உளறல்கள் – 08-09-2014.

உலக சினிமா

நேத்து என் ட்விட்டர் ஃப்ரொஃபைல் படத்தை totoro_by_joao_sembe-d3f4l4xஇந்த படமாக மாற்றினேன். யாரும் ஏன், எதுக்குனு கேக்கல. 😉 அதனால விட்டுற முடியுமா. ப்ளாக் எதுக்கு இருக்கு, எழுதித் தள்ளுவோம்.

அனிமேஷன் படம் எல்லாத்துக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். டாம் & ஜெர்ரி, பாப் ஐ, டொனால்ட் டக், ரோட் ரன்னர், ஜானி ப்ராவோ இதெல்லாம் சின்ன வயசுல ரசிச்சி பார்த்ததுண்டு. “பெருசு” ஆனப் பிறகு, இதையெல்லாம் பார்ப்பதை விட்டாச்சி. அப்புறம் Disney/Pixar’s Toy Story, Lion King, Finding Nemo லாம் பார்த்து ரசிச்சாச்சி.

2007ல் னு நினைக்கிறேன், யூடியூபை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது. “My Neighbour Totoro” ட்ரைலரைப் பார்த்தேன். ஒரு விதமான childish happiness ஐ உண்டாக்கியது. பிறகு முழுப் படத்தையும் டவுண்லோடு பண்ணிப் பார்த்தேன். அப்புறம் அதன் டைரக்டர் Hayao Miyazaki பற்றியும் தேடிப் படித்தேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவரது படங்கள் பெரும்பாலும் கையால் வரைந்து செய்யப்படும் அனிமேஷன் படங்கள்.

அப்புறம் அவர் டைரக்ட் செய்த அனைத்து படங்களையும் பார்த்தாச்சி. அவரின் படங்களின் முன் Disney/Pixarன் படங்களெல்லாம் குப்பைகள் (“Up”ஐ தவிர்த்து).

Grandeur imagination, fantasy, vibrant colors, attention to detail, films with a message இதெல்லாம் தான் ஹைலைட். பெரும்பாலும் பெண்கள் தான் ஹீரோயினாகவோ இல்லை வில்லனாகவோ இருப்பார்கள். பறக்கும் தீம் எல்லாப் படத்திலும் இருக்கும். அட்காசமான இசை. சொல்லுவதற்கு வேறு ஒண்ணும் தோணல. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்க.

நான் ஜப்பானிய ஆடியோ + சப்டைட்டிலோடு பார்ப்பது வழக்கம். ஆங்கில ஆடியோ மொக்கையாக இருக்கும். சில படங்களில் க்ளைமாக்ஸ் கொஞ்சம் கடியாக இருந்தாலும், அனைத்தும் படங்களும் ரசிக்கக் கூடியவையே.

இங்கே, இங்கே அவரின் படைப்புகளின் சிலாகிப்புகளை படிக்கலாம். இங்கே அருமையான ரிவ்யூக்கள் இருக்கின்றன. Hayao Miyazakiக்கு 73 வயசாகிவிட்டதால் ரிட்டையராகிவிட்டார். இனிமேல் அவர் டைரக்‌ஷனில் படம் வராது.

எனது லிஸ்ட்.

 1.  My Neighbor Totoro
 2. The Wind Rises
 3. Nausicaä of the Valley of the Wind
 4. Kiki’s Delivery Service
 5. Castle in the Sky
 6. Porco Rosso
 7. Princess Mononoke
 8. Howl’s Moving Castle
 9. Ponyo
 10. Spirited Away

animation-master-hayao-miyazaki-retires-from-feature-filmmaking-header

Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உளறல்கள் – 08-09-2014.

சொசெசூ – 07-09-2014.

          போன பதிவுல நான் என்ன எழுதியிருக்கேன்னு எனக்கே புரியல. சிலர் “ஐடி தொழில் அவ்ளோ தானா, அழிஞ்சிருமா”ங்ற ரேஞ்சில என்கிட்ட கேட்ருந்தாங்க. நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்ல. இருந்தாலும் சொல்ல வர்றத தெளிவா மீண்டும் சொல்லிடலாம்னு பார்க்கிறேன். சொந்த கருத்து தான். அதனால திட்றதுன்னா, இந்த ப்ளாக ஏன் படிச்சோம்னு நீங்களே உங்கள திட்டிக்கோங்க… 🙂

          இந்தியன் ஐடி துறைங்றது பெரும்பாலும் mediocre talented மக்களை வைத்து செய்யும் தொழில். இது நம்ம பாஸ்கள், அவர்களின் பாஸ்கள் (வெள்ளக்காரன்) எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். அதனால தான் வேலை செய்யறவனை விட, வேலைய செய்ய வச்சி முடிச்சி காட்டுறவனுக்கு (மேனேஜர்) தான் மதிப்பு அதிகம்.

ட்விட்டர், ப்ளாக்லலாம் கெக்கே பிக்கேனு உளறியிருந்தாலும் ExtrovertVSIntrovertஎன்னுடைய குணம் என்பது shy & introvertக்கும் நடுவுல வர்றதுனு நினைக்கிறேன். மேனேஜர் ஆவதற்கு சற்றும் பொருந்தாத குணம் அது. அதனால தான் ரொம்ப பொலம்பிட்டேன்னு நினைக்கிறேன். அதுவுமில்லாம என்னுடைய ஆதர்சங்கள்லாம் programmingல் சூரப்புலிகள். அதனால மேனேஜர் ஆவதற்குரிய தகுதிகளை வளர்த்துக்காமல் இருந்துவிட்டேன்.

அதனால என்ன சொல்ல வர்றேன்னா (சீக்கிரம் சொல்லித் தொலைக்கிறது).

 • 5+ வருடங்கள் experienceக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மேனேஜர் தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
 • மேனேஜிங் என்பது அனுபவம் + திறமையால் வருவது.
 • இங்கே மேனேஜர் பற்றி கொடுத்துள்ளார்கள். Theoretical தான். அதில் கூறியபடி ஒரு தகுதி வாய்ந்த மேனேஜரை பார்ப்பது அரிது.
  டெக்னிகல் அறிவு இல்லாமல் மேனேஜராக இருக்க முடியும். ஆனால் டீம்ல மதிப்பு இருக்காது. அதனால அப்பப்ப ப்ராஜெக்ட் பற்றிய அறிவு மழுங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
 • DK Publishingல் Essential Managersனு ஒரு seriesஏ இருக்கிறது.
 • டீம்ல் இருக்கும் அனைவராலும் விரும்பப்படும் மேனேஜராக இருப்பது ரொம்ப கடினம். சில சமயம் @இட்ஸ்ப்ரசாந்த் ஆகக் கூட வாய்ப்பு இருக்கிறது (வர்றவன், போறவன்லாம் கலாய்ப்பான்). ஆனாலும் execution தான் முக்கியம். எடுத்த ப்ராஜெட்டை எப்பாடுபட்டாவது (டீம்ல ஒரு சில மாங்கா மடையர்கள் இருந்தாலும்) முடிக்க வேண்டும்.
 • Ok, finally. A successful manager gets 3x of his highest paid team member.

சரி, சொசெசூ (சொந்த செலவில் சூனியம்) மேட்டருக்கு வருவோம்.

         இசைஞானி ரசிகர்கள் தான் தமிழ் இணையவெளியில் நீக்கமற நிறைந்துள்ளார்கள். Blog  ஃபேமஸ் ஆக இருந்த காலத்துல இசை வெறி ஏத்திக்கனும்னா சில குறிப்பிட்ட ப்ளாக்களை படித்தால் போதும். இப்ப ட்விட்டர்ல ராஜா + ரகுமான் (ஏன் ரகுமானோட சண்டைனு எனக்கு இன்னும் புரியறதில்லை) அப்பப்ப வரும். ட்விட்டர்ல எல்லாமே சீசன் தான். விஜய்+தல சீசன் கொஞ்ச நாள் ஓடும், பிறகு பெண்ணியம், கிரிக்கெட், உலக சினிமா, லெக்கிங்ஸ் தேவையா இல்லியா, சும்மா கலாய்த்தல். ராஜா+ரகுமான் அப்பப்ப வந்து போகும்.

          அவுங்கவுங்க க்ரூப்ல கலாய்த்துக் கொண்டாலும், சில சமயம் “பூனைக்குட்டி வெளியே வந்தது”ங்ற மாதிரி ராஜா க்ருப் மற்றவர்களை “லோ க்ளாஸ், ஞான சூனியங்கள், தத்திகள்”னு வசை பாடுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை, அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது நினைப்பேன். ராகம், ஸ்வரம், இன்ன பிறனு பிரித்து ஆராய்ந்து ரசிப்பதும் ஒரு கலை தான். ஆனால், அது தெரியாதவர்களை மட்டமாக எண்ணக் கூடாதில்லையா. இளையராஜா இசையமைப்பது இசை பற்றி தெரியாத பாமரனுக்கு தான். அவன் தான்  காசு குடுத்து டிக்கட் வாங்கி, படம் பார்த்து இளையராஜாவை இந்த நிலமையில் வைத்துள்ளான். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….

          சரி, மெயின் மேட்டருக்கு வருவோம். ரொம்ப  காலத்துக்கு முன்னாடி நானூறு கேசட்கள் வைத்திருந்தேன். பல்வேறு காரணத்தினால் எல்லாமே அபேஸ் ஆகிவிட்டன (பெரும்பாலும், கேட்டுட்டு குடுத்துற்ரேன்னு, திரும்ப வராது). அப்புறம் ஒரு அட்டை பெட்டி ஃபுல்லா வீடு மாறும் போது தொலைந்து விட்டது.

          திரும்ப கலெக்‌ஷன்சை ஆரம்பினும்னா இணையத்தில் டவுண்லோடனும். அது பெரும்பாலும் குப்பைதான். MP3 வந்த காலத்தில், சிறந்த தரம்னு 128kbpsல ரெக்கார்டு பண்ணியிருப்பாங்க.

          கொஞ்ச வருஷத்திற்கு முன்னாடி தான் இளையராஜா Agi Musicங்ற கம்பேனிக்கு தன் முழு creation களை விற்பனை செய்ய உரிமம் கொடுத்திருந்தார். அவுங்க கொஞ்ச MP3 சிடிக்களை வெளியிட்டாங்க. தரம் நன்றாக இருந்தது. ஆனால் soundcloudல் raja4ever கொடுக்கும் தரம் போல் இல்லை.

          அப்புறம் திடீர்னு அவர்கள் ஆன்லைன் only modeக்கு போய்விட்டார்கள், அதாவது iTunesல் மட்டும் தான் வாங்க முடியும். iTunes என்ன மாதிரியான எழவு என்றால் அது பாட்டை Apple productsல் மட்டும் தான் ப்ளே ஆக விடும். DRM shit. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் சிடி வெளியிட்ட மறுநாளே டாரண்ட் வெளியே வந்துவிடும். பிறகு அவர்கள் என்ன செய்வார்கள். Piracy killed music industry. Now music industries are killing music.

          இப்பொழுது இளையராஜா குடும்பம் Agi music மேல கேஸ் போட்டுள்ளது. ராயல்டி கொடுக்கவில்லையாம். இது எப்ப முடியும்னு தெரியவில்லை. சிலகாலமாக LPயில் பாட்டுகள் கேட்க ஆரம்பித்துள்ளேன். இவையெல்லாம் அந்தக் காலத்துல ம்யூசிக் ரெக்காட்டிங் ஸ்டுடியோ வைத்துள்ளவர்கள் தள்ளிவிடும் ரெக்கார்டுகள். பெரும்பாலும் தேய்ந்து போய் தான் இருக்கும். சில மிக நல்ல தரத்தில் இருக்கிறது.

          அதே தரத்தில் ராஜாவின் அனைத்து பாடல்களையும் கேட்க முடியுமானு தெரியவில்லை. அதற்கான முயற்சியும் நடக்கிறதான்னும் தெரியல. இப்ப புதுசா இளையராஜா ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளார்கள். எனக்கென்னமோ இளையராஜா குடும்பம் Agi musicன் ரைட்சை கேன்சல் செய்துவிட்டு அவர்களே iTunesல் வெளியிடுவார்கள்னு நினைக்கிறேன். iShit வைத்திருக்காதவன் கதி என்ன ?

          Audio steganography என்று ஒன்று இருக்கிறது. இளையராஜா ரசிகர் மன்றத்தின் மூலமாக Audio steganography enabled high quality audio வை நேரடியாக விற்பனை செய்யலாம். நடக்குமானு தெரியல. இணையத்தில் முஷ்டியை முறுக்கும் மாஃபியா ரசிகர்கள், அனைவருக்கும் இளையராஜாவின்  இசை, நல்ல தரத்தில் கிடைக்கச் செய்யும் உருப்படியான முயற்சியில் இறங்கலாம். நல்ல தரத்தில் கொடுத்தால் கண்டிப்பாக மக்கள் காசு கொடுத்து வாங்குவார்கள்.

          இளையராஜா செய்த அற்புதங்களை, ஆடியோ தரமற்ற யூடியூபில் கேட்கும் நிலையுள்ளது. எ.டு ஒன்னும் தெரியாதா பாப்பா, வருது வருது விலகு விலகு, அட மச்சமுள்ள மச்சான். மேற் சொன்ன பாடல்களிலெல்லாம் ஞானியார் அடி பின்னி எடுத்திருப்பார். எனக்கு இன்னும் அந்த ரெக்காட்டுகள் கிடைக்கவில்லை. அந்த பாடல்களையெல்லாம் உயர்ந்த க்வாலிட்டியில் கேட்காமலேயே போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்று கவலையாக உள்ளது.

Posted in உருப்படாதது, உளறல். Comments Off on சொசெசூ – 07-09-2014.

ரொம்ப நிறைய புலம்பல்கள் – 13/04/2014

வாழ்க்கை வழக்கம் போல சோகமா போயிட்ருக்கு. பொதுவா ஃபீல்ட் அவுட் ஆகுற நடிகர்கள் சொல்றது என்னான்னா.,

 •     நல்லவுங்க யாருனு தெரியாம எல்லாரையும் நம்பினேன்.
 •     கஷ்டம்னு வரும் போது தான் மற்றவர்களின் சுயரூபம் தெரியுது.

இது போதாதுனு “கஷ்டம் வந்தா தனியா வராது. சொந்தக்காரங்க பலரை சேத்துக்கிட்டு ஒட்டு மொத்தமா வரும்”னு ஒரு general rule வேற இருக்கு. இதெல்லாம் அடுத்தவுங்களுக்கு நடந்தா அட்வைஸ் பண்ணிட்டு போய்ட்டே இருப்போம். நமக்கு நடந்தா, #அவ்வ்வ்…. டூ மச் ப்ராப்ளம்ஸ். சோ, இதெல்லாம் எப்படியும் முடிஞ்சிரும்னு நம்பிக்கையோட வாழ்க்கை போயிட்ருக்கு.

Procrastination நம்ம கூடப் பிறந்த சொத்து. எப்படியும் நடக்கும்னு தெரியும், இருந்தாலும் ஒண்ணும் பண்ணாம இருப்பது நம்ம ஸ்டைல். இந்திய சாஃப்ட்டுவேர் கம்பேனிகளுக்குன்னே ஒரு தர்மம் இருக்கு. அதாவது 5 வருஷத்துக்கு மேல எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா ஜூனியர் மேனேஜராகவாவது ஆகியிருக்கனும். ஆனா, நமக்கும் மேனேஜர் போஸ்ட்டுக்கும் ரொம்ப தூரம். பொதுவா காஃபிடேரியாக்களில் நடக்கும் மேனேஜர்களை கழுவி ஊற்றும் விவாதங்களில் நம்ம கருத்து தான் நிறைய இருக்கும். எல்லாம் தெரிஞ்சே நாம எப்படி மேனேஜர் ஆகுறது. ஆனா விதி வலியது இல்லியா. எதுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் டபுள் டிஜிட் அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவை மேனேஜர் போஸ்ட் ட்ரை பண்ணனும்னு ஒரு இந்திய கம்பேனியில் ஜாயின் பண்ணினேன். உஸ்ஸ்ஸ்… மரண அடி. யாராவது ஒருவருக்கு கூட நல்லவனாக இருக்க முடிதாத நிலை. விலகிவிட்டேன்.

இப்ப மீண்டும் பட்டி, டிங்கரிங் பார்க்கும் வேலை. டபுள் டிஜிட் எக்ஸ்பீரியன்ஸ்டு சாஃப்ட்வேர் இஞ்சினியர் என்பது இந்தியாவைப் பொருத்த வரையில் கையறு/முதிர்கன்னி நிலை. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. ஏற்கனவே மேனேஜர் வேலை பார்த்திருப்பதால் கொஞ்சம் இன்சைடர் வேலை தெரியும். இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்ல ஒருத்தனுக்கு பதில், மூணு கத்துக்குட்டிகளிடம் வேலை வாங்கலாம். தக்கி முக்கி எப்படியாவது வேலையை முடித்துவிடுவார்கள். அவர்களை மேய்க்க ஒரு டெக் லீட்னு ஒருத்தனை போட்டால் ஒரு முழு டீம் கிடைத்துவிடும். எப்ப இந்த மாதிரி யோசிச்சி என்னைய வேலைய விட்டு அனுப்ப போறாய்ங்களோ தெரியல. ஆனா இந்த மாதிரி “ஙே” நிலமைல மாட்டுறது புதுசில்லை. எப்படியோ கைய ஊன்றி கரணம் பண்ணி தப்பிச்சிடுவேன். இப்ப எப்பிடியாகுதுனு பார்க்கலாம். இதுல வேற புதுசா வீட்டுக்கடன் வேற. காலம் போன காலத்துல புது வீடு.

சாஃப்டுவேர் வேலைல தாக்குபிடிக்கிறக்கு ஒரு தனித்திறமை வேண்டும். ஒரு காலத்துல அதை கிண்டலடிச்சாலும்,இப்ப அது ஒரு திறமைனு தான் தோணுது. Being creative in doing jalra & projecting yourself high.

 •     சின்ன வேலை செஞ்சிட்டு, பெருசா சாதிச்சா மாதிரி சொல்லிக் கொள்வது.
 •     சின்ன சின்ன progressஐக் கூட எல்லாரிடமும் காட்டுவது.
 •     மீட்டிங்கில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நிறைய பேசுவது.

சுருங்க சொல்லனும்னா, டீம்மில் பெரியாளாக காட்டிக் கொள்வது. இதுக்கெல்லாம் கண்டிப்பாக தனி மூளை தேவை.

உஸ்ஸ்ஸ்… வருங்காலம் கஷ்டகாலம்னு தெளிவாத் தெரியுது.

Posted in உருப்படாதது, உளறல். Comments Off on ரொம்ப நிறைய புலம்பல்கள் – 13/04/2014

உளறல்கள் – 27/10/2013.

என்னைப் பற்றி
ஹிஹி… என்னைப் பற்றி எழுதுறது காலத்தின் கட்டாயம்னு சொல்லலாம். ட்விட்டர்ல பழைய ஐடியில் (@zzkuumuttai) இரவும் பகலும், கடும் எழுத்துப் பணியில் இருந்த போது பலர் என்னைப் நேரில் பார்க்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். பிரபல ட்விட்டர் விதி 12ன் படி சந்திப்பெல்லாம் வேண்டாமென்று நைசாக நழுவிவிடுவேன். இப்ப மட்டும் சொல்றதுக்கு என்ன அவசியம்னு நினைக்கறீங்க.

பொதுவாக பிரபல ட்விட்டர்களும், பிரபல வலைபதிவர்களும் தங்களை கட்டிளம் காளையாக பீலா காட்டிவிட்டு, பிறகு பணி ஓய்வு (ரிட்டையர்) பெற்றவுடன், 20 வருஷத்துக்கு முன்பு எடுத்த போட்டோ போடுவது வழக்கம். அந்த அளவுக்கு போகாமல் இப்பவே என் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு உண்மைய சொல்லிடுறது நல்லதுனு நினைக்கிறேன். சரி, விஷயத்துக்கு வருவோம்.

வயது : Anti-hairfall oil பயன்படுத்தும் வயது. அடுத்த வருடம் எர்வோமாட்டின் வருடம். 2016ல தேங்கா எண்ணையே தேவைப்படாது.

கல்யாணம் : ஆகிவிட்டது.

பிள்ளைகள் : ரெண்டே ரெண்டு தான்.

வேலை : சாப்ட்டுவேர் எழுதி நிறைய bug போடுற வேலை.

பொழுது போக்கு : தூக்கம், யூடியூப், ட்விட்டர், இனிமையான தமிழ் திரைப்பட பாடல்கள் கேட்பது.

இருப்பது : பெங்களூர்.

சொந்த ஊர் : மதுரைக்கு பக்கத்துல… 😉

படிப்பது : அவ்ளவாக கிடையாது. தற்பொழுது மறுபிறப்பு பற்றி சில புத்தகங்கள் டவுண்லோடியுள்ளேன். படிக்க வேண்டும்.

பார்ப்பது : உலக சினிமானு வெளியே சொல்லிக் கொள்வது.

இதுக்கு மேல ரொம்ப தேவைப்படாதுனு நினைக்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே…!! ;-P

Posted in உளறல். Comments Off on உளறல்கள் – 27/10/2013.

ஓட்டம் – 10/09/2013

Dream Runners – 2013.
அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சி. சென்ற வருடத்தை விட நிறைய மாற்றங்கள். Freebiesஐ BIB வாங்கும் போதே கொடுத்துவிட்டார்கள் (பட்டர்ஃப்ளை வாட்டர் பாட்டில, டி-ஷர்ட், தொப்பி). டி-ஷர்ட் கலர், அடிக்கும் சிவப்பு (ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கலர்). சென்ற முறை அடிக்கும் ப்ளூ. அடிக்கிற கலர் தான் organizersக்கு பிடிக்கும் போல.

போன முறை Bagஐ வைக்க கஷ்டபட்ட மாதிரி இருக்க கூடாதுனு இந்த முறை பீச் பக்கத்துலையே தங்கினேன். Race starting point பெசன்ட் நகர் பீச் தான்னு நினைச்சிட்ருந்தேன். Bib வாங்கின இடத்துலையும் ஒண்ணும் சொல்லல. வெளியே போகும் இடத்தில் race course மேப் வைத்திருந்தார்கள். அதில பீச்-ஐயே காணோம். திரும்ப விசாரித்தால் starting point மாறிவிட்டது, பெசன்ட் நகர் பீச் பக்கத்திலே தான் என்றார்கள். ஆல்காட் ஸ்கூல், ஆனா அது எனக்கு ஒட்டேரி ஸ்கூல்னு மனசுல பதிந்திருஞ்சது. ஏன்னு தெரியல. ஹோட்டல்காரர் கிட்ட வழி கேட்டேன். பயந்துட்டாரு. அப்படி ஒரு ஸ்கூலே இல்லன்னாரு. நல்ல வேளை மேப்-ஐ போட்டோ பிடிச்சு வச்சிருந்தேன். அதுல பாத்து திரும்ப சொன்னேன். ஹோட்டல்லேயிருந்து நடக்கிற தூரத்துல தான் இருந்தது. சீக்கிரமே தூங்கிட்டேன். இரவு நல்லா மழை பெஞ்சிருக்கும் போல. காலையில் ரோடெல்லாம் மழைத் தண்ணி.

சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.

Website :  http://www.dreamrunners.in

Fee :  Rs.600

Organization : நன்றாக இருந்தது. Water station எல்லாம் சரியாக இருந்தது. ஓட்டம் முடிஞ்ச பிறகு A2B சாப்பாடு. சூப்பர். கூச்சமா இருந்தாலும், ரெண்டு ரவுண்டு அடிச்சேன்.

Course : இது தான் அட்டகாசம். சென்ற முறை பெசன்ட் நகரின் சந்து பொந்துகள்ள இருந்தது. இந்த முறை முழுக்க முழுக்க ரோட்ல தான் இருந்தது. Loop around பாயிண்ட் கிட்ட (கிட்டதட்ட 4கிமீ) ஒரு பீச்சுக்கருகே ஓடினோம். அட்டகாசம். லேசா சாரல் வேற அடிச்சிட்ருந்தது. நல்லா இருந்தது.

Summary : Definitely will come back next year. Chennai Runners now gets a serious competitor. Dream Runners 2013 beats Chennai Runners 2012 hands down. ஆரோவில்க்கு அப்புறம் best value for money runன்னா அது இது தான்.

Posted in உளறல், ஓட்டம். Tags: . Comments Off on ஓட்டம் – 10/09/2013

உளறல்கள் – 14/10/2012.

இப்போல்லாம் நிறைய படம் பார்க்கிறேன்னு நினைக்கிறேன். காலைக்காட்சி ரூ.100 தான்னு இப்போ தான் கண்டுபுடிச்சேன். அதனால உணர்ச்சிவசப்பட்டு சுந்தரபாண்டியன், தாண்டவம் பாத்தேன். காவேரி பிரச்சனைனால “மாற்றான்” இன்னும் வல்ல. அதுவும் நல்லதுக்கு தான் போல்ருக்கு. “சாட்டை” ஏன் வரலனு தெரியல. எப்படியாவது பாத்துடனும்னு நினைச்சேன். ஆனா முடியல.

விமர்சனம் – சுந்தரபாண்டியன்

இணைய விமர்சனம் படிக்காம பாத்தது. ட்விட்டர்ல நல்லா இருக்குனு சொன்னாங்க. அப்புறம் சசிகுமார் மீது இருக்கும் நம்பிக்கைல பாத்தேன். நல்லா இருந்தது. குடுத்த காசு வீணாகல. ஹீரோயின் செமையாக இருந்தார். என் காலேஜ் டைம்ல மார்க் குடுத்துருந்தோம்ன்னா B+ (above average figure). அதனால ஹீரோயினுக்காக நிறைய சண்டை இருப்பது வாஸ்தவம் தானே.

இயல்பான வசனங்கள். சசிகுமார் நண்பர்களாக வந்தவுங்களும் சூப்பர். பரோட்டா சூரி கொஞ்சம் அதிகமா பேசுரார். ஆனா சிரிப்பு வருது. இன்னும் ரெண்டு மூணு ஹிட்டு குடுத்தா சந்தானத்துக்கு அடுத்த படியா வரலாம்.

ஹீரோயினை நல்ல தைரியசாலியா காமிச்சிருந்தது எனக்கு பிடிச்சிருந்தது. தேவை இல்லாம அழுகுறது இல்ல. ஆனா அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் போது அழுகிறார். நெகிழ்ச்சியான காட்சி. காஸ்ட்யூம்லாம் அவ்ளவா கவனிக்க மாட்டேன், ஆனா இந்த படத்துல ஹீரோயின் போடும் தாவணி, சுடிதார்லாம் செமையா இருந்துச்சி. நல்ல கலர் காம்பினேஷன்ஸ்.

கதை நாடோடிகளின் inverse. நண்பர்கள் சசிகுமாரின் காதலை பிரித்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஹீரோ அதை முறியடித்து நட்புக்காக நண்பர்களை மன்னித்துவிடுகிறார்.

விமர்சனம் – தாண்டவம்

டைரக்டர் விஜய் படம் ஒண்ணும் பாத்ததில்லை. பல பேரு கழுவி ஊத்தியிருந்தாலும் அனுஷ்கா & ஏமி க்காக போனேன். ஐயையோ கொடுமை. நிறைய லாஜிக் மிஸ்ட்டேக்கு. தமிழ்ப் படங்கள்ல லாஜிக் மிஸ் ஆவுறது சகஜம் தான். ஆனா இதுல டூமச்சு. எப்படி இந்த விஜய்ய நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் பண்றாங்கனு தெரியல.

Promo விற்காக டிவியில் வந்த போது கூட ஒரு fire இல்ல. சும்மா வழவழ கொழகொழனு பேசுறார். விக்ரம் அதுக்கு மேல. கெழட்டு லுக் வந்துருச்சி, பின்ன எதுக்கு இவ்ளோ க்ளோசப் ஷாட்கள்னு தெரியல. அனுஷ்கா சேலைல வர்ற சீன்லாம் ஓக்கே. மத்தபடி கடைசி பாட்டுல (பீச்சு மண்ணுல படம் போட்ருப்பாய்ங்களே…) உயரமான கெழவியா இருக்கார். ஏமி வத்திப் போன வெள்ளைக்காரி மாதிரி இருக்கு. லிப்சிங்க்கே இல்ல, பின்ன என்ன எழவுக்கு தமிழ்ப் படங்கள்ல நடிக்கனும்.

இந்த படத்துல கடுப்பு லிஸ்ட் பெருசா இருந்தாலும், சில.,

–    லண்டன்ல சந்தானம் டாக்ஸியைத் தவிர வேறு எவனும் டாக்ஸி ஓட்டலியா ? படத்துல ஃபுல்லா அவரு ஒருத்தர் தான் டாக்ஸி ஓட்டுராரு. அனைவரும் அவரு டாக்ஸில தான் ஏறுராங்க.

–    துப்பறியும் புலி விக்ரம், சும்மா தரைல இருந்தே 20 மாடிக்கு மேல இருக்கும் வில்லன்கள் பேசுவதைப் பார்த்து, (பைனாகுலர்ல) கண்டுபிடிக்கிறார்.

–    கல்யாணமான அனுஷ்க்கா ஐபிஎஸ் வீட்டுக்காரரை எஸ்.ஐ யானு கேட்டுட்டு, அப்படியே நம்புறார். ஆனா நாலஞ்சு சீனுக்கு எஸ்.ஐ ன்னே நம்புறார். எகொசாஇ.

–    அனுஷ்கா தன் லட்சியம் நிறைவேறும் வரை ஃபர்ஸ்ட்டு நைட்டு வேணாம்கிறார். இந்த காலத்துல சைக்கிள் கேப்புல பசங்க ஏரோப்பிளேனே ஓட்டுராங்க. அனுஷ்கா மாதிரி ஃபிகர வச்சிக்கிட்டு எப்புடி, இப்பிடி. இதுல வேற ரெண்டு சீன்ல படுக்கைல படுத்திருக்கும் அனுஷ்கா கண்ணாலேயே விக்ரமை தூங்குங்கனு சொல்றாங்க. தியேட்டர்ல படம் பாத்த பயபுள்ளைங்க படு கேவலமா கமெண்ட் அடிக்கிறாங்க.

–    ஆயுத ரகசியத்தை USB stickல கடத்துராங்க. ஆனா அதை கூரியர்ல லண்டனுக்கு அனுப்புறாங்களாம். அடப்பாவிகளா டேய்.

–   ஆங்கிலத்தில் பேசுறதுக்குலாம் தமிழ்ல சப்-டைட்டில் போடுறாங்க. அதுல நிறைய எழுத்துப்பிழைகள். என்ன எழவு மிஸ்டர்.விஜய் ?

விஜய் சார், முடியல. தயாரிப்பாளர்கள்லாம் பாவம். விட்றுங்க.

 மிட் டெர்ம் அப்டேட்டு

இன்னும் மூணு மாசத்துல 2012 முடியப் போவுது. உலகம் அழிஞ்சாலும் அழிஞ்சிரும். அதனால 2012ல செய்ய நினைச்சு, முடிச்சது என்னல்லாம்னு ஒரு லுக் விட்டேன்.

 1. ட்விட்டர் Perl scriptஐ முடிக்க வேண்டும். – Done
 2. யூடியூப் Perl scriptஐ முடிக்க வேண்டும். – Download script done.  ஆனா tag, descriptionலாம் மாற்றும் டெக்னிக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். அதையும் முடிக்கனும்.
 3. ஆறு ஹாஃப் மாரத்தானாவது ஓட வேண்டும். – Done
 4. ரன்னிங்க்காக பற்றி பதிவு எழுத வேண்டும். – Done (started).
 5. ட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். – ஒரு மாசமா ட்விட்டர் பக்கம் அவ்ளவா போறதில்லை. நிறைய நேரம் கிடைச்ச மாதிரி இருக்கு.
 6. மாதத்துக்கு ஒரு பதிவு. – ??
 7. வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டும். – பொதுவா நான் இருக்கும் ப்ராஜெக்ட்ல, ஒண்ணு கஸ்டமர் ஓடிடுவான், இல்ல தானே ப்ராஜெக்ட் ஊத்திக்கும். ஆனா இந்த முறை ப்ராஜெக்ட் நல்லா போயிட்ருக்கு. ஏன்னு தெரியல !!
Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 14/10/2012.

சொ.செ.சூ – 17/09/2012

ரொம்ப நாளாச்சு சொசெசூ வச்சி. அதுக்கு அர்த்தம் எனக்கே மறந்துடுச்சி. சொந்த செலவில் சூனியம். இணைய விமர்சனங்களை விமர்சிக்கலாம்னு பாக்குறேன்.  ஏன்னா அது தான் சுலபமான சொசெசூ.

நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள்

ட்விட்டரில் இருக்கும் இளையராஜா கொலைவெறிப் படைகள் படத்தின் டீசர்கள் வந்தவுடனே ஆ, ஊ, சூப்பர், மெய்சிலிர்க்குதுனு சவுண்டு உடுவது வழக்கம். நானும் அவர்களை நம்பி பாட்டு டாரண்ட் வந்தவுடனே டவுண்லோடினேன். பாடல்கள்லாம் ரொம்ப சுமார் தான்.

நான் சுமார்னு சொல்றதுக்கு முன்னாடியே இளைஞர்கள் பலர் பாடல்களைக் கிழித்து தொங்கவிட்டிருந்தார்கள். யாரும் இளையராஜாவை கிண்டலடிக்கவில்லை. ஆனால் கொலைவெறி கும்பல், “தே*டியா பயலுக, மனநோயாளிகள், போய் *யடிங்கடா, ஞானசூனியங்கள், கழுதைகளுக்கு ஏன் கற்பூர வாசனை”ன்லாம் அர்ச்சனைய ஆரம்பித்திருந்தார்கள். இளையராஜா இந்த மாதிரி ரசிகர்கள் கிடைக்க ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கனும்.

யுவன் அவரு குரலுக்கு ஏத்த மாதிரி தானே இசையமைச்சு பாடிக்கிட்டிருந்தாரு…. அவர்கிட்ட போயி பாட்டக் குடுத்து…. முடிஞ்ச வரைக்கும் அவரு முக்கியிருக்காரு. அவருக்கு கொடுத்த ரெண்டு பாடலும் படு த்ராபை (சாய்ந்து, சாய்ந்து, பெண்கள் என்றால்). என்னோடு வா வா, வானம் மெல்ல ரெண்டு பாடல்கள் தான் தேறுது. காற்றைக் கொஞ்சம்  ஓகே. மற்றதெல்லாம் சூர மொக்கைகள்.

ஒருவேளை பாடல்களெல்லாம் கெளதம் மேனனின் picturizationன்னால பிரபலமடையலாம். சமந்தா இருக்கவே இருக்கார். ஆனால் இளையராஜாவின் இசை என்பது picturization , பாடல் வரி, இதையெல்லாம் மிஞ்சி இருக்கும்…  அப்பிடிப் பார்த்தால் நீ தானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஏமாற்றமே.

நீதி : அடிச்சி பிடிச்சி டவுண்லோடாமல், புதுப் பாடல்கள் டிவியில் வரும் வரை அமைதி காக்கவும்.

அட்டக்கத்தி, முகமூடி, வழக்கு எண் 18/9

அட்டக்கத்திக்கு பெரும்பாலோனர் சூப்பர், காமெடி அட்டகாசம்னாலாம் விமர்சனம் பண்ணியிருந்தாங்க. நம்பி தியேட்டருக்கு போய் பாத்தேன். முதல் அரைமணி நேரம் ஓகே. கொஞ்சம் சிரிக்கலாம். அதுக்கப்புறம் சவ்வு மிட்டாய் மாதிரி இழுக்குறாங்க. சுலபமா ஊகிக்க முடிஞ்ச க்ளைமாக்ஸ். விட்டா போதும்னு ஓடி வந்தேன்.

முகமூடிய சொல்லிவச்ச மாதிரி அனைவரும் கழுவி ஊத்தியிருந்தார்கள். மிஷ்கினின் கறுப்பு கண்ணாடியாலோ இல்ல பேட்டிகளாலோ பாதிக்கப்பட்டவர்கள் போல. நெகடிவ் விமர்சனத்துக்காகவே தியேட்டரில் பாத்தேன். ரொம்ப மோசம் இல்லை. க்ளைமாக்ஸ் தான் அறுவையாக இருந்தது. முக்கால் வாசிப் படம் நல்லாவே இருந்தது. பின்னணி இசை அட்டகாசம். கே-னு ஒருத்தர் இசையமைச்சிருக்கார். சூப்பர். அவரு தான் “யுத்தம் செய்”க்கும் இசை போல. அது ரணகொடூரமா இருக்கும். ஆனா இதுல அசத்திட்டார்.

கொஞ்சம் பழசு தான். விமர்சனம்னவுடனே வழக்கு எண் 18/9 ஞாபகம் வந்துச்சி. மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு, ட்விட்டர் சமூகம் ஆவேசப்பட்டு (படம் தாறுமாறாக  ஓடாததால “இந்த தமிழ்ச் சமூகமும், நாடும் நாசமாப் போகட்டும்”னு ஆவேசப்பட்டார்கள்). நேர்த்தியாக, குறையே சொல்ல முடியாமல், உண்மைச் சம்பவத்தை ஆவணப்படுத்தியதைப் போல் எடுத்த படம். க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் தமிழ் சினிமா மாதிரி. போட்ட காசை கண்டிப்பா தயாரிப்பாளர் எடுத்திருப்பாரு. ஆனா மெகா ஹிட் ஆவலனு ஆவேசப்படுவதெல்லாம் ரொம்ப ஓவரு.

நீதி : இணைய விமர்சனம் படித்து காசை தியேட்டரில் வீணடிக்காதீர்.

Posted in உளறல், சொ.செ.சூ. Comments Off on சொ.செ.சூ – 17/09/2012

ஓட்டம் – 8/9/2012

தமிழன்னா கருந்து கந்தசாமியாத் தான் இருக்கனும்னு ஒரு விதி இருக்கு. அதுவும் எது கைல கிடைச்சாலும் விமர்சனம் பண்ணி உண்டு இல்லனு ஆக்கிறனும். ஆகையினால நானும் கருத்து சொல்லி, விமர்சனம் எழுதி உலகத்தை உயர்த்துவதற்கான பதிவு இது.

எப்போதாவது ஓடும் ஓட்டத்தைப் பற்றி குறிப்பு எழுதி, மதிப்பெண் குடுக்கலாம்னு இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஓடுனதப் பத்தி சொல்றேன்.

Dream Runners 2012.

இவுங்க ஒரு புது க்ரூப். சென்னை பெசன்ட் நகர்ல ஓடுறவுங்க போல்ருக்கு. அவுங்க நடத்தும் முதல் ஓட்டம் இது தான். Bib ஐ ஒரு ஃபர்னிச்சர் கடைல வந்து வாங்கிக்க சொன்னார்கள். ட்ரைன்ல எறங்குனா பெசன்ட் நகர்ல எறங்கலாமானு உறுதிப் படுத்திக்கிட்டேன்.  அருமையான பையும், டி-ஷர்ட்டும் கொடுத்தார்கள். டி-ஷர்ட்டுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். ஒண்ணு நான் சைஸ்சை தப்பா சொல்லியிருப்பேன், இல்லைனா அவுங்க குடுப்பது தப்பான சைஸா இருக்கும். இங்கு L-க்கு பதிலாக M-ஐ கொடுத்திருந்தார்கள். டி-ஷர்ட் சுமாராத் தான் இருந்தது.

ட்ரைன்ல போகலாம்னு காலைல எந்திருச்சி, வார்ம்-அப்லாம் முடிச்சி 3.45க்கே ட்ரைன் ஸ்டேஷன் நோக்கி சென்றேன். சென்டரல் பாலத்துக்கு கீழ இருக்கு போல. பார்க்னு ஒரு ஸ்டேஷன். பார்க் டவுன்னு ஒரு ஸ்டேஷன். நான் ஏறவேண்டியது பார்க் டவுன்.  பாலத்துக்கு முன்னாடியே ஒரு ஆட்டோக்காரரு இன்னிக்கு ஞாயிறு சார் ட்ரைன் 7 மணிக்கு தான்னு பயத்தக் கெளப்பினாரு. எதுக்கும் நானே பாத்துர்றேன்னு போய் பார்த்தேன். ஸ்டேஷனுக்கு பூட்டு போட்டு வச்சிருந்தாங்க. பிறகு வேற வழியில்லாம திரும்பிப் போய் அதே ஆட்டோல ஏறினேன். ரூ.250 வாங்கிக்கிட்டு பெசன்ட் நகர் பீச்ல 4.15க்கே எறக்கி விட்டுட்டார்.

ஒரு குருவி குஞ்சக் காணோம். முந்தின நாள் மழை பெஞ்சதால பீச்சு ஒரு கண்றாவி கோலத்தில் இருந்தது. ஒரு வழியா 4.45 மணிக்கு ஆர்கனைசர்ஸ் வந்தாங்க. பிறகு என் மூட்டைமுடிச்சை baggage counter ரில் கொடுப்பதற்காக சென்றேன். ரேஸ் முடிஞ்ச பிறகு ஒரு நண்பரை சந்திப்பதாக திட்டம், அதனால பேண்ட், டிஷர்ட்டுனு வேற கொண்டு வந்திருந்தேன்.

அங்கே சென்று விசாரித்தா, baggage counterனு ஓண்ணு கிடையாதுனு சொன்னாங்க. மகா எரிச்சலாக இருந்தது. பெருசா பெங்களூர்ல இருந்துலாம் ரன்னர்ஸ் வர்றாங்கனு பேட்டிலாம் குடுத்திருந்தாங்க. பெங்களூர்ல இருந்து வர்றவன் கூட ஹோட்டலையுமா கூட்டிட்டு வருவான்.

ஒரு ஆன்ட்டி ஒரு மூலைல வச்சிருங்க, on your own riskக்குன்னாங்க. வச்சிட்டு வந்தேன்.  ஓட்டம் ஆரம்பிச்சது. முடிப்பதற்கு அரை மணி முன்னால மழை பெய்ய ஆரம்பிச்சது. மழைல ஓடி முடிச்சது நல்லா இருந்தது. ஒடி முடிஞ்சவுடன் பையைத் தேடினால் வச்ச இடத்துலையே இருந்தது, மழைல நனைஞ்சு போயி. கடுப்பாக இருந்தது.  அவர்கள் கொடுத்த பைதான். வாட்டர் ஃப்ரூபாக இருந்ததால் எதுவும் ரொம்ப நனையவில்லை.

மெடலோடு இலவசமாக Butterfly வாட்டர் பாட்டிலையும் கொடுத்தார்கள். நல்லா இருந்தது. மழையோடு ஓட்டம், வாட்டர் பாட்டில் இதானால் பை நனைஞ்ச மேட்டர் பெரிசாக தெரியல.

Websitehttp://www.dreamrunners.in/index.html

Fee :  Rs.500

Organization : நன்றாக இருந்தது. Water station எல்லாம் சரியாக இருந்தது. முதலில் வரும் Water station ரொம்ப நேரம் கழித்து வந்தது போல் இருந்தது. மழை வந்த பிறகு, பாதி route guides எஸ்சாகி விட்டார்கள். முடிக்கும் போது தனியாக வந்ததால், ரோட்டில் சென்றவரிடம் வழி கேட்டு சென்றேன்.

Course : பெசன்ட் நகரின் சந்துகளில் இருந்தது. பரவாயில்லை.

Summary : Will come back next year if they provide baggage storage.

Posted in உளறல், ஓட்டம். Comments Off on ஓட்டம் – 8/9/2012

ஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)

ஒரு வழியா ஓட்டம் (running) பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். என்ன எழுதனும்னு முடிவு பண்ணல, அதானால தற்போது டிஸ்கி மட்டும்.

ஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)

ஓட்டம் பற்றி இங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்தும் படித்து, மறப்பதற்கு மட்டுமே. தேவையில்லாமல்  நானும் ஓடுறேன்னு உங்கள் கை கால்கள் வலித்தாலோ, உடைந்தாலோ  அதற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பு. அல்லது நீங்கள் வேறு யாருடைய கைகால்களை உடைத்தலோ அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.

Posted in உருப்படியானது, ஓட்டம். Comments Off on ஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)

உருப்படியானது – 11-06-2012

அடிக்கடி உருப்படியானதா எழுதுறது எனக்கே உறுத்தலா தான் இருக்கு. 2012 லிஸ்டுல ஒரு வழியா முதலிரண்டை முடிச்சுட்டேன். எப்படியோ தட்டுத் தடுமாரி நானே Perl ஸ்கிரிப்டிங் கத்துக்குகிட்டேன். Perlல என்ன ஸ்பெஷல்ன்னா யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டு main functionalitiesச modulesசா எழுதி வச்சிடுறாரு. அதைப் பயன்படுத்தி நாம மானே, தேனே,
பொன்மானே சேத்து நமக்கு வேண்டிய வகையில் எழுதிக் கொள்ள வேண்டியது தான்.

போன முறை எழுதுன டிஜிடல் லைப்ரரி புத்தக டவுண்லோடுக்கு அமோக வரவேற்பு. ஒருத்தர் ஒரு புத்தகம் வேணும்னு கேட்டார் அப்புறம் இன்னொருத்தர் ஸ்கிரிப்ட் கேட்டாரு, அனுப்பி வச்சதும் சத்தமே காணோம். இருந்தாலும் கொண்ட கொள்கைய விடுறதாயில்ல. இப்போ என்ன எழுதியிருக்கேன்னா.,

யூடியூப் டவுண்லோட் : Firefoxல நிறைய plug-inஸ் இருக்கு. சிறப்பானதுன்னா Bulk Youtube downloader தான். இருந்தாலும் என்ன எழுதியிருக்கேன்னா ஒரு Youtube userரோட பேரக்  கொடுத்தா அவரு அப்லோட் பண்ணியிருக்க அனைத்து விடியோ லிஸ்ட்டையும் எடுக்கலாம். பிறகு தேவையான விடியோக்களை மட்டும் டவுண்லோடிக்கலாம்.

ட்விட்டர் : ஃபாலோ, அன்ஃபாலோ, ட்விட் பேக்கப், ரிட்வீட் ஆனா நமது ட்வீட்கள் பேக்கப் பொன்றவற்றுக்கு ஸ்க்ரிப்ட் இருக்கு.

மேல சொன்ன ஸ்க்ரிப்டுகள் யாருக்காவது வேணும்னா எனக்கு மெயில் தட்டவும்.

Posted in உருப்படியானது, உளறல். Comments Off on உருப்படியானது – 11-06-2012
%d bloggers like this: