இந்த இரு விடியோவையும் பார்க்க கூமுட்டை ப்ளாகர் பக்கத்திற்கு செல்லவும்.

விஜயகுமார் என்னை உதைக்காம இருந்தா சரி.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 4.

யூடியூப் அறிவியல் – பாகம் 3.

இப்போ உங்ககிட்ட இருப்பது uncompressed raw விடியோவாகும். அதை அப்படியே வலையேற்ற முடியாது. யூடியூபிற்கென சில விதிமுறைகள் இருக்கு. அவை என்ன என்பது யூடியூப் பக்கத்திலே கொடுத்திருக்கிறார்கள். இங்கே , இங்கே மற்றும் இங்கே பார்க்கவும். இவை இப்பதிவு எழுதும் நேரத்தில் இருந்தவை. ஒருவேளை வரும் காலங்களில் யூடியூப் அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

யூடியூப் பரிந்துரை செய்வது என்ன ?

* 320×240 resolution.
* 30 frames per second.
* MPEG4 (Divx, Xvid) format.
* MP3 audio (mono).
* 100MB file size limit.
* 10-minute length limit.

இதுல ரெண்டு ஸ்டேஜ் இருக்கு.

 • முதலில் விடியோவை 320×240 சைஸில் 30 fpsற்கு (frames per second) மாற்றுவது.
 • இரண்டாவது விடியோவை Xvidற்கும், ஆடியோவை MP3க்கு மாற்றுவது.

Xvidற்கு மாற்றிய பின்னர் 100MBக்கு மேல் இருந்தாலோ, ஓடும் நேரம் பத்து நிமிடத்திற்கு மேலே இருந்தாலோ யூடியூபில் வலையேற்ற முடியாது. Xvidற்கு மாற்றுவதற்கு Xvid codec தேவை. அதனை இங்கே சென்று டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். Xvid என்பது open source MPEG-4 codec ஆகும்.

Filters.

ஸ்டேஜ்களை விரிவா பாக்குறதுக்கு முன்னாடி VirtualDubல filtersனா என்னனு பாத்துறலாம். விடியோ filter என்பது விடியோவில் மாற்றம் செய்ய உதவுவதாகும். என்ன மாற்றம் ? Resize filter கொண்டு விடியோவின் சைஸை மாற்றலாம். Logo filter கொண்டு லோகோ சேர்க்கலாம். Grayscale filter கொண்டு விடியோவை கறுப்பு வெள்ளையாக மாற்றலாம்.

VirtualDubல் இது போல பல built-in filters இருக்கின்றன. பயன்படுத்தும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட filtersஐ உபயோகப்படுத்தலாம். ஒரே ஒரு பிரச்சனை. VirtualDub, கொடுக்கப்பட்ட filtersகளை முழு விடியோவிற்கும் அப்ளை செய்யும். முதல் 1 நிமிடத்திற்கு மட்டும் லோகோ வேண்டும் பிறகு வேண்டாம், போன்ற வேலைகள் செய்ய முடியாது.

ஸ்டேஜ் 1

நாம் கேப்சர் செய்யும் போது மிக துல்லியமாக கேப்சர் செய்திருக்க மாட்டோம். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கேப்சர் செய்திருப்போம். அந்த தேவையற்ற பகுதிகளை எப்படி ட்ரிம் பண்ணுவது ? கீழே இருப்பது VirtualDubன் பட்டன்கள்.

vdub.jpg

Left, Right cursor கீக்களைக் கொண்டு ஒவ்வொரு frameஆக முன்னும் பின்னும் செல்லலாம். Alt+Left, Alt+Right அழுத்தினால் 50 frame முன்னும் பின்னும் செல்லும். அல்லது ஸ்லைடரை drag செய்து விரும்பிய இடத்திற்கு செல்லலாம். Ok. தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு முதலில் அதை செலெக்ட் செய்ய வேண்டும். ஆரம்பத்தை பட்டன் 12 கொண்டு தேர்வு செய்யவும். இறுதியை பட்டன் 13 கொண்டு தேர்வு செய்யவும். Delete அழுத்தி தேவை இல்லாத அந்த பகுதியை நீக்கவும். இதனால் fileல் இருந்து டெலிட் ஆகாது. Just not included for the processing.

 • தேவையற்ற பகுதிகளை மேற்சொன்னபடி நீக்குங்கள்.
 • Video->Filters->Add->Resize.
 • Resize options :Aspect Ratio -> Disabled. New Size -> Absolute Pixels (320 x 240). Press ok to exit from the menu.
 • Video->Frame Rate->Frame Rate Conversion->Convert to fps (30). Press ok to exit from the menu.

இப்போ இந்த புதிய சைஸ் (320 x 240) விடியோவை சேவ் பண்ண வேண்டும். அதற்கு File->Save as AVI. ஒரு புதிய பேரைக் கொடுக்கவும். விடியோவின் நேரத்தைப் பொறுத்து இது 1.5GBயிலிருந்து 2.5GBவரை மாறலாம். முடியும் வரை காத்திருக்கவும்.

ஸ்டேஜ் 2

இந்த ஸ்டேஜில் விடியோவை Xvidற்கும், ஆடியோவை MP3க்கு மாற்றலாம். தொடர்ந்து செல்வதற்கு முன் Xvid codecஐ கணிணியில் நிறுவுங்கள். அப்போது தான் விடியோவை Xvidற்கு மாற்ற முடியும். Xvid compression என்பது இரண்டு ஸ்டேஜ் (two-pass encoding) ஆக நடைபெறும். முதல் passல் விடியோ analysis செய்யப்பட்டு video.pass என்ற fileலில் எழுதப்படும். இரண்டாவது passல் encoding நடைபெறும். Single passசும் இருக்கிறது. ஆனால் youtubeல் அந்த விடியோ கேவலமாக இருக்கும்.

 • ஸ்டேஜ் 1ல் சேவ் பண்ணிய புதிய .AVI பைலை ஒபன் செய்யவும். File->Open video file.
 • Audio->Full Processing mode.
 • Audio->Compression. Select MPEG Layer-3 and select 32 kBits/s, 24,000Hz, Mono. Press ok to exit from the menu.
 • Video->Full Processing mode.
 • Video->Compression. Select Xvid MPEG-4 codec. Xvid codec இன்ஸ்டால் ஆகியிருக்காவிட்டால் இந்த ஆப்ஷன் வராது.
 • Configure. Profile@Level -> Unrestricted. Encoding type -> Twopass – 1st pass. Quality Preset -> General Purpose.
 • Press Ok (twice) to exit the Main window.
 • File -> Save as AVI. எதாவது ஒரு பைல் பேரைக் கொடுக்கவும். Important : Enable “Don’t run this job now; add it to job control so I can run it in batch mode”.
 • Press Save. Batch mode எனேபிள் செய்திருப்பதால் இப்பொழுதே சேவ் செய்யாது. அடுத்து செகண்ட் பாஸையும் job controlல் சேர்ப்போம்.

Second pass.

 • Video->Compression. Select Xvid MPEG-4 codec.
 • Configure. Encoding type -> Two pass – 2nd pass. Click Target size button to toggle to Target bitrate. Target bitrate -> 1500.
 • Press Ok (twice) to exit the Main window.
 • File -> Save as AVI. இப்போ சரியான பேரைக் கொடுக்கவும். Important : Enable “Don’t run this job now; add it to job control so I can run it in batch mode”.
 • Press Save.

Xvid Encoding

இப்போ first pass மற்றும் second pass ஐ ஜாப் கண்ட்ரோலில் சேர்த்தாகிவிட்டது.

 • F4ஐ அழுத்தி ஜாப் கண்ட்ரோல் விண்டோவை திறக்கவும்.
 • நீங்கள் சேர்த்த இரு ஜாபும் இருக்க வேண்டும்.
 • Start.

முடியும் வரை காத்திருக்கவும். உங்கள் கண்ணியை பொறுத்து மூன்று நிமிஷமும் ஆகலாம். பத்து நிமிஷமும் ஆகலாம். முடிந்தவுடன் VirtualDubஐ விட்டு வெளியேறவும். இப்போது இரு பைல்கள் இருக்கும். First passன் போது கொடுத்த பைலை டெலிட் செய்துவிடலாம். அது தேவையில்லை. இரண்டாவது passன் போது கொடுத்த பைல் தான் Xvid encoded file. விண்டோஸ் மீடியா பிளேயரில் சமர்த்தாக ப்ளே ஆக வேண்டும்.

அம்புட்டுதேன். அந்த பைலை உங்கள் யூடியூப் அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும். 100MBக்கு மேல் சைஸ் இருந்தால், second pass target bitrateஐ 1000க்கு குறைத்து மீண்டும் “ஸ்டேஜ் 2″வை செய்யவும். அல்லது ஓடும் அளவை கத்தரித்து மீண்டும் “ஸ்டேஜ் 2″வை செய்யவும்.

பாகம் 4ல் நான் செய்யும் சில விஷயங்களைக் கூறுகிறேன் (eg., logo removal).

டிஸ்கி (aka disclaimer)

 • எனக்கு தெரிஞ்சதத் தான் சொல்லியிருக்கேங்றதால இது சரியான முறை கெடையாது.
 • இங்க சொன்ன முறைய பயன்படுத்தி உங்க கணினி படுத்துக்குச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு கெடையாது.
 • மேலே சொன்ன எல்லாமே Google, Doom, Videohelp மூலமாக கிடைத்தவை தான்.
 • நீங்க யூடியூப்ல வலையேற்றி, மாறன் பிரதர்ஸோ, முர்டாக்கோ இல்ல தாத்தாஜியோ உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புனா அதுக்கு நான் பொறுப்பு கெடையாது.
Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 3.

யூடியூப் அறிவியல் – பாகம் 2.

படம் பிடித்தல்.

இங்கே டீவியிலிருந்தோ, செட்டாப் பாக்ஸிலிருந்தோ ரிக்கார்ட் செய்வது எப்படி என்பது பற்றி விளக்கப்படும். விசிடியிலிருந்தோ, டிவிடியிலிருந்தோ ரிப் செய்வது எனக்கு தெரியாது. ஆகையால் அவை பற்றி விளக்கப் போவதில்லை. ஆனால் அதற்கு மக்கள் Fairuse , Super , Total Video Convertor etc., போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

Ok. விஷயத்திற்கு வருவோம். Capture செய்வதற்கு என்னென்ன தேவையென்றால்

 • ட்யூனர் கார்ட் (அல்லது) external USB கேப்சர் கார்ட்.
 • VirtualDub என்ற மென்பொருள்.

வீட்டில் கேபிள் கனெச்சன் இருந்தால் கேபிள் ட்யூனர் கார்ட், சாட்டிலைட் கனெக்சன் இருந்தால் சாட்டிலைட் ட்யூனர் கார்ட். Hauppage தான் ட்யூனர் கார்ட்களின் அதாரிட்டி. ஆனால் இந்த ட்யூனர் கார்டின் மூலமாக பே (pay) சானல்களைப் பார்க்க/ரிக்கார்ட் செய்ய முடியாது. அதாவது நீங்கள் செட்டாப் பாக்ஸ் உபயோகப்படுத்தி அதில் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்துவதானால் அந்த சேனல்களைப் பார்க்க/ரிக்கார்ட் செய்ய முடியாது. நேரடி கேபிள் கனெக்சன் என்னறால் கவலை வேண்டாம் அனைத்தையும் பார்க்கலாம்/ரிகார்டு செய்யலாம்.

தொல்லையே இல்லாதது external USB கேப்சர் கார்ட். உங்கள் டீவி AV outல் அல்லது செட்டாப் பாக்ஸ் AV outல் இருந்து கனெக்சன் கொடுத்தால் எதையும் பார்க்கலாம்/ரிகார்டு செய்யலாம். எதுனாலும் கூடவே ஒரு மென்பொருளைக் கொடுப்பார்கள். பெரும்பாலும் Ulead or Cyberlinkன் மென்பொருளாக இருக்கும். அவைகளைக் கொண்டே விடியோவை ரிக்கார்டு செய்யலாம். அம்மென்பொருட்களைப் பயன்படுத்துவதெல்லாம் அவுட் அப் சிலபஸ். எனக்கு தெரியாது.

பிறகு ஏன் VirtualDub ?

 • Ulead, Cyberlink எல்லாமே big fat மென்பொருட்கள். இதயம் பலவீனமான கணிணிகள் மண்டையைப் போடுவதற்கு சாத்தியம் உண்டு.
 • VirtualDub பயன்படுத்தும் போது பிற வேலைகளையும் செய்யமுடியும். அது உங்கள் சிபியூவை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளாது.
 • வெறும் 1MB சைஸ் தான். நம்ப முடிகிறதா ? இன்ஸ்டால் செய்யக் கூடத் தேவையில்லை.
 • அதனுடன் வரும் அருமையான filters. Filters கொண்டு பல வேலைகளைச் செய்யமுடியும். எ.டு. லோகோவை மறைப்பது/சேர்ப்பது, கருப்பு வெள்ளையாக மாற்றுவது etc., etc.,
 • Last but not least அது கட்டற்ற மென்பொருள் (Open Source).

இங்கே ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். எல்லா ட்யூனர்/ USB கேப்சர் காட்டும் Virtualdubல் வேலை செய்யாது. பிறகு எப்படி கண்டுபிடிப்பது ? கொஞ்சம் கஷ்டமான வேலைதான். இணையத்தில் தேட வேண்டும். இல்லையென்றால் Virtualdubல் வேலை செய்கிறதா என்று நாம் தான் சோதித்துப் பார்க்க வேண்டும். இங்கே அனைத்து Capture காட்டுகளைப் பற்றி போட்டுள்ளார்கள். கமெண்டுகளைப் படித்தால் யாரேனும் VirtualDubல் வேலை செய்கிறதா இல்லையா என்பது பற்றி எழுதியிருக்கக்கூடும்.

VirtualDubல் வேலை செய்யவில்லையென்றால் கவலையில்லை உங்கள் மென்பொருளைக் கொண்டே கேப்சர் செய்ய வேண்டியதுதான். வேறு வழியில்லை. உங்களால் .AVI பார்மட்டில் படம் பிடிக்க முடிந்தால் பாகம் 3ல் வந்து கலந்து கொள்ளவும்.

கீழே சொல்வது இங்கிருந்து காப்பி அடித்தது தான். கொஞ்சம் பழைய VirtualDub கொண்டு விளக்கியிருப்பார்கள்.

இன்ஸ்டாலேஷன்.

 • VirtualDubற்கு ஒண்ணும் தேவையில்லை. Exeஐ ரன் பண்ணினால் போதும்.
 • ஆனால் சரியாக செயல்படுவதற்கு முதலில் ட்யூனர் கார்ட்/ external USB கேப்சர் கார்டின் டிரைவர்ஸ் இன்ஸ்டால் ஆகியிருக்க வேண்டும்.

ஆரம்பம்.

External USBயாக இருந்தால், டீவியில/செட்டாப்பாக்சில் விரும்பிய சேனலுக்கு மாற்றி, டீவி/செட்டாப்பாக்ஸ் AV outஐ USB Capture கார்ட்டுடன் கனெக்ட் செய்யவும். ட்யூனர் கார்டாக இருந்தால் சாட்டிலைட்/கேபிள் கனெக்சனை ட்யூனர் கார்டிற்கு கொடுக்கவும்.

External USBகாரர்களுக்காக : இதன் மூலம் வரும் ஒலி அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகையால் உங்கள் Audio Cardன் Line-inல் ஆடியோ கொடுப்பது சிறந்த ஒலி பிடிப்பிற்கு ஏதுவாயிருக்கும்.

VirtualDub .AVIயாக சேமிப்பதால் ஐந்து நிமிடப் பாடலுக்கு குறைந்தது 5GB யாவது தேவைப்படும். Huffyuv கொண்டு கொஞ்சம் குறைக்க முடியும். இப்போ வேண்டாம், அது பற்றி பிறகு பார்க்கலாம்.

படம் பிடித்தல்

 • VirtualDub.exeஐ கிளிக்கவும்.
 • File -> Capture AVI
 • Device -> உங்கள் deviceஐ தேர்ந்தெடுக்கவும்.
 • Audio -> உங்கள் deviceஐ தேர்ந்தெடுக்கவும்.
 • Video -> Video Source. உங்கள் விடியோ சோர்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
 • Video -> Capture Filter -> Video Decoder. உங்கள் ஊர் விடியோ ஸ்டாண்டர்டை தேர்ந்தெடுக்கவும். எது என்று தெரியவில்லையென்றால் இங்கே பார்க்கவும்.

இப்பொழுது அனேகமாக USB Capture card வைத்திருப்பவர்களுக்கு உங்கள் Virtualdub windowவில் படம் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.

 • Tuner card காரர்களுக்கு : Video -> Tuner. உங்கள் நாட்டு pin codeஐ கொடுக்கவும். பின்னர் விரும்பிய சேனலின் நம்பரையும் தேர்ந்தெடுக்கவும். Status Locked என்று வர வேண்டும்.

இப்பொழுது உங்கள் Virtualdub windowவில் படம் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.

 • Video -> Set Custom Format. இங்கே Data Formatஐ YUV2 or YV12 or 24-bit RGB க்கு மாற்றிப் பார்க்கவும். மாற்ற முடியவில்லையென்றால் you are out of luck. VirtualDub உங்களுக்கு வேலை செய்யாது.
 • Capture -> Test Video Capture. இது வெறும் சிமுலேஷன் தான். Windowவிற்கு கீழே உள்ள ஸ்டேடஸ் பாரில் frameகள் ஓடிக் கொண்டிருக்கும். Frame drop ஆகாமலிருப்பது முக்கியம். Frame dropஆனால் Audio -> Audio Playbackஐ disable செய்யவும்.
 • Test Video Captureஐ நிறுத்த “ESC” ஐ அழுத்தவும்.
 • File -> Set Capture File. எங்கே இடம் இருக்கிறதோ அந்த டைரக்டரியை தேர்ந்தெடுத்து. பைல் பெயரைக் கொடுக்கவும்.
 • Capture -> Capture Video.
 • தேவையான அளவு Capture செய்தவுடன், “ESC”ஐ அமுக்கவும்.

Finished. நீங்க கேப்சர் செய்த .AVI சமத்தாக Windows Media Playerல் ப்ளே ஆக வேண்டும். இந்த massive fileஐ youtubeக்காக எப்படி மாற்றுவது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 2.

யூடியூப் அறிவியல் – பாகம் 1.

“கஷ்டப்பட்டு படித்து பாசாவதை விட, முன்னாடி இருப்பவனை பார்த்து எழுதி முதல் மார்க் வாங்குவதே நன்று.”

இது தமிழ்ப் பெரியவர்களின் வாக்கு. இதை தூய தமிழில் “ஆட்டையப் போடுவது” என்று கூறுகிறார்கள்.
இந்த யூடியூப் உலகத்தில் இதை எப்படி கடைபிடிப்பது என்பதை இந்த “யூடியூப் அறிவியல் – பாகம் 1″ல் பார்க்கலாம்.

அடிப்படை

முதலில் தேவை ஒரு யூடியூப் அக்கவுண்ட். அப்புறம் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்தவுடன் “அப்லோட்”ஐ அமுக்கி விடியோவை சேர்க்க தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ். Youtube FAQவை படித்து தெரிந்து கொள்ளவும்.

சரி. நீங்க யூடியூப்ல பல விடியோக்களப் பாக்கும் போது, சில விடியோக்களால கவரப்படுறீங்க, ஆட்கொள்ளப்படுறீங்க. உடனே இந்த வீடியோவை “ஆட்டையப் போட்டு” நம்ம அக்கவுண்ட்டில் சேர்த்தால் என்னன்னு தோணுது. அதை எப்படி செய்வது ?

ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு “இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை”, ரெண்டாவது “இந்திய சினிமா இயக்குனர்கள் முறை”. சாப்ட்வேர் முறைன்னா காப்பி பேஸ்ட் செய்வது. இயக்குனர் முறைன்னா இந்திய கலாச்சாரத்திற்கு எற்ப தலை சீவி, பொட்டு வச்சி, பவுடர் போட்டு விடுவது.

Ok. சொறிதல் ஸ்டாப்.

இப்படியெல்லாம் “ஆட்டையப் போடுவதால்” என்ன பயன் ?

 • உங்கள் அக்கவுண்ட்டில் உங்களுக்கு பிடித்த விடியோவை சுட்டு வைக்கமுடியும். Actualஆ இது தேவையேயில்லை. உங்களுக்கு பிடித்த பிறரது விடியோவை Favourite Listல் சேமித்து வைக்க முடியும்.
 • பலர் விடியோவில் embeddingஐ disable செய்திருப்பார்கள். உங்கள் அக்கவுண்டில் சுட்டுப் போட்டு embeddingஐ enable செய்து கொள்ளலாம்.
 • Embedding enable செய்த பின்னர், நீங்களே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து (eg., ததிக (தமிழ்த் திரைப்பாடல்கள் கழகம்)) அதில் பகுதிவாரியாக படம் காட்டலாம், பார்ப்பதற்கு பணம் வசூலிக்கலாம், Google Adsense இன்ன பிற வஸ்துக்களைப் போட்டு பணம் சம்பாதிக்கலாம்.
 • ஒரிஜினலா படம் போட்டவர் ஒருவேளை “மாமியார் வீட்டுக்கு” சென்றாலோ அல்லது “Fine கட்டினாலோ” நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்கலாம்.

இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறை :

 • உங்களுக்கு பிடித்த யூடியூப் விடியோவின் அட்ரஸை எடுக்கவும் (ie., URL).
 • http://www.keepvid.com ல் அதை கொடுக்கவும்.
 • கொஞ்ச நேரம் கழித்து, டவுண்லோட் லிங்க் வரும்.
 • அதை கிளிக்கி, getfile என்ற ஒரு பைலை டவுண்லோட் செய்யவும்.
 • விடியோவின் ஓடும் நேரத்தைப் பொறுத்து 5MBயிலிருந்து 20MB வரை இந்த பைலின் அளவு மாறுபடும்.
 • இந்த getfile என்பது ஒண்ணுமில்ல, அது ஒரு Adobe Flash பைலாகும்.
 • அதுக்கு ஒரு நல்ல பேரு வச்சி, extensionன .FLV என்று மாற்றவும்.

அம்புட்டுத்தேன். இந்த .FLV பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.

இந்திய சினிமா இயக்குனர்கள் முறை :

இந்த முறைல என்ன செய்யலாம்னா, உங்கள் வசதிக்கேற்ப,

 • உங்கள் பெயர், பட டைட்டில், பாடியவர் பெயர், இசையமைப்பாளர் பெயர் etc., etc. முதலியவைகளை சப் டைட்டில்களாகவோ (sub title), டைட்டிலாவோ (title) சேர்க்கலாம்.
 • உங்கள் லோகோவைச் சேர்க்கலாம்.
 • பிடித்த கலைஞர்களை வாழ்த்தி சின்ன விடியோ கிளிப்பிங்கை சேர்க்கலாம்.

இதுக்கு இலவச Windows Movie Makerஐ பயன்படுத்தலாம். அதில் உள்ள அனைத்து featureஐக் கொண்டு விடியோவை தலைகீழாக மாற்றிவிடலாம். ஒரிஜினலாக அப்லோட் செய்தவனுக்கே அடையாளம் தெரியாமல் செய்துவிடலாம். ஆனால் Windows Movier Makerக்கு Adobe Flash fileஐ அடையாளம் தெரியாது. முதலில் Adobe Flashஐ .AVIஆ மாற்ற வேண்டும். அதுக்கு FFMPEGஐ பயன்படுத்தலாம். இங்க போயி FFMPEG binaryஐ டவுண்லோடு செய்யவும். சரி, ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்க்கலாம்.

 • இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் முறைப்படி உங்களுக்கு பிடித்த விடியோவின் Adobe Flash பைலை டவுண்லோடு செய்து கொள்ளவும்.
 • பின்னர் FFMPEG கொண்டு Adobe Flashஐ .AVIயாக மாற்றுங்கள்.
 • அதற்கு command promptல் ffmpeg -i get_video.flv -vcodec rawvideo -acodec copy get_video.avi என்று கொடுக்கவும். இங்கு get_video.flv என்பது இன்புட் பைல், get_video.avi என்பது அவுட்புட் பைல். உங்களுடையது வேறு என்றால் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்.
 • Raw video என்பதால் .AVIயின் அளவு 800MBயிலிருந்து 1.5GB வரை மாறுபடும்.
 • பின்னர் Windows Movier Makerல் அந்த .AVIஐ திறந்து உங்கள் வசதிக்கேற்ப சேர்க்க வேண்டியதைச் சேர்க்கவும், வெட்ட வேண்டியதை வெட்டவும்.
 • Save to my computerஐ கிளிக்கி .WMA வாக சேமித்துக் கொள்ளவும். Best Quality for playback on my computer அல்லது Show more choices போய் High Quality video (small) தேர்வு செய்யவும்.
 • கொஞ்ச நேரம் கழித்து .WMA பைல் கிடைக்கும்.

அம்புட்டுத்தேன். இந்த .WMA பைலை உங்க Youtube அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யவும்.

அடுத்த பகுதியில படம் புடிக்கறது எப்படினு பாக்கலாம்.

Posted in யூடியூப் அறிவியல். Comments Off on யூடியூப் அறிவியல் – பாகம் 1.
%d bloggers like this: